இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 27 பிப்ரவரி, 2014

Samsung Galaxy Grand 2 போனை வாங்கலாமா.?? ஒரு சிறப்புப் பதிவு

சிறந்த வரவேற்புடன் உலக சந்தையை தனது முந்தய தயாரிப்புகளை விட update செய்யப்பட்ட சில அம்சங்களுடன் வெளிவந்துள்ளது Samsung Galaxy Grand 2.
Samsung நிறுவனம் தனது அனைத்து உற்பத்திகளையும் மிகப் பெரிய தொடுதிரையுடன் வெளியிட்டு வருகிறது.  Samsung Galaxy Grandம் அதற்கேற்ற வகையில் அனைத்துத் தரப்பிலிருந்தும் சிறந்த வரவேற்ப்பைப் பெற்றது.

தற்போது Samsung Galaxy Grand 2 வெளியிடப்பட்டுள்ளது. எனவே அது பற்றிய ஒரு பதிவு தான்.... வாங்க படிக்கலாம்

Samsung Galaxy Grand 2 ஆனது இதன் முந்தய உற்பத்தியான Samsung Galaxy Grand ஐ விட சிறந்த குணாதிசயங்களுடன் காணப்படுகிறது.

Samsung Galaxy Grand ல் காணப்பட்ட குறைபாடுகள் என்ன...??

  • battery charge உடனே குறைவடையும் தன்மை
  • Processing speed குறைவு

அப்படிப் பார்க்கும் போது Samsung Galaxy Grand 2 Battery charge கிட்டத்தட்ட 342 நிமிடங்களுக்கு வீடியோ play செய்தால் வேலை செய்யும்.

இதன் விலை கிட்டத்தட்ட 22,9௦௦ ரூபாய் மதிப்புள்ளது.


இனி இந்த போனின் சில அம்சங்களை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்...

Display

இதன் Display ஐ பொறுத்தவரையில் High End Resolution of 720x1280 இதன் முந்தய பதிப்பான Samsung Galaxy Grand ன் Resolution 480x800. ஆகும். எனவே இதில் ஒரு முன்னேற்றம் உள்ளது.

Processor

இதன் Processor Quad Core Qualcomm SnapDragon Processor ஆகும். Processor ன் வேகம் 1.2Ghz. சும்மா பட்டைய கெளப்புது...


Memory

இதன் உள்ளக Memory கிட்டத்தட்ட  8 GB. இதன் RAM  1.5GB. கேம் பிரியர்களுக்கு நிச்சயம் உதவிகரமானது.

Connectivity and OS

Dual Band WiFi and Bluetooth 4.0 LE standard இந்த போனின் Downlink speed கிட்டத்தட்ட  3g HSPA+ upto 21 MBPS. இந்த போன் Android 4.2 "JellyBean" ல் பணி புரிகிறது.
.விரைவில் உத்தியோகபூர்வமாக 4.4 "KitKat" க்கு மாற்றப்படும்.

Multimedia and Battery

Samsung Galaxy Grand போனின் Camera resolution சிறப்பாகக் காணப்பட்டது. மேலும், Samsung Galaxy Grand 2 வில்  8 Megapixels கமெராவும் , முன் பக்க கேமரா 2 megapixels உம் கொண்டவையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மற்றும் வீடியோ Record செய்ய  720P HD தரத்திலான இயல்பும் கொண்டுள்ளது. 

மேலும் இதன் Battery 342 நிமிடங்களுக்கு தொடர்ந்து வீடியோ பாவிக்கலாம்.

என் இறுதித் தீர்ப்பு...

நீங்கள் Samsung Galaxy Grand பாவனயாலரா...?? அப்படியானால் மேலும் பல வினைத்திறன்களுடன் பாவிக்க விரும்பினால் இந்த போன் வாங்குவது நல்லது. 
    Samsung Galaxy Grand 2 (White) ன் அம்சங்கள்
  • 8 MP Primary Camera
  • 5.25-inch TFT Touchscreen
  • 1.9 MP HD Secondary Camera
  • Wi-Fi Enabled
  • Dual SIM (GSM+ GSM)
  • Expandable Storage Capacity of 64 GB
  • Android v4.3 (Jelly Bean) OS
  • 1.2 GHz Qualcomm Snapdragon Quad Core Processor
என்ன.. நண்பர்களே.. பதிவு உதவியானதாக அமைந்ததா...?? அப்படியானால் உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்து உதவுங்கள்...

நன்றி : பரதன்

சனி, 15 பிப்ரவரி, 2014

Avast Antivirus க்கான Licence file ஐ எப்படி இலகுவாக பெற்றுக்கொள்ளலாம்.?

Avast antivirus பற்றி அனைவரும் தெரிந்திருப்பீர்கள் என்று எண்ணுகிறேன் அதனால் அது பற்றி அதிகமாக சொல்லவில்லை. தலைப்பை பார்த்தவுடன் avast antivirus இன் crack பதிப்பு என்று நினைத்திருந்தால் நான் பொறுப்பாக முடியாது ;)

சில நாட்களுக்கு முன்னர் நான் avast இடமிருந்து மூன்று வருடத்திற்கான license file இனை இலவசமாக பெற்றுக்கொண்டேன். அதனை மற்றவர்களும் தெரிந்து கொண்டு அதன் மூலம் அவர்களும் பயன்பெற வேண்டும் எனக்கருதி அந்த trick இனை இங்கு பதிவிடுகிறேன். 

இதற்காக நீங்கள் ஒன்றும் பெரிதாக கஷ்டப்பட தேவையில்லை. :) நான் கீழே தந்துள்ள இலகுவான வழிகளை பின்பற்றி நீங்களும் உங்களுக்கான avast பதிப்பை மூன்று வருடத்திற்கு இலவசமாக பெற்றுக்கொள்ளுங்கள். :)

Step 01 : - இங்கே சொடுக்கி avast இலவச பதிப்பை தரவிறக்கி உங்கள் கணினியில் நிறுவிக் கொள்ளுங்கள்

Step 02 : - நிறுவிகொண்டதின் பின்னர் இத்தளத்திற்கு ( my.avast.com )சென்று உங்களுக்கான ஒரு கணக்கை தொடங்கிக்கொள்ளுங்கள்.


Step 03 : - அதன் பின்னர் உங்கள் கணக்கினுள் நுழைந்து (லாகின்) செய்து அதன் பின்னர் தோன்றும் விண்டோவில் "Recommend" என்பதை கிளிக் செய்து "Link" என்பதை தெரிவு செய்துகொள்ளுங்கள். 



Step 04 : - Link என்பதை தெரிவு செய்த பின்னர் அதில் இருக்கும் இணைப்பை copy செய்து கொள்ளுங்கள் (example - http://www.avast.com/get/****** )



Step 05 : - அதன் பின்னர் நீங்கள் copy செய்த இணைப்பை முகநூல் போன்ற வலைத்தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களை avast இனை பயன்படுத்த செய்வதின் மூலம் avast licence file இனை இலவசமாக பெற்றிடலாம்.



உங்கள் இணைப்பை பயன்படுத்தி avast இனை தரவிறக்கம் செய்பவர்களின் எண்ணிக்கையை பொறுத்து உங்களுக்கான licence file இன் காலமும் அதிகரிக்கும் :)



இது ஒட்டு மொத்தமாக உங்கள் கையில் தான் உள்ளது..

நன்றி,
திருக்குமரன்

சந்தேகங்கள் உண்டானால் கீழே comment செய்யுங்கள்....

வியாழன், 13 பிப்ரவரி, 2014

ஒருவரின் பேஸ்புக் password ஐ hack செய்யலாமா...???

வணக்கம் நண்பர்களே.. ஒரு சுவாரச்சியமான பதிவுடன் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. இன்றைய காலங்களில் நமது ஆளுங்க சும்மா இருக்க மாட்டாங்க.. அடுத்தவன் விசயத்த அறிவதில் தான் நேரம் போகிறது.. ( பொதுவாகத்தான் சொல்கிறேன்.. ) அதுபோல பேஸ்புக்கில் ஒருவருடைய password ஐ hack பண்ணனும்னே கொஞ்சப் பேர் திரிகிறார்கள்.

எனவே, அவர்களுக்கு ஒரு துன்பகரமான செய்தி. நீங்க என்ன செய்தாலுமே ஒருவரின் பேஸ்புக் password ஐ hack செய்வது கடினம்.

பலர் கூகிளில் தேடித் தேடி பார்த்திருப்பீர்கள். அங்கே பேஸ்புக் passwordhack செய்வதற்க்கு மென்பொருளாகவோ அல்லது அந்த website இலேயே பெருவதற்க்கு வசதிகள் காணப்படுகின்றன. ஆனால் அவை அனைத்துமே பொய்யானவை.

அத எப்படி நீ சொல்லலாம்னு நீங்க என்ன கேட்கலாம்....

அதற்குக் காரணம் ஆண்டொன்றுக்கு பேஸ்புக் மில்லியன் கணக்கில் தனது பாதுகாப்பிற்க்காக பணத்தை செலவிட்டு வருகிறது.

மார்க் Zuckerberg உம் அவர் தொழிலாளர்களும் ஏன் Headquarter ல இருக்காங்க...??

இப்படியான போலியான சேவைகளை நீங்கள் பெற்றுக்கொள்வதால் உங்கள் நேரம் தான் Waste.

பின் ஏதற்கு இந்த சேவைகள் காணப்படுகின்றன??
இவை அனைத்துமே Hacker களால் உருவாக்கப்படுபவை.

உதாரணமாக நீங்கள் பேஸ்புக் Hack செய்யும் மென்பொருளைத் தரவிறக்கினால் உங்கள் கணனியில் காணப்படும் சில தரவுகளையும், Online Banking Service என்பவற்றை அந்த மென்பொருள் create செய்த Hacker ன் Server ற்கு அனுப்பும். இதனால் உங்கள் Credit Card மேலும் முக்கிய தரவுகளை வைத்து அதனைத் தவறான பாதையில் பயன்படுத்துவார்கள்.

இந்த மொக்கைத் தனமான சேவையை வழங்கும் சில இணையத்தளங்கள்... சில...

அப்படியானால் பேஸ்புக் Password ஐ Hack செய்யவே முடியாதா...??

யாரு சொன்னா இல்லைன்னு.. Hack செய்ய முடியும்.. அதற்க்கு நிச்சயமாக ஒரு சிறந்த Hacker ஆல் மட்டுமே முடியும். அதாவது Hackers ஆல் மட்டுமே அந்த இணையத்தளத்தின் Security Level ஐ வைத்து Hack செய்ய முடியும்.

நான் கூறவருவது என்னவென்றால்.... நிச்சயமாக இணையத்தில் காணப்படும் எந்த விதமான Application களாலும் பேஸ்புக் Password ஐ Hack செய்ய முடியாது.

அப்படி Hack செய்ய வேண்டுமானால்.. சரியான வழியில் நீங்கள் Hacking படித்தால் செய்யமுடியும்..

என்ன நண்பர்களே... இன்றைய பதிவு நிச்சயம் உங்களுக்குப் புரிந்திருக்கும். 

"".....நேரம் பொன்னானது இப்படியான போலியை கண்டு அதில் நேரத்தை செலவிடாதீர்கள்....""

நன்றி.
பரதன்

செவ்வாய், 11 பிப்ரவரி, 2014

Android Phone களின் வேகத்தை 200 சதவீதமாக அதிகரிக்க சில டிப்ஸ்

Android phone களை நீங்கள் பொதுவாகப் பாவனை செய்திருப்பீர்கள். அந்த வகையில் ஒரு Applaunch செய்வதற்க்கு அதிக நேரம் எடுக்கும். அப்படி எடுப்பதால் பயனர்களுக்கு விருப்பமில்லாத OS ஆக Android மாறாது... ஆனாலும் ஒரு கசப்பான நொடிகளாகத்தான் அவை இருக்கும்.

இங்கே நான் சில டிப்ஸ் கள் உங்களுக்கு உதவிகரமானதாக இருக்கும் என நம்புகிறேன்,

1.App Cache களை delete செய்தல்

தொடர்ச்சியாக ஒரு app ஐ பாவனை செய்யும் செய்யும் போது அந்த app ன் சில செயல்பாடுகள் save செய்யப்பட்டுக் காணப்படும். அவை கொஞ்சம் கொஞ்சமாக save செய்யப்பட்டு உங்கள் deviceslow செய்து விடும்.

எனவே அவற்றை அளிப்பதற்கான வழி இதோ..

Setting > Manage Applications 

இங்கே சென்றால் உங்கள் போனில் காணப்படும் அனைத்து apps களும் காணப்படும். அவற்றுள் ஒவ்வொரு apps ஆகத் தெரிவு செய்து அதில் காணப்படும் "Clear cache" என்பதைக் click செய்யுங்கள்.

2.பாவனை செய்யாத apps களை uninstall செய்யுங்கள்.

பாவனை செய்யாத apps களை uninstall செய்வது ஓர் சிறந்த வழி. ஏன் என்றால் அவை மெமரி அதிகமாக எடுப்பதாலும்...,, battery charge ஐயும் குறைக்கிறது. அதாவது background ல் அவ் apps வேலை செய்து கொண்டிருக்குமானால் battery charge குறைவடையும்.


3. Widget, Short Cut களை Remove செய்தல்

உங்கள் போனின் முன் திரையில் பல widgets உம் shortcut களும் காணப்படும். அவை உங்கள் போனின் வேகத்தைக் குறைக்கும். எனவே அப்படி shortcut வைப்பதைத் தவ்ரிக்கலாமே...

அப்படி செய்வதற்க்கு ...,, அந்த app ல் touch செய்யுங்கள் (click செய்யாமால்...) செய்தால் பின் remove என்ற இடத்திட்க்குள் கொண்டு சென்றால் அவற்றை நீக்கலாம்.

4. Apps களை SD Card க்கு மாற்றல்

Download செய்யும் apps கள் phone மெமரியில் வரையறுக்கப்பட்டவை. எனவே phone மெமரி full ஆகினால் பின்னர் பயன்படுத்துபவருக்கு மிகப்பெரிய பிரச்சினை ஏற்படும். எனவே அதைத்தடுப்பதட்க்கு மெமரி card க்கு apps களை மாற்றினால் சிறந்த வழி.

இதனை செய்வதற்க்கு

Setting > Applications > Manage Applications 

இனி போனில் காணப்படும் apps கள் காணப்படும். Move செய்ய விரும்பும் appclick செய்தால் உள்ளே காணப்படும் “move to SD card” என்ற option ஐ click செய்தால் சரி.

5. App launcher ஐ Download செய்தல் 

பொதுவாக எல்லா போன்களுக்கும் app launcher காணப்படும். நீங்கள் வேண்டுமென்றால் download செய்தால் இந்த app launcher ஆனது காணப்படும் apps களை குறித்த நேரத்தில் open செய்ய உதவும்.


இவளவு டிப்ஸ்களும் உங்களுக்கு உதவிகரமானதாக அமையும் என நான் நினைக்கிறேன். நீங்கள் Try செய்து பார்த்து உங்கள் கருத்துகளைக் கீழே இடுமாறு கேட்டுக்கொள்கிறேன்...

".....இந்தத் தளத்தில் காணப்படும் பதிவுகளை வேறு எங்காவது நீங்கள் இடப்போகிறீர்கள் என்றால் கீழே இத் தளத்தினைக் குறிப்பிடுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.  பதிவுகள் எழுத எவளவோ நேரம் செலவிட்டு எழுதுகிறேன்... தயவு செய்து புரிந்து கொள்வீர்களென நம்புகிறேன்.."

நன்றி..: பரதன்