"தலைவா" பெயருக்கு ஏற்ற கதைக்கரு. மும்பையில் வாழும் தமிழ் மக்களை துன்புருத்துபவனாக பத்ரா என்பவன் இருக்கிறான். அவனிடமிருந்து மும்பை தமிழ் மக்களைக் காப்பாற்ற அந்தக் கூட்டத்திற்கு தலைவனாகிறார் சத்தியராஜ்.
சத்தியராஜ்ஜின் மனைவி பத்திராவினால் சுடப்படுகிறார் இதனால் ஆத்திரமடைந்து பத்திராவை சத்தியராஜ் குத்திக் கொல்கிறார். இந்த சமுதாயத்தில் தன மகன் "விஷ்வா" வாழ்ந்தால் தன்னைப் போல ஆகிவிடுவானென நாசாருடன் சென்னைக்கு அனுப்புகிறார்.
அந்த நாசருடன் சென்ற "விஷ்வா" தான் நமது இளையதளபதி. விஷ்வா ஆஸ்திரேலியா வில் water supply செய்வதை Profession ஆகவும் டான்ஸ் Group வைத்திருப்பதை Passion ஆகவும் வைத்திருக்கிறார். இவரின் நண்பராகத்தான் சந்தானம் வருகிறார். எதேற்சியாக ரோட்டில் போகும் போது விஜய் அமலாபாலை காண்கிறார். விஜய்க்கு அமலாபால் மீது காதல் ஏற்படுகிறது.இதே நேரத்தில் சந்தானத்திட்கும் காதல் ஏற்படுகிறது heroine மேல்.
அப்பாவிடம் கல்யாண அனுமதி பெறவேண்டும் என அமலபாளின் தந்தை கூற விஜய் , அமலாபால் அவரின் தந்தை ஆகியோர் ஆஸ்திரேலியா விலிருந்து மும்பை செல்கிறார்கள். அங்கு சத்தியராஜ் உள்ளூர் போலீஸ்ற்காக பயந்து
(அதாவது உள்ளூர் மந்திரியுடனான பிரச்சினை , மற்றும் , மும்பை துறைமுகத்தை கையில் போட்டுக்கொள்ளும் நோக்குடன் "பத்திரா" என்ற எதிரியின் மகன் பீமா அகியோரின் நோக்கங்களுக்கு இணங்காததால் போலீஸ் arrest ல் இருந்து தப்பிக்க)
இருந்தார்.
விஜய் வந்ததை அறிந்த சத்திய ராஜ் அமலாபால் மற்றும் அவரது தந்தையார் ஆகியோருடன் பேச வரும் போது ஒரு பெரிய twist ஐ வைக்கிறார் director அமலாபாலும் அவரது அப்பாவாகவும் வந்தவர்கள் ஒரு போலீஸ் ஆபீசர்ஸ். சத்தியராஜை கைது செய்து van ல் கொண்டு செல்லும் போது van குண்டு வைத்து வெடிக்கப்படுகிரது. பின் விஜய் தலைவனாக மாறுகிறார். மாறி அவரின் தந்தையின் கொலைக்கு காரணமானவர்களை தலைவனாக மாறி எப்படி கொள்கிறார் என்பதே கதை. இறுதியில் அமலபால் தனது போலீஸ் வேலையையும் resign செய்து விஜயை திருமணம் முடிக்கிறார். அத்தோடு படம் முடிகிறது/
அவரின் காமெடிகள் சில பாப்போம்
படத்தில் சந்தானத்துக்கு டான்ஸ் புடிக்காது அதற்கு அவர் கூறும் பதில் "எனக்கு டான்ஸ் புடிக்காது ஏன்னா எனக்கு ஆட வராது"
சாப்பாடுக் கடையில் ஒருவர் என் சாப்பாட்டை சமைக்கும் போதே பல பேருக்கு எச்சி ஊரும் அதற்கு சந்தானம் "ஏன்னா உன்ன காரி துப்புரதுக்காக"
விஜய் , அமலபால் இருவரும் லவ் பண்ணுவதை பார்த்தவுடன் சந்தானம் சொல்றார் "ஊரான் மாங்காயில ஊறுகாய் போடாதடா ப்ரோ!!"
சரி வேறு காதப்பாத்திரங்கலேனப் பார்க்கப் போனால்
Abhimanyu Singh வில்லனாக வருகுறார் (அதாவது பத்ராவின் மகன்)
பொன்வண்ணன் (விஜயின் சித்தப்பாவாக வருகிறார் இவர் இறுதியில் எதிரி பக்கம் சேர்ந்து ஓர் வாகன விபத்தில் இறக்கிறார்)
மனோபாலா அவர்களும் அவர் பணியை நன்றாக செய்திருக்கிறார்.
அனைவருமே சிறப்பாக தமது பணிகளை செய்திருக்கிறார்கள்.
படத்தின் பெரிய பலம் நீரவ் ஷாவின் ஒளிப்பதிவு.
எனது மதிப்பெண் தலைவாவிட்கு 4/5
வருகைக்கு நன்றி!!
உங்கள் கருத்துக்களை கீழே பதிவிடுங்கள்.!!
வருகைக்கு நன்றி!!
உங்கள் கருத்துக்களை கீழே பதிவிடுங்கள்.!!
0 comments:
கருத்துரையிடுக