இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 13 நவம்பர், 2013

MS Excel தமிழில் ஓர் சிறப்புப் பார்வை - பயனுள்ள பதிவு

மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் வெளியிடப்படும் Office Package ல் MS Word, MS Power Point, MS Access, MS Outlook, MS Excel எனப் பல உதவக்கூடிய மென்பொருள்களை வெளியிட்டு வருகிறது. அந்தவகையில் இன்று நான் உங்களுடன் எனக்குத் தெரிந்த MS Excel சம்மந்தமான தகவல்களைப் பகிரலாமென இருக்கிறேன்...

MS Excel என்றால் என்ன??
மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் மக்களுக்காக கணக்கு சம்மந்தமான தர்க்கரீதியான சமன்பாடுகளை மேற்கொள்ள உதவும் மென்பொருள் Excel ஆகும்.

MS Excel எது எதற்குப் பயன்படும்?
  • வரவு, செலவு தொடர்பான கணக்குகள் மேற்கொள்ள..
  • பாடசாலை பரிசளிப்பு விழாக்களுக்கு மாணவர்களின் நிலை தொடர்பாக கண்டறிய..
இப்படியாக பல விதத்தில் கணக்கு ரீதியாகப் பயன்தருகிறது இவ் மென்பொருள்..

open செய்தவுடன் Table வரும்.. அதில் A,B,C என Z வரைக்கும் செல்லும் அதன்பின் AA , BB என சென்றுகொண்டிருக்கும்.... அது கிடைக்குத்தாக இருப்பதென்பதால் Column என அழைக்கிறோம்.

1,2,3 என செல்வது கிடையாக இருப்பதால் Row என அழைக்கிறோம்..

இனி இப்போது நீங்கள் என்ன வேண்டுமானாலும் அதாவது உங்க budget எழுதி என்ன கணக்கு வேண்டுமென்றாலும் பார்க்கலாம்..


இப்படி Column உம் Row உம் இணைகின்ற அந்த இடத்தை Cell என கூறுவார்.

இப் படத்தில் காட்டப்பட்டிருப்பது A1 எனப்படும் CELL ஆகும்.

அதே போல COLUMN ல் B ஆகவும் ROW ல் 1௦ ஆவதாகவும் வரும் இடத்தை B1௦ CELL என கூறலாம்...

இனி நாம் எச்செல் ல் பயன்படுத்தும் செயற்பாடுகள்... (Functions)

கூட்டல்                      =A1 + B1
கழித்தல்                    =A1 - B1
பெருக்கல்                 =A1 * B1
பிரித்தல்                   =A1 / B1


=ABS (NUMBER) absolute

Eg :- =abs(-2)
        =2

         =abs(15)
         =15

இதிலிருந்து நீங்கள் புரிந்து கொள்ளலாம் =abs என்ற function ஐ பயன்படுத்தினால் மறை எங்களை அதாவது ( - ) இலக்கங்களை ( + )  இலக்கத்தில் விடையளிக்கும். ஆனால் ( + )

Try செய்து பாருங்கள்...

அடுத்து...........

=Int (number) Integer - முழு எண்கள்

Eg: 

=int(8.9)
= 9

=int (-8.7)
= -9

இதன் மூலம் நாம் அறிவது தசம எண்களில் நாம் எதையாவது இட்டால் அதனை கிட்டிய முழு எண்ணாக மாற்றும்..


= power(அடி , அடுக்கு)    power= வலு

Eg: 

=power(2,5)
=32

=power(5,2)
=25

இதன் மூலம் நாம் அறிவது ஓர் எண்ணின் அடுக்குகளை காணலாம்

=round(number, எத்தனையாவது தசமதானத்திட்கு)

Eg:

=round(25.678 , 2)
=round25.68

இதன் மூலம் நாம் அறியக் கூடியது ஒரு தசம என்னை எத்தனையாவது தசமதானத்திட்கு மாற்ற வேண்டும் என இந்த function அறிய உதவும்....

=sum ( num 1, num 2 , num 3..........)

நீங்கள் ஒரு செலவைக் கூட்டி எவளவு செல்வானதென மொத்தமாகக் கண்டறிய. இந்த function உதவும்..

அல்லது இந்த function..

=sum(எத்தனையாவது CELL இலிருந்து : எத்தனையாவது CELL )

=sum(A1:D1)

பதிவு அதிகமாகக் கூறிவிட்டேன் போலத் தெரிகிறது.. இதன் பாகம் இரண்டில் இன்னும் சில function களைக் குறிப்பிடுகிறேன்..

நன்றி..

10 கருத்துகள்:

  1. பாமினி தமிழ் font... எழுத்து நன்றாக இருக்கிறதா??

    பதிலளிநீக்கு
  2. பயனுள்ள தகவல். வழங்கியமைக்கு நன்றி. மேலும் தொடரட்டும் ...

    பதிலளிநீக்கு
  3. கருத்துகளைத் தெரிவித்து வாழ்த்திய அனைவருக்கும் என் நன்றிகள்... :)

    பதிலளிநீக்கு