இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 21 ஏப்ரல், 2019

ஆங்கில இலக்கணம் கற்கலாம் வாங்க - Verb - Past Tense

ஆங்கில மொழி பரந்துபட்ட சர்வதேச மொழியாகும். உலகில் எப்பாகத்திலும் உள்ள மக்களுடன் தொடர்பினை ஏட்படுத்த பெரிதும் உதவுகிறது.
நிகழ்வுகளை விபரிக்க நாம் 3 காலங்களை கொண்டிருக்கிறோம். அவை இறந்த காலம், நிகழ் காலம் , எதிர்காலம். ஆனால் ஆங்கிலத்தில் அவர் மேலும் 4 உப பிரிவுகளாகி 12 காலங்களை கொண்டிருக்கும். அவற்றில் இன்று இறந்த காலத்தை விபரிக்கும் இலக்கண விதிகளையும் சில உதாரணங்களையும் பார்க்கலாம்


Past Simple

Past Simple tense ஐ Preterite tense எனவும் அழைக்கப்படும்.

இறந்த காலத்தில் நடந்ததை விபரிக்க பல வழிகள் இருந்தாலும் அதிகம் பயன்படுத்தப்படுவதும் சுலபமானதும் Past Simple tense ஆகும்.
Past Simple tense வசனத்தை பின்வருமாறு அமைக்கலாம் 

subject + Past Simple 

உதாரணமாக:-

I went to school
You worked very hard

மேல் உள்ளது நேர் வாக்கியம் (Positive Sentence) எனப்படும். 

எதிர்மறை வாக்கியம்(negative sentence) ஒன்றை அமைக்கும் போது do ன் இறந்த காலமாகிய did ஐ சேர்க்க வேண்டும்  

I did not go to school

இருப்பினும், ஒரு விடயத்தை அழுத்தி, தீர்க்கமானதாக தெரிவிக்க சில இடங்களில் நேர் வாக்கியங்களில் did பாவிக்கப்படும் 

After drinking it I did, in fact, feel better.
அதை குடித்த பின்னர் உண்மையாகவே நல்லதாக உணர்கிறேன். 

இறந்த காலத்தில் நடைபெற்ற குறுகிய அல்லது நீண்ட சம்பவத்தை விபரிக்க இது பாவிக்கப்படும்.

குறுகிய சம்பவங்களை விபரிக்கும் வாக்கியங்களை உதாரணங்கள் சில 
  1. She went to the door.
  2. We did not hear the telephone.
நீண்ட நிகழ்வுகளுக்கு சில உதாரணங்கள் 
  1. I lived in Bangkok for 10 years.
  2. We did not sing at the concert since 2004.
எப்போதெல்லாம் Past tense ஐ பாவிக்கலாம் 

விவரிக்கப்படும் நிகழ்வு
  • முடிந்த ஒன்றாக இருத்தல்
  • இறந்த காலத்தில் நடந்த ஒன்றாக இருத்தல்
  • ஒரு நிகழ்ச்சி ஒன்றின் இடம், நேரம் என்பவற்றை அழைப்பிதழ்களில் குறிப்பிடும் போதோ அல்லது அதை பற்றி யாருக்கும் தெரிவிக்கும் போது
  1. He didn't like the movie.
  2. What did you eat for dinner?
  3. John drove to London on Monday.
  4. Mary did not go to work yesterday.
  5. Did you play tennis last week?
  6. I was at work yesterday.
  • ஒரு கதை கூறும் போது 
ஒரு கதையை சொல்ல ஆரம்பிக்கும் போது அந்த காட்சிக்குள் கொண்டு செல்வதட்காக தொடங்கும் போது Past Continous ல் ஆரம்பித்து, பின்னர் வரும் செயல்களை விபரிக்க Simple Past ஐ பயன்படுத்துவோம்.

The people were singing & dancing at the party.
(இந்த வசனம் கதை சொல்ல ஆரம்பிக்கும் போது Past Continuous ஆக ஆரம்பித்து இனி வரும் வாக்கியங்கள் யாவும் Simple Past ல் காணப்படும்). 
The policemen entered the bar suddenly. They searched for Raja. They found him immediately under the table & arrested him.


Past Perfect

Past Perfect மிகவும் இலகுவானதொன்றாகும். இது இறந்த காலத்தை பற்றி இறந்த காலத்திலேயே விபரிக்க பயன்படுகிறது.

have ன் இறந்த காலமாகிய had ஐ இணைத்து past pariciple வினை சொல்லை சேர்த்து Past Perfect உருவாக்கப்படும்.

had + [past participle]

Eg :-
I had finished my work
  • இறந்த காலத்தில் இடம்பெற்ற 2 நிகழ்வுகள் பற்றி குறிப்பிடப்படும். அதில் ஒரு நிகழ்வு மற்றைய நிகழ்வுக்கு முன்னர் உறுதியாகவும், முழுமையாகவும் நடந்து முடிந்த ஒன்றாக இருக்கும்.
உதாரணமாக :
நான் ஒரு புகையிரதத்தை பிடிக்க சென்றேன் , நான் போவதட்கு முன்பே புகையிரதம் சென்று விட்டது
இதனை புகையிரத நிலைய பொறுப்பதிகாரி  (Station Master) "நீங்கள் தாமதமாக வந்துவிட்டிர்கள்.. புகையிரதம் புறப்பட்டு விட்டது " என கூறுவார்

"You are too late. The train has left."

இதனை நான் எனது ஒரு நண்பருக்கு கூறும் போது  Past Perfect ஐ பயன்படுத்தி பின்வருமாறு சொல்லுவேன் .

When I arrived, the train had left.

இங்கு எல்லாமே இறந்த காலத்தையே மையமாகக் கொண்டு வரும்.

  • பொதுவாக Past Perfect ஐ Reported Speech ல் பயன்படுத்தப்படும்
Reported Speech என்பது நாம் கேள்விப்பட்ட ஒன்றை  அல்லது பார்த்த ஒன்றை இன்னொருவருக்கு தெரிவிப்பதாகும்.

என்னை பார்த்து ஒரு பெண் உன்னை காதலிக்கிறேன் என்று சொன்னது என வையுங்களேன். அதை ஆங்கிலத்தில்

She said "I love you"

இங்கு ஒருவர சொன்ன வாக்கியத்தை இரட்டை மேட்கொள் குறிக்குள் எழுதுவோம்.
இதையே நான் என் நண்பனுக்கு தெரிவிக்கும் போது

அவள் எனக்கு சொன்னாள் என்னை அவள் காதலிப்பதாக  - 
She said that she loved me

Past Perfect எங்கே பாவிக்க கூடாது ?
ஒரு தொடரான சம்பவத்தை நீங்கள் குறிப்பிடாத பட்சத்தில் Past Perfect  பயன்படுத்த தேவை இல்லை.

உதாரணமாக

I had cleaned it off the door.

கதவிலிருந்து அதை நான் சுத்தம் செய்தேன்.

இவ்வாக்கியமானது எந்த விதமான Past Perfect க்குரிய உணர்வையும் ஏட்படுத்தாது. காரணம் சுத்தம் செய்வதட்கு முன்னதாக ஏதோ ஒரு விடயம் இடம்பெற்று இருப்பதை விளக்க தான் Past Perfect உபயோகப்படும். இங்கு அப்படி இல்லை,

கீழுள்ள வசனத்தை பார்க்கவும்

When I arrived, the train had left.

என்பது ஒரு தொடரான வாக்கியமாகும்.  நான் செல்வதட்கு முன்னதாக புகையிரதம் புறப்பட்டு விட்டது .

ஆகவே Past Perfect தொடரான ஒரு சம்பவங்களை இறந்த காலத்தில் விளக்குவதாக இருக்க வேண்டும்.


Past Continuous

Past Continuous ஐ Past Progressive எனவும் அழைப்பார்கள்.  இதே நேரத்தில் இறந்த காலத்தில் நடந்துகொண்டிருந்த ஒரு சம்பவத்தை விபரிக்க Past Continuous பயன்படுகிறது.

Was /Were உடன் வினைச் சொல்லின் Present participle ( வினைச்சொல் + ing  ==>> உதாரணமாக :-
was/were help + ing => was/were helping
ஐ இணைத்து Past Continuous உருவாக்கப்படும்.

சில வசனங்கள் உதாரணமாக:-
  1. They were watching a movie at Satyam theatre
  2. The man was walking towards that junction
  • இறந்த காலத்தில் தொடர்ந்து நடந்துகொண்டிருந்த  சம்பவம் ஒன்று ஏதாவது ஒரு செயலால் தடைபடும் வரை நடந்ததை விபரிக்க பயன்படும். 
உதாரணமாக :-
அவன் மேடையை விட்டு இறங்கும் வரை பார்வையாளர்கள் கை தட்டிக்கொண்டிருந்தார்கள் .

The audience was applauding until he fell off the stage.

அவள் வரும்போது நான் இரவு உணவு செய்து கொண்டிருந்தேன்.
I was making dinner when she arrived.
  • இறந்த காலத்தில் நடந்த ஒரு குறிப்பிட்ட சம்பவத்தை மேட்கோள் காட்ட உதவும்.
Eg:-
At 6 o’clock, I was eating dinner.
6 மணி இருக்கும் போது  நான் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன்.
  • இறந்த காலத்தில் இடம்பெற்ற வழக்கமான ஒரு செயலை விபரிக்க உதவும் 
Eg:
She was talking constantly in class in those days.
அந்த நாட்களில் அவள் வகுப்பில் தொடர்ந்து கதைத்துக்கொண்டே இருக்கிறாள்

Past Perfect Continuous 

Past Perfect Continuous ஐ Past Perfect Progressive எனவும் அழைக்கப்படும்.
இறந்த காலத்தில் தொடங்கி இறந்த காலத்திலேயே தொடர்ந்து ஒரு குறிப்பிடட நேரம் வரை இடம்பெற்ற ஒரு நிகழ்வை விபரிக்க இது பயன்படும்.

அதாவது , கிட்டத்தட்ட Past Perfect போல அமைந்தாலும் இறந்தகாலத்தில் இடம்பெற்ற ஒரு நிகழ்வுக்கு முன்னதாக நீண்ட நேரமாக அல்லது நீண்ட காலமாக நடந்த ஒரு சம்பவத்தை விபரிக்க உதவும்.

Past Perfect ல் இரண்டு சம்பவங்களும் இறந்த காலமாகவே அமையும்.  Past Perfect Continuous ல் குறிப்பிடப்படும் ஒரு சம்பவம், மற்றைய சம்பவம் நிகழும் போது நடந்துகொண்டிருந்த சம்பவமாக இருக்கும்.

Past Perfect Continuous பின்வரும் சமன்பாட்டின் மூலம் உருவாக்கப்படும்.

had been + the verb’s present participle (root + -ing)

கீழ்வரும் உதாரணங்களை பார்க்கவும்

When I arrived, Ram had been waiting for two hours.

I had been working for an NGO when I got the new job in an IT company
எனக்கு IT கம்பெனி ஒன்றில் வேலை கிடைக்கும் போது நான் ஒரு NGO ல் வேலை செய்துகொண்டிருந்தேன்.

When, for, since, and before போன்ற இணைக்கும் சொற்களை past perfect continuous உருவாக்கப் பயன்படுத்தப்படும்.

He had been started watching movies since 2016
She had been started working before she got married


அடுத்த பதிவில் நிகழ்காலம் தொடர்பான விடயங்களை பார்க்கலாம்.