இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 8 ஆகஸ்ட், 2013

Computer இலிருந்து Computer ற்கு தகவல்களை மாற்ற ஓர் Software

இப்போது உலகில் கணணி மனிதனுக்கு இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. நாளுக்கு நாள் தொழிநுட்ப வசதிகளும் அதிகரித்தே செல்கின்றன. நாம் எமது பழைய கணணி தொழிநுட்ப வழு காரணமாகவோ அல்லது வேறு பிரச்சனைகளுக்காகவோ புதிய கணணி ஒன்றை வாங்குகின்றோம். அப்படி வாங்கும் போது எமது பழைய கணனியிலிருக்கும் மென்பொருள்கள் முக்கிய தரவுகள் எமது புதிய கணனிக்கு நேர செலவின்றி சில நிமிடங்களில் மாற்ற முடியும். 

இந்த மென்பொருளின் பெயர் PickMeApp. இது இலவச மென்பொருளாக இருந்தாலும் அதை download செய்ய அந்த இணையதளத்தில் member ஆக வேண்டும்.

இந்த முறையில் நீங்கள் உங்கள் மென்பொருளை புதிய கணினியில் மாற்றும் போது நாம் செய்து வைத்திருந்த செட்டிங்க்ஸ் கூட மாறாமல் வரும் என்பது இதன் இன்னுமொரு சிறப்பம்சம்.

இந்த மென்பொருளை டவுன்லோட் செய்ததும் இந்த மென்பொருளை இயக்கினால் நீங்கள் புதிய கணினிக்கு மாற்ற வேண்டிய மென்பொருட்களை தேர்வு செய்து கொண்டு அதன் ரெஜிஸ்டரியை அப்படியே புதிய கணினியில் நிறுவினால் அந்த மென்பொருள் உங்களின் புதிய கணினியில் வந்து விடும்.
உதவிக்கு கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.


Information by : Aayapaadi
Article compiled by : Parathan

0 comments:

கருத்துரையிடுக