இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 31 ஆகஸ்ட், 2013

"இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா" இசை விமர்சனம்

விஜய் சேதுபதி , அஷ்வின்,சுவாதி ரெட்டி,நந்திதா, பசுபதி, சூரி, லிவிங்ஸ்டன் என நட்சத்திரப் பட்டாளம் நடிக்க கோகுல் எழுதி இயக்க v.s.ராஜ்குமார் தயாரிக்க புதுமுக இசையமைப்பாளர் சித்தார்த் விப்பின் இசையில் வெளிவர இருக்கும் திரைப்படம் "இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா" .

புது முக இசையமைப்பாளர் என்றே தெரியவில்லை அப்படி செமையா பாட்டு இயக்கியிருக்காறு சித்தார்த். ஏற்கனவே Prayer Song youtube ல் வெளியிடப்பட்டு பெரிய வரவேற்பைப் பெற்றது.அந்தப் பாடலைப் பார்க்க"விஜய் சேதுபதியின் “Pray Song” -யூடியூப்பை செமையா கலக்குது"

சரி நாங்க ஒவ்வொரு பாடலாகப் பார்த்து விமர்சனம் பாப்போம்..

1. நாயே நாயே

பாடியவர்கள்:  Yed Shankar
பாடலாசிரியர்: NA

கடவுளே....!! என்ன பாட்டு இது பாட்டு முழுவதும் "நாயே நாயே" என்று பாட்டு பாடுகிறார்கள்.இடையிடையில் நாயின் குரைக்கும் சத்தமும் வருகிறது. கர்நாடக சங்கீதத்தில் நாயே என மூச்சு விடாமக் கூட பாடுறாங்க... கடவுளே.. இந்தப் பாட்ட கொஞ்சம் கேளுங்க 

2. என் வீட்டுல

பாடியவர் : கானா பாலா
பாடலாசிரியர்: லலித்ஆனந்த்

உங்களுக்கே தெரிந்திருக்கும் கானா பாலா பாடினாலே அது ஹிட் தாங்க.. இதுவும் அப்டித் தான் பாட்டு...இந்தப் பாடலில் இடையிடையில் ஆங்கில வார்த்தைகள் வருகின்றன..."என் வீட்டுல நா இருந்தேனே அவ வீட்டுல அவ இருந்தாலே love டார்ச்சல் பண்ண எனக்கு முடியல"என குமுறுகிறது போல பாடல் இருக்கிறது... அதிலும் CHINA போன் ஐ பத்தி கூட இதுல ஒரு வரி வருது "சீனா போன் ல சிக்னல் வரல" எனப் பாடுகிறார் சூப்பர் பாட்டு நீங்களும் கேட்டுப் பாருங்க....

3. ஏன் என்றால்

பாடியவர்கள் : ஹரிகரன் , விஷ்ணுப்ரியா , மாளவிகா மனோஜ்
பாடலாசிரியர்: மதன் கார்கி ( இவர் இந்தப் படத்தில் dialogue எல்லாம் எழுதியிருக்கிறார் )

இந்தப் படத்தில் இருக்கிற ஒரு மெலடி பாடலென்றால் அது இதுதாங்க..  ஹரிஹரன் தான் குரலில் இனிமையாகப் பாடியிருக்கிறார்..
காதலியின் பிறந்தநாளுக்கு காதலன் என்ன செய்வான் என இப் பாடல் கூறுகிறது.

உலகப்பூக்களின் வாசம் உனக்கு சிறைப் பிடிப்பேன் உலர்ந்த மேகத்தைக் கொண்டு நிலவின் கறை துடைப்பேன் ஏன் என்றால் உன் பிறந்தநாள்"

என romantic ஆக பாடலை எழுதியிருக்கிறார் மதன். நீங்களும் உங்கள் காதலிக்கு இந்தப் பாடலை சமர்ப்பிப்பீர்கள்.. பாடலைக் கேட்டுப்பாருங்கள்.....

4. நீ எங்க போனாலும் (Prayer Song)

பாடியவர் : நரேஷ் ஐயர்
பாடலாசிரியர் : மதன் கார்கி

பாடல் ஏற்கனவே 12ஆம் திகதி youtube ல் வெளியாகி 1 லட்சத்துக்கும் மேல் views பெற்றுள்ளது இப் பாடல். 

காதலி ஏமாற்றி விட்டுப் போனால் அவளைத் திட்டாமல் அவளுக்காகப் pray பண்ணுங்க என தொடங்கும் இந்தப் பாடல் 

காதலிக்கு எல்லாம் கேட்டதா நடக்கனும்னு pray பண்றாரு..

சூப்பர் வரிகள்... கண்டிப்பா இந்தப் பாட்டு நிச்சயம் "காசு பணம் துட்டு மணி" பாடல் மாதிரி ஹிட் ஆகும்.. நிச்சயம் இக்கால மக்கள் மனதில் நீங்காத இடம் பெரும் என்பதை நான் உறுதியாகக் கூறுகிறேன்.

பாட்டு எல்லாம் சூப்பர் நீங்களும் கேட்டுட்டு சூப்பர் என்று தான் சொல்வீர்கள்.. 

அவளவு சிறந்த பாடல்களாக உள்ளது...
Director Balu

இந்தப் படப் பாடல்களிற்கு எனது rating 4.5 / 5 ஏன் என்றால் இது அறிமுக இசையமைப்பாளருக்கு கிடைக்க வேண்டிய ஒரு மரியாதை...

இனி வரும் காலங்களில் இவர் தனது பாடல்களை சிறப்பாக வழங்க வாழ்த்துக்கள்..

படம் வெற்றியடைய எமது தளத்தின் சிறப்பு வாழ்த்துக்கள்....!!

Review பிடித்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிருங்கள்...

0 comments:

கருத்துரையிடுக