இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 5 ஏப்ரல், 2014

A.L.விஜயின் "சைவம்" இசை விமர்சனம்

நாசர்,பேபி சாரா, கௌசல்யா ஆகியோரின் நடிப்பில் A.L.விஜயின் இயக்கத்தில் G.V யின் இசையில் வெளிவர இருக்கும் படமான சைவம் திரைப்படத்தின் பாடல்கள் பற்றி உங்களுடன் பகிர இருக்கிறேன்.

மொத்தமாகப் பாடல்கள் 3. எழுதியவர் நா.முத்துக்குமார்.  வழமைபோல் G.V யின் இசை சூப்பர். ஒவ்வொரு பாடலாகப் பார்ப்போம் வாங்க....

1. கொக்கரக்கோ கோழி - கானா பாலா , சின்ன பொண்ணு  , அஷ்விதா , ஹரிஷ்

G.V கானா பாலாவுக்கு இடையில் இருக்கும் chemistry யே தனி. இது வரைக்கும் இவங்க ரெண்டு பேரும் சேர்ந்த "Hey baby - ராஜா ராணி, Don't Worry - நிமிர்ந்து நில்" போன்றன செம ஹிட்டான பாடல்களாகும்.

ஆனால் அவற்றைப் போல இங்கு தனிய கானா பாலா மட்டும் பாடவில்லை. நிறையப் பேர் பாடியிருப்பதால் பெருசா எனக்குப் பிடிக்கல... எதோ கோழிய காணலைன்னு ஒவ்வொரு இடமா தேடுற மாதிரி பாடல் வரிகள் இருக்கு.

பாட்டோட tune நல்லா வேகமா இருக்கு.. பாடல் மொத்தமா 3 நிமிடங்கள்.


2.ஒரே ஒரு ஊரில் - ஹரிசரண்

பாடல் பியானோ, நீர் சிந்தும் சத்தங்களுடனும், கடச் சத்தம் என்பவற்றுடன் தொடங்குகிறது.

இந்தப் படம் ஒரு குடும்பக் கதை என்பதால் குடும்பத்தைப் பற்றிய பாடல் வரிகள் அமைகிறது.

"ஒரே ஒரு ஊரில் ஒரு வீடு.. உறவுகள் கூடும் கிளிக் கூடு..."

பாடல் கேட்டகவே நல்லா இருக்கு. Slow ஆனா பாடல் அமைப்பு கேட்க நன்றாக இருக்கிறது. ஹரிச்சரனின் குரல் தேர்வு அருமை. சொந்தங்கள் தான் இவ்வுலகில் உண்மையானவை எனப் பல சிறந்த  கருத்துக்களுடன் பாடலாசிரியர் முத்துக்குமார் எழுதியுள்ளார்.


3.அழகே அழகே - உத்திரா உன்னி கிருஷ்ணன்

"அழகே அழகே அன்பின் விழியில் எல்லாமே அழகு..."
"மழை மட்டுமா அழகு சுடும் வெயில் கூடவே அழகு.."
"உண்மைக்கு சொல்லிடும் பொய்களும் அழகு..."

மிருதங்கம், வீணை என்பவற்றைத் துணையாகக் கொண்டு கர்நாடக சங்கீத பாணியில் பாடலை சிறப்பாக மெட்டமைத்துள்ளர் G.V.

ஆஹா, பாட்டு பாடியது பாடகர் உன்னிகிருஷ்ணனின் மகள் உத்திரா. என்ன ஒரு குரல். உண்மையில் இவர் அழகு அழகு என்று இந்தப் பாடலைப் பாடும் போது என் மனதில் இவர் பாடுவது கூட அழகாகத் தான் தோன்றுகிறது.

பாடலாசிரியரின் பாடல் வரிகள் கூட அழகாகத் தான் இருக்கிறது.

Here is the Making Video.....



பாடல்களில் கடைசி இரண்டும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது... அவற்றைப் போல படமும் சிறப்பாக அமைக்கப்பட்டு படம் வெற்றி பெற இந்த சினிமா ரசிகனின் வாழ்த்துக்கள்.

உங்கள் கருத்துகளையும் கீழே என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்...