இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 28 அக்டோபர், 2013

மக்களின் வாழ்க்கையை மாற்றிய கூகுளின் நிறுவனங்கள்..!! - அனைவரும் படிக்க வேண்டியது..

கூகிள் என்பது ஒரு தேடு பொறி மட்டுமல்ல இப்போது பல மக்களின் கடவுளாகக் கூட வந்துவிட்டது. ஆம் "கடவுளின்றி அணுவும் அசையாது என்பது போல "கூகிள் இன்றி இணையம் அசையாது" எந்தத் தேவையென்றாலும் நாம் பொதுவாகத் தேடும் தேடு பொறி கூகிள் தான்.

அப்படிப்பட்ட கூகிள் நிறுவனம் 1998 செப்டம்பர் மாதம் 4 ம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.



என்னமோ தெரியல என்னோட பிறந்த திகதி, ஆண்டு என கூகிள் தொடங்கியதால்தான் இப்படி ராசியோ தெரியவில்லை.. 

சரி விடுங்க... சிரிக்காதீங்க... எனக்கு புரியுது..

அப்படிப்பட்ட கூகிள் நிறுவனம் தன்னகத்தே பல நிறுவனங்களை வைத்திருக்கிறது. அவை அனைத்துமே அனைத்து மக்களாலும் பெரும்பாலும் உபயோகிக்கப்படுகிறது.

அந்த வகையில் நாம் இன்று அனைத்து கூகுளின் நிறுவனங்களைப் பற்றி ஒரு பார்வை பார்ப்போம்...

முதலாவதாக Google Adsense


Google Adsense என்பது விளம்பரங்களை இணையத்தளங்களில் இட்டு அதன் மூலம் அந்த இணையத்தள உரிமையாளருக்கு பணத்தினை ஈட்டிக்கொடுப்பது. 

இந்த Google Adsense என்பது வேறு ஒரு கம்பனி மூலம் கூகுளிற்கு 2௦௦3 ல் விட்கப்பட்டதாகும்.

இதன் மூலம் பல இணையதளங்களை வைத்திருக்கும் பதிவர்கள் பணத்தினை ஈட்டும் வழியினை அளிக்கிறது..

2. அடுத்து.. Blogger


இந்த Blogger என்பது ஒரு தனிப்பட்ட நபரின் கருத்துகளை உலகத்துடன் பகிர ஒரு வாய்ப்பளிக்கும் சேவை.

இந்த வசதி மூலம் தான் இப்போது நான் உங்களுடன் என் கருத்துகளைத் தெரிவித்துக்
கொண்டிருக்கிறேன்.

Blogger என்பது 1999 ஆம் ஆண்டில் Pyra Labs என்ற நிறுவனத்தினால் ஆரம்பிக்கப்பட்டது. பின் 
2003 ஆம் ஆண்டில் கூகிள் இந்த சேவையைத் தனதாக்கி பல லட்சக்கணக்கான பதிவர்களை உருவாக்கியுள்ளது. Blogger ல் நீங்களும் ஒரு இணைப்பை ஆரம்பித்து உங்கள் கருத்துகளை உலகுடன் இலவசமாகப் பகிர இவ் வசதி உதவுகிறது.

3.  அடுத்து Android


Android தான் பல தொலைபேசிப் பிரியர்களாலும் விரும்பி பாவனை செய்யப்படும் Operating System ஆகும். இது ஒரு open source வகையைச் சேர்ந்தது.

Android.Inc என்ற நிறுவனத்திலிருந்து கூகிள் 2௦௦5 ஆம் ஆண்டில் பெற்று  தனதாக்கிக் கொண்டது.  இந்த Android ஐ உருவாக்கியவர்கள் Andy Rubin,Rich Miner,Nick Sears and Chris White ஆவர்...

இது பற்றி நான் உங்களுக்குப் பெரிதாகக் கூறத்தேவை இல்லை.. உங்களுக்கே தெரிந்திருக்கும்..

4.  You Tube



உலகிலேயே பல மில்லியன் பயனர்களால் அன்றாடம் எந்த வகையான வீடியோக்களையும் பார்த்து ரசிக்கும் ஒரே ஒரு இணையத்தளம் என்றால் யூடியுப் தான். Youtube கூட கூகிளின் சொந்த தயாரிப்பு அல்ல Steve Chen, Chad Hurley, and Jawed Karim என்ற மூன்று paypal.com ல் பணி புரிந்த பட்டதாரிகளின் உழைப்பு தான். தங்களின் வேலைகளை குறிப்பிட்டுக் காட்டும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்டது. அதனால் தான் youtube ல் "கில்மா" படங்களை upload செய்ய முடியாதாம்.. very sorry... இப்படி கதைத்ததட்கு...

இதோ இந்த வீடியோ தான் youtube ஆரம்பிப்பதில் ஒருவராக இருந்த Jawed என்பவரால் முதல் முதல் upload செய்யப்பட்ட வீடியோ....




அடுத்து Picasa


இதோ இந்த picasa மூலம் படங்களை எடிட் செய்யலாம் , எனப் பல படங்களை வைத்து புதுப் புது விடயங்களை மேட்கொள்ளலாம்..

இந்த சேவையை கூகிள் Lifescape(IdeaLab) என்ற நிறுவனத்திடமிருந்து 2004 ல்
பெற்றது.

அடுத்ததாக Google Maps

Google Map பல லட்சக்கணக்கான மக்களால் பாவனை செய்யப்படுகிறது. இவ் Google Maps சேவை c++ coding ஐ வைத்து இரு சகோதரர்களான 
 Lars and Jens Rasumssen என்போரால் உருவாக்கப்பட்டது.

இந்த சேவையை கூகிள் "Where2 Technologies" என்ற நிறுவனத்திடம் 2004 ஆம் ஆண்டு பெற்றது. இந்த சேவையை கூகிள் தனதாக்கிய பின் பல புதிய சிறப்பம்சங்களையும் உள்ளடக்கி இப்போது வெற்றிநடை போட்டு வருகிறது...

அடுத்து FeedBurner

இந்த சேவையானது blog வைத்திருப்போருக்கு மிகவும் உதவியானது. ஏநெனில் இந்த சேவையைப் பயன்படுத்தி அந்தக் குறிப்பிட்ட இணையத்தளத்தின் செய்திகளை மின்னஞ்சல் மூலம் வாசிக்க உதவும் சேவை...

நண்பர்களே...!! எனது தளத்திலும் Feedburner வசதி உள்ளது எனவே பதவின் கீழுள்ள பெட்டியில் உங்கள் மின்னஞ்சல் முகவரியைக் குறிப்பிட்டு submit ஐ கொடுத்தால் தொடர்ந்து என்னுடன் எனது பதிவுகளை வாசித்து மகிழலாம்...

பதிவு பயனானதாக இருந்தால் நண்பர்களுடனும் பகிருங்கள்....!!

நன்றி...!!

ஞாயிறு, 27 அக்டோபர், 2013

1 GB பைல்களை 1 MB பைல்களாக மாற்ற : KGB ARCHIVER மென்பொருள்..

வணக்கம் நண்பர்களே..!! இன்றைய பதிவில் நாம் அதிக கொள்ளளவுடைய பைல்களை குறைந்த அளவுக்கு மாற்றுவது எப்படி என்பது பற்றி. உதாரணமாக நீங்கள் ஒரு மென்பொருளைத் தரவிறக்கும் போது அதன் கொள்ளளவு குறைவாக இருக்கும். பின் அதை உங்கள் கணனியில் நிறுவிய பின் கொள்ளளவில் பெரிதாக இருக்கும்.

அதற்குக் காரணம் compression அந்தக் compression ஆல் தான் பெரிய கொள்ளளவாக மாறுகிறது.

சரி இப்போது 1 GB பைல்களை 1 MB பைல்களாக மாற்றுவது பற்றி பாப்போம்..

இப்போது இந்த மென்பொருளை நிறுவுங்கள்...

Download 


பின்னர் கீழுள்ள படத்தில் உள்ளவாறு செய்யுங்கள்...




நண்பர்களின் கவனத்திற்கு...

இது கன்வெர்ட் செய்யும் போது சில நேரம் அதிக நேரம் எடுக்கும்.. பொறுமை வேண்டும்...!!!

இந்த மென்பொருள் மூலம் செயற்பாடுகளை மேற்கொள்ளும் போது...
  1. compressed file களுக்கு password போட்டு பாவிக்கலாம்...
  2. பல மொழிகளிலும் பாவிக்கலாம்
  3. KGB FILES மற்றும் .zip file களுக்கு support செய்யும்..
நன்றி நண்பர்களே...!!

வியாழன், 24 அக்டோபர், 2013

Touch செய்ய முடியாத screen களை Touch Screen களாக மாற்ற E-touch Pen..

பதிவின் தலைப்பைப் பார்த்தவுடனே உங்களுக்கு நான் எதோ உங்களை ஏமாத்துவது போல இருக்கும், ஆனால் நான் உண்மையைத் தான் கூறுகிறேன்.


Jeswill HiTech Solutions Pvt. Ltd. என்ற நிறுவனம் E-touch pen என்ற கருவியை உருவாக்கியுள்ளது.. Microsoft நிறுவனம் புதிதாக வெளியிட்டிருக்கும் Windows 8 ஐ பல பேர் பாவனை செய்கிறார்கள். 

ஆனால் அதன் உண்மையான அனுபவத்தை பெற்றுக்கொள்ள நீங்கள் தொடுதிரையான monitor அல்லது laptop வாங்குவது என்பது மினக்கெட்ட வேலை. காசு நிச்சயமாக இந்திய ரூபாய் 10000 க்கு கிட்டத்தட்ட வரும். 

ஆனால் இந்தக் கருவி குறைந்த விலை அதாவது கிட்டத்தட்டஇந்திய ரூபாய்  நான்காயிரம் அப்படித் தான் வரும். இந்தக் கருவி பற்றித்தான் நாம் சற்று இங்கு பாப்போம்...

இது ஒரு பேனைப் போன்ற வடிவம் கொண்டது. இதில் ULTRA SOUND , infrared தொழிநுட்பம் பயன்படுத்தப்படுகின்றன. இது விண்டோஸ் 8 க்கு என வடிவமைக்கப்பட்டது. 


இந்தப் பேனை விசேடமாக refill , battery என்பனவற்றுடன் வரும் 


நீங்க தொடுதிரயாக மாற்ற மூன்று சாதனங்கள் இதையும் சேர்த்து வரும்...

base unit ஒன்று வரும்...


USB Cable..


இந்த வீடியோவைப் பாத்தீங்கன்ன உங்களுக்கு விளங்கும்....



பதிவு ஒன்னும் கிடைக்கலேன்னு இதை உங்ககூட பகிர்ந்தேன்... பதிவு உதவியானதாக இருந்தால் நண்பர்களுடனும் பகிருங்களேன்....!!!

செவ்வாய், 22 அக்டோபர், 2013

G-mail கணக்கை தொலைபேசியைப் பயபடுத்தி பாதுகாக்க...

வணக்கம் நண்பர்களே...!! பலர் Google நிறுவனத்தின் mail சேவையான g-mail சேவையைப் பயன்படுத்துவீர்கள். ஆனால், உங்களுக்கு சில வேளைகளில் பயமிருக்கலாம்... யாராவது நமது கணக்கை hack செய்து விடுவார்களோ..!! எனப் பயப்பிடுவீர்கள். அதற்காக Google தரும் ஒரு வசதி தான் "2 step activation" இந்த வசதியைப் பயன்படுத்தி நீங்கள் எப்போது உங்கள் g-mail கணக்கிற்குள் செல்கிறீர்களோ அப்போதெல்லாம் உங்கள் தொலைபேசிக்கு verification code அனுப்பப்படும் அதை நீங்கள் type செய்த பின்னர் தான் உள்ளே செல்ல அனுமதிக்கும்.

எனவே அதன் மூலம் உங்கள் g-mail account ஐ hackers இடமிருந்து பாதுகாக்க வழி உள்ளதல்லவா....!! என்ன... நீங்கள் தொலைபேசியை தொலைக்காமல் இருந்தால் சரி....!!

இப்போது எப்படி அந்த சேவையை ஆரம்பிப்பது எனப்பார்ப்போம்..

https://www.google.com/settings/account இங்கே செல்லவும்..

பின்னர் Security என்ற option ஐ click செய்யுங்கள்/..........


பின்னர் "2 step verification" என்ற optionclick செய்யுங்கள்..


பின்னர் தோன்றும் விண்டோவில் Start Setup ஐ கொடுங்கள்..

பின்னர் வருவதில் உங்கள் தொலைபேசி என்னைக் கொடுத்து பின் உங்கள் தொலைபேசிக்கு verification code வரும். பின் அதை கொடுத்தால் நீங்கள் 
2 step verification சேவையை ஆரம்பித்து விட்டீர்கள்.

இனிமேல் நீங்கள் அல்லது எவராவது உங்கள் கணக்கினுள் log in செய்தால் உடனே உங்கள் தொலைபேசி எண்ணுக்கு ஒரு verification code வந்துவிடும்.
பின் அவ் verification code ஐ கொடுத்தால் மட்டுமே....  உங்கள் mail களை வாசிக்கவோ கணக்கினுள் உள் நுழையவோ முடியும்..

இது நான் எனது மின்னஞ்சல் முகவரிக்குள் வாசிக்க செல்லும் போது வருவது. இவ்வாறு நீங்கள் எப்போது log in செய்கிறீர்களோ அப்போதெல்லாம் வரும்.

நீங்கள் விரும்பியவாறு இந்த சேவையை வேண்டுமானால் TURN OFF செய்யலாம்...

எப்டி.....!! தகவல் நல்லா இருந்திச்சா....?? நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்களேன்.....

சனி, 19 அக்டோபர், 2013

Facebook ல் Game request போன்ற சில தொல்லைகளிலிருந்து விடுபட..


வணக்கம் நண்பர்களே..!! இந்தப் பதிவு பொதுவாகப் பலர் அறிந்திருந்தாலும்... உங்களுடன் பகிர நினைத்ததால் இதை எழுதுகிறேன்...

Facebook என்பது சமூக வலைத்தளம்..
 அந்த வகையில் பலர் Games Request , Event என்பவற்றை create செய்து request கொடுப்பது , சில வேளைகளில் மிரட்டல்கள் chat மூலம் அனுப்புவது போன்ற வேளைகளில் ஈடுபடுவார்கள்.

அதிலிருந்து நாம் சற்று ஒதுங்கி இருப்போம் என விரும்புவோருக்கு இந்தப் பதிவு உதவியாக இருக்குமெனக் கூறி பதிவை எழுதுகிறேன்.

முதலில் உங்கள் Facebook account க்குள் login செய்து கொள்ளுங்கள்.

பின் Settings என்ற option ல் Privacy Settings என்ற option ஐ click செய்யுங்கள்..

பின்னர் Blocking என்ற option ஐ click செய்யவும்..

click செய்த பின் இவ்வாறு தோன்றும்....

பின்னர் என்ன செய்யவேண்டும் என்று உங்களுக்கே தெரியும்...

Block users என்பது உங்களுக்கு யாராவது தப்பான  நபராகத் தெரிந்தால் அவர் பெயரைக் கொடுத்து Block என்பதை click செய்யுங்கள். இனி அவர் உங்களைத் நெருங்குவது கடினம்.

இப்படி Game அதாவது Apps களை block செய்வது போன்ற வசதிகளும் அந்தப் பக்கத்திலே உள்ளது. 

நீங்கள் விரும்பியவாறு செய்யுங்கள்...

வெள்ளி, 18 அக்டோபர், 2013

யூடியூப்பில் இருக்கும் வீடியோக்களை மென்பொருள் எதுவுமின்றி பல formatகளில் தரவிறக்க.

வணக்கம் நண்பர்களே...!! நீங்க பல பல மென்பொருள்களைப் பயன்படுத்தி யூடியூப்பில் இருக்கும் வீடியோக்களை தரவிறக்க பயன்படுத்தி இருப்பீர்கள். இந்தப் பதிவில் நான் மென்பொருள் எதுவுமின்றி யூடியூப்பில் இருக்கும் வீடியோக்களை நீங்கள் விரும்பிய format ல் தரவிறக்குவது எப்படி என்பது தான்..

வாங்க பாக்கலாம்..

http://www.ssyoutube.com/ இந்தத் தளத்திற்கு சென்றால் கீழுள்ள படம் வாறு காணப்படும்...


இதில் வட்டம் போட்டுக் காட்டப்பட்டுள்ள இடத்தில் தரவிறக்க விரும்பும் youtube வீடியோவின் URL ஐ paste செய்து Download என்பதை அழுத்தவும்..

More என்பதை அழுத்துங்கள் அதில் பல பல format களில் உங்கள் கண்ணுக்குத் தெரியும். அதில் நீங்கள் விரும்பிய format ல் click செய்தால் தானாகத் தரவிறக்க ஆரம்பிக்கும்.

அப்புறம் என்ன download பண்ணுப் பட்ட உடனே பார்த்து மகிழுங்கள்...

எதாவது பிரச்சனை என்றால் கீழே comment செய்யவும்ம்...!!

வியாழன், 17 அக்டோபர், 2013

HTML கற்போம் பகுதி - 5

வணக்கம் நண்பர்களே...!! மறுபடியும் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. கடந்த ஒருவாரமாக HTML கற்போம் என்ற பதிவு எழுதுகிறேன். இப்போது 5ஆம் பாகத்தை எழுதுகிறேன். மேலும் இதன் பதிவின் தொடர்சிகளைப் பெற இங்கே அழுத்தவும்...

சரி இன்று நாம் link களை HTML பயன்படுத்தி எப்படி செய்வது எனப்பார்ப்போம்.

<a href="http://www.parathan20.blogspot.com/">Here is a link to Parathan blog</a>

இதில் <a> எனும் tag பொதுவாக நாம் link கொடுபதட்க்கு பாவிக்கும் tag.

 href என்பது நாம் எந்தத் தளத்திற்கு link கொடுக்கப்போகிறோமோ அதன் URLஐ கொடுக்க வேண்டும்.

மேலுள்ளவாறு code type செய்தால் வருவிளைவு எப்படி இருக்குமெனப் பார்போம..

Here is a link to Parathan blog

எப்படிப் பார்த்தீர்களா......??

சரி அடுத்து இன்னும் சிலவற்றைப்பார்போம்...

எனது தளத்தில் தொழிநுட்ப செய்திகளை மட்டும் வாசிக்க .. எப்படி கொடுக்க வேண்டுமெனப் பார்ப்போமா..

<a href="http://www.parathan20.blogspot.com/search/label/தொழிநுட்பம்">Here is a link to Technology News</a>

இங்கு www.parathan20.blogspot.com/search/label/தொழிநுட்பம் என்பது என் தளத்தில் இருக்கும் தொழிநுட்ப செய்திகளை வாசிப்பதற்கான URL..

சரி இப்போது பாப்போம்...

Here is a link to Technology News


இந்த code பெரிதாக இருக்கிறது எனப் பயப்பட வேண்டாம்..

கீழுள்ள படம் போன்று link உடன் பந்தி அமைத்தால் நீங்கள் கொடுத்த link ல் கொடுத்தால் அதற்கேற்ற பந்திக்கு நேராக வாசிக்க இலகுவானதாக அமைய செய்வது எப்படி என்பதுதான் இந்த code...


<html>
 
 <head>
 </head>

 <body>

<p><a href="#heading2">Link to heading 2</a></p>
<p><a href="#Word Practice">Link to Word Practice</a></p>
<h1 id="heading2">heading 2</h1>
<p>Text text text text</p>

<h1 id="Word Practice">Word Practice</h1>
<p> On the Insert tab, the galleries include items that are designed to coordinate with the overall look of your document. You can use these galleries to insert tables, headers, footers, lists, cover pages, and other document building blocks. When you create pictures, charts, or diagrams, they also coordinate with your current document look.
To change the overall look of your document, choose new Theme elements on the Page Layout tab. To change the looks available in the Quick Style gallery, use the Change Current Quick Style Set command. Both the Themes gallery and the Quick Styles gallery provide reset commands so that you can always restore the look of your document to the original contained in your current template.
You can easily change the formatting of selected text in the document text by choosing a look for the selected text from the Quick Styles gallery on the Home tab. You can also format text directly by using the other controls on the Home tab. Most controls offer a choice of using the look from the current theme or using a format that you specify directly.
To change the overall look of your document, choose new Theme elements on the Page Layout tab. To change the looks available in the Quick Style gallery, use the Change Current Quick Style Set command. Both the Themes gallery and the Quick Styles gallery provide reset commands so that you can always restore the look of your document to the original contained in your current template. </p>

 </body>

</html>


இந்த code ஐ செய்து பார்த்தால் கீழுள்ள படம் போலத்தோன்றும்...

அதில் நீங்கள் "Word Practice" என்ற linkல் கிளிக் செய்தால் அந்த பந்திக்கு செல்லும்...


என்னங்க சரியா....??? புரிந்துகொள்ள ஏதாவது சிரமம் இருந்தால் கீழே comment செய்யுங்கள்...

நன்றி
பரதன்

புதன், 16 அக்டோபர், 2013

Post செய்யப்பட்டபின் Facebook status ஐ edit செய்ய...

வணக்கம் நண்பர்களே..!! சமூகவளைதளங்களில் Facebook முக்கிய இடத்தை வகிக்கிறது.அந்த வகையில் Facebook தனது பயனர்களுக்குப் பல உதவிகரமான செயல்களில் ஈடுபட செய்கிறது. நாம் நண்பர்களுடன் பகிர்ந்த வீடியோ வை பகிர்ந்த பின் edit செய்யும் வசதி உள்ளது.

ஆனால் பகிரப்பட்ட status களை post செய்த பின் edit செய்யும் வசதி இல்லை. இப்போது அவ் வசதியையும் கொண்டுவந்திருக்கிறது Facebook.

Post செய்யப்பட்ட பின் status ஐ எப்படி edit செய்வது எனப்பார்ப்போம்...!

முதலில் status ஐ post பண்ணவும் கீழுள்ள படத்தைப் பார்க்கவும்..
Edit post ஐ click செய்யவும்...


கொடுத்தால் இனி நீங்கள் post செய்த status வரும்.. அதில் பிழைகளை எதாவது இருந்தால் மாற்றி எழுதிவிட்டு "Done Editing" ஐ கொடுத்தால் சரி...

செவ்வாய், 15 அக்டோபர், 2013

2014ம் ஆண்டிற்கான Avast Antivirus இறுதி version வெளியிடப்பட்டுவிட்டது...!!

வணக்கம் நண்பர்களே..!! இன்று 2014ம் ஆண்டிற்கான Avast Antivirus இறுதி version வெளியிடப்பட்டுள்ளது. அதை தரவிறக்க சுட்டியுடன் இங்கே உங்களுக்காக தர இருக்கிறேன். அதற்கு முதல் இது பற்றிய சில கருத்துகளை ஆராய்வோம்..


  • ஏற்கனவே அறிவிக்கப்பட்டது போல Unknown files பற்றி ஆராய சிறந்த  DeepScreen டெக்னாலஜி அதாவது Dynamic binary translation and dyna-gen என புதுப்போளிவுடைய மென்பொருள்.
  • update வசதி எனவும் மெருகேற்றப்பட்ட CLOUD SCANNING முறையும் இம் மென்பொருளில் காணப்படுகிறது.
  • உங்கள் வீட்டிலிருக்கும் வயது முதிர்ந்தோர் எதாவது தவறாக செய்யும் போது அவற்றைத் தடுக்க Mode Stricter என்ற புதிய வசதி. இது தவறாக எதாவது இடம்பெற்றால் உடனே சத்தம் போடும்.
  • Malwareகளை அழிக்கும் தன்மை மெருகேற்றப்பட்டுள்ளது.
  • Safe Zone என்ற option மூலம் Safe ஆக shopping செய்ய Banking வசதிகளை மேற்கொள்ள இந்த மென்பொருள் பாதுகாப்பு அழிக்கும்.,
  • இந்த மென்பொருள் version மற்ற vesionகளை விட கையாள்வது சுலபமானதாகக் காணப்படுகிறது.


தரவிறக்க... avast! Free Antivirus 2014.9.0.2006 | 81.3 MB (Non commercial freeware)

குறிப்பு இந்த மென்பொருள் இலவசம் ஆனால் வீட்டு பாவனைகளுக்கு மட்டுமே உபயோகிக்கவும். 

நன்றி.
பரதன்..

திங்கள், 14 அக்டோபர், 2013

HTML கற்போம் பகுதி-4

வணக்கம் நண்பர்களே..!! இன்றும் உங்களை HTML கற்போம் பகுதி 4ன் மூலம் சந்திப்பதில் மகிழ்ச்சி.

கடந்த பதிவான HTML கற்போம் - பகுதி 3 ல் பயிற்ச்சிகள் பெற்ற துணிவோடு இப்போது அடுத்த கட்டத்திற்கு வந்திருக்கிறோம்.

இன்றைய பதிவில் வர்ணங்கள் மற்றும் links கள் கொடுப்பது எப்படி எனப் பாப்போம்...


<h2 style="background-color:#ff0000;">My friendship with HTML</h2>

#ff0000 இதைப் பார்த்து பயப்படாதீர்கள்... இது என்னவென்று பார்போம்... இந்த coding ஐ கொடுத்தால் இதன் வருவிளைவு எப்படி இருக்கும் எனப் பார்போம??

இதோ......

My friendship with HTML

இப்போ என்னனு தெரிந்ஜீச்சா...?? 

<h2 style="background-color:#ff0000;">My friendship with HTML</h2>

இங்கு h2 என்பது உப தலைப்பு  அதற்கு அடுத்ததாக வரும் codingஐ பார்தீர்கள Background என.. 

அது நீங்கள் இப்போது எழுதுவது paper என்று வையுங்களேன் Background என்பது அந்த paper ன் நிறத்தை தீர்மானிக்கும்...

#ff0000 இது சிவப்பு நிறத்திற்கான coding ஆகும்...

பின்னர் h2 ஐ > இந்த tag மூலம் மூடி எழுதவேண்டிய எழுத்துகளை எழுதி </h2> என்பதை கொடுத்தால் சரி...

இப்போது புரிந்தது தானே....!! 

அடுத்து....


<html>
 
 <head>
 </head>

 <body style="background-color:#ff0000;">
 </body>

</html>

இது எப்படி வரும் என தெரிகிறதா...?? 

நல்லா பாருங்க <body என்ற tagற்கு உள்ளே background என்ற எழுத்திற்கு ஒரு நிறத்தின் coding போடப்பட்டிருக்கிறது...

அப்படியானால் உங்களுக்கு முழு இடமும் சிவப்பு நிறமாகத்தான் இருக்கும்..

ஏன் என்றால் #ff0000 இந்த code சிவப்பு நிறத்திற்கான code ஆகும்...

இதன் வருவிளைவு இதோ...


இதை உங்கள் கணனியில் Notepadஐ open செய்து செய்து பாருங்கள்... அப்போது தெரியும்...


நீங்கள் கேட்கலாம் இப்படித்தான் bacground போட வேண்டுமா என..

இப்படியும் போடலாம்...

<body style="background-color: red;"> 

இப்படி coding போட்டாலும் அதே சிவப்பு நிறம் தான் வரும்...

சற்று குழப்புவதுபோல் இருந்தால் உங்கள் கணணியிலும் செய்து பார்க்கவும்.
இதையும் உங்கள் கணனியில் செய்து பார்க்கவும்..



இன்னும் சில நிறங்களின் html coding கள் உங்கள் பார்வைக்கு...

White: #ffffff
Black: #000000 (zeros)
Red: #ff0000
Blue: #0000ff
Green: #00ff00
Yellow: #ffff00

மேலும் நிறங்களின் coding கள் பற்றி தெரிய... http://www.color-hex.com/

இன்று இது போதும் என நினைக்கிறன்...!! சற்று அதிகமாக எழுதிவிட்டேன் போல் தெரிகிறது.. இத்துடன் நிறுத்தி மீண்டும் ஒரு அழகிய நாளில் இதன் முகுதியைத் தொடர்கிறேன்..

நன்றி 

ஞாயிறு, 13 அக்டோபர், 2013

Windows Command Promptல் copy, paste செய்ய - (இலகுவான டிப்ஸ்)

நாம் பொதுவாக எதாவது ஒரு பயன்பாட்டிற்காக Windows Command Propmtஐ பயன்படுத்துவோம். அப்படிப் பயன்படுத்தும் போது எதாவது ஒரு பெரிய codeஐ பயன்படுத்தவேண்டும் என்றால் நாம் அதை மெல்ல மெல்ல பார்த்துப் பார்த்துத் தான் type செய்வோம்.

இன்றைய பதிவில் வேறு ஓர் இணையதளத்தில் இருக்கும் command ஐ Windows Command Promptல் copy & paste செய்வது எப்படி என்று தான் பார்க்கப்போகிறோம்.

முதலின் Windows Command Promptஐ open செய்யுங்கள்..

open செய்ய...

Run => CMD  ஐ கொடுத்தால் கீழுள்ள படமாகத் தோன்றும்...


பின் படத்தில் காட்டப்பட்டவாறு செய்யவும்..


பின் "Quick Edit Mode" என்பதை tick செய்யுங்கள்... Insert Mode ல் இருக்கும் சரி button ஐ remove செய்யுங்கள்.

அவளவு தான் இனி நீங்க பெரிய commandகளை 
Windows Command Promptல் சென்று Right click கொடுத்தாலே...சரி..

வெள்ளி, 11 அக்டோபர், 2013

ஆல் இன் ஆல் அழகுராஜா - இசை விமர்சனம்

Studio Green  K.E.ஞானவேல் ராஜா வழங்கும் M.ராஜேஷின் இயக்கத்தில் கார்த்தி , காஜல் அகர்வால் , சந்தானம் போன்றோர் நடிபில் தமனின் இசையில் வரும் மாதம் நவம்பர் 2ஆம் திகதி வெளிவரவிருக்கும் திரைப்படம் "ஆல் இன் ஆல் அழகுராஜா" . Trailer நேற்று வெளியிடப்பட்டு அனைத்து சமூக வலைத்தளங்களிலும் பிரபலமடைந்து வருகின்றது. டீசரரும் ஏற்கனவே வெளியாகி முகேஷை வைத்து காமடி செய்து அனைவரிடமும் பெரும் வரவேட்பைப்பெற்றது.

நேற்று பாடலும் Trailerம் பாடல்களும் வெளியானது.  பாடல்கள் அனைத்துமே நன்றாக இருக்கின்றன. இன்று அவற்றின் விமர்சனத்தை பார்ப்போம்.

1. யாருக்கும் சொல்லாம
பாடியவர்: ராகுல் நம்பியார்
பாடலாசிரியர் : நா.முத்துக்குமார்

இப் பாடல் trailerல் வரும் ஒரு பாடல். இந்தப் பாடலில் chorus அதாவது பின்னணிக் குரல் நிறைய வைத்திருக்கிறார் இசையமைப்பாளர். பாடல் தொடங்கும்போதே chorus குரலுடன் தான் ஆரம்பிக்கிறது.

பாடலின் tune நல்லா இருக்கு.. 

காதலியின் intoduction வரும் போது இந்தப்பாடல் நல்லா இருக்கும். மெலடி பாடலும் இல்ல குத்துப் பாடல் அதாவது ஸ்பீட் பாடலாகவும் இது அமையவில்லை. ஓரளவுக்கு love feel பண்ணக் கூடிய அளவுக்குப் பாடல் அமைந்திருக்கிறது.

2. ஒரே ஒரு

பாடியவர்: ஜாவீட் அலி
பாடலாசிரியர்: நா.முத்துக்குமார்

பாடல் ஆரம்பிக்கும்போது church மணி அடிக்கும் soundஉடனும் திருமனத்தில தாலி கட்டுற மந்திரம் அதுதாங்க "மாங்கல்யம் தந்துனாதே..." என்ற குரல்களுடன் ஆரம்பிக்கிறது.

 காதலை ஏற்றுக்கொள்ளுமாறு காதலன் கேட்பது போல பாடல் அமைந்திருக்கிறது.

ஒரே ஒரு வார்த்தை சொன்னால் என்ன பெண்ணே இன்பம் துன்பம் எல்லாம் இனி உந்தன் பின்னே..." என பாடுகிரவாறு பாடலாசிரியர் அமைத்திருக்கிறார்.

பாட்டு சீரான வேகத்தில் நல்லா speed ம் இல்லை slowம் இல்ல. பாடல் கேட்க்கக்கூடிய அளவுக்கு இருக்கிறது ஆனால் என்ன பாடலில் பெரிதும் இடம் பிடித்திருப்பது வாத்தியங்களின் சத்தம் மட்டும் தான் இன்னும் சில வரிகள் அதிகம் சேர்த்தல் பாடல் நன்றாக இருக்கும்.

3. உன்ன பார்த்த நேரம்

பாடியவர்கள்: விஜய் யேசுதாஸ், ஸ்ரீ வர்தனி
பாடலாசிரியர்: நா.முத்துக்குமார்

இந்தப் பாடல் trailer உடன் வந்த பாடல் இடைக்காலப் பாடல் போன்ற முறையில் அமைத்திருக்கிறார் இசையமைப்பாளர். விஜய் யேசுதாசின் குரலும் பாடிய பெண்ணின் குரலும் நன்றாகப் பொருந்தும் படியாக இருக்கிறது. இடையில் "ரப்பப்பா" என இக்கால rap song மாதிரி compose செய்திருக்கிறார் இசையமைப்பாளர்.

காதலியைப் பார்த்தவுடன் காதலனுக்கு என்ன என்ன செய்யும்னு இப் பாடல் கூறுகிறது..

"உன்ன பாத்த நேரம் மனசு ஆடும் மயிலாட்டம் உன்ன நெனச்ச நேரம் நெஞ்சில் மலரும் பூந்தோட்டம்..."

4. ஆல் இன் ஆல் அழகுராஜா....

பாடியவர்கள் : சுசித் , செந்தில் தாஸ் , கீர்த்தன் , பெல்லி ராஜ்
பாடலாசிரியர் : நா.முத்துக்குமார்

இந்தப் பாடல் நிச்சயமாக கார்த்தியின் introduction ஆகத் தான் இருக்கும். பாட்டு முழுவது ஆல் இன் ஆல் அழகுராஜாவைப் பற்றித்தான் பாடல். 

பாடல் நல்லா speedஆக compose செய்யப்பட்டிருக்கிறது. 

இடையில் தென்காசியில் ஒரு தங்க அருவி சொக்கத் தங்கம் jewelry என ஒரு advertisement வருது... பாடலில் எல்லாம் விளம்பரம் போடுறாங்க... !! :p

5. யம்மா யம்மா

பாடியவர்கள்: சுராஜ் சந்தோஷ் , ஸ்ரேயா கோசல்
பாடலாசிரியர்: நா.முத்துக்குமார்

பாடல் நல்லா speed ஆகவும் ஆடக்கூடிய பாடலாகவும் இருக்கிறது. 

படத்தில் காஜலின் பெயர் சித்ரா தேவி பிரியா அதனால் பாடலில் சித்ரா தேவி பிரியா உன்ன கட்டப்போறேண்டி.. என கார்த்தி பாடுவது போல அமைந்திருக்கிறது.

பாடல் சூப்பர் பாடல்களில் இந்தப் பாடல் எனக்கு மிக நன்றாகப் பிடித்தது. வரிகளும் நல்லா இருக்கு... Tune சிறப்பாக இருக்கிறது,...

ஆல் இன் ஆல் அழகுராஜா திரைப்படப் பாடல்களுக்கு எனது rating
  8.9/10

தொடர்ந்து விமர்சனங்களைப் பெற இத் தளத்தில் இணைந்திருங்கள்...

வியாழன், 10 அக்டோபர், 2013

HTML கற்போம் - பகுதி 3

வணக்கம் நண்பர்களே..!! மறுபடியும் HTML கற்போம் - பகுதி 2 பதிவின் தொடர்ச்சியை தொடர்வதில் மகிழ்ச்சி. இன்று நாம் இதுவரை பார்த்த tagகள் சிலவற்றையும் வேறு சில tagகளையும் பார்போம்.

சென்ற பதிவிலே கூறியிருந்தேன் HTML coding தொடங்கும் போது <html> எனத் தொடங்கி எல்லா tag களும் போட்டு முடிந்த பின் இறுதியாக </html>
எனக் கொடுத்து முடிக்கவேண்டும் என..

இன்று உங்களுக்காக சில tag களை காட்டி அதை இடுவதன் மூலம் அது எவ்வாறு பார்ப்பவர்களுக்குத் தோன்றும் என்பதைப் பாப்போம்.

                 <p>  இந்த tag பந்தி எழுதும் போது பயன்படுவது </p>

 <em> சொல் அழுத்தத்திட்க்கு எழுதும் போது பயன்படும்..  </em>

 <h1> தலைப்புக்குப் பயன்படும் tag </h1>

 <h2> உப தலைப்பு இட பயன்படும் </h2>

 <h3>உப தலைப்புக்கு - உப தலைப்பு இடப் பயன்படும் tag</h3> 

இவை ஏற்கனவே முதல் பதிவில் பார்த்தவை...

உங்கள் பார்வைக்கு ஒரு tutorial... தமிழில்.

படத்தில் click செய்து பெரிதாக்கிப் பார்க்கவும்..



இனி மேலும் சில tag களை பாப்போம்...

<strong>Stronger emphasis.</strong>

இந்த tag மூலம் எழுத்தை தடிப்பானதாக மாற்றலாம்..

இந்த tag இவ்வாறு தான் தோன்றும்..

Stronger emphasis.


 <small>This should be in small.</small>

இந்த tag மூலம் எழுத்துகள் சின்னதாக எழுதலாம்...

இது எவ்வாறு தோன்றுமெனக் கீழே பாப்போம்...

This should be in small.


 <em><small>Emphasised small text</small></em>

இந்த tag மூலம் எழுத்துகள் அளுத்தமானதாகவும் சிறிய அளவிலும் எழுதலாம்..

மேலே காட்டப்பட்டவாறு தான் tag எழுதும் போது எழுதவேண்டும். அதாவது முதலில் தோன்றிய <em> என்ற tag ஐ இறுதியில் முடிக்கவேண்டும்.

 <em><small>Emphasise small text</em></small>

இப்படி tag கொடுத்தல் கூடாது..
Emphasised small text

<br/> என்ற tag நாம் wordல் enter கொடுத்தால் line break ஆவது போல htmlல் அடுத்த lineக்குச் செல்லும். 

உதாரணம். :-  

 Some text<br /> and some more text in a new line 

இந்த tag இப்படித்தான் தோன்றும்...


Some text
and some more text in a new line


அடுத்து இப்போது ஒவ்வொரு tagற்கான விளக்கத்திற்கும் இடையில் பிரிப்பதற்காக ஒரு கோடு இடுக்றேன் அல்லவா..?? அதை எப்படிப் போடுவது எனப்பார்ப்போம்...

<hr />

இந்த tag ஐ கொடுத்தவுடன் கோடு ஒன்று தோன்றும்.. இதோ\...



நாம் word ல் சில points களை bullets & numbering மூலம் போடுகிறோம் அல்லவா..? அப்படி போடுவதற்கான tag இதுதான்..

<ul>
   <li>A list item</li>
   <li>Another list item</li>
 </ul>
 
இந்தக் coding ஐ கொடுத்தால் உங்களுக்கு கீழுள்ளவாறு தோன்றும்..
  • A list item
  • Another list item

இனி 1 , 2 என HTMLல் இட...

<ol>
   <li>First list item</li>
   <li>Second list item</li>
 </ol>
 

இவ்வாறு தான் தோன்றும்...
  1. First list item
  2. Second list item


பயிற்சிக்காக....


இப் படத்தில் உள்ளவாறு உங்களால் Notepad ஐ பயன்படுத்தில் உங்கள் இணையஉலாவியில் தொன்றச்செய்யுங்கள்....///

நானே கூறுகிறேன்.. :)

Strong emphasis என வரவைக்க 
<strong>Stronger emphasis</strong>
என்று type செய்யவேண்டும்.

இனி Small text என எழுத சிறிய எழுத்தில் எழுத 

<small>Small text</small> 

இனி அடுத்தவரிக்குக் கொண்டு வர <br/>

என type செய்து Line shift
என type செய்து <br/> என type செய்து 

கோடு வரவைக்க <hr /> என type செய்து...

 <ul>List</ul>

 <ol>Ordered list</ol>



என type செய்து இறுதியில் வசனத்துக்கு bullet இட 
 <li>List item</li>

இதுதாங்க பயிற்ச்சியில் உருவாக்கச் சொன்னதற்கான full coding...

<strong>Stronger emphasis</strong>
<small>Small text</small>
<br /> Line shift
<hr /> Horizontal line
<ul>List</ul>
<ol>Ordered list</ol>
<li>List item</li>

பொறுமையாக வாசித்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி..!! தொடர்ந்து இதன் பதிவுகள் தொடரும் என்பதைத் தெரிவித்துக்கொண்டு இப்போதைக்கு விடைபெறுகிறேன்....

நன்றி 

செவ்வாய், 8 அக்டோபர், 2013

PDF கோப்புகளை Word கோப்புகளாக Onlineல் மாற்ற..

நாம் கணணியை பல தேவைகளுக்காக பயன்படுத்துகிறோம். அந்த வகையில் e-books எனப்படும் இலத்திரனியல் புத்தகங்களை படிக்க பயன்படுத்துகிறோம். அப்படிப் பயன்படுத்தும் போது அந்தப் புத்தகங்களை டவுன்லோட் செய்யும் போது PDF கோப்புகளிலேயே தரவிறக்கப்படும்.

PDF கோப்பு என்றால் என்ன?
இந்த வகையான கோப்புகளைப் பயன்படுத்தி பிறர் copy செய்வதையோ edit செய்து வேறு தில்லாலங்கடி வேலைகள் செய்வதிலிருந்து பாதுகாத்துக்கொள்ள முடியும்.

அப்படி நீங்கள் PDF கோப்புகளை Word க்கு மாற்றித்தான் தீர வேண்டும் என்றால் இதோ ஆன்லைன மூலம் கன்வெர்ட் செய்ய சில தளங்கள்...
    1. pdfonline.com
    2. pdftoword.com
    3. convertonlinefree.com
    4. freepdfconvert.com
    5. convertpdftoword.org
    6. doc2pdf.net
    7. document.online-convert.com
    8. convertpdftoword.net
    9. pdftoword.org
    10. onlineocr.net
    11. verypdf.com
    12. docupub.com
    13. scannedpdftoword.com
    14. go4convert.com
    15. online2pdf.com
    16. convertmypdf.net

    PDF கோப்புகளை Word கோப்புகளாக மாற்ற மென்பொருள்கள் ...
    1. Nemo PDF Converter 
    2. Batch converter  
    3. AnyBizSoft PDF to Word
    4. Free PDF to Word Doc Converter
    5. SmartSoft Free PDF to Word Converter
    இந்த செய்தி பிடித்தால் உங்கள் நண்பர்களோடு பகிர்ந்து அவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.

    நன்றி
    பரதன்...

    Windoes 7 ல் Partition உருவாக்குவது எப்படி...? (இலகுவான முறையில்)

    சில பேர் தமக்குத் தேவையான Drivesகளை உருவாக்குவார்கள். ஆனால் harddiskல் இன்னும் சில வெற்றிடங்கள் இருக்கும். அந்த வெற்றிடத்தைப்பயன்படுத்தி இன்னொரு partition உருவாக்கி அதில் சில dataகளை சேகரித்து வைக்கலாம் தானே...!! அப்படி செய்வதன் மூலம் எமக்கு சாப்ட்வேர்களை தேடும் வசதி சற்று இலகுவாகும்.

    சில பேர் எனக்குக் கூறினார்கள் OS ஐ install செய்யும் போது தான் partition பிரிக்கமுடியுமென... பின்னர் ஒரு மாதிரி OS install செய்த பிறகும் partition பிரிக்க முடியுமென நான் ஒருவர் மூலம் அறிந்தேன்... அதை உங்களுடன் பகிரலாமென நினைக்கிறன்

    கீழுள்ள வழியைப் பயன்படுத்தி partition ஐ உருவாக்கலாம்...

    My Computer ல் Right click செய்து Manage என்ற option ஐ click செய்யுங்கள்...

    பின் கீழ் காணப்பட்ட வாறு ஒரு box வரும்...


    அதில் Disk Management என்ற option ஐ clcik செய்யுங்கள்..

    இனி உங்களுக்கு விரும்பியவாறு Drivesஐ அளித்து அல்லது உருவாக்கலாம்..

    சந்தேகம் ஏதாவது இருந்தால் கீழே கருத்துப் பெட்டியில் உங்கள் கருத்தை இடவும்.

    உதவியான தகவலாக இருந்தால் நண்பர்களுடனும் பகிருங்கள்.