இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 21 ஆகஸ்ட், 2013

வரைபுகள்,கணிப்பீடுகளை இலகுவாக செய்து கொள்ள Microsoft வழங்கும் ஓர் Software....!!!

மாணவர்களுடைய கணிப்பீடுகளுக்கு உதவுவதற்கு , Linux இயங்குதளத்தில் மல மென்பொருள்கள் உள்ளன. ஆனால், Microsoft இனால் அவ்வாறான இலவச மென்பொருள்கள் வழங்கப்படுவது மிக அபூர்வம். அப்படியான அரிதான மென்பொருள்களில் ஒன்று தான் Microsoft Mathematics 4.0 ஆகும்.

கணிதம், பெளதீகவியல் போன்ற பாடங்களில் உள்ள சமன்பாடுகளைக் கொண்டு கணிப்பீடுகள் செய்யும் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இந்த மென்பொருள் மிகவும் பயனுள்ளதாகும். கணிதம், பெளதீகவியல் பாடங்களில் உள்ள இருபரிமாண,முப்பரிமான வரைபுகளை (Graphics) இலகுவாக வரைந்து கொள்ளவும் சமன்பாடுகளினூடாக, கணிப்பீடுகளை மிகக் குறுகிய நேரத்தில் கணித்துக் கொள்ளவும் இந்த மென்பொருள் உதவுகிறது.

பாடசாலை மாணவர்கள் முதல் பல்கலைக்கழக மாணவர்கள் வரை அனைவருக்கும் உபயோகம் மிக்கதாக இந்த இலவச மென்பொருளான Microsoft Mathematics காணப்படுகிறது.

தங்களது அறிவை விருத்தி செய்வதற்கு சுய பயிற்சிகளில் ஈடுபடுவோருக்கு இது பயன்படும். Algebra முதல் Trigonometry வரை பல்வேறு விடயங்களை இந்த மென்பொருள் தன்னகத்தே கொண்டுள்ளது. Microsoft Word, One Note போன்ற மென்பொருள்களின் இணைப்பு நீட்சியாகவும் (Add-on) இந்த மென்பொருளைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது இதன் இன்னொரு சிறப்பாகும்.

http://www.microsoft.com/en-us/download/details.aspx?id=15702

என்ற இந்த தளத்திற்குச் சென்று இந்த மென்பொருளை இலவசமாக download செய்து பயன்படுத்துங்கள்.

நன்றி.
பரதன்

பதிவு பிடித்தால் உங்கள் நண்பர்களோடு Share செய்யுங்கள். 

எனது முந்தய பதிவு : Android பற்றி அறிந்துகொள்வோம்
                                           
                                              'SSD' என்றால் என்ன??

0 comments:

கருத்துரையிடுக