இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 14 ஆகஸ்ட், 2013

இரண்டாம் உலகம் இசை விமர்சனம்

ஹாரிஸ் ஜெயாராஜின் இசையில் செல்வராகவன் இயற்ற ஆர்யா,அனுஷ்கா நடிப்பில் வெளிவர இருக்கும் திரைப்படம் தான் இரண்டாம் உலகம்.


சரி நாம இப்போ இசை விமர்சனத்துக்கு வரலாம். ஹரிஸ் ஜெயராஜ் ஏற்கனவே துப்பாக்கி, மாற்றான் , நண்பன் போன்ற வெற்றிப் படங்களுக்கு இசையமைத்திருந்தார் அதேபோலவே இப்போது இயக்குனர் செல்வராகவனின் இயக்கத்திலும் ஓர் சிறந்த பாடல் album ஐ தந்துள்ளார்.
ஒவ்வொரு பாடல்களாகப் பாப்போம்...

1. என் காதல் தீ

ஆரியா
இந்தப் பாடலை ஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடியுள்ளார். இதற்கு கவிப்பேரரசு வைரமுத்து பாடல் எழுதியுள்ளார்.  

ஒரு ஆண் தான்காதலிக்கும் பெண்ணை நினைத்துப் பாடும் பாடலாக இது அமைந்திருக்கிறது.. நீங்களும் இந்தப் பாடலை கேட்டு பாருங்களேன்.

இது 5.௦3 நிமிடப் பாடல்

2.கனிமொழியே

இப் பாடலை கார்த்திக் தனது மெல்லிய குரலில் நம் மனத்தைக் கொள்ளை அடிக்கிறார்.
இந்தப் பாடலைக் கேக்கும் போது என் மனசுக்குள்ள பட்டம் பூச்சியே பறக்குது
அதுதாங்க ஒரு பெண்ணுக்கு பின்னாடி திரியும் போது அவள் பார்க்காது செல்லும் போது இருக்கும் அந்த feeling தான் இந்தப் பாடல்... 
அனுஷ்கா

இப் பாடலும் வைரமுத்து அவர்களே எழுதியதாகும். இதையும் கேளுங்க...

இது 5.5௦ நிமிடப் பாடல்

3.மன்னவனே

இந்தப்பாடலை shakthi, Gopal Rao ஆகியோர் பாடியுள்ளனர். 
இரண்டு பேர் அதாவது ஆணும் , பெண்ணும் பாடுவதால் duet ஆகத்தான் இருக்குமென நம்புகிறேன். 

இதில் பெண் குரலில் பாடிய shakthiyன் குரல் மிகவும் நன்றாக இருக்கிறது. 

இதில் ஒரு வரி எனக்குப் பிடித்தது: "மன்னவனே என் மன்னனே நீ போன பாத தேடி தேடி வருவேன்"   இந்த வரி பெண் பாடியது. இதிலிருந்து நான் நினைக்கிறன் இந்தப் பாடல் காதலி தான் காதலனை நினைத்துப் பாடும் பாடல் அதற்க்கு காதலன் பாடும் பாடலாக அமைந்துள்ளதென. பாப்போம் படம் வரும் போது என்ன scene ல பாட்டு வருதுன்னு...

இது 5.3௦ நிமிடப் பாடல்


4.பனம்கள்ளா
Cameo Role செய்யும்
தனுஷ்

இந்தப் பாடலை எனக்குப் பிடித்த நடிகர் இல்லை இலை பாடல் ஆசிரியர் அதுவும் இல்லை பாடகர் தனுஷ் பாடியிருக்கிறார். 
ரொம்ப பீல் பண்ணி பாடியிருக்கார். பொண்ணுங்க லவ் வ brake பண்ணிட்டுப் போகும் போது இது தான் சிடுஅடின் song ஆ இருக்கும்...

இந்த பாடலில் எனக்குப் புடிச்ச வரி "பொண்ணு மனுசு ஒரு தினுசு அதில் மிருகமும் தெய்வமும் வாழும்"

எல்லா ஆம்பளப் பசங்களும் எழுந்கப்பா...........

இது 4.3௦ நிமிடப் பாடல்

5.  ராக்கோழி ராக்கோழி

இந்தப் பாடலை ஹரிஹரன் Palghat Sreeram என்போர் பாடியுள்ளனர்.
திரை இயக்குனர்
செல்வராகவன்
ஆண் பெண்ணுக்காக என்ன என்ன செய்வான் என இந்தப் பாடலில் கூறுகிறார் பாடலாசிரியர்.

இந்தப் பாடல் 5.3௦

6.  விண்ணைத்தாண்டி அன்பே

இந்தப் பாடலை விஜய் பிரகாஷ் பாடியுள்ளார். இந்தப் பாடலில் லவ் failure ல பாடுவது போல இருக்கிறது. ஏனென்றால் இதன் பாடல் வரிகளைப் பார்க்கும் போது அப்படித்தான் தெரிகிறது. 

எது எப்படியோ படம் வரும் போது எந்த எந்த situations ல பாட்டு வருதுங்குறது தெரிஞ்சிடும்ல...
மியூசிக் டைரக்டர்
ஹரிஸ் ஜெயராஜ்


எல்லபாடல்கலுமே நன்றாக இருக்கிறது. 

பாடல்களை தரவிறக்கி கேட்க

 "இரண்டாம் உலகம்" படக் குழுவிற்க்கு இந்தத் தளம் சார்பாக வெற்றியடைய வாழ்த்துக்கள்.

நண்பர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்!!!

நீங்கள் படித்துவிட்டு சும்மா போகாது உங்கள் கருத்தைக் கீழுள்ள comment box ல் பதிவிட்டுப் போகவும். எனது சிறு வேண்டுகோள் இது..

3 கருத்துகள்: