இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 15 ஆகஸ்ட், 2013

பென் ட்ரைவை பாதுகாக்க சில மென்பொருள்கள்

'பென் ட்ரைவ்' என்பது கணணி உபயோகிப்பவர்கள் பொதுவாகப் பயன்படுத்தும் ஒரு பொருளாகும். நமக்குத் தேவையான file களை save செய்தோ அல்லது மற்றவர்களுக்குக் கொடுக்கவோ இல்லையெனில் வேறொரு கணனியில் install செய்யவோ இதை பயன்படுத்துகிறார்கள்.


ஆனால், இந்த பென் ட்ரைவ்களில் எளிதில் வைரஸ் பரவும் வாய்ப்பு உள்ளது. இதனால், கணனிக்கு வைரஸ் பரப்பப்படுகிறது. அந்தவகையில் , பென் ட்ரைவ்களைப்பாதுகாக்க உதவும் சில மென்பொருள்களைப் இங்கு பாப்போம்....

USB WRITE PROTECTION

இந்த மென்பொருள் உங்களுடைய பென் டிரைவ்களில் உள்ள கோப்புக்களை மற்றவர்கள் திறக்க மட்டுமே அனுமதிக்கும். அந்தக் கோப்புக்களை திருத்துவதற்கோ , பதிவதட்கோ இந்த மென்பொருள் அனுமதிக்காது.

இதன் மூலம் உங்கள் பென் ட்ரைவை எந்தவொரு கணணியிலும் பயப்படாமல் பயன்படுத்திக் கொள்ளலாம்.

அத்தோடு வைரஸ்சுகளால்  இந்த பென் ட்ரைவை அடையாளம் காண்பதும் கட்டுப்படுத்தப்படுகிறது.

USB WRITE PROTECTION ஐ தரவிறக்க..

USB FIREWALL

பென் ட்ரைவ் உபயோகிக்கும் பெரும்பாலானோர் பயன்படுத்தும் மென்பொருளே இது. இது USB ல் இருந்து கணனிக்கு வைரஸ் பரவாமல் இருக்கப் பயன்படும். இதை தரவிறக்கம் செய்து இயக்கியவுடன் , இந்த மென்பொருள் உணல் கணனியில் பின்புலத்தில் இயங்கிக் கொண்டிருக்கும். பாதுகாப்பை அளிக்கும். ஏதேனும் வைரஸ் கணனியில் ஊருடுவ முயற்சிக்கும் போது , இந்த மென்பொருள் எச்சரிக்கை விடுவிக்கும்.

இந்த இணைப்பூடாக USB FIREWALL மென்பொருளை தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.

(மிகுதி அடுத்த பதிவில் கூறுகிறேன்)

0 comments:

கருத்துரையிடுக