இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 15 ஆகஸ்ட், 2013

'SSD' என்றால் என்ன??

வன்தட்டுகள் எனப்படும் Hard disk களுக்கு மாற்றீடாக வந்துள்ள புதிய ரக சேமிப்பு ஊடகமே SSD ஆகும். Solid State Drive என்பதேஇதன் விரிவாக்கம். வந்தட்டுகளுக்கு SSD களுக்கு இடையே காணப்படும் மிகப் பிரதான வேறுபாடு யாதெனில், SSD களில் அசையக் கூடிய எந்த வகையான உதிரிப்பாகங்களும் இல்லை என்பதாகும்.


அதேவேளை, வன்தட்டில் கழன்று அசையும் தட்டுக் காணப்படும். இதுவே, அந்த வன்தட்டில் தகவல்களை சேமிக்கவும் பெற்றுக்கொள்ளவும் ஆதாரமாக அமையும். SSD ஆனது தனித்துவமாக நினைவகக் கூறுகளை, தகவல்களை சேமிக்கும் பொருட்டு தன்னகம் கொண்டுள்ளது. பொதுவாக, SSD ஐ அளவில் பெரிய Memory Stick எனச் சொல்லலாம்.

வன்தட்டுகளை விடவும், SSD உச்ச குணாதிசயங்களைப் பாவிப்பதனால் அதிக நன்மைகளையும் வழங்குகிறது.

அவையாவன...


  • வண்தட்டுகளை விட மிக மிக வேகமாக SSD தொழிற்படும்
  • SSD இயக்குகின்ற போது , ஏற்படும் ஒழி மிகவும் குறைவானதாகும்.
  • SSD ல்அசையும் பகுதிகள் இல்லாததனால் , அது வேகமாக இயங்கும்.
  • வன்தட்டை விடகுறைந்தளவு சக்தியை SSD பயன்படுத்தும்
  • குறைந்த சக்தி பயன்படுத்துவதால் , உமிழும் வெப்பமும் குறைவு , நேர்த்தியாகவும் வேகமாகவும் தொழிற்படும்.
  • Flash memory ஐ SSD கொண்டுள்ளதால் , தரவுகளைத் தேடிப் பெறுவது மிகவும் சுலபமாகும்.
  • SSD ஆனது , வன்தட்டுகளை விடவும் அளவில் மிகவும் சிறியதாகும். 
இது இப்படியிருக்க இதன் விலையோ , சாதாரண வன்தட்டுகளை விட அதிகமானதாகும். அத்தோடு, இதுவரையில் SSD ல் உருவாக்கப்பட்டுள்ள உச்ச சேமிப்பு கொள்ளளவு 6௦௦GB ஆகும். இது Intel நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இத் தகவல் உங்களுக்குப் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து இத் தளத்தின் முன்னேற்றத்தில் உதவுங்கள்.

நன்றி...

0 comments:

கருத்துரையிடுக