இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 25 நவம்பர், 2020

கோரா (Quora) தளம் பாவிச்சிருக்கீங்களா?

வணக்கம் நண்பர்களே, 

பல நாள் இடைவெளிக்கு பின்னர் ஒரு அட்டன்டென்ஸ். கல்லூரி படிப்புகள் நிறைய வந்து சேர்ந்து ஒட்டுமொத்தமாக ஏறி சில நாட்கள் அப்படி இப்படி என்று கழிந்து போயிற்று. கொரோனா காலங்களிலும் வீட்டில் நின்று அதிக எடையும் போட்டு பல மாற்றம். பலர் எழுதுவது பற்றி பேசும் போது நானும் பல வருடங்கள் முன்னர் ப்ளாக் வைத்திருந்தேன் என்றுவிட்டு இந்தப் பக்கம் வந்து பார்த்து விட்டுப் போவதோடு சரி. பேஸ்புக்கிலும் பெரிதான ஈடுபாடு குறைந்து விட்டது. வாட்ஸாப்லேயே நெருங்கியவர்களுடன் பேசி எல்லா வேலைகளையும் முடித்து விடும் போது பேஸ்புக் தேவையில்லை தானே. இருப்பினும் அதிகமாக இந்த ஒய்வு காலங்களில் நான் சென்ற தளம் என்றால் கோரா தான். கோரா என்பது கேள்வி, பதில் களஞ்சியம். உங்களது சந்தேகம் எந்தத்துறை சார்பில் இருந்தாலும் அங்கே சென்று கேள்விகளைக் கேட்டால் அது தொடர்பான வல்லுனரின் suggestions களை நீங்கள் பெறலாம்.

 பல மொழிகளில் தற்போது இது கிடைக்கிறது. 2018 இறுதி பகுதியில் தமிழ் மொழிக்கு இது கிடைக்கப்பெற்றது. பல நண்பர்கள், பல கண்டங்களில் இருந்தும் வெவ்வேறான பல சுவாரஸ்ய விடயங்களையும் தரவுப் பரிமாற்றங்களையும் மேற்கொள்கிறார்கள். ஒரு நகைச்சுவையான விடயம் என்னவென்றால் இந்த தமிழ் கோரா/ ஆங்கில கோரவில் இருந்து copy, paste செய்து பேஸ்புக்கில் போட்டு லைக் வாங்கும் அன்பர்களும் இருக்கிறார்கள்.

உங்களது பொன்னான நேரத்தை இந்தத் தளத்தில் செலவிட ஆரம்பித்தீர்கள் என்றால் எதோ ஒரு நாளில் உங்களுக்கு இவ் வாசிப்பு அனுபவம் உதவும்என்பது என் நம்பிக்கை.

https://www.quora.com/

https://ta.quora.com/ - தமிழுக்கு