இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 1 ஆகஸ்ட், 2013

நீரினுள் விழுந்த மொபைலிற்கு முதலில் என்ன செய்யணும்?

தற்காலத்தில் மொபைல் என்பது மிகவும் அவசியமானதொன்றாக மாறிவிட்டது. இப்படியாக நாம் மொபைல் ஐ பாவிக்கும் பொது நீரினுள் தொலைபேசி விழுந்து விட்டால் என்ன செய்வீர்கள்?? சிலர் 2 உதறு உதறி விட்டு போடுவார்கள் அப்படி நீங்கள் செய்தீர்கள் என்றால் உங்கள் மொபைல் க்கு நீங்கள் Good Bye சொல்ல வேண்டியது தான்.


அப்போ என்ன செய்றது?????


நீரில் விழுந்து விட்டல் உடனே சிம் காட், battery , மெமரி காட் என்பவற்றை கழட்டி விட்டு துணி அல்லது tissue பேப்பர் கொண்டு வெளிப் பாகங்களைத் துடைக்கவும்.


உங்கள் வீட்டில் Vaccum cleaner இருந்தால் அதனை Suction mode இல் வைத்து இப்போது உங்கள் போனை காட்டவும் இதனால் தண்ணீர் ஆவியாகி விடும்.


Vacuum cleaner இல்லை என்றால் கவலை வேண்டாம். உங்கள் வீட்டில் அரிசி வைத்து இருக்கும் பாத்திரம் இருந்தால் அதில் உங்கள் போனை வைத்து போன் தெரியாதபடி முழுவதுமாக மூடி விடவும். இதனால் தண்ணீர் முழுவதுமாக அரிசியால் ஈர்க்கப்பட்டு விடும். ஆனால் இதற்கு பொறுமை மிக அவசியம்.(குறைந்த பட்சம் இரண்டு மணி நேரம் ).


அத்துடன் ஏதேனும் சூடான கருவி கொண்டு கூட பாதுகாப்பாக நீரை எடுக்க முயற்சி செய்யலாம். Hairdryer போன்றவற்றை முயற்சி செய்யலாம்.


போன் நன்றாக காய்ந்த பின் அதில் நீர் இல்லை என்று உறுதி செய்து கொண்ட பின் அதை ஆன் செய்ய முயற்சிக்கவும். பெரும்பாலும் ஆன் ஆகிவிடும், இல்லை என்றால் வேறு பேட்டரி இருந்தால் அதை போட்டு முயற்சி செய்யவும். அப்போதும் ஆன் ஆனால் போன் ஓகே, பேட்டரி பிரச்சினை. அப்போதும் இல்லை என்றால் கடைக்காரரிடம் கொண்டு போய் கொடுக்கவும்.

Sharing Is Caring.

Please Share this message with your friends.