இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 21 ஆகஸ்ட், 2013

Android பற்றி அறிந்துகொள்வோம்

தகவல் தொழினுட்பத் துறையில் கணனிக்கு அடுத்தபடியாக, மிகப் பெரிய சந்தைப் பொருள் 'மொபைல் போன்' கள் ஆகும். கணனிகளில் நாம் பயன்படுத்தும் அனேக வசதிகளும் தற்போது மொபைல் போன்களிலும் வந்துவிட்டன.

மொபைல் போன் சந்தைகளில் எதிர்காலத்தை ஓரளவு கணித்த கூகிள் நிறுவனம்,'android' எனும் இயங்குதளம் மூலம் மொபைல் போன் சந்தையில் களமிறங்குகிறது. 'Android' என்பது Smart Phone மற்றும் Table Pc களுக்கான ஓர் இயங்குதளமாகும்.

இது லினக்ஸ் கெர்நெல் (Linux Kernel) எனும் இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டது. இதில் சில மாற்றங்களைச் செய்து தனது தயாரிப்பாக கூகிள் வெளியிட்டது.

Android இயங்குதளமானது, தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகின்றது. ஒவ்வொரு தடவை மேம்படுத்தப்படும் போதும்பழைய பதிப்பில் உள்ள பிழைகளால் களையப்பட்டு புதிய வசதிகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன.

அத்துடன், ஒவ்வொரு பதிப்பிற்கும் இனிப்புப் பண்டங்களின் பெயர்களையும் சூட்டியுள்ளது. இதன்படி சமீபத்திய பதிப்புக்கள் "Ice Cream Sand-wich (Android 4.0) , Jelly Bean (Android 4.1)  என்பனவாகும்.

Android புதிய பதிப்பு வந்தவுடனேயே , நீங்கள் அதனைப் பெற முடியாது. மாறாக, நீங்கள் வைத்திருக்கும் மொபைலுக்கு உரிய வசதியை குறித்த மொபைல் நிறுவனம் கொடுக்கும் போதுதான் நீங்கள் பெற முடியும்..

எனது முந்தய பதிவு :  உங்கள் தனிப்பட்ட தகவல்களை விற்கிறது Facebook!!

3 கருத்துகள்:

  1. உங்கள் கருத்துக்களைக் கீழே பதிவு செய்யுங்கள்... நான் காத்திருக்கிறேன்....!!

    பதிலளிநீக்கு
  2. தங்கள் தளத்தில் இடம்பெற்றிருக்கும் பதிவுகள் அனைத்தும் அருமை நண்பா... ! அதில் மாற்றுக் கருத்து எனக்கு இல்லை.. ஆனால் ஒரே ஒரு குழப்பம்... உங்களது தளத்தில் உள்ள அத்தனை பதிவுகளும் வேறு தளங்களிலும் உள்ளனவே... நீங்கள் அதிலிருந்து எடுத்து மாற்றினீர்களா? அல்லது அவர்கள் உங்கள் தளத்திலிருந்து எடுத்துப் போட்டார்களா? என்பதுதான்.

    ஏற்கனவே உள்ள பதிவுகளை மீண்டும் மீண்டும் படிப்பதால் "போர்" அடிக்கிறது... தயவு செய்து புது விடயங்களை பகிருங்களேன்...!!!! அனைவருக்கும் பயன்படும் அல்லவா?

    அரைச்ச மாவையே அரைப்பது.. புளிச்ச மாவையே புளிக்க செய்வது போல அல்லவா இருக்கிறது...!!! உங்களுடைய திறமைக்கு புதிய விசயங்களை பகிர்ந்தால் எங்கேயோ போய்விடலாம்..

    பதிலளிநீக்கு
  3. உங்கள் கருத்துப் பகிர்விற்கு நன்றி..!! நான் வலைப்பூவை ஆரம்பித்து 2 மாதங்கள் அப்படித் தான் ஆகிறது. சொந்தமாகத்தான் பதிவுகளை எழுதி வருகிறேன். இது வரைக்கும் தமிழ் தளங்களில் உள்ள எந்த விதமான தொழிநுட்ப செய்திகளையும் நான் copy செய்தோ பகிரவில்லை. எனது மொழிநடையில் எனக்குத் தெரிந்த தகவல்களைப் பகிர்கிறேன். தற்போது "HTML கற்போம்" என்ற தலைப்பில் பகுதி பகுதியாக எழுதி வருகிறேன்.

    தொடர்ந்து எழுதிவருகிறேன்..... எனது பதிவுகளை புதியலகம் மற்றும் வியப்பு போன்ற தளங்களில் பார்த்தேன். சில தளங்களில் எனது வலைப்பூவை குறிப்பிட்டிருக்கிறார்கள். சிலர் குறிப்பிடவில்லை. நான் எப்போதுமே எனது சொந்தப் பதிவுகளைத் தான் பதிய விரும்புகிறேன். தொடர்ந்தும் புதிய தகவல்களைப் பகிர காத்திருக்கிறேன்.

    இறுதியாக நான் எந்தத் தளங்களிலும் இருந்து copy செய்யவில்லை. என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறேன். :)

    பதிலளிநீக்கு