இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 28 ஆகஸ்ட், 2013

உங்கள் கணனியிலிருக்கும் Applicationகளுக்கு கடவுச்சொல் போடுவது எப்படி.??இதோ இப்படி....

நீங்கள் கணனியில் பல சாப்ட்வேர்,அப்ளிகேசன் , போல்டர் என பல பைல்களை நிறுவி வைத்திருப்பீர்கள். அப்படி நீங்கள் வைத்திருக்கும் அப்ளிகேசன்களை சில வேளைகளில் உங்கள் கணணியைப் பாவிக்கும் நண்பர்கள் உறவினர்கள் யாராவது எடுத்துப் பாவிப்பார்கள்.


அப்படி பாவிப்பவர்களிடமிருந்து பாதுகாக்க administrator password போட்டு வைத்திருப்பார்கள் . அதை விட அவர்கள் எமது குறிப்பிட்ட application களை
மட்டும் பாவிக்கமுடியாத வண்ணம்  கடவுச்சொல் இட்டு பாவிக்கலாம்...அப்படிப் பாவிக்க உங்களுக்கு விருப்பம் என்றால் இதோ நான் தரும் வழிகளைப் பின்பற்றி செல்லுங்கள்

  • முதலில் Password Door எனப்படும் software ஐ உங்கள் கணனியில் install செய்யுங்கள்... [Download: 594.85 KB]


  • download ஆகிய பின் install செய்ய ஆரம்பியுங்கள்... அப்படி செய்து கொண்டு இருக்கும் போது...!! 
கீழ் காணப்படுகின்ற படம் போல வரும்... 


அப்படி வரும் போது "Enter Admin Password" என்ற இடத்தில் நீங்கள் உங்கள் application க்கு எந்த password போட நினைக்கின்றீர்களோ... அதை type செய்யுங்கள்...

அப்படியே செய்து கொண்டு போகும் போது இவ்வாறு ஒரு window தோன்றும்


அந்த இடத்தில் நீங்கள் முதல் இட்ட Admin Password type செய்து ok கொடுங்கள்..


இனி படத்தில் காட்டப்பட்டவாறு install செய்யவும்

பின்னர் கீழ் காட்டப்பட்டவாறு உங்கள் கணனியிலுள்ள application
list காணப்படும் . அவற்றில் எதற்கு நீங்கள் Password போட நினைகிறீர்களோ..!! அந்த app ஐ click செய்து Protect ஐ click செய்யவும்..

அவளவு தான்...!! உங்க app இப்போ safe.. உங்களைத் தவிர எவராலையும் open பண்ணவே முடியாது.......!!


ஒரு வேளை நீங்கள் நினைக்கலாம் "Password Door"applicationUninstall செய்து password போடப்பட்ட app ஐ யாராவது use பண்ணலாம் என... அதுதான் முடியாது Uninstall பண்ணும் போது அது "Admin Password" கேட்கும்..



பதிவு பிடித்தால் உங்கள் நண்பர்களோடு பகிர்ந்து உதவுங்கள்..

நன்றி...

0 comments:

கருத்துரையிடுக