இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 17 செப்டம்பர், 2017

HTML கற்போம் பகுதி-11

வணக்கம் நண்பர்களே... இறுதியாக நான்கு வருடங்களுக்கு முதல் பகுதி-10 எழுதியிருந்தேன்,.. 2014 ஆம் ஆண்டு HTML 5  வெளிவந்தது. அதை பற்றி தொடர்ந்து எழுதுவதற்கான நேரம் கூடவில்லை.. இப்போது
இத் தொடரை எழுதி முடிக்கலாமென நினைக்கிறன்.. இனி ஒவ்வொரு வாரமும் இத் தொடரை எதிர்பார்க்கலாம்.

பழைய HTML க்கும் HTML 5 க்கும் பெரிதாக வித்தியாசம் ஒன்றும் இல்லை. கோடிங் எழுத ஆரம்பிக்கும் போது பழைய வெர்சனில் <html> என சாதரணமாக ஆரம்பித்திருப்போம் இங்கு <!DOCTYPE html> என தொடங்க போகிறோம்... அவளவே...

மற்றபடி ஒரு சில tag கள் புதிதாக அமைந்திருக்கின்றன. ஒவ்வொன்றாக இனி வரும் தொடரில் பாப்போம்.


HTML 5 ல் comment tag என ஒன்று உள்ளது. . ஒரு html coding எழுதுகிறீர்கள் என்றால் அதை ஒருவர் பார்க்கும் போது html திறமை உள்ளவராயின் tag களை வைத்து இனம் பிரிப்பார்.
html தெரியாதவர் என்றால் இந்த code எதற்கு அந்த code எதற்கு என குழம்பி போய் இருப்பார். ஆகவே அந்த பிரச்சனையை இல்லாமல் இருக்க html டிசைன் பண்ணும் ஒருவரால் கீழ்வரும் code ஆனது இந்த டிசைன் காக எழுதியுள்ளேன் என பார்ப்பவர் புரிந்து கொள்ள எழுதப்படுவது.

இது browse பண்ணும் போது வராது..

<!-- Write your comments here -->

Write your comments here என்ற இடத்தில் நீங்கள் எதனையும் எழுதலாம் அது உங்கள் இனைய பக்கத்தில் வராது..

<!-- Do not display this at the moment
<img border="0" src="pic_mountain.jpg" alt="Mountain">
-->

இங்கு நீங்க imag ஒன்றை உள் புகுத்த img tag ல எழுதி இருக்கீங்க ஆனால் comment tag குள் எழுதியதால் அது உங்கள் webpage ல் display ஆகாது...

Hello World


Hello World


<h1 style="border: 2px
solid Tomato;">Hello World</h1>
<h1 style="border: 2px
solid Violet;">Hello World</h1>


இது ஒரு வகை inline css code.
ஒரே வரியில் டிசைன் களை code ஆக்குவதாலேயே இது css வகைக்குள் அடங்குகிறது.  இங்கு நீங்கள் உங்களுக்கு பிடித்த வகையில் மாற்றங்களை செய்யலாம். உதாரணமாக border ன் தடிப்பு மட்டும் நிறங்களை மாற்ற முடியும்.

இங்கு Solid என்று இருப்பது அந்த தடிப்பு எப்படி அமைய வேண்டும் என்பதாகும்.
Solid ஐ dotted என மாற்றினால் கீழுள்ளவாறு தோன்றும்...

Hello World


இப்போது புரிகிறதா...???

இன்றைய பதிவுவை இத்துடன் முடித்து கொள்கிறேன்... தொடர்ந்து இணைந்திருங்கள் இன்னும் பல பதிவுகள் காத்திருகின்றன...