இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 21 ஆகஸ்ட், 2013

பிரியாணி பாடல் விமர்சனம்

"பிரியாணி" வெங்கட் பிரபு இயக்கத்தில் கார்த்தி,பிரேம்ஜி மற்றும் பலர் நடிப்பில் யுவன் ஷங்கர் ராஜாவின் அனல் பறக்கும் இசையில் செம பாடல்கள். இதில் என்ன ஸ்பெஷல் என்றால் யுவனின் 1௦௦ ஆவது album. ஏற்கனவே யுவன் , வெங்கட் பிரபு இயக்கத்தில் "மங்காத்தா" , சென்னை ஆறுலட்சத்துஇருபத்து எட்டு.. போன்ற திரைப்படங்கள் சிறந்த வரவேற்பை பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.

1. பிரியாணி - 
    பாடியவர்கள் : Tanvi Shah , பவதாரணி , Vilasini
    பாடலாசிரியர்: கங்கை அமரன் , Tanvi Shah

ஆரம்பமே ஒரு flute இசையுடன் பாடல் ஆரம்பிக்கப்பட்டு , வெஸ்டேர்ன் ஸ்டைலில் பாடல் நகர்கிறது. பவதாரனியும் , Tanvi Shahவும் சிறப்பாகப் பாடியிருக்கிறார்கள்.  ஆங்கில வார்த்தைகளும் கலந்து சிறந்த tune என்பன பாடலுக்கு அழகு சேர்கின்றன...

2. நஹ்ன ந நஹ்ன

      பாடியவர்:      தேவன் ஏகாம்பரம்
      பாடலாசிரியர்கள்:  வாலி , யுவன்

என்ன பாடலப்பா... செம song ஏற்கனவே teaser ஓட வந்து பாட்டு பட்டய கேளப்பீடிச்சு..... வாலியின் வாலிப வரிகள் பாடலிற்கு மேலும் அழகு சேர்க்கிறது. மற்றும் music hiphop ஆக ஆரம்பித்து பின் மெலடி மாதிரி வருகிறது.

இதில் வரும் எனக்குப் பிடித்த வரி " “Bay of Bengal Beechil En Kaal Pattal Enna Keta Vidum, Bay watch Pengal Bluish Kangal thottal enna sutaa vidum”  என்ன மாதிரி பாட்டு எழுதி இருக்காரு வாலி.... 

3.பொம் பொம் பெண்ணே

      பாடியவர்கள்: ராகுல் நம்பியார் , ரம்யா N.S.K
      பாடலாசிரியர்: மதன் கார்கி

இதுதான் முதல் தடவை யுவன் ஷங்கர் ராஜாவுக்கு  , மதன் கார்கி பாடல் எழுதுவது.  நல்ல பாடல் வரிகள் தொடக்கமே "Nenjey Thaakidum Isaiyey Nilladi, Unakai theetiya Variyo nee… Kekatha Padala un Kai Korkovaa"

ஒரு காதல் நிறைந்த பாடலாக அமைகிறது... கேட்டுப் பாருங்க..

4.மிசிசிப்பி மிசிசிப்பி

         பாடியவர்கள்:  கார்த்தி , பிரேம்ஜி , பிரியா hemesh
         பாடலாசிரியர்கள் : வாலி

அம்மா...!! பாட்டோட வரி......... வாலி கலக்கீடாறு.....


"“ Mississippi Mississipi nathi ithu, Venice Katil Venice Katil nadakuthu, pacific il pacificil Kalapadhu padukayil Poraduthu, Naadhan unnai mechumpadi nadakutum Kuchupudi”

வாலி வாலிபக் கவிஞர் தான் பா...

இதற்கு இன்னும் மெருகூட்ட "சிறுத்தை" கார்த்தி பாடியிருக்கிறார்... பிரியா hemeshன் குரலும் சூப்பர்..... பிரேம்ஜியின் பக்க குரல் சூப்பர் ,, ... மொத்தத்துல இது நிச்சயம் எல்லா song லிஸ்ட் ளையும் முதலாவது இடம் பிடிக்கும்...

5. Run for your life

     பாடியவர்கள் : கான பாலா , PSYCHO.unit;
     பாடலாசிரியர் : கான பால , Phycho unit

கானபால Psycho unit இருவரும் நல்ல பாடிருக்காங்க... Psycho unit club song மாதிரி பாடிருக்காரு , கானா பாலா TASMAC song மாதிரி பாடிருக்காரு..


6. எதிர்த்து நில் 

       பாடியவர்கள்:  D.இமான் , G.v.பிரகாஷ் குமார் , S.தமன் , விஜய் அன்டனி

       பாடலாசிரியர்: கங்கை அமரன்

பாட்டு தொடக்கத்தில் யுவன் குரலில் ஆரம்பித்து இடையில்  D.இமான் , G.v.பிரகாஷ் குமார் , S.தமன் , விஜய் அன்டனி என தொடங்கி இறுதியில் யுவன் குரலில் முடிகிறது. 

பாடல் சூப்பர்..  ENERGETIC பாடலேனவே சொல்லலாம்.. பாடலாசிரியர் சூப்பரா எழுதி இருகாரு..
நம்பிக்கை கொடுக்கும் பாடலாக இருக்கிறது...

7.நஹ்ன ந நாஹ்
இந்தப் பாடலை 3 வகையா பாடிருக்காங்க ஒன்று மேலே பார்த்த தேவன் ஏகாம்பரம் பாடியது...

இன்னொன்று  "நஹ்ன ந நாஹ்"  (New Jack Swing Mix) என்று யுவன் பாடியிருக்கிறார். 

மற்றயது "நஹ்ன ந நாஹ்"   (Extended Dance Mix) என  அதை யுவன் , பிரேம்ஜி பாடியிருக்கிறார்கள்.

எல்லாப் பாடல்களுமே சூப்பர்....
எனது Rating  4.5/5

பிரியாணி படம் வெற்றியடைய இந்தத் தளம் சார்பாக வாழ்த்துகிறேன்..
நன்றி..

0 comments:

கருத்துரையிடுக