இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 30 நவம்பர், 2013

Facebook ல் automatic ஆக குறித்த நேரத்தில் logout செய்ய...

வணக்கம் நண்பர்களே...!! எந்த account ஆக இருந்தாலும் நான் log out பண்ணிடுவேன். ஆனா பேஸ்புக் பாவித்த பின் log out செய்வது தான் எனக்குப் பெரிதும் பிரச்சினை. அட.. என்னங்க பேஸ்புக் லையே மூழ்கிவிடுவோம்ல.... அதுக்குத் தாங்க ஒரு extension வெளியிடப்பட்டுள்ளது... Google Chrome இலும், Firefox இலும்.

அந்த extension ஐ நீங்கள் நிறுவிய பின் நீங்கள் எவளவு நேரத்தில் பேஸ்புக்கை log out செய்யப்போகிறீர்கள் என நீங்கள் விரும்புகிறீர்களோ அதைக் கொடுத்தால் சரி... குறிப்பிட்ட நேரத்தில் தானாகவே log out ஆகிவிடும்...

extension கள்..

Google Chrome - Facebook Auto Log Out

இதை நிறுவிய பின் இவ் வீடியோவைப் பாருங்கள்//

Post by பரதன் வலைத்தளம்.

எப்படி நண்பர்களே...!! நன்றாக இருந்ததா...?? நண்பர்களுடன் share செய்து உதவுங்கள்...

பேஸ்புக்கில் என்னுடன் இணைய..

வியாழன், 28 நவம்பர், 2013

போட்டோகளை வரைந்த படமாகவும், கார்ட்டூன் படங்களாகவும் மாற்ற ஓர் மென்பொருள்...!!

வணக்கம் நண்பர்களே..!! இன்று பல ஓவியர்கள் படம் வரைகிறார்கள். ஆனால் பலருக்கு நம்மை வரைந்து ஒருநாளாவது பார்க்க வேண்டும் என்ற விருப்பம் இருக்கும்... அப்படி வரைய முடியாதவர்களுக்கு ஒரு நல்லா மென்பொருள் அதாவது நீங்கள் கணனியில் வைத்திருக்கும் போட்டோவை வரைந்த படமாகவோ, கார்ட்டூன் படங்களாகவோ மாற்ற இவ் மென்பொருள் சிறந்தது.

இவ் மென்பொருளின் சிறப்பம்சம் என்றால்...

Cartoon , black & white, Neon, Different Sketches, Oil Painting, Hatching, Pencil drawing,Stamp and Photocopy.


போன்ற நிறங்களில் கலரை மாற்ற முடியும்... 

அதுமட்டுமில்லாமல் இவ் மென்பொருள் iphone, mac , windows , linux போன்ற OS களுக்கும் சப்போர்ட் பண்ணும்.


மேலும் சுவாரஸ்சிய பல தகவல்கள் உங்களுக்காக...

திங்கள், 25 நவம்பர், 2013

லேப்டாப் over-heat ஆகுதா..? சில டிப்ஸ்

வணக்கம் நண்பர்களே..!! இன்றைய காலத்தில் லேப்டாப் களின் பாவனையாளர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டு இருக்கிறது. அந்த வகையில் 9௦% மேற்பட்ட பயனர்கள் சந்திக்கும் மிகப் பெரிய பிரச்சினை லேப்டாப் over-heat ஆகுவது. இங்கே நான் சில டிப்ஸ் களை தர இருக்கிறேன். முடிந்தவரை லேப்டாப் over-heat ஆகுவதைத் தடுப்பது பற்றி..

Power Setting : பல லேப்டாப் பயனர்கள் தமது Power Setting ல் High Performance என செட் செய்திருப்பார்கள். உண்மையில் High Performance ல் விட்டால் லேப்டாப் ற்கு கிடைக்கும் மின் அதிகமாக வரும் இதனால் லேப்டாப் சூடாகும்.

இதனை சரி செய்ய உங்கள் power setting ல் Power Saver ModeOn செய்து பாவனை செய்யுங்கள்...

அழுத்தக் காற்று (compressed air) : நீங்கள் லேப்டாப் பாவனை செய்யும் போது DUST ஆன இடங்களில் பாவிக்கவேண்டிய நிலை ஏற்படலாம்.. இதனால் dust துணிக்கைகள் உங்கள் லேப்டாப் ல் படியலாம்... அதனை அகற்றுவதற்காக கணனியின் fan வேகமாக சுற்றும் போது அதிக வெப்பம் வெளிவிடப்படும் அதனால் சூடு அதிகரிக்கும்.. எனவே Compressed Air ஐ இடையிடையே லேப்டாப் ற்கு அடியுங்கள் அப்போது உங்கள் லேப்டாப் ல் படிந்த தூசிகள் அகற்றப்படும்...

மேல்தளம் (surface) : பலர் தமக்கு விரும்பியவாறு blanket , கட்டில் போன்ற இடங்களில் வைத்துப் பாவிப்பார்கள் , அப்படிப் பாவிக்கும் போது அப்படிப்பட்ட மேல்தளங்கள் heat ஐ போகவிடாது மீண்டும் லேப்டாப் உள்ளேயே தள்ளுகிறது.
எனவே, இப் பிரச்சினையை நிறைவேற்ற தட்டையான மேல்தளங்களில் பாவிக்கவும்.

உதாரணமாக மேசை...

Cool Pad : நண்பர்களே.. இது தான் பொதுவாகப் பலரால் பாவிக்கப்படும் உபகரணம். என்ன..?? வாங்க கொஞ்சம் சிலவாகும் ஆனால் பயனுள்ளது. இதைப் பாவிப்பது உங்களுக்கு over-heat ஆவதைக் குறைக்கலாம்.

தேவையற்ற நேரங்களில் லப்டொப்பை off செய்தல் வேண்டும். Hibernate பண்ணி வைப்பதை விட தேவையற்ற நேரங்களில் stand by ல் விடாமல் shut down செய்வது நல்லது..

எனவே, இது அடிப்படையான ஒரு விடயம் நீங்களும் இவற்றை வாசித்து பயன் பெற்றால் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்...

பேஸ்புக்கில் இணைய..

ஞாயிறு, 24 நவம்பர், 2013

HTML கற்போம் பகுதி- 8

வணக்கம் நண்பர்களே...!! கடந்த பதிவில் table அமைப்பது பற்றிய அடிப்படை பார்த்தோம். இன்றைய பதிவில் table அமைப்பது பற்றி சற்று விரிவாகப் பார்போம்..
அதாவது

Cell 1
Cell 2 Cell 3 Cell 4

இதில் நீங்கள் பார்ப்பதாவது Cell 1 என்பது 3 row ஐ பிடித்திருக்கிறது... இப்படியாக ஒரு table ஐ அமைப்பதற்கான HTML code இதுதான்...

<table border="1">
 <tr>
<td colspan="3">Cell 1</td>
 </tr>
 <tr>
<td>Cell 2</td>
<td>Cell 3</td>
<td>Cell 4</td>
 </tr>
</table>

<table border="1"> இங்கே நீங்கள் விரும்பிய அளவுக்கு border அகலத்தைக் 
கூட்டலாம்..
'colspan=' என்பது குறிப்பது ; 

நீங்கள் எத்தனை row ஐ column க்கு ஒதுக்கப்போகீறீர்கள் என்பதாகும்.. உதாரணமாக..
Cell 1
Cell 2Cell 3Cell 4Cell 5Cell 6Cell 7Cell 9


இப்போது அவதானித்திருப்பீர்கள் மேலே உருவாக்கப்பட்ட table க்கான code இதோ..


 <table border="1">
   <tr>
     <td colspan="5">Cell 1</td>
   </tr>
   <tr>

     <td>Cell 2</td>
     <td>Cell 3</td>
     <td>Cell 4</td>
            <td>Cell 5</td>
     <td>Cell 6</td>
             <td>Cell 7</td>
            <td>Cell 9</td>
</tr> </table>
'colspan='இப்போது பார்தீர்களா? 
try செய்து பாருங்கள்..

அடுத்து, இந்த code ஐ பார்க்கவும்..

<table border="1">
   <tr>
     <td rowspan="3">Cell 1</td>
     <td>Cell 2</td>
   </tr>
   <tr>
     <td>Cell 3</td>
   </tr>
   <tr>
     <td>Cell 4</td>
   </tr>
 </table>

<table border="1"> 

இங்கே நீங்கள் விரும்பிய அளவுக்கு border அகலத்தைக் கூட்டலாம் 


rowspan= 

இதில் நீங்கள் ஒரு column ல் எவ்வளவு row அடங்கவேண்டும் என்பதைக் 
குறிக்கும்...
உங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு மாற்றலாம்...
மேலே உள்ள code ற்கான வருவிளைவு இதோ...
Cell 1 Cell 2
Cell 3
Cell 4

<table border="1">
   <tr> 
          <td rowspan="5">Cell 1</td>
     <td>Cell 2</td>
   </tr>
   <tr>
     <td>Cell 3</td>
   </tr>
   <tr>
     <td>Cell 4</td>
   </tr>
 </table>

இந்தக் code ற்கான வருவிளைவு....


<rowspan="5" என்பதிலிருந்து உங்களுக்குப் புரிந்திருக்கும் இங்கே ஒரு cell 5 column க்கு 
சமானாக வர இருக்கிறது என.... எங்கே பார்போம்..




Cell 1 Cell 2
Cell 3
Cell 4

பார்த்தீர்களா.....??? எப்படி இருக்கிறது... try செய்து உங்கள் கருத்துகளைக் கீழே இடுங்கள்..


பேஸ்புக்கில் என்னுடன் இணைய...

வியாழன், 21 நவம்பர், 2013

பேஸ்புக் ஏன் "நீல" நிறமாக இருக்கிறது...??

பேஸ்புக் நீங்கள் கணக்கு ஆரம்பித்த ஆண்டு முதலே நீல நிறமாக இருக்குமென நீங்கள் நினைப்பீர்கள் ஆனால் உண்மையில் பேஸ்புக் 2௦௦4 ஆம் ஆண்டு ஆரம்பிக்க்கப்பட்ட போது நீல நிறமாகத் தான் இருந்தது.

இதோ ஆரம்பிக்கப்பட்ட போது இருந்த பேஸ்புக்கின் தோற்றம்...

உங்களுக்குத் தெரியுமா...?? 

பேஸ்புக்கின் முந்திய  பழைய அதாவது ஆரம்பிக்கப்பட்ட போது இருந்த URL thefacebook.com

ஆரம்பித்த காலத்தில் நாம் கணக்கு ஆரம்பிக்க நீங்கள் மின்னஞ்சல் .edu என இருந்தால் தான் ஆரம்பிக்க முடியுமாம்...

நோட் பண்ணி வையுங்க உதவியா இருக்கும்....  :p


சரி பேஸ்புக் நீலமாக இருப்பதற்குக் காரணம் Mark Zuckerberg பேஸ்புக் owner
நீலம் என்பது பிடித்த நிறமாம்... என ஒரு செவ்வியில் குறிப்பிட்டிருந்தார்...

இன்னுமொரு வர்த்தக நோக்கமாக நீலம் என்பது transparent background ஆக வேலை செய்யக்கூடியது... அதை விட பல மக்களையும் கவரக் கூடிய நிறமாம் எனப் பலர் கூறுகிறார்கள்...

நீல நிறமானது webmaster களின் விருப்பமான ஒரு நிறமாக இருந்ததென கூறப்படுகிறது.. (பேஸ்புக் ஆரம்பிக்கும் போது...)

எனக்கு நீலம் பிடிக்கும்.... உங்களுக்கு எந்த கலர் பிடிக்கும்னு சொல்லுங்க கீழே comment ல.......

பேஸ்புக்கில் என்னுடன் இணைய...

ஞாயிறு, 17 நவம்பர், 2013

சிறந்த 5 இலவச anti-virus மென்பொருள்கள்.. (அனைவருக்கும் உதவும் )

வணக்கம் நண்பர்களே! இன்று சிறந்த 5 இலவச மென்பொருள்கள் பற்றி பார்க்கப்போகிறோம். இன்றைய கணணி உலகில் வைரஸ்களின் ராச்சியம் அதிகரித்துவிட்டது. எனவே, அப்படியான வைரஸ்களை அழிப்பதற்கு உருவாக்கப்பட்ட மென்பொருள்கள் Anti-virus மென்பொருள்களாகும்.

ஏற்கனவே, பதிவு ஒன்று எழுதியிருக்கிறேன்.. ஏன் Antivirus ஐ update செய்யவேண்டும் என.. இதனை வாசிக்கவும்..

சரி இப்போது அப்படிப்பட்ட மென்பொருள்களுள் சிறந்த 5 மென்பொருள்களை உங்களுக்காக அறியத்தருகிறேன்..

1. Microsoft security essentials

இவ் மென்பொருளானது மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஒரு Antivirus ஆகும். இதன் மூலம் உங்கள் கணனிக்கு ஓர் சிறந்த காவலாளியாக இருக்கும். virusகளிடமிருந்து உங்கள் கணனிக்குப் பாதுகாப்பு அழிக்கும்.

  • இலவச மென்பொருள்
  • Automatic Update ஆகஇருக்கும்.. ( இவ் வசதி உங்கள் கணணி Genuine ஆகாது இருந்தால் மட்டுமே வேலை செய்யும்..)
  • மைக்ரோசாப்ட் நிறுவன தளத்திலிருந்து உத்தியோக பூர்வமாகத் தரவிறக்கலாம்...
  • இன்ஸ்டால் செய்வது சுலபம்..
  • கையாள்வது சுலபம்
  • கணணியை slow ஆனதாக மாற்றாது...

2.Avast

பல மக்களால் பொதுவாகப் பாவனை செய்யும் மென்பொருள். இதன் மூலம் virus களை கண்டறிய உதவும் ஆனால் சில virus களை அழிப்பது என்பது இவ் மென்பொருளால் முடியாது. 


இம் மென்பொருளில் பல விதமாக ஸ்கேன் செய்யும் வசதி உள்ளது..

உதாரணமாக : Quick Scan”, “Full System Scan”, “Removable Media Scan” and “Select folder to scan”.

உங்கள் இருக்கும் பல  apps களை ஓட வைப்பதட்க்குப் பல program களை run செய்கிறது..

File System Shield, Mail Shield, Web Shield, P2P Shield , IM Shield, Network Shield, Script Shield and Behavior Shield

3. Avira

இது ஓர் சிறந்த antivirus மென்பொருளாகத் திகழ்கிறது.
  • இலவச anti-virus
  • உங்கள் கணணியை slow செய்யாமல் சிறப்பாக வேலை செய்யும்
  • உங்கள் கணனிக்கு சிறந்த பாதுகாப்பை வழங்கும்.

4. AVG Free Edition

AVG Antivirus கணனிகளுக்கு சிறந்த பாதுகாப்பை வழங்கும் மென்பொருளாகத் திகழ்கிறது.

இவ் மென்பொருள் காசு காட்டி பாவிக்கும் மென்பொருளாகவும், free மென்பொருளாகவும் இருக்கிறது.

Free மென்பொருள் என்பதால் சில நன்மைகள் கிடைக்காது. 


எங்க போனாலும் துட்டு தான்.... என்னா வாழ்க்கடா....!!!!

சிறந்த பயனர் இடைமுக டிசைன் ஐ கொண்டது. அனைத்துவிதமான ஸ்கேன் களையும் மேட்கொள்ளலாம். உடனுக்குடன் ஸ்கேன் ரிப்போர்ட் களை தரக்கூடிய திறமை வாய்ந்தது. 



இவற்றை விட மேலும் சில anti-virus மென்பொருள்கள்.

PC tools antivirus
Comodo
Panda cloud antivirus
Immunet protect free

இந்த மென்பொருள்கள் பெரிய அளவில் பாவனை செய்யப்படுத்தப்படுவதில்லை. எனவே , அவற்றின் பெயர்களையும் , டவுன்லோட் லிங்க் ஐயும் தந்திருக்கிறேன்.. முடியுமானால் பயன்படுத்திப் பார்த்து கீழே உங்கள் கருத்துகளைக் கூறுங்கள்....

>>> Facebook Page பக்கத்தில் Like பண்ணாதவர்கள் லைக் செய்திடுங்கள்.
நன்றி...
பரதன்

சனி, 16 நவம்பர், 2013

நண்பர்களது "வலைப்பூ" hack செய்யப்பட்டுவிட்டதேனே ஏமாற்ற..

வணக்கம் நண்பர்களே..!! இன்று ஒரு சின்ன trick. இந்தப் பதிவில் உங்கள் நண்பர் ஒருவர் வலைப்பூ வைத்திருந்தால் குறிப்பாக blogger வைத்திருப்பவரின் வலைப்பூ hack செய்யப்பட்டு விட்டதெனக் காட்டுவது எப்படி எனப் பார்போம்.

http://parathan20.blogspot.com/feeds/posts/ முதலில் இங்கே சென்றால் கீழுள்ள படத்தில் உள்ளவாறு தோன்றும்.

குறிப்பு இங்கே http://parathan20.blogspot.com/ என்பதற்குப் பதிலாக உங்கள் நண்பரின் வலைப்பூவை இடுங்கள்.

பின்னர்  "/posts/" என்பதற்குப் பின்னர் நீங்கள் .....

யாரால் hack செய்யப்பட்டதென எழுதினால் சரி..

உதாரணமாக http://parathan20.blogspot.com/feeds/posts/hacked by Parathan

எனக் கொடுத்தால்.. கீழுள்ள படம் போல வரும்...

"/posts/" என்பதற்குப் பின்னால் நீங்கள் என்ன எழுதினாலும் கீழே தோன்றும்..

எப்படிப் பார்த்தீர்களா...?? நானும் இப்படி ஒரு நண்பரினால் பயப்படுத்தப்பட்டேன்.


அதுதான் உங்களுடனும் பகிர்ந்தேன். நீங்களும் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து அவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள். 

இப்பதிவு வெறும் பொழுதுபோக்காக மட்டுமே. ஒருவரை ஏமாற்ற மட்டுமே உண்மையாக ஒரு போதும் hack செய்ய முடியாது..

புதன், 13 நவம்பர், 2013

MS Excel தமிழில் ஓர் சிறப்புப் பார்வை - பயனுள்ள பதிவு

மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் வெளியிடப்படும் Office Package ல் MS Word, MS Power Point, MS Access, MS Outlook, MS Excel எனப் பல உதவக்கூடிய மென்பொருள்களை வெளியிட்டு வருகிறது. அந்தவகையில் இன்று நான் உங்களுடன் எனக்குத் தெரிந்த MS Excel சம்மந்தமான தகவல்களைப் பகிரலாமென இருக்கிறேன்...

MS Excel என்றால் என்ன??
மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் மக்களுக்காக கணக்கு சம்மந்தமான தர்க்கரீதியான சமன்பாடுகளை மேற்கொள்ள உதவும் மென்பொருள் Excel ஆகும்.

MS Excel எது எதற்குப் பயன்படும்?
  • வரவு, செலவு தொடர்பான கணக்குகள் மேற்கொள்ள..
  • பாடசாலை பரிசளிப்பு விழாக்களுக்கு மாணவர்களின் நிலை தொடர்பாக கண்டறிய..
இப்படியாக பல விதத்தில் கணக்கு ரீதியாகப் பயன்தருகிறது இவ் மென்பொருள்..

open செய்தவுடன் Table வரும்.. அதில் A,B,C என Z வரைக்கும் செல்லும் அதன்பின் AA , BB என சென்றுகொண்டிருக்கும்.... அது கிடைக்குத்தாக இருப்பதென்பதால் Column என அழைக்கிறோம்.

1,2,3 என செல்வது கிடையாக இருப்பதால் Row என அழைக்கிறோம்..

இனி இப்போது நீங்கள் என்ன வேண்டுமானாலும் அதாவது உங்க budget எழுதி என்ன கணக்கு வேண்டுமென்றாலும் பார்க்கலாம்..


இப்படி Column உம் Row உம் இணைகின்ற அந்த இடத்தை Cell என கூறுவார்.

இப் படத்தில் காட்டப்பட்டிருப்பது A1 எனப்படும் CELL ஆகும்.

அதே போல COLUMN ல் B ஆகவும் ROW ல் 1௦ ஆவதாகவும் வரும் இடத்தை B1௦ CELL என கூறலாம்...

இனி நாம் எச்செல் ல் பயன்படுத்தும் செயற்பாடுகள்... (Functions)

கூட்டல்                      =A1 + B1
கழித்தல்                    =A1 - B1
பெருக்கல்                 =A1 * B1
பிரித்தல்                   =A1 / B1


=ABS (NUMBER) absolute

Eg :- =abs(-2)
        =2

         =abs(15)
         =15

இதிலிருந்து நீங்கள் புரிந்து கொள்ளலாம் =abs என்ற function ஐ பயன்படுத்தினால் மறை எங்களை அதாவது ( - ) இலக்கங்களை ( + )  இலக்கத்தில் விடையளிக்கும். ஆனால் ( + )

Try செய்து பாருங்கள்...

அடுத்து...........

=Int (number) Integer - முழு எண்கள்

Eg: 

=int(8.9)
= 9

=int (-8.7)
= -9

இதன் மூலம் நாம் அறிவது தசம எண்களில் நாம் எதையாவது இட்டால் அதனை கிட்டிய முழு எண்ணாக மாற்றும்..


= power(அடி , அடுக்கு)    power= வலு

Eg: 

=power(2,5)
=32

=power(5,2)
=25

இதன் மூலம் நாம் அறிவது ஓர் எண்ணின் அடுக்குகளை காணலாம்

=round(number, எத்தனையாவது தசமதானத்திட்கு)

Eg:

=round(25.678 , 2)
=round25.68

இதன் மூலம் நாம் அறியக் கூடியது ஒரு தசம என்னை எத்தனையாவது தசமதானத்திட்கு மாற்ற வேண்டும் என இந்த function அறிய உதவும்....

=sum ( num 1, num 2 , num 3..........)

நீங்கள் ஒரு செலவைக் கூட்டி எவளவு செல்வானதென மொத்தமாகக் கண்டறிய. இந்த function உதவும்..

அல்லது இந்த function..

=sum(எத்தனையாவது CELL இலிருந்து : எத்தனையாவது CELL )

=sum(A1:D1)

பதிவு அதிகமாகக் கூறிவிட்டேன் போலத் தெரிகிறது.. இதன் பாகம் இரண்டில் இன்னும் சில function களைக் குறிப்பிடுகிறேன்..

நன்றி..

ஞாயிறு, 10 நவம்பர், 2013

பேஸ்புக்கில் உங்கள் Profile ஐ யார் யார் பார்த்தார்கள் என அறிய வேண்டுமா..??

என்ன நண்பர்களே...!! தலைப்பைப் பார்த்துவிட்டு வியக்காதீர்கள்.. இப்படி ஒரு வசதி இருக்கிறது எனப் பலர் நம்பி தமது பேஸ்புக் கணக்கையே இழந்திருக்கிரார்கலாம்.

ஏனெனில் இப்படிப் பட்ட apps கள் இருக்கிறதென ஒரு இணையத்தளம் போட்டுவிட்டால்... உடனே வேறு என்ன... வேறு வேறு இணையதளங்களும் copy செய்து... வாசிக்க வரும் மக்களை உசுப்பேத்துவது.

உடனே.. அவர்களும் நம்பி அந்த app ஐ பயன்படுத்துவார்கள். ஆனால் ஒன்றும் வராது பதிலாக அவர்களது account hack செய்யப்படும்.

ஆம்,நண்பர்களே...!! இது போன்ற apps அனைத்துமே hacker களால் உருவாக்கப்படுபவை.

DoorBell என்ற app இருக்கிறது ஆனால் அதுவும் உண்மையானதானாதாக இல்லையாம். அதை வேண்டுமானால் நீங்கள் பாவிக்கலாம்... ஆனால்..

 Unfaced.com என்ற app இருக்கிறது அது John Arrow என்பவரால் உருவாக்கப்பட்டது. அதை பேஸ்புக் தடைசெய்துவிட்டதாம். ஏன் என்றால் அது பேஸ்புக்கின் rules க்கு தகுந்ததாக இருக்கவில்லை. அதை உங்கள் profile ல் பாவனை செய்தாலும் பாவிக்கப்படாது. இருந்தபோதிலும் அதைப் பாவித்தால் உங்கள் கணக்கு முடிவுக்கு வந்து விடும். அதாவது hack செய்யப்பட்டு விடும்.

பேஸ்புக் ஒரு நாளுமே தனது condition களுக்கு எதிராக இருக்கும் app ஐ உள்ளேடுக்காது. அப்படி இருந்து யாராவது அதனை பாவித்தாலும் அவர்களது கணக்கு முற்றாக நீக்கப்படும்.

அதிகமான Track செய்யும் app கள் போலியானவை. எனவே, இப்படியான Track செய்யும் app களிலிருந்து தள்ளியிருப்பது உங்கள் கணக்குக்குப் பாதுகாப்பு என்பதை கூறி இவளவு நேரமும் வாசித்த உங்களுக்கு நன்றி...!!

நண்பர்களுடன் பகிர்ந்து தெரியப்படுத்துங்கள்...

வியாழன், 7 நவம்பர், 2013

Excel ல் watermark செய்வது எப்படி?

வணக்கம் நண்பர்களே... இன்று புதிதாக ஒரு trick கூறப்போகிறேன். Excel ல் watermark செய்வது எப்படி? MS Word ல் செய்வது எப்படி எனப் பலர் அறிந்திருப்பீர்கள்.. ஆனால் Excel ல் எப்படி என சிலருக்குத் தெரிந்திருக்கும் சிலருக்குத் தெரியாது.. எனவே பார்க்கலாம் எப்படியென...


அதிகமானோர் 2௦௦7 / 2௦1௦ Office Package வைத்திருப்போருக்கான வழி தான் இது

  • நீங்கள் Watermark செய்ய விரும்பும் document ஐ open செய்யுங்கள்..
  • Insert > Word Art க்குச் சென்று நீங்கள் Watermark செய்ய விரும்பும் style ஐ தெரிவு செய்யுங்கள்..
  • Watermark செய்ய விரும்பும் எழுத்தை type செய்து கொள்ளுங்கள்..
  • இனி உங்கள் Worksheet ல் Word Art வந்திருக்கும்..
  • இனி Format என்ற option இருக்கும்..

இனி Text ல் சென்று No Fill என்ற optionclick செய்யுங்கள்..

  • இனி Text outline ல் click செய்யுங்கள்...

பின்னர் Weight என்ற option க்கு சென்று 1 pt என click செய்யுங்கள்.


இனி நீங்கள் Watermark செய்ய விரும்பும் வடிவம் வரும்... அப்புறம் என்ன try பண்ணி பாருங்க...

பேஸ்புக்கில் என்னுடன் இணைய...

Windows 8 க்கான அனைத்து Short Cut கீ ... - அனைவருக்கும் பயனுள்ளது...!!

மைக்ரோசாப்ட் நிறுவனம் அண்மையில் Windows 8 க்கான உத்தியோகபூர்வ OS ஐ வெளியிட்டிருக்கிறது. Keyboard Short Cut keys என்பது நாம் keyboard ஐ பயன்படுத்தி சில வேலைகளை இலகுவாக மேற்கொள்ள உதவுவதாகும்.


இதோ இவை உங்களுக்கு மிக உதவியாக IRUKKUM
windows+8+key+board+shortcuts

Complete list of Windows 8 key board shortcuts

Windows key: Switch between Modern Desktop Start screen and the last accessed application

Windows key + C: Access the charms bar

Windows key + Tab: Access the Modern Desktop Taskbar

Windows key + I: Access the Settings charm

Windows key + H: Access the Share charm

Windows key + K: Access the Devices charm

Windows key + Q: Access the Apps Search screen

Windows key + F: Access the Files Search screen

Windows key + W: Access the Settings Search screen

Windows key + P: Access the Second Screen bar

Windows key + Z: Brings up the App Bar when you have a Modern Desktop App running

Windows key + X: Access the Windows Tools Menu

Windows key + O: Lock screen orientation

Windows key + . : Move the screen split to the right

Windows key + Shift + . : Move the screen split to the left

Windows key + V: View all active Toasts/Notifications

Windows key + Shift + V: View all active Toasts/Notifications in reverse order

Windows key + PrtScn: Takes a screenshot of the screen and automatically saves it in the Pictures folder as
Screenshot

Windows key + Enter: Launch Narrator      

Windows key + E: Open Computer

Windows key + R: Open the Run dialog box

Windows key + U: Open Ease of Access Center

Windows key + Ctrl + F: Open Find Computers dialog box

Windows key + Pause/Break: Open the System page

Windows key + 1..10: Launch a program pinned on the Taskbar in the position indicated by the number

Windows key + Shift + 1..10: Launch a new instance of a program pinned on the Taskbar in the position
indicated by the number

Windows key + Ctrl + 1..10: Access the last active instance of a program pinned on the Taskbar in the
position indicated by the number

Windows key + Alt + 1..10: Access the Jump List of a program pinned on the Taskbar in the position
indicated by the number

Windows key + B: Select the first item in the Notification Area and then use the arrow keys to cycle through
the items Press Enter to open the selected item

Windows key + Ctrl + B: Access the program that is displaying a message in the Notification Area

Windows key + T: Cycle through the items on the Taskbar

Windows key + M: Minimize all windows

Windows key + Shift + M: Restore all minimized windows

Windows key + D: Show/Hide Desktop (minimize/restore all windows)

Windows key + L: Lock computer

Windows key + Up Arrow: Maximize current window

Windows key + Down Arrow: Minimize/restore current window

Windows key + Home: Minimize all but the current window

Windows key + Left Arrow: Tile window on the left side of the screen

Windows key + Right Arrow: Tile window on the right side of the screen

Windows key + Shift + Up Arrow: Extend current window from the top to the bottom of the screen

Windows key + Shift + Left/Right Arrow: Move the current window from one monitor to the next

Windows key + F1: Launch Windows Help and Support


PageUp: Scroll forward on the Modern Desktop Start screen

PageDown: Scroll backward on the Modern Desktop Start screen

Esc: Close  a charm

Ctrl + Esc: Switch between Modern Desktop Start screen and the last accessed application

Ctrl + Mouse scroll wheel: Activate the Semantic Zoom on the Modern Desktop screen

Alt: Display a hidden Menu Bar

Alt + D: Select the Address Bar

Alt + P: Display the Preview Pane in Windows Explorer

Alt + Tab: Cycle forward through open windows

Alt + Shift + Tab: Cycle backward through open windows

Alt + F: Close the current window Open the Shut Down Windows dialog box from the Desktop

Alt + Spacebar: Access the Shortcut menu for current window

Alt + Esc: Cycle between open programs in the order that they were opened

Alt + F4: Close Application

Alt + Enter: Open the Properties dialog box of the selected item

Alt + PrtScn: Take a screen shot of the active Window and place it in the clipboard

Alt + Up Arrow: Move up one folder level in Windows Explorer (Like the Up Arrow in XP)

Alt + Left Arrow: Display the previous folder

Alt + Right Arrow: Display the next folder

Shift + Insert: CD/DVD Load CD/DVD without triggering Autoplay or Autorun

Shift + Delete: Permanently delete the item (rather than sending it to the Recycle Bin)

Shift + F6: Cycle backward through elements in a window or dialog box

Shift + F10: Access the context menu for the selected item

Shift + Tab: Cycle backward through elements in a window or dialog box

Shift + Click: Select a consecutive group of items

Shift + Click on a Taskbar button: Launch a new instance of a program

Shift + Right-click on a Taskbar button: Access the context menu for the selected item

Ctrl + A: Select all items

Ctrl + C: Copy the selected item

Ctrl + X: Cut the selected item

Ctrl + V: Paste the selected item

Ctrl + D: Delete selected item

Ctrl + Z: Undo an action

Ctrl + Y: Redo an action

Ctrl + N: Open a new window in Windows Explorer

Ctrl + W: Close current window in Windows Explorer

Ctrl + E: Select the Search box in the upper right corner of a window

Ctrl + Shift + N: Create new folder

Ctrl + Shift + Esc: Open the Windows Task Manager

Ctrl + Alt + Tab: Use arrow keys to cycle through open windows

Ctrl + Alt + Delete: Access the Windows Security screen

Ctrl + Click: Select multiple individual items

Ctrl + Click and drag an item: Copies that item in the same folder

Ctrl + Shift + Click and drag an item: Creates a shortcut for that item in the same folder

Ctrl + Tab:  Move forward through tabs

Ctrl + Shift + Tab: Move backward through tabs

Ctrl + Shift + Click on a Taskbar button: Launch a new instance of a program as an Administrator

Ctrl + Click on a grouped Taskbar button: Cycle through the instances of a program in the group

F1: Display Help

F2: Rename a file

F3: Open Search

F4: Display the Address Bar list

F5: Refresh display

F6: Cycle forward through elements in a window or dialog box

F7: Display command history in a Command Prompt

F10: Display hidden Menu Bar

F11: Toggle full screen display

Tab: Cycle forward through elements in a window or dialog box

PrtScn: Take a screen shot of the entire screen and place it in the clipboard

Home: Move to the top of the active window

End: Move to the bottom of the active window

Delete: Delete the selected item

Backspace: Display the previous folder in Windows Explorer  Move up one folder level in Open or Save
dialog box

Esc: Close a dialog box

Num Lock Enabled + Plus (+): Display the contents of the selected folder

Num Lock Enabled + Minus (-): Collapse the selected folder

Num Lock Enabled + Asterisk (*): Expand all subfolders under the selected folder  

Press Shift 5 times Turn StickyKeys on or off

Hold down right Shift for 8 seconds Turn FilterKeys on or off
Hold down Num Lock for 5 seconds Turn ToggleKeys on or off

திங்கள், 4 நவம்பர், 2013

HTML கற்போம் பகுதி - 7

வணக்கம் நண்பர்களே...!! பகுதி-6 ன் தொடர்ச்சியை இங்கே பாப்போம்... இந்தப் பதிவில் "HTML ஐ பயன்படுத்தி Table அமைப்பது பற்றிப் பார்போம்"

<table>
 <tr>
<td>Cell 1</td>
<td>Cell 2</td>
 </tr>
 <tr>
<td>Cell 3</td>
<td>Cell 4</td>
 </tr>
</table>

பார்த்தவுடனே பயப்படாதீங்க....

இங்கே <tr> என்பது Table Row ஐ குறிக்கிறது...
<td> என்பது Table Data வைக் குறிக்கிறது.

மேலே தரப்பட்ட code ஐ பயன்படுத்தினால் கீழுள்ளவாறு தான் தோன்றும்..

Cell 1 Cell 2
Cell 3 Cell 4

இன்னும் ஒரு உதாரணம்...

<table>

 <tr>
<td>Cell 1</td>
<td>Cell 2</td>
<td>Cell 3</td>
<td>Cell 4</td>
 </tr>

 <tr>
<td>Cell 5</td>
<td>Cell 6</td>
<td>Cell 7</td>
<td>Cell 8</td>
 </tr>

 <tr>
<td>Cell 9</td>
<td>Cell 10</td>
<td>Cell 11</td>
<td>Cell 12</td>
 </tr>

</table>

நிறைய எழுதி இருக்கிறேன் எனப் பயப்படாதீங்க...

இங்கே Table Row அதாவது <tr> 3 முறை எழுதி </tr> எனக் கொடுத்திருக்கிறேன் 

அப்படியானால் இங்கே Table Row 3 ம் Table data 12 ம் வரும்.
அதன் வருவிளைவு இதோ...


Cell 1 Cell 2 Cell 3 Cell 4
Cell 5 Cell 6 Cell 7 Cell 8
Cell 9 Cell 10 Cell 11 Cell 12

எப்படி புரிந்ததா.... புரியாவிட்டால் திரும்பத் திரும்ப செய்து பாருங்க விளங்கும்... ம்ம்ம்ம்....

வாறன் வாறன் என்ன இது Table என்றால் அட்டவணை இருக்கணும் இது என்ன... என யோசிக்கலாம்..

இப்போ பாருங்கள்... இந்த code ஐ.

<table border="1">
 <tr>
<td>Cell 1</td>
<td>Cell 2</td>
 </tr>
 <tr>
<td>Cell 3</td>
<td>Cell 4</td>
 </tr>
</table>

இந்தக் code அட்டவனையைப் போடும் இதோ அதன் வருவிளைவு..

Cell 1 Cell 2
Cell 3 Cell 4

எப்டி நல்லா இருக்கா... "<table border="1">" உங்கள் வசதிக்கு ஏற்றவாறு 1 ஐ மாற்றலாம்...

அல்லது "<table border="1">" என்பதற்குப் பதிலாக  <table border="1" width="30%">
எனவும் இடலாம்.. இங்கே border என்பதற்குப் பதிலாக width அளவையும் பயன்படுத்தலாம்...

விரும்பிய மாதிரி உங்கள் table ஐ அமைக்கலாம்... அமைத்துப் பாருங்கள் சந்தேகம் இருப்பின் கீழே உங்கள் கேள்விகளை இடுங்கள்..

நன்றி..
பரதன்

வெள்ளி, 1 நவம்பர், 2013

ஆரம்பம் திரை விமர்சனம்

ஆரம்பம் அஜித்துக்கு இன்னொரு மிகப் பெரிய ஹிட் என்று தான் சொல்லணும். ஆரம்பம் ஆரம்பிப்பது மும்பையில் மூன்று இடங்களில் இடம்பெறும் குண்டுவெடிப்புடன் அதுவும் யார் வைத்தது நம்ம தல... படம் ஆரம்பிச்ச போது "மங்காத்தா" வில்லன் மாதிரித்தான் வாரார்னு நெனச்சேன்.. அப்புறம் முழுப் படம் பார்த்தபின் தான் அஜித் தான் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார் என...

அஜித்தும் சஞ்சய் என்ற பெயர் கொண்டவரும் போலீஸ் நண்பர்களாக இருக்கிறார்கள். தீவிரவாதிகளுடன் ஏற்பட்ட போரில் சஞ்சய் இறக்க.. அதற்கான காரணம் "bullet proof coat" சரியான முறையில் பரிசீலிக்கப்படாமையால் குண்டு துளைத்து சஞ்சய் இறந்தார் என அஜித் கூறி மந்திரிக்கும், போலீஸ் மேலதிகாரி , தொழிலதிபர் ஆகியோருக்கு எதிராக செயற்பட அதனைத் தடுக்க அவர்கள் சேர்ந்து அஜித் ஐ கொலை செய்கிறார்கள். 
இதேவேளையில் சஞ்சயின் குடும்பத்தையும் அந்த மூவரும் கொல்ல இறுதியில் சஞ்சயின் தங்கையான நயன்தார மட்டும் சாகாமல் உயிர் பிழைக்கிறார்.

பின்னர் இருவரும் சேர்ந்து ஆர்யாவின் hacking மூளையைப் பயன்படுத்தி தமது பழிவாங்கும் வேலையில் ஈடுபடும் போது ஆர்யாவுக்கு இவர்கள தன்னை misuse செய்கிறார்கள் என எண்ணி சில தடயங்களை விட்டுச் செல்ல பின்னர் அவ் தடயங்களைப் பயன்படுத்தி போலீஸ் அஜித்தை கைது செய்ய...

பின் ஆர்யா அனைத்துக் கதையையும் அறிந்து பின் அவரும் தலயுடன் இணைந்து என்ன செய்தார்கள் என்பது கதை.

இயக்குனர் விஷ்ணு ஏற்கனவே தலக்கு பில்லா படத்தை 2௦௦7 ல் நடிக்க வைத்து தலக்கு புதிய முகம் ஒன்றை உருவாக்கினார். அதேபோலவே இப் படத்திலும் தலயை வைத்து உலகிற்கு ஒரு நல்ல செய்தி தரும் கதையை உருவாக்கியிருக்கிறார்.

"நாட்டில் மக்களை லஞ்சம் செய்யத் தூண்டுவது அரசியல் வாதிகளே... இராணுவத்திற்கு தீங்கான சில ஊழல்களை மேற்கொள்ளக் கூடாது" 

என இயக்குனர் கூறுகிறார்.

மேலும் இசையில் யுவன் தனது முளுப்பங்கை ஆற்றியிருக்கிறார். 

மேலும், தாப்சி ஆர்யாவுடன் ஜோடியாக நடித்திருந்தார் பெரிதாக அவரது பங்கு இதில் இருக்கவில்லை.

துபாயில் அஜித் Ducatti bike ல் சூப்பராக தோன்றியிருந்தார். படகில் இடம்பெறும் சண்டைகள் என அனைத்தும் படத்தில் நன்றாக இருந்தது. அதைவிட அஜித் இப் படத்தில் மிகவும் அடக்கமான முறையில் வேறு நடிகர்களைப் போல் எந்தவித பஞ்ச் பேசாமல் செயலில் பல விடயங்களை முடித்திருக்கிறார்.


இனி இப்படத்திற்கான எனது rating 4/5

மேலும் எனது முகநூல் பக்கம் Like செய்ய...