இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 20 ஆகஸ்ட், 2013

உங்கள் தனிப்பட்ட தகவல்களை விற்கிறது Facebook!!

Facebook என்பது நம்மில் பலர் பயன்படுத்தும் ஒரு சமூக ஒருங்குதலமாகும். இந்த தளமானது அதில் பதிவு செய்வது முதற்கொண்டு எமக்குப் பல சேவைகளை இலவசமாக வழங்குகிறது.


இவ்வளவு விடயங்களை எமக்கு இலவசமாகத் தருகிறதே..இதற்கெல்லாம் Facebook ற்கு வருமானம் எங்கிருந்து வருகிறது? என்ற கேள்வி பலருக்கும் எழக்கூடும்.


விளம்பரங்களை பிரசுரித்துக் கட்டணங்களை அறவிட்டாலும் அந்த விளம்பரங்கள் மூலம் அதிகளவு வருமானம் அவர்களுக்குக் கிடைக்குமா? என்பது கேள்விக் குறியே!!!


ஆனால் , உங்கள் தனிப்பட்ட தகவல்களை விற்பதனாலும் Facebook வருமானம் ஈட்டுகிறது. என்பது உங்களுக்குத் தெரியும்?

உங்கள் தனிப்பட்ட தகவல்களை எவ்வாறு விற்கப்படுகின்றன??

Facebookல் உள்ள உங்கள் தனிப்பட்ட தகவல்கள் , உதாரணமாக நீங்கள் வசிக்கும் பிரதேசம், நீங்கள் படித்த பாடசாலை, வேலை செய்யும் இடம் , பயன்படுத்தும் சோப் , மொபைல் போன் , உங்கள் நண்பர்கள்.. இப்படி அத்தனை விபரங்களையும் Facebook தன்னுடைய Database இனுள் வைத்திருக்கிரதல்லவா??




அந்தத் தகவல்களை தேவைப்படும் போது நிறுவனங்களுக்கு Facebook கொடுக்கிறது. இது மட்டுமல்லாமல் , சில Research நிறுவனங்களுக்கும் Facebook நமது தனிப்பட்ட தகவல்களை Facebook கொளுத்த தொகைக்கு விற்று வருவதாக தகவல் வெளியாகின்றன.


இது உண்மையா?? என்பதை அறிந்துகொள்ள நீங்கள் Facebookல் பதிவிடும் அல்லது Like செய்யும் விபரங்களோடு , உங்கள் Facebook பக்கங்களில் பிரசுரமாகும் விபரங்களை ஒப்பிட்டுப்பாருங்கள். 

இந்த உண்மை உங்களுக்குப் புரியும். இதே வேளை, உங்களிடமிருந்து சராசரியாக Facebook எவ்வளவு பணம் சம்பாதிக்கிறது?? என்பதை அறியலாம். என்கிறது ஓர் இணையத்தளம் . அதற்காக   http://goprivate.abine.com/ 

என்ற இணைபிட்குச் செல்லுங்கள். அங்கே கேட்கப்படும் கேள்விகளுக்குப் பதிலளியுங்கள். Submit பொத்தானை அழுத்துங்கள். Facebookல் உங்கள் பெறுமதி என்ன என்று அங்கே காட்டப்படும் பட்டியல் தெரிவிக்கும். (இது எந்த அளவுக்கு துல்லியமானது எனத் தெரியாது)

அத்துடன், இது Facebookன் சர்வதேச சந்தை நிலவரத்தைப் பொறுத்து மாறுபடும்.

நன்றி.

பதிவு பிடித்தல் உங்கள் நண்பர்களோடு பகிருங்கள். மற்றும் உங்கள் கருத்தய்ம் கீழே இடுங்கள்.

1 கருத்து:

  1. அறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் நண்பரே... நன்றி... இணைப்பில் பார்க்கிறேன்...

    பதிலளிநீக்கு