இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 3 ஆகஸ்ட், 2013

Friendship Day Special பதிவு

இன்று (ஆகஸ்ட் 4) அனைவருக்குமே ஏன் உலகிலுள்ள அனைத்து மக்களுக்குமே மிக முக்கியமான நாள் அதுதான் Friendship Day உலகில் எந்த ஜீவராசிகள் வாழ்ந்தாலும் அவற்றுக்கு நட்பு எனும் உறவு நிச்சயமாக இருக்கும்.
அப்படிப்பட்ட நட்பை போற்றி வாழ்வதற்கு அனைத்து உலக மக்களாலும் "Friendship Day" அறிமுகப்படுத்தப்பட்டது.

எத்தனையோ பாடல்கள்,கவிதைகள் , எனப் பலவாறாக நட்பின் உயர்வு பற்றி கூறப்பட்டிருக்கிறது. இன்று நாம் அது பற்றி ஒரு பார்வை பார்க்கலாம்...

பாடல்கள் எனப் பார்க்கும் போது
எம் நெஞ்சினுள் வந்து நிற்பது "மூழ்காத Ship friendship தான்" அதுதாங்க முஸ்தப்பா முஸ்தப்பா

அடுத்ததாக என் நினைவில் வரும் பாடல் நண்பன் திரைப்படத்திலிருந்து வரும் பாடல்களான

"என் friend போல யாரு மச்சான்" என்ற பாடலும் . "நல்ல நண்பன் வேண்டும் என்று இந்த மரணமும் நினைகின்றதா??" என்ற பாடல்களும் எனக்கு மிகவும் பிடித்த நட்புப் பாடல்கள். உங்களுக்கும் பிடித்திருக்குமென நினைக்கிறன். பாடலை பார்த்துவிட்டு மேலும் வாசியுங்கள்



இதுவரை நேரமும் ஆண்களின் நட்பு பாடல்கள் பார்த்தோம் .. பெண்களுக்கும் நண்பிகள் என இருப்பார்கள் தானே பெண்களின் நட்புப் பாடல்களையும் பார்த்துவிட்டு இணைவோம்






இப்படியாக நட்பு பற்றி திரையிசை பாடல்கள் மூலம் பார்த்தோம்.
--------------------------------------------------------------------------------------
அடுத்து கவிதைகள் சிலவற்றைப் பார்ப்போம்...

எனக்கு கிடைத்த நட்புப் போல வானத்துக்கு கிடைக்காமல் வானம் விடும் கண்ணீர் தான் மழை...!!!

சிறகு கிடைத்தவுடன் பறப்பது நட்பு அல்ல

சிலுவை கிடைத்தாலும் சுமப்பது தான் நட்பு...!!

நட்பு என்பது பல இடங்களில் பூக்கும் ரோஜா அல்ல
நம் மனதில் பூக்கும் பாச மலர்...

சிறகு இல்லாத பறவையின் வாழ்க்கையும்...!!!
நட்பு இல்லாத மனிதனின் வாழ்க்கையும்..!! அர்த்தம் இல்லாத வாழ்க்கை

---------------------------------------------------------------------------------------
இப்படி பலவாறு கூற எனக்கும் ஆசை தான்... எனக்கு இப்பொழுது நேரமின்மை காரணமாக இத்துடன் முடித்துக்கொள்கிறேன், கீழே இன்னும் சில நட்பு பற்றி புகைப்படங்கள் இட்டுள்ளேன். அதைப் பார்வையிட்டு நீங்களும் உங்கள் நண்பர்களுடன் share செய்யுங்கள்.
an article by Parathan

0 comments:

கருத்துரையிடுக