Skip to content

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 12 ஆகஸ்ட், 2014

பேஸ்புக்கை இதுவரை எத்தனை மணி நேரம் பாவித்துள்ளீர்கள்..??

பேஸ்புக்; சமூக வலைத்தளங்களின் ராஜா என அழைக்கப்படுகிறது. எத்தனையோ ஆயிரம் பயனர்களை தன்னகத்தே கொண்டுள்ளது. காலையில் எழுந்து Face கூட கழுவாமல் Facebook ல் இருக்கும் ஜாதி நிறைய உண்டு. அதில் நானும் ஒருத்தன்.

இப்படியாக, நீங்கள் பேஸ்புக் கணக்கு தொடங்கியதிலிருந்து இதுவரை காலமும் எவளவு நாள் பேஸ்புக்கை பாவித்துள்ளீர்கள் என அறிய வேண்டுமா..??

இதோ உங்களுக்காக கீழே உள்ள box ஐ பின்பற்றியவாறு பார்க்கவும்...

அண்ணளவாக ஒரு நாளைக்கு நீங்கள் எவளவு நேரம் பாவிப்பீர்கள் என்பதை முதலில் கொடுத்து பின் Next ஐ கொடுக்கவும்...




 பயனுள்ளதாக இருந்தால் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்...

திங்கள், 11 ஆகஸ்ட், 2014

டுவிட்டரில் ஒருவரின் முதலாவது ட்வீட் எது என அறிய வேண்டுமா..?

2௦14 ஆம் ஆண்டுடன் டுவிட்டரானது தன் எட்டாவது அகவையில் அடியெடுத்து வைக்கிறது. சமூகவளைத்தளம் என்றால் நம் நினைவிற்கு வருபவை பேஸ்புக்கும், டுவிட்டரும் தான்.
பல சினிமா பிரபலங்கள், விளையாட்டு பிரபலங்கள் என எல்லோரும் பாவிக்கும் முக்கிய சமூகவளைத்தளம் இதுவாகும்.,

பல நபர்கள் எத்தனையோ கீச்சுக்களை பகிர்ந்திருப்பார்கள்.... கீச்சு என்பது ட்வீட் ஆகும்... அப்படி கீச்சுகளைப் பகிர்ந்து மகிழ்வார்கள்.

அந்த வகையில் அவர்கள் வெளியிட்ட முதலாவது கீச்சு எது என அறிவது கொஞ்சம் கஷ்டம்.. அதற்கு நீங்கள் அவர்கள் Profile ல் சென்று  scroll down பண்ணிக்கொண்டு இருந்தால் தான் முதல் கீச்சு பார்க்கலாம். அது மினக்கெட்ட வேலை...

அதற்குத் தான் டுவிட்டர் ஒரு தளத்தை உருவாக்கியுள்ளது...

அங்கு நீங்கள் யாருடைய முதலாவது கீச்சினைப் பார்க்க விரும்புகிறீர்களோ அவர்களின் User Name type செய்து Enter ஐ கொடுத்தல் அவர்கள் முதல் கீச்சு வந்து நிற்கும்...

இணைய முகவரி : http://first-tweets.com/

நீங்களும் Try செய்து பார்த்து நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்...

ஞாயிறு, 10 ஆகஸ்ட், 2014

அழித்த பேஸ்புக் Messages, போடோக்கள், வீடியோக்களை திரும்பப் பெற...

வணக்கம் நண்பர்களே..!! இன்றைய தினம் உங்களுக்கு ஓர் இனிய தகவலை வழங்குவதில் மகிழ்ச்சியடைகிறேன். பேஸ்புக் பாவிக்காத ஆட்கள் யாருமே இருக்க முடியாது..

நீங்கள் பேஸ்புக்கில் நண்பர்களுடன் போடோக்கள், வீடியோக்கள், மற்றும் chat என்பவற்றை மேற்கொண்டிருப்பீர்கள்... அவற்றை நீங்கள் delete செய்திருப்பீர்கள்... இருந்தபோதிலும் அவை பேஸ்புக்கின் Data Base ல் பதிந்து தான் இருக்கும்... வெளித்தோற்றத்திட்கு அழிந்தது போல் இருந்தாலும் அவற்றை அழித்த உங்களால் மட்டுமே மீண்டும் திரும்பப் பெற முடியும்...

ஆம், நீங்கள் அழித்த போட்டோ,வீடியோ, chat என்பவற்றைப் பெற உங்கள் பேஸ்புக் password கேட்கும் அதனால் நீங்கள் தப்பீத்தீர்கள்...

சரி....,, இப்போது அதை எப்படி பெறுவது எனப்பார்ப்போம்...

முதலில் General Account Settings ற்குச் செல்லுங்கள்..

அங்கு
Download a copy of your Facebook data.
என்பதை click செய்து கொள்ளுங்கள்...

இனி, உங்கள் பேஸ்புக் Password ஐ type செய்து Submit ஐ கொடுங்கள்..
இனி, உங்கள் பேஸ்புக் கணக்கு இருக்கும் மின்னஞ்சலிற்கு பேஸ்புக்கிலிருந்து message வந்திருக்கும்.. அதில் உங்கள் Facebook Data வை Download செய்வதற்கான link வந்திருக்கும்...

தொடர்ந்து அதனை அழுத்தி Download செய்து கொள்ளுங்கள்

Download செய்யப்பட்ட Folder ஐ open செய்தால் அதில் ஒவ்வொரு folder களாக open செய்து பாருங்கள்/...
மேலும், உங்கள் இனைய உலாவி மூலமும் அவற்றை Open செய்யலாம்... அதில் நீங்கள் இதுவரை செய்த அனைத்து செயற்பாடுகளும் இருக்கும்...

Try பண்ணி பாருங்க..........................
பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்...

செவ்வாய், 5 ஆகஸ்ட், 2014

Google Chrome ல் Youtube விளம்பரங்களை தடை செய்வது எப்படி..?

இன்று இணையத்தில் வீடியோக்களை பார்வையிட சிறந்த இணையத்தளமாக விளங்குவது Youtube ஆகும். வீடியோக்களை Upload செய்பவர்கள் அதன் மூலம் பணம் சம்பாதிக்க வீடியோ ஆரம்பிக்க முதலும் இடையிலும் விளம்பரங்களை பிரசுரிக்கப்படுகிறது, இது பார்போரை காண்டாக்கும்..

எனவே இதை எப்படி நிறுத்துவது...??

இதோ Google Chrome ல் Youtube Ad Blocker என்பதை Install செய்து கொள்ளுங்கள்

அவளவு தான் இனி நீங்கள் பார்க்கும் போது விளம்பரங்கள் எல்லாம் வராது...

பயனுள்ளதாக இருந்தால் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்...

சிறுமி கூகிளிடம் தந்தைக்கு ஒரு நாள் விடுமுறை கேட்டார். அதன் பின் என்ன நடந்திருக்கும்..?

கோடை கால விடுமுறையின் போது தனது தந்தையுடன் அவ் விடுமுறையை கழிப்பதற்காக அங்கு Designer ஆக வேலை செய்யும் ஒருவரின் மகள் கூகிளிற்கு கடிதம் ஒன்றினை அனுப்பினார். அதில் அவர் மேலும் குறிப்பிட்டதாவது என் தந்தைக்கு சனிக்கிழமை மட்டும் விடுமுறை வழங்கப்படுகிறது. இந்த முறை புதன் கிழமை எனக்காக விடுமுறை கொடுப்பீர்களா, அன்று அவரது பிறந்தநாளும்  கூட எனக் கேட்டு அனுப்பினார்.

Dear Google Workers,
Can you please make sure when daddy gets to work, he gets one day off. Like he can get a day off on Wednesday. Because daddy ONLY gets a day off on Saturday.
From Katie.
PS. It is daddy's BIRTHDAY!
PPS. It is summer, you know

இப்படி உருக்கமான ஒரு கடிதத்திற்கு பதில் என்ன...

அதற்கு கூகிள்
உங்கள் தந்தை கூகிளிற்கு செய்த நன்மைகளைக் கருதி அவருக்காகவும் உங்களுக்காகவும் ஜூலை மாதத்தின் முதல் ஒரு வாரத்தையும் அவருக்கு விடுமுறையாக வழங்குகிறோம்.. என பதில் கடிதம் அனுப்பியது..

கூகிளிற்கு எவ்வளவு பரந்த மனசு பார்தீர்களா....??