இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 26 டிசம்பர், 2013

HTML கற்போம் பகுதி- 10

வணக்கம் நண்பர்களே.. இப்பதிவில் HTML கற்போம் - பகுதி - 9 ன் மீதிப் பதிவு. இங்கு CSS தொடர்பான coding தான் முழுவதும்..


<p style="color:green;">Green text</p>
<h1 style="background-color: blue;">Heading on blue background</h1>
<body style="background-image: url('parathan.jpg');">

இந்தக் coding ஐப் பொறுத்தவரையில் <p> tag paragraph ஐ குறிக்கிறது.. அங்கே எழுத்தின் கலர் பச்சை நிறத்தில் வருவதாக அமைந்துள்ளது. உங்களுக்கு விரும்பிய கலரில் மாற்றலாம்...

அடுத்து....,
<h1> tag heading ஐ குறிக்கும்... பின் background color அதாவது எழுதவிருக்கும் எழுத்து நீல நிறத்தின் மேல் எழுதப்படுவாதாக அமைந்துள்ளது.. விரும்பிய கலரில் நீங்கள் பின்னர் மாற்றலாம்..

அடுத்து...,, உங்கள் HTML page முழுவதற்கும் ஒரு background ஐ போடப்பட்டுள்ளது.. அதனை உங்களுக்கு ஏற்ப மாற்றிக்கொள்ளலாம்.

<p style="padding:10px;border:2px solid Blue;">I love CSS</p>

முதலில் இந்தக் coding ற்கான வருவிளைவைப் பார்ப்போம்..

I love CSS

இந்தக் coding ல் நீங்கள் மாற்றம் செய்யவேண்டியவை கலர் கலராக எழுதப்பட எண்களும் , எழுத்துக்களும் தான்..

மாற்றி மாற்றி செய்து பாருங்கள்...


<img src="bill.jpg" alt="Bill Gates" style= "float:left;" />

இங்கே காணப்படும் code ஆனது புகைப்படங்களை உட்செலுத்துவதட்குப் பயன்படும் code இது பற்றி பகுதி-6 ல் பார்த்திருக்கிறோம்..

இங்கு கலரில் குறிப்பிடப்பட்டவற்றை மாற்றிக்கொள்ளுங்கள்.. மேலும் இந்த code ல் left என ஒன்று உள்ளது. அது நீங்கள் உள்செலுத்திய படம் எந்தப்பக்கம் இருக்கவேண்டும் என்பதைக் குறிக்கும்.
அதனை உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப center , Right க்கு மாற்றி அமைத்துக் கொள்ளுங்கள்.

நீங்கள் நித்திரையில் காணும் கனவுகளும், அவற்றின் உண்மைக் கருத்துகளும்

பலர் கனவு என்பது எமது அடிமனதில் இருந்து வருகின்ற ஒரு செய்தி எனக் கூறுகிறார்கள். நித்திரை செய்யும் போது எமது அடிமனது ஓர் புது உலகத்துக்குள் செல்வது போல இருக்கும்.. நாம் காணும் எந்தவொரு கனவாயினும் ஏதாவது ஒரு செய்தியை எமக்குக் கூறுவதாக "குறும் படம்" போல அமைந்திருக்கும்.

நாம் பல கனவுகளை எமது வாழ்நாளில் காண்கிறோம்.. உலகில் இருக்கும் பலருக்குப் பொதுவாக சில கனவுகள் தோன்றும். அவற்றைப் பற்றி ஒரு சிறு பார்வை தான் நமது இன்றைய பதிவு.

பதிவு சற்று நீண்டு விட்டது போல நினைக்கிறேன் பொறுமையாக என்னைத் திட்டாது வாசியுங்கள்...

1. துரத்தப்படுவது போன்ற கனவு

யாராவது ஒரு தெரிந்த நபராலோ, அல்லது தெரியாத ஒரு புதிய நபராலோ அல்லது மிருகங்களாலோ துரத்தப்படுவது போலக் கனவு காண்பது பொதுவாகப் பலராலும் கனவு காணப்படும் ஒன்றாகும்.

இப்படிக் கனவு வருவதற்கான காரணம் நீங்கள் ஏதாவது ஒரு விடயத்திட்காகவோ, அல்லது ஒரு நபரினாலோ அச்சுறுத்தப்படும் போது மற்றும் உங்கள் பயந்த உணர்வுகளின் போதும் இதிலிருந்து எப்படியாவது வெளியேற வேண்டும் என்ற வகையில் உங்கள் அடிமனம் கூறும் ஒரு செய்தியாக அமையும் என உளவியலாளர்கள் கூறுகிறார்கள்.


2.காயங்கள் ஏற்படல், நோய் வாய்ப்படுவது, அல்லது இறப்பது போல கனவு

இப்படியாக யாரவது காயங்கள் ஏற்படல், நோய் வாய்ப்படுவது, அல்லது இறப்பது போல கனவு கண்டால் அதற்கான உண்மைக் காரணம் நீங்கள் தனிமைப்பட்டவறல்ல...  அந்த நபர் மேல் உங்களுக்கு அதீத அக்கறை உள்ளது என்பதைக் குறிக்கிறது.

இறப்பது போலக் கனவு காண்பது நீங்கள் உங்கள் வாழ்வில் எதோ ஒரு புதிய வகையில் வாழ்வை ஆரம்பிக்கப்போகிறீர்கள் அல்லது உங்கள் வாழ்வில் ஏதோ ஒரு மாற்றம் நிகழும் என்பதை உணர்த்துவதாகும்.

இப்படிக் கனவு காண்பதற்கு இன்னொரு காரணமும் உண்டு... நீங்கள் ஏதாவது ஒன்றைப் பார்த்துப் பயந்திருக்கலாம், அல்லது யாரவது நபரைப் பார்த்து பயந்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

3. விமானத்தை, புகையிரதம், பஸ் miss பண்ணுதல் போன்ற கனவு..
இப்படியாக உங்கள் வாழ்வில் ஏதாவது கனவு கண்டிருந்தால் அதற்கான காரணம் நீங்கள் கிடைத்த சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்தவில்லை  இதனால் உங்கள் மனதில் ஏற்பட்ட ஒரு விரகத்தி அல்லது பயம் என்பதை இக் கனவு குறிப்பிடுகிறது.

எனவே "காற்றுள்ள போதே தூற்றிக்கொள்"

4. பரீட்சையில் சித்தி பெறாமை..
இது மாணவர்களுக்கு மட்டுமான ஒன்றல்ல... வளந்த பெரியவர்களுக்கும் பொருந்தும். அதாவது ஏதாவது ஒரு விடயத்தில் எமக்கு வெற்றி கிடைக்கவில்லை என்பதை ஒரு விதத்தில் குறிக்கிறது. மேலும், இப்படியான கனவானது நீங்கள் உங்கள் கடந்த வாழ்வில் என்ன செய்தீர்கள் அதற்கு நீங்கள் தகுதி உடையவர்களா..?? என்பதை சிந்தித்து மனதை குழப்பிக் கொள்ளாத வகையிலும் அமைகிறது.. 

(பரீட்சை என்பது சும்மா லோலாயி.. அதை நினைத்து வருத்தம் கொள்ளாமல் எதிர்வரும் பரீட்சைகளில் சித்தியடைய முயற்சிக்க வேண்டும்... இது என் கருத்து...)

5. விழுவது போல கனவு..
நீங்கள் கீழே நிலத்தில் விழுவது போலவோ அல்லது நிலத்தைத் தொடாமல் இருப்பது போலவோ கனவு கண்டால் நீங்கள் தற்போது மேற்கொள்ளும் ஒரு செயலில் உங்களுக்குப் பாதுகாப்பு இன்மையைக் குறிப்பதாக அமைகிறது.

6.பறப்பது போலக் கனவு..
இந்தக் கனவு தான் உண்மையில் மகிழ்ச்சியானதும், பயமானதுமான கனவு. இது உணர்த்துவது நீங்கள் வெற்றியைத் தேடித் பயணித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பதாகும்.
மேலும், நீங்கள் ஒரு உயரத்திற்குச் செல்ல முயற்சிப்பதும் சில வேளைகளில் கீழே விழலாம் என்பதையும் குறிக்கிறது. இதற்கு இன்னொரு அர்த்தமும் இருக்கிறது நீங்கள் மகிழ்ச்சியாகவும், சமாதானத்துடனும் வாழ்கிறீர்கள் என்பதையும் உணர்த்தும்.

7.ஏதாவது ஒரு இடத்தில் தவறுப் படல் என நீங்கள் கனவு கண்டிருப்பீர்கள்..
அப்படியான கனவு நமக்கு உணர்த்துவது "ஒரு பிரச்சினையை எப்படி சரி செய்து கொள்ளும் ஆற்றல் நமக்கு இல்லை என்பதை உணர்த்தும்.

அதாவது நீங்கள் காணாமல் போகின்ற நேரத்தில் நீங்கள் பாதுகாப்பின்மையை உணர்வீர்கள், அடுத்து என்ன செய்வது எனப் புரியாது எனப் பல பிரச்சினைகளை நமக்கு உணர்த்தும். அது போலத்தான் நம் வாழ்வில் ஏற்படும் பிரச்சினைகளைத் தீர்ப்பது பற்றியும் இப்டி கனவுகள் உணர்த்தும். 

8. சொத்துக்கள் அழிவடைதல்.
இப்படியான கனவுகள் எமது சொத்துக்கள் அழிவடையும் போது அல்லது தெரிந்த நபர் ஆபத்தில் இருக்கும் போது  நாம் எப்படியான ஒரு மனநிலையை கொண்டிருக்கிறோம் என்பதை உணர்த்தும். 

தொலைந்து போன விலை மதிக்க முடியாத பொருளோ அல்லது ஒரு நபரோ ஆபத்தில் இருப்பதைக் கூட இப்படியான கனவுகள் நமக்கு சில வேளைகளில் கூறும் என உளவியலாளர்கள் கூறுகிறார்கள்.

போதும்,.. போதும்... என நீங்கள் கூறுவது எனக்குப் புரிகிறது.. அதனால் இத்துடன் நான் பதிவை முடிக்கிறேன். மீண்டும் ஒரு நாள் உங்களை இன்னொரு சுவாரஸ்சிய பதிவில் சந்திக்கிறேன்

புதன், 25 டிசம்பர், 2013

Friend request ஐ யார் யார் accept செய்யவில்லையென பேஸ்புக்கில் அறிய...

வணக்கம் நண்பர்களே...!! இன்றைய பதிவு பலருக்குத் தெரிந்திருந்தாலும் அதை உங்களுக்குக் கூறுவது என் கடமை. அந்த வகையில் பேஸ்புக்கில் நீங்கள் பலருக்கு நண்பர்களாகுவதட்கு request அனுப்பி இருப்பீர்கள்.

அவர்கள் கொஞ்சம் கெத்தானவர்கள் என்றால் உங்கள் Friend Request ஐ accept செய்ய மாட்டார்கள்.

அப்படியானால் நான் என்ன செய்ய என நீங்கள் கேட்ப்பது எனக்குப் புரிகிறது.
அப்படின்னா, நீங்க அவர்களுக்கு அனுப்பிய Friend Request ஐ cancel பண்ணுங்க... (நாங்களும் கேத்துன்னு காட்டனும்ல...)

சரி அதை எப்படி செய்வதெனப் பார்ப்போம்.,..

இந்த லிங்க்ற்கு செல்லவும்...

அங்கே நீங்கள் யார் யாருக்கு Friend Request அனுப்பியுள்ளீர்கள் எனக் காட்டும்.

இனி, என்ன cancel பண்ண வேண்டியது தான்..

இப்படி cancel செய்வதன் மூலம் பேஸ்புக்கால் நீங்கள் block செய்யப்படுவதைத் தடுக்கலாம். ஆம், அதிகமாக நீங்கள் பலருக்கு Friend Request அனுப்பினீர்களாயின் சில வேளைகளில் பேஸ்புக்கால் block செய்யப்படுவீர்கள்.

எனவே, இப்படி cancel செய்வதன் மூலம் block செய்யப்படுவதிலிருந்து தப்பிக்கலாம்.

ம்ம்... சரிங்க இன்று இது தான் எனது தகவல். நாளை சந்திப்போம்.

அனைவருக்கும் கிறிஸ்மஸ் தின வாழ்த்துக்கள்...

சனி, 21 டிசம்பர், 2013

ஜில்லா - இசை விமர்சனம்

விஜய்,காஜல் அகர்வால் நடிப்பில் நேசனின் இயக்கத்தில் R.B.சௌத்ரி தயாரிப்பில் இமானின் இசையில் பொங்கலுக்கு வெளிவர இருக்கின்ற படம் "ஜில்லா"

படத்தின் பாடல்கள் இன்று (21/12) சூரியன் FM ல் ஒளிபரப்பப்பட்டது. பாடல்கள் விமர்சனம் பற்றி ஒவ்வொன்றாக இன்று பார்ப்போம்.

1. கண்டாங்கி

பாடியவர்கள்   : விஜய், ஸ்ரேயா கோசல்
பாடலாசிரியர் : வைரமுத்து
ஸ்ரேயா கோசலின் குரலுடன் பாடல் மெல்லிசையாக ஆரம்பிக்கிறது. விஜயின் குரலில் பாடல் டூயட் போல அமைந்துள்ளது. 

காதலன் பெண்ணின் அழகைப் பற்றிக் கூறும் பாடல்.. இதோ அதன் ஆரம்ப வரி..

"கண்டாங்கி கண்டாங்கி கட்டி வந்த பொண்ணு
 கண்ணால கிறுக்கேத்தும் கஞ்சா வச்ச மய்யி...."

எப்படியாகப் பாடி அதற்க்கு சொத்துகளை தருவதாகவும் கூறி முத்தம் கேட்கிறார்... 

அதற்கு பெண்அதெல்லாம் போதாது தள்ளிப் போய்யா..

இவ்வாறாக காதல் கலந்த கிராமிய மெல்லிசையுடன் பாடலை அமைத்திருக்கிறார். விஜய் மெலடி பாடலும் சிறப்பாகப் பாடி அசத்தியிருக்கிறார்.

2. ஜிங்கு மணி

பாடியவர்கள்   : K.G. Ranjith, Sunidhi Chauhan
பாடலாசிரியர் : விவேகா

இமானின் துடிப்பான இசையைப் இப்பாடலில் வெளிப்படுத்தியுள்ளார். பெண் ஆணின் அழகைப் பற்றியும் ஆண் பெண்ணின் அழகைப் பற்றியும் பாடி தம் உணர்வுகளை வெளிப்படுத்தும் பாடலாகப் பாடலடிகள் அமைந்துள்ளன. 

மேலும் இப் பாடலில் இடம்பெற்ற ஒரு சூப்பர் வரி இதுதாங்க...

ஆணும் பெண்ணும் சேர்ந்து பாடும் வரி இது...
"Get together வேணும் நாங்க கெட்டுப்போக...."


3.பாட்டு ஒன்னு

பாடியவர்கள்   : ஷங்கர் மகாதேவன் , பாலசுப்ரமணியம்
பாடலாசிரியர் : யுகபாரதி
இப் பாடல் நிச்சயமாக மோகன்லால், விஜய் இருவரும் இணைந்து பாடும் பாடலாகத் தான் இருக்கும். பாடல் வரிகளைக் கேட்கும் போது அப்படித்தான் தோன்றும். 

மேலும், இப் பாடல் opening பாடலாகக் கூட இருக்கலாம்.. ஷங்கர் மகாதேவன் எந்தப் படங்கள் என்றாலும் opening song தான் பாடுவார்...

பாலசுப்ரமணியம் குரலில் இந்தப் பாடல் வரிகள்...

" உயிரென்று உன்னை நானும் ஒருநாளும் சொல்ல மாட்டேன்
 உயிரென்றால் ஒருநாள் போகும்..."

இது நிச்சயமாக மோகன்லால் பாடும் வரியாகவே படத்தில் இருக்கும் என்பது என் எதிர்பார்ப்பு.. பார்ப்போம்..

4.வெரசா போகயில

பாடியவர்          : இமான்
பாடலாசிரியர் : பார்வதி

விசில் சத்தத்துடன் ஆரம்பித்து மெலடி ஸ்டைலில் பாடல் நகர்கிறது. 

காதலன் காதலியைப் பார்க்கின்ற போது காதலனின் நெஞ்சில் எழும் உணர்வுகளை இப் பாடல் வரிகள் பிரதிபலிக்கிறது.

உதாரணமாக...  "அவ சிரிச்சது தலை உறையுது தன்னால....."
                                  "என்னுள்ளே நீ பாதி நான் மீதியோ..?? "

5. மாமா ட்ரீட்டு

பாடியவர்கள்   : இமான், பூஜா, சந்திரா
பாடலாசிரியர் : விவேகா

பொங்கலுக்கு விஜய் ரசிகர்களுக்கு ட்ரீட்டாக இருக்கும்.. அது போலத்தான் 

இப் பாடலில் ஒரு பெண்ணின் குரலில் "எப்போ மாமா ட்ரீட்டு...??" என ஆரம்பிக்கிறது..

இதற்க்குப் பதிலளிக்கும் வகையில் ஆணின் குரல் மூலம் 

"ஜில்லாவோட ட்ரீட்டு எப்பவுமே ஹாட்டு..."

என கூறி இறுதியில் 

"நல்லா நோண்டிக் கேட்டலும் சொல்ல மாட்டேன்...வேணா பாரு மையப் போட்டு ஜில்லாவோட ட்ரீட்டு..."

எனப் பாடல் முடிகிறது. நிச்சயமாக ஜில்லா இந்தப் பொங்கலுக்கு ட்ரீட்டாக இருக்குமென நான் நம்புகிறேன்...

6. ஜில்லா Theme
பாடியவர்கள்   : சந்தோஷ் ஹரிஹரன், தீபக், ஆனந்த் , செண்பகராஜ்
பாடலாசிரியர் : விவேகா

பாடல் அதிரடியாக அமைந்துள்ளது. ..

"ஜில்லா ஜில்லா எதையும் வெல்வான் தில்லா..."

எனப் பாடல் முழுவதும் ஜில்லா பற்றி ஒரே புகழாரம் தான். இடையிடையில் கேரளா ஸ்டைலில் கதகளி நடன tune கள் அமைந்துள்ளன.

இந்த 6 பாடல்களும் நன்றாக அமைந்தன.. இசையமைப்பாளருக்கும், படக் குழுவினர் அனைவருக்கும் படம் வெற்றியடைய என் வாழ்த்துக்கள்.

#ஜில்லா பாடல்களுக்கு எனது Rating :       8/10

பேஸ்புக்கில் என்னுடன் இணைய...

வெள்ளி, 20 டிசம்பர், 2013

என்றென்றும் புன்னகை - திரை விமர்சனம்

அஹமத்தின் இயக்கத்தில் ஜீவா,த்ரிஷா, சந்தானம், அண்ட்ரியா, நாசார் போன்றோரின் நடிப்பில் சிறந்த திரைப்படமாக (எனது பார்வையில்) கருதும் அளவிற்க்கு இருந்தது..

கதை..

ஜீவாவிற்கு சிறு வயதிலிருந்தே பெண்கள் என்றால் வெறுப்பு காரணம் அவரது அம்மா தந்தையா நாசாரை ஏமாற்றி விட்டு ஓடிவிட்டார்.. மேலும் ஜீவாவை சந்தோஷப்படுத்த சென்னைக்கு கூட்டிச் செல்கிறார் அங்கு கல்வியைத் தொடரும் போது தான் வினய், சந்தனத்துடன் நட்புக் கொள்கிறார்.

இவர்கள் மூவரின் பலவித குறும்புகள் சேட்டைகள் என படம் செல்கிறது.

  மூவரும் ஒரு சத்தியம் எடுக்கிறார்கள் "நம் நட்பைப் பிரிக்கின்ற கல்யாணத்தை நாம் பண்ணக்கூடாது..."

ஜீவா, வினய்,சந்தானம் மூவரும் விளம்பரங்களை இயக்கம் தொழிலில் ஈடுபடுகிறார்கள். இவர்களுக்கு விளம்பரங்களை order பண்ணும் கம்பனி யிலிருந்து இவர்களைக் கண்காணித்து இவர்களுக்கு உதவுவதற்கு த்ரிஷா வருகிறார்.

பின்னர், வினய், சந்தானம் இருவரும் ஜீவாவை விட்டுவிட்டு கல்யாணம் செய்கிறார்கள். இதனால் மனமுடைகிறார் ஜீவா.

பின், ஜீவாவிற்கும், த்ரிஷாவுக்கும் முதலில் நட்பு ஆரம்பித்துப் படிப்படியாகக் காதல் மலர்கிறது பின்னர் அவர்கள் இருவரும் இணைந்தார்களா?? இல்லையா??

3 நண்பர்களும் மறுபடி ஒன்ரினைந்தார்களா? என்பது மீதிக் கதை..

பல நாட்களுக்குப் பின் மறுபடி த்ரிஷாவை திரையில் பார்ப்பதில் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

 த்ரிஷாவின் introduction ஆரம்பித்திலிருந்து த்ரிஷாவிடமே என் கண்கள் சென்றன....

ப்பா...அவளவு அழகாக இருந்தாங்க...

நண்பர்களின் portion முழுவதுமாக ஒரே காமெடி தான்... ரசிக்கும்படியாக அமைந்தது.

 சந்தானம் இங்கும் அவர் காமெடி திறமையைக் காட்டியிருக்கிறார்... ஆனால் கொஞ்சம் over ஆக comedy பண்ணிருக்காரு...

மாடல் அழகியாக வரும் அண்ட்ரியா தோன்றும் பகுதிகள் குறைவாக இருந்தாலும் தியேட்டரில் ஒரே கிளுகிளுப்பாக அமைந்தது. 
அட அழக ரசிக்கனும்ல..

Background Music உம் பாடல்களும் எனக்குப் பிடித்திருந்தது..

படத்தில் குறைகள் என பெரிதாக சொல்ல முடியவில்லை... 1 st half கொஞ்சம் அதிக நேரமாக இருந்தது , விறுவிறுப்பாக செல்லவில்லை என்பதும்... இரண்டாம் பாதியில் இயக்குனர் ஓரளவுக்கு விறுவிறுப்பாக கொண்டு சென்று இறுதியில் ஒரு twist வைத்துள்ளார்..

மேலும், இந்தப் படத்தின் முக்கிய கருத்தானது "ஒவ்வொரு பிரச்சினைகளுக்கும் மனிதனின் ஈகோ தான் காரணம்" - டைரேக்டோருக்கு ஒரு ஸ்மால் சலுட்

படம் அனைவரும் பார்த்து ரசிக்கலாம்...
 ( நான் த்ரிஷாவுக்காகப் பார்த்தேன்)

படத்திற்கு எனது Rating:       72/ 100

சனி, 14 டிசம்பர், 2013

HTML கற்போம் - பகுதி - 9

வணக்கம் நண்பர்களே...  இன்றைய பதிவில் HTML கற்போமின் பதிவில் CSS பற்றிப் பார்ப்போம்.

 <p style="font-size:20px;">This is typed in size 20px</p>

இங்கு <p> என்பது குறிப்பது Paragraph ஐ "பந்தி" மேலும் font size என்பது எழுத்தின் அளவைக் குறிக்கும்..

இனிப் பார்க்கலாம் வாருங்கள் மேலே கொடுக்கப்பட்ட code ன் வருவிளைவை இங்கே பார்ப்போம்...

This is typed in size 20px

பார்த்திருப்பீர்கள்... மேலே உள்ள எழுத்தானது 2௦px ல் எழுதப்பட்ட எழுத்தாகும்.


<p style="font-family:courier;">This is typed in Courier</p>

இங்கே font family என்பது குறிப்பது எழுத்தின் எந்த வடிவம் என... அதாவது MS Word ல் நீங்கள் பாவிக்கும் font styles ஆகும்...

உதாரணமாக : Times New Roman , courier

சரி இப்போது மேலே தரப்பட்ட code ற்கான வருவிளைவைப் பார்ப்போம்..

This is typed in Courier

எப்படிப் பார்த்தீர்களா....

<p style="font-size:20px; font-family:courier;">This is typed in Courier size 20px</p>

மேலே, நீங்கள் பார்த்த 2 code களையும் கலந்ததாக அமைந்த code தான் இங்கே தரப்பட்டுள்ளது.. இதைப் பற்றி மேலும் கூறத்தேவை இல்லை என நினைக்கிறேன்.

நேரடியாக வருவிளைவைப் பார்ப்போம்..

This is typed in Courier size 20px

எப்படி பார்த்தீர்களா...??

இப்போது நாம் பார்க்கப்போவது சற்று வித்தியாசமான coding...

<html>
 <head>
 <title>My first CSS page</title>

 <style type="text/css">
 h1 {font-size: 30px; font-family: arial;}
 h2 {font-size: 15px; font-family: courier;}
 p {font-size: 8px; font-family: "times new roman";}
 </style>

 </head>
 <body>
 <h1>My first CSS page</h1>
 <h2>Welcome to my first CSS page</h2>
 <p>Here you can see how CSS works </p>
 </body>
</html>

சரி இப்போது நாம் நோக்கும் போது...

<title> tag நீங்கள் செய்யவிருக்கும் HTML தலைப்புக்கு என பகுதி-1 இலேயே பார்த்துவிட்டோம்...

அடுத்ததாகப் பார்த்தால் <style type="text/css"> tag என்பது CSS code பற்றியதாகும்..
அங்கே குறிப்பிடப்பட்ட h1 , h2 போன்றவை தலைப்புக்கு குறிக்கும் tag ஆகும்.

மேலும் <body> tag இனுள் பாருங்கள்..
<h1> , <h2> போன்ற tag கலைப் பயன்படுத்தி அதில் எழுத்துகளைக் எழுதப்பட்டுள்ளது.

அதாவது நீங்கள் தொடக்கத்தில் பார்த்த tag களைப் போல HTML code ஐ தொடராகக் குறிப்பிடாமல் <body> என்ற tag ற்குக் கீழ் நீங்கள் விரும்பிய எழுத்துகளை எழுதி அது எப்படி எழுத்து வகையில் அமைய வேண்டும் என <head> என்ற tag இனுள் போடுவது சுலபம் என்பதால் அப்படிப் போடப்பட்டுள்ளது..

நீங்களும் ஒரு முறை சரியாக try செய்து பாருங்கள்... ஏதாவது பிரச்சினைகள் என்றால் கீழே comment செய்யுங்கள்... 
நன்றி
பரதன்

பேஸ்புக்கில் என்னுடன் நீங்கள் இணைய...

திங்கள், 9 டிசம்பர், 2013

கூகிளில் மட்டும் பாவிக்கப்படும் சில மொழிகள்..- வாங்க என்னென்ன என்று பார்போம்..

வணக்கம் நண்பர்களே.. இன்றைய பதிவில் உலகிலே பாவிக்கப்படாத, கூகிளில் மட்டும் பாவிக்கப்படும் சில மொழிகளைப் பற்றி பார்ப்போம். யார் இவ்வாறு சில மொழிகளை கூகிளில் உட்புகுத்தும் ஐடியா எடுத்தார்கள் என்று தெரியவில்லை... ஆனால் அவை பார்க்க ரொம்ப வித்தியாசமாகத்தான் இருக்கிறது.

சரி அவை எவை எனப்பார்க்கலாம்...

1. Google Pirate





மேலும் உலகில் பயன்படுத்தப்படும் மொழிகளில் கூகிள் பாவனை செய்ய இங்கே அழுத்துங்கள்..

இவை பற்றி சும்மா அறிந்து வைத்திருப்பது நல்லம் தானே...!!

உங்கள் நண்பர்களுடனும் சமூகவலைத்தளங்களிலும் Share செய்து கொள்ளுங்கள்...

லேப்டாப் battery charge ஐ சேமிக்க Battery Booster மென்பொருள்..

வணக்கம் நண்பர்களே..!! ஏற்கனவே லேப்டாப்பின் battery ன் வாழ்நாளை கூட்ட.. சிறந்த வழிகள் பற்றி ஒரு பதிவு எழுதியிருந்தேன்.
அதில் குறிப்பிட்டது போல ஸ்க்ரீனின் brightness ஐ குறைத்தல்,  Sound ஐ குறைக்க குறைந்தலவாவது Microphone ஐ use செய்தல்,Bluetooth , WIFI என்பவற்றை off செய்தல் போன்றன பற்றி குறிப்பிட்டிருந்தேன்.

 மேலும் battery charge ஐ சேமிக்க ஒரு மென்பொருள் உள்ளது. அதன் பெயர் Battery Booster 

இதன் சிறப்பம்சங்கள்..
  • தேவையற்ற சில run செய்து கொண்டிருக்கும் apps நிறுத்தி வைக்கும்
  • கையாள்வது சுலபமாகும்
  • Batery plan ஐ எமக்கு விரும்பியபடி மாற்றலாம்.
  • Battery நிலை பற்றி அடிக்கடி அறிவித்தல்கள் தரும்.
மேலும் இவ் மென்பொருள் ஒரு இலவச மென்பொருள் என்பதால் நீங்களும் try செய்து பார்க்கலாமே...

Download Battery Booster - Freeware – 324 Kb file

ஏதாவது பிரச்சினைகள் என்றால் கீழே comment செய்யுங்கள்...

ஞாயிறு, 8 டிசம்பர், 2013

தற்காலிகமாக Processor ன் பெயரை மாற்ற...

வணக்கம் நண்பர்களே..!! Processor கணணி வேலை செய்வதில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. Processor ஐ பல நிறுவனங்கள் உற்பத்தி செய்கின்றன. உதாரணமாக இன்டெல் , மோட்டோரோலா போன்றவற்றை குறிப்பிடலாம்.

உங்கள் Processor எந்த நிறுவனத்தினது என அறிய My Computer icon ல் Right Click செய்து Properties ல் click செய்தால் உங்கள் RAM , Processor போன்றவற்றைப் பற்றிய செய்திகளைக் காணலாம்.

சரி தற்காலிகமாக Processor ன் பெயரை மாற்றுவதற்கான முறையைப் பார்க்கலாம் வாருங்கள்...

எனது Processor பெயர் "Pentium(R) Dual-Core  CPU      E5700  @ 3.00GHz" இதனை நான் "Parathan Processor" என மாற்றப்போகிறேன்... பாருங்கள்..

Run >  Type   regedit  

அப்படி type செய்த பின்.. கீழுள்ள வாறு windows தோன்றும்..
அதில் 

HKEY_LOCAL_MACHINE > Hardware > Description > System > Central Processor > > Processor Name String ல் Click செய்ய வேண்டும்...

அவ்வாறு click செய்தால்... கீழுள்ள படம் போன்று தோன்றும்..

இனி அதில் வரும் எழுத்தை நான் முன்னர் கூறியவாறு "Parathan Processor
என மாத்திவிடுங்கள்...

இனி  My Computer icon ல் Right Click செய்து Properties ல் click செய்யுங்கள்...
எப்படி நீங்கள் மாத்தி விட்டீர்கள்... ஆனால் இது தற்காலிகம் தான்... கணணியை restart செய்யும் போது பழைய original பெயருக்கு மாறி விடும்..

பொதுவா தெரிஞ்சு வைப்பது நல்லது தானே...

பதிவு பயனுள்ளதாக இருந்தால் நண்பர்களுடனும் Share செய்து கொள்ளுங்கள்..

சனி, 7 டிசம்பர், 2013

Skype ல் history யை அழிப்பது எப்படி..??

வணக்கம் நண்பர்களே..!! இன்று தொலைதூரத்தில் இருப்பவர்களுடனும் சரி பக்கத்துக்கு வீட்டில் இருப்பவர்களுடனும் சரி இணையம் மூலம் முகம் பார்த்துக் கதைப்பதற்கு அனைவரும் பாவனை செய்யும் ஓர் மென்பொருள் என்றால் அது Skype தான்.

அந்த வகையில் நாம் எமது Skype contact ல் இருக்கும் யாரோடாவது call செய்து கதைத்திருப்போம், அல்லது chat பண்ணி இருப்போம். ஆனால் அவற்றை வேறு யாராவது பார்த்து விடுவார்களோ என பயந்து log out பண்ணிவிடுவார்கள். அப்படி log out பண்ணது இருப்பதென்றால் history யை அழிக்க வேண்டும் என நினைப்பார்கள். ஆனால் Skype ல் history அழிப்பதற்கு தேடிப்பிடிப்பதற்குள் நேரமே போய் விடும்.

எனவே, தான் இன்று Skype ல் history அழிப்பது எப்படி எனக் காட்டப்போகிறேன்...

முதலில் Skype ல் log in செய்யுங்கள்..
பின்.. Tools > Optionclick செய்யுங்கள்...
பின்னர் ஒரு Window open ஆகும்..
கீழே உள்ள படத்தைப் பாருங்கள்..
தோன்றும் விண்டோவில் Privacy Settingclick செய்து அதில் எவளவு நாட்களுக்கான history யை அழிக்க வேண்டும் என்பதை set செய்து Clear History ஐ select செய்தால் பின் ஒரு confirmation box தோன்றும் அதில் deleteselect செய்தால் சரி..
நீங்கள் History யை அளித்துவிட்டீர்கள்...
பதிவு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் Share செய்து உதவுங்கள்..

வியாழன், 5 டிசம்பர், 2013

Internet இல்லாத நேரம் செய்யக்கூடிய 10 activities- சொந்த அனுபவப் பதிவு

Internet இல்லாமல் நாம் இல்லை. ஆனால் சிலவேளைகளில் internet தொடர்ந்து browse செய்ய சற்று bore அடிக்கும். அந்த நேரத்தில் நான் செய்யும் 1௦ நடவடிக்கைகளை உங்களோடு பகிரப்போகிறேன்.


10. டீவி பார்த்தல்....

நண்பர்களே... நீங்கள் ஒன்று கட்டாயம் தெரிய வேண்டும். ஒரு காலத்தில் டிவி பார்த்தல் தான் முக்கிய பொழுதுபோக்காக அமைந்தது. நீங்கள் ஒரு விளையாட்டு பிரியர் என்றால் பல விளையாட்டு சேனல் கள் உள்ளன, மேலும் நகைச்சுவை சேனல்கள் உள்ளன அவற்றை பார்த்து பல மணிநேரங்கள் இருக்கலாம். இதற்கு இணைய வசதி தேவையே இல்லை..

9. செய்தித் தாள் வாசித்தல்
பெரிதாக கணணி பாவனை. இணையப் பாவனை தெரியாத பெற்றோர்கள் உண்டு.. அவர்கள் எப்படி வெளி விடயங்களை அறிகிறார்கள். எல்லாமே செய்தித் தாள் வாசிப்புத் தான் காரணம். நீங்கள் நினைக்கலாம் நமக்கு இந்த பேப்பர் வாசிக்க bore அடிக்கும் என்றால்,.. எதாவது வாரம் அல்லது மாதம் வரும் சில interesting ஆன magazines ஐ order செய்து வீட்டில் வாசிக்க கூடியவாறு செய்யலாம் தானே.. உதாரணமாக தொழிநுட்பம், சினிமா தொடர்பாக பல magazines வருகிறதல்லவா.. மேலும் பேப்பர் ல் வரும் சுடோக்கு , puzzle என்பவற்றை நிரப்பி கொண்டு இருக்கவே நேரம் போய்விடும்...

8. சுத்தம் செய்தல்..
அட ஆமாங்க... பல பேருக்கு இது ரொம்ப பிடிக்கும். அதாவது தங்களது அறையை தமக்கேற்ற மாதிரி பிடித்த விதத்தில் அலங்காரங்கள் மேற்கொள்வது. பல பேரைக் கவரும் விதமாக பொருட்களை வைத்து / உருவாக்கி தங்களுக்குள் மகிழ்ச்சியடைவது. இந்த விடயம் பொதுவாக எனக்குப் பிடிக்கும்.


7. பொழுதுபோக்கு...

நமக்கென ஒரு பொழுதுபோக்கு நிச்சயமாக இருக்கும். உதாரணமாக வீட்டுத் தோட்டம் செய்தல், நாயை கூட்டிக் கொண்டு ரோட்டில் வாக்கிங் செல்லல் , painting என பல தரப்பட்ட விடயங்கள் உள்ளன. அல்லது ஏதாவது வாத்தியங்கள் வாசிக்கப் பழகல்.. உதாரணமாக மிருதங்கம் , கிட்டார் , தபேலா...

 இதெல்லாம் வீட்ல வாசிச்சுப் பாத்தா நமக்கும் ஊர்ல ஒரு மதிப்புக் கிடைக்கும்.. பா என்னமா வாசிக்றான் இந்தப் பய...என..

6. சமைத்தல்

சாப்பாடு இல்லாமல் நான் இல்லை.. ஆமாங்க எனக்கு விதம் விதமான சாப்பாடு சாப்பிட விருப்பம். இது வெறும் பெண்களுக்கு மட்டுமான வேலை என நினைக்காதீங்க.. ஆம்பளைங்க தான் என் ஊர் ஹோட்டல் ல சமைக்றாங்க.. ( சும்மா உதாரணத்துக்கு சொன்னேங்க..) மேலும் வீட்டைப் பிரிந்து தூர இடங்களில் வேலை செய்யும் பலர் தாமாகத்தான் சமைத்து மகிழ்கிறார்கள். அந்த நேரத்தில் தான் அம்மாவின் கஷ்டம் புரியும். எவளவு கஷ்டப்பட்டு நமக்கு சாப்பாடு செய்திருப்பார்கள் என்று...

அட சமையல் ஒரு ஜாலியா செய்யணும் பாஸ்...

5. Game விளையாடல்
இதப் பத்தி நான் சொல்லவே தேவையில்ல.. பல வருஷமா படிக்கிற பயலுங்க சரி , இளைஞர்களும் சரி கேம்ஸ் தான் முக்கிய விடயமாக computer ஐ பாவித்தார்கள். எனவே அதை இணையம் இல்லாத காலங்களில் பெரிதாக விரும்பினார்கள். இப்போதும் விரும்பிக்கொண்டுதான் இருக்கிறார்கள்...

4. புத்தகம் வாசித்தல்..
பல பல அறிஞர்கள் எழுதும் புத்தகங்களை வாசித்தல் நமக்கு சற்று வித்தியாசமான உணர்வுகள் தோன்றும். மேலும் காதாப்பத்திரங்களின் குணத்துக்கு ஏட்பவாறு நாமும் சிந்திப்போம். சில தொடர்கதைகள் எவளவோ உண்டு. தமிழில் எத்தனையோ புத்தகங்கள், கவிதைகள் எனப் பல உண்டு. நாம் அவற்றை நிச்சயம் பார்த்துக் கற்றல் வேண்டும்.

3. பூங்காக்களுக்கு செல்லல்..
பூங்காக்கு நாம் செல்வது நாம் மனதிற்கு சுகத்தையும், ஆறுதலையும் தரும். பொதுவாக சூரியன் மறையும் வேளையில் செல்லும் போது எனக்கு மிகவும் பிடிக்கும். மேலும், இயற்கையுடன் ஓர் தொடர்பு கொள்வது நல்லது தானே... எந்த நேரமும் கணணி, வீடு ,வேலை என இருப்பவர்களுக்கு சற்று ஓய்வாக இருக்கும்.

2.படம் பார்த்தல்..

அது தானே நம்ம main வேலை.. படத்த பார்த்திட்டு பேஸ்புக், டுவிட்டர் ல படம் பற்றி கழுவி ஊத்துறது, மெச்சுரதுன்னு ஒரே ஜாலியா இருபீங்கள்ள.. அப்புறம் நான் என்னத்த சொல்ல..


1. நண்பர்களுடன் மொக்கை போடல்..

இது கடைசி அல்ல ஆரம்பமே.. ஹா ஹா ..!! நண்பர்களோடு இருந்தால் பொழுது செல்வதே தெரியாது.. என்ன சமூகத்துல "இவன் உறுப்புட மாட்டான்னு" சொல்லி சொல்லி கழுத்தருப்பானுங்க... 

என்னைப் பொறுத்தவரைக்கும் "நண்பன் அருகில் இருந்தால் காதல் தோல்வி கூட காமெடி ப்ரோக்ராம் தான்" சோ... உங்க நண்பர்கள என்னைக்குமே கைவிடாதீங்க...

எனக் கூறிக்கொண்டு இத்தோட என் கடைய சத்திக்கிறேன்...

நன்றி..
ஆயிரம் புன்னகைகளுடன்

பேஸ்புக்கில் tag செய்யப்பட்ட / comment செய்த status களிலிருந்து notification களைத் தடுக்க..

இது ஒரு சிம்பிள் வேலை.. பலருக்கு தெரிந்திருக்கும், சிலருக்கு தெரிந்திருக்காது...தெரியாதவர்களுக்கு தெரியப்படுத்துவதே என் நோக்கம்.....

சமூக வலைத்தளங்கள் என்றாலே பேஸ்புக் முக்கிய இடத்தை வகிக்கிறது. அப்படிப்பட்ட பேஸ்புக்கில் நண்பர்கள் லைக்களை அதிகமாகப் பெற tag செய்வார்கள். அப்படி செய்வதன் மூலம் அந்த புகைப்படத்திற்கு வரும் லைக்கள் , மற்றும் comments என்பன எமது notification ல் வந்து நின்று தொல்லை கொடுப்பது போல் அமையும். அதே போலத்தான் நாம் ஏதாவது status களுக்கு comment இட்டால்.. அதைத் தொடர்ந்து வரும் comment களும் notification ல் வரும்.

எனவே அப்படிப்பட்ட தொல்லையிலிருந்து விடு படத்தான் இந்தப் பதிவு...

இதோ இந்தப் படத்தைப் பார்த்தால் உங்களுக்கே விளங்கும்..

Status Notification இலிருந்து விடுபட....

நீங்கள் விடுபட விரும்பும் status ல் comment பட்டன்க்கு அடுத்தபடியாக இருக்கும் "Unfollow Post" ஐ click செய்யுங்கள்..

சரி...


போடோவிளிருந்து விடுபட... அதே போல "Unfollow Post" ஐ கொடுத்தால் சரி...


இதுக்குதான் பதிவு தொடங்கும் போதே சொன்னேன்.. உங்களுக்கு முதலே தெரிந்திருக்கும்.. தெரியாதவர்க்கு தெரியப்படுத்தத்தான்...

பதிவு பிடித்தால் நண்பர்களுடன் பகிர்ந்து உதவுங்கள்..

செவ்வாய், 3 டிசம்பர், 2013

இதுவரை காலங்களிலும் வந்த மிகக் கொடிய 5 கணணி வைரஸ்கள்.. - கட்டுரை வடிவில்

வைரஸ்கள் என்பதே மிகப் பெரிய ஓர் பிரச்சினையாக உள்ளது. இன்றைய பதிவில் இதுவரை காலங்களிலும் வந்த மிகக் கொடிய வைரஸ்கள் 5 பற்றி..
The Morris Worm or Internet worm என்ற வைரஸ் தான் முதன் முதலாக Robert Tappan Morris என்ற மாணவனால் உருவாக்கப்பட்டது கிட்டத்தட்ட 6௦௦௦ க்கும் மேற்பட்ட கணணிகளைத் தாக்கியதாக குறிப்பிடப்படுள்ளது.

கணணி என்பது நம் வாழ்வில் முக்கிய ஒரு சாதனமாகும்.. ஆனால் வைரஸ் தான் நமக்கு பெரிதும் பிரச்சினை கொடுப்பது. Internet security firm Norton ஒரு graph ஐ தயாரித்துள்ளது. அதில் மிக முக்கியமான மிகக் கொடூரமான அழிவை ஏற்படுத்திய வைரஸ்சுகள் 5 ஐ பற்றி வெளியிட்டுள்ளது.

அது பற்றித் தான் நாம் இன்று பார்க்க இருக்கிறோம்.


1. My Doom (2004)

My Doom என்ற vவைரஸ் 2004 ஆம் ஆண்டு தோற்றம் பெற்றது. இவ் வைரஸ் ஆனது மின்னஞ்சல்கள் மூலம் பரப்பப்பட்டது. ஒரு நபர் மின்னஞ்சலை வாசிக்க திறக்கும் போது தீங்கான சில code கள் தானாகவே download செய்யப்பட்டன. அது அந்த நபரின் outlook address ஐ திருடியதாம் எனப் பலர் கூறுகின்றனர்.

இந்த வைரஸ் மூலம் $38,000,000,000 மதிப்புள்ள data களும் 2,000,000 கணனிகள் பாதிக்கப்பட்டனவாம்.

2.Sogbig.F (2003)

இவ் வைரஸ் ஆனது 2௦௦3 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.  ஒரு தடவை மின்னஞ்சல் ஓபன் செய்யப்பட்டது சில infected files ஐ கணனியில் செலுத்தப்பட்டு வேறு மின்னஞ்சல்களைக் கண்டறிந்து அவற்றிற்கும் அனுப்புவிக்கப்படும் சக்தி வாய்ந்தது இவ் வைரஸ்.

இந்த வைரஸ் மூலம் $38,000,000,000 மதிப்புள்ள  data களும் 2,000,000 கணனிகள் பாதிக்கப்பட்டனவாம்.


3.I Love You (2000)

இது மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும் ஒரு வகை attachment file. இதன் தலைப்பு "I LOVE YOU" என்று தான் வருமாம். அதை open செய்யும் போது சில வைரஸ்களை கணனிக்கு செலுத்தப்பட்டு , கணனியில் சேமிக்கப்படும் internet password களை திருட பயன்படுத்தப்பட்ட வைரஸ்..

இந்த வைரஸ் மூலம் $15,000,000,000 மதிப்புள்ள data களும்  500,000 கணனிகள் பாதிக்கப்பட்டனவாம்.

4.Code Red (2001)

இவ் virus ஓர் Operating System ன் அழகைக் கெடுக்கின்ற அதாவது OS உருக்குலையும் வண்ணம் வேலை செய்யக்கூடியது. இது சில வலைத்தளங்களையும் access செய்ய விடாது பண்ணியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த வைரஸ் மூலம் $2,600,000,000 மதிப்புள்ள  data களும் 1,000,000 கணனிகள் பாதிக்கப்பட்டனவாம்.

5. Slammer (2003)

இவ் வைரஸ் எந்த file ஐ open செய்தாலும் மறுப்புத் தெரிவிக்கக் கூடிய ஒன்றாக வடிவமைக்கப்பட்டது. மேலும் இது இணைய வேகத்தை slow ஆக access செய்ய வைத்தது. இவ் virus ஆல் பீடிக்கப்பட்ட கணணியை பாவிக்கும் பலருக்கும் கோபம் தான் அதிகமாக ஏற்பட்டதாம்.

இந்த வைரஸ் மூலம் $1,200,000,000 மதிப்புள்ள  data களும்  200,000 கணனிகள் பாதிக்கப்பட்டனவாம்.

இவ் 5 வைரஸ்களும் எவ்வாறு பரவின என்பதை கீழே உள்ள போட்டோ மூலம் பாருங்கள்...

நண்பர்களுடனும் பகிர்ந்து உதவுங்கள்..

இது போன்ற பல சுவாரஸ்சிய தொழிநுட்ப தகவல்களுக்கு என்னுடன் இணைந்திருங்க...

திங்கள், 2 டிசம்பர், 2013

இணைய செயற்பாடுகளை கூகிள் trace செய்வதிலிருந்து தப்பிப்பது எப்படி?

வணக்கம் நண்பர்களே...!!! இன்றைய இணைய உலகில் கூகிள் சிறந்த தேடுபொறியாக காணப்படுகிறது. அதே வேளையில் நாம் இணையத்தில் செய்கின்ற தில்லுமுல்லுக்களையும் கண்காணித்து வருகிறது.

Web browser ல் history யை அழிப்பதனால் உங்கள் சொந்தக் காரர்கள் நண்பர்களிடமிருந்து நீங்கள் செய்தவற்றை அழிக்கலாம். ஆனால் கூகுளில் அப்படி செய்யமுடியாத நிலை காணப்பட்டது. நீங்கள் என்ன செய்தாலும் அந்த விடயங்கள் பதியப்படும். எனவே, கூகிள் எம்மை trace செய்வதிலிருந்து தப்பிக்க ஒரு வழி..

https://history.google.com/history/

இங்கே செல்லுங்கள்..

இனி இங்கே நீங்கள் பார்த்த histoy அனைத்தும் உண்டு..

அவற்றை அழிக்க “Remove All Web History” என்பதை click செய்யுங்கள். 
அவளவு தான் இனி உங்கள் செயற்பாடுகளை கூகிளால் trace செய்ய முடியாது...

பதிவு பயனுள்ளதாக இருந்தால் நண்பர்களுடனும் பகிருங்கள்...

ஞாயிறு, 1 டிசம்பர், 2013

உலகில் வியக்கவைக்கு 10 நீர்வீழ்ச்சிகள்

இவ் உலகில் பல வியத்தகு தரைத்தோற்றங்கள் காணப்படுகிறது. அந்த வகையில் நீர்வீழ்ச்சி என்பது இயற்கை தரைத்தோற்றத்துள் அடங்குகிறது. உலகில் வியக்கவைக்கும் 1௦ நீர்வீழ்ச்சிகள் பற்றி ஒரு சிறு பார்வை பார்க்கலாம் என இப் பதிவை எழுதுகிறேன்.

1.Iguazu  நீர்வீழ்ச்சி.

இது ஓர் உலகத்தின் இயற்கைப் படைப்புகளுள் ஒன்றாக அமைகிறது. இவ் நீர்வீழ்ச்சி "பிரேசிலுக்கு ஆர்ஜெண்டீனாவுக்கும்"
எல்லையில் அமைந்துள்ளது.


2.விக்டோரியா நீர்வீழ்ச்சி


இவ் நீர்வீழ்ச்சியை உலகில் விக்டோரியா நீர்வீழ்ச்சி என அழைக்கிறார்கள்.

இதனை உள்நாட்டில் Mosi-oa-Tunya என அழைக்கிறார்களாம். அதாவது "The Smoke That Thunders" எனப் பொருள்படுமாம். இது ஜிம்பாப்வே சாம்பியா நாடுகளின் எல்லையில் அமைந்துள்ளது.

3.நயகரா நீர்வீழ்ச்சி


இவ் நீர்வீழ்ச்சி பற்றி அறியாத ஆட்களே இருக்க மாட்டார்கள். உலகின் மிக்க முக்கிய நகரமாக இது விளங்குகிறது. இரண்டு முக்கிய நகரங்களுக்கு எல்லையாக அமைகிறது. "நியூயார்க் மற்றும் ஒண்டாரியோ"


4.ஏஞ்சல் நீர்வீழ்ச்சி
                                            
இவ் நீர்வீழ்ச்சியை Angel Falls or Salto Ángel என அழைக்கப்படுகிறது. இது தான் உலகின் மிக உயர்ந்த நீர்வீழ்ச்சி.978m உயரமானது. இது வெனிசுலா நாட்டில் அமைந்துள்ளது.


5.Kaieteur நீர்வீழ்ச்சி

இவ் நீர்வீழ்ச்சியானது குயான என்ற நாட்டில் அமைந்துள்ளது. இது ஒரு சக்திவாய்ந்த நீர்வீழ்ச்சி. 663 cubic meters per second  என்றால் பாருங்கள் எப்படி நீர் கொட்டும் என்று..


6.நீல நைல் நீர் வீழ்ச்சி (Blue Nile Falls)


இவ் நீர்வீழ்ச்சி எதியோப்பியாவின் வட பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் பெயர் Tis Issat (“smoking water”) என அழைக்கிறார்கள்.


7.Detian நீர்வீழ்ச்சி

இவ் நீர்வீழ்ச்சி "சீனா வியாட்நாம் நாட்டின் எல்லையில் அமைந்துள்ளது. இதுதான் நான்காவது மிகப்பெரிய எல்லைகளைப் பிரிக்கும் நீர்வீழ்ச்சியாக அமைகிறது.


8.Gullfoss நீர்வீழ்ச்சி
                                                   

இவ் நீர்வீழ்ச்சி சிறந்த சுற்றுலா பயணிகள் விரும்பும் நீர்வீழ்ச்சியாக அமைகிறது.


9.Huangguoshu நீர்வீழ்ச்சி
                                                       
இவ் நீர்வீழ்ச்சி சீனாவில் அமைந்துள்ளது. 78m உயரமும் 1௦1m அகலமும் கொண்ட ஆசியாவில் பெரிய நீர்வீல்ச்சிகளுள் ஒன்றாகக் காணப்படுகிறது..


10.Jog நீர்வீழ்ச்சி
                                            
இவ் நீர்வீழ்ச்சியானது சாராவதி என்ற நதி மூலம் உருவாகிறது. இது தான் இந்தியாவில் உயரமான நீர்வீழ்ச்சியாகக் காணப்படுகிறது. இதன் உயரம் 253m ஆகும். கோடை கலங்களின் போது சிறிய ஓடையாகத்தான் நீர் கீழே விழும்...
இது இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ளது..


இவை பொதுவாக நான் அறிந்த நீர்வீழ்ச்சிகளின் தொகுப்பு. தெரிந்த விடயங்களை உங்களுடன் பகிர்ந்தேன்.

உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்து உதவி செய்யுங்கள்..

நன்றி

Android Tablet க்கும் Windows Tablet க்கும் இடையிலான வித்தியாசம் - பயன் மிக்க பதிவு

Android Tablet க்கும் Windows Tablet க்கும் இடையிலான வித்தியாசங்கள் பல உள்ளன. நிச்சயமாக அவற்றின் பயன்பாடு, மற்றும் அவை பற்றிய அறிவும் வேண்டும்.

நீங்கள் பாடல்கள் கேட்க , high quality videos பார்க்க மற்றும் பல விதமான entertaining வேலைகளில் ஈடுபட சிறந்த device தேவை... அதட்காக Android Tablet PC கள் பெரிதும் உதவும்.  மேலும் இவ் Android Tablet PC ஆனது பலதரப்பட்ட apps ஐ இலகுவான முறையில் கையாளக்கூடிய வகையிலும் அமைக்கப்பட்டவையாகும்.

மேலும், Windows Tablet PC யில் நீங்கள் உங்கள் office வேலைகளை மேற்கொள்ள சிறந்த முறையில் பாதுகாப்புக் கூடிய வகையில் அமைக்கப்பட்டது. இவ் PC பல business man களால் அதிகளவில் பாவிக்கப்படுகிறது. காரணம் business சார்ந்த apps க்கு இவ் PC support செய்யும்.

இரண்டு Tablet PC களுமே வெவேறு Operating System களைக் கொண்டது. நீண்ட காலத்துக்குப் பின் Android Operating System ஆனது Android Tablet PC யில் உருவெடுத்துள்ளது. Windows Tablet ல் Windows 8 காணப்படுகிறது. Windows 8 தான் தற்போதைய தொழிநுட்ப தொழிற்சாலையில் காணப்படும் சிறந்த Operating System. இரண்டு OS க்குமே சந்தையில் போதிய வரவேற்பு இருக்கிறது.

வாருங்கள் இனிப் பார்க்கலாம் Operating System தவிர்ந்த ஏனைய வேறுபாடுகளை....

Android & Windows Tablets க்கு இடையிலான இடைமுக (Interface) வேறுபாடுகள்.




Windows Tablet PC யின் இடைமுகத்தைப் பொறுத்தவரையில் சிறந்த அனிமேஷன் செய்யப்பட்ட திரையைக் கொண்டமைந்தது. காலநிலைக்கு ஏற்ப தொளிட்படக்கூடிய தொழிநுட்பத்தில் அமைந்தது.

Android ஐ பொறுத்தவரையில்  Ice Cream sandwich போன்ற version கள் சிறந்தமுறையில் வடிவமைக்கப்பட்டுள்ளதால் உலக மக்களின் வரவேற்பைப் பெரிதும் பெற்றுள்ளது. சிறந்த தொழிநுட்ப உக்திகள் கையாளப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

எதுவாக இருப்பினும், Windows Tablet ன் சிறந்த apps பல புதிய வாடிக்கையாளர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. காரணம் உலக சந்தையை Windows நிறுவனமானது அதன் உற்பத்திப் பொருட்கள் மூலம் கட்டுப்படுத்தி வைத்துள்ளது. Android வாடிக்கையாளர்கள் பெருமளவில் Ice cream , sandwich version களைப் பெரிதும் விரும்புகிறார்கள்.

Operating System களின் Support

Windows 8 apps ஆனது x86 processors and ARM microprocessor களுக்கு support செய்யக்கூடியது. எனவே, பல கம்ப்யூட்டர்களிலும் , Tablets இலும் install செய்யக்கூடியதாக இவ் OS அமைகிறது.

Android 4.0 version வெளிவந்த போது அனைவரும் இத் தொழிநுட்பம் பற்றி பெருமையாக பேசினர் அதாவது Tablets மற்றும் Smart Phone களுக்கு best என..
மேலும் அதற்கு முன் இருந்த iOS தொழிநுட்பம் சிறந்த முறையில் வடிவமைக்கப்பட்ட போதிலும் பெரிதாக எவராலும் கவரப்படவில்லை.

அதனால் Google தன் Android ஐ சந்தைப்படுத்தி பெரிய வரவேற்பு பெற்றுக்கொண்டிருந்தது. இடையில் Windows 8 அதன் தோற்றத்தைக் காட்ட PC ,Laptop , Tablet போன்ற அனைத்துத் சாதனங்களிலும் இது boot செய்யப்பட்டது.

Application களின் தரமும், அவற்றின் கிடைத்தற் தன்மை



Android ஐ பொறுத்தவரையில் பல காலமாக இருப்பதால் app store ஆக Google Play Store காணப்படுகிறது. இதன்மூலம் பல பயனர்கள் apps ஐ தரவிறக்கிப் பயனடைகிறார்கள்.

ஆனால் Windows ஆனது புதிய OS என்பதால் Microsoft நிறுவனமானது மேலும் சில apps களை உருவாக்கவேண்டிய தேவை உள்ளது. நீண்ட நாட்கள் எடுக்கக்கூடிய வாய்ப்புக்களும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விலை வேறுபாடுகள்...

Android ஐ பொறுத்தவரையில் நீண்ட காலமாக field ல் இருப்பதால் ஓரளவுக்கு விட்பனயாகக் கூடிய வகையில் அதன் லாப, நட்டத்திட்கேட்ப விலைகளைத் தீர்மானித்து வருகிறது.

Windows ஆனது புதிய OS காரணமாக மேலும் சில திருத்தல் வேலைகள் இருக்கின்ற காரணம் என்பவற்றால் உறுதியான ஓர் விலை இருக்காது. மேலும் உலக சந்தையில் பலரை கவர பல முயற்சிகளையும் மேட்கொண்டுவருகிறது.

சந்தை வாய்ப்பு..


Android நிறுவனம் உலக சந்தையில் நீண்ட காலம் இருப்பதன் காரணமாக பலர் அறிந்த ஒன்றாகக் காணப்படுகிறது. அந்த வகையில் Android தொழிநுட்பம் மொபைல் போன் களிலும் காணப்படல் என்பவற்றின் காரணமாக அதன் திறன் பலரால் அறியப்பட்டு Android என்றால் சிறந்தது என கூறி வாங்குகிறார்கள்.

ஆனால்,Windows புதியது மேலும் இது கணணி சம்மந்தப்பட்ட Windows என்பதால் சந்தை வாய்ப்பு ஓரளவுக்கு சிறப்பாக இடம்பெறுகிறது.

முடிவுரை :  Android பல வாடிக்கயாலர்களைக் கவர்ந்துள்ளமை மற்றும் மொபைல் தொழிநுட்பத்தில் கொடி கட்டிப் பறக்கும் ஓர் நிறுவனம் என்பதால் அதன் தன்மையும் , உறுதியும் பல மக்களால் போற்றப்படுகிறது.

அதேவேளையில், Windows உம் Android தொழினுட்பத்தை மிஞ்சும் அளவுக்கும் சில apps களை இன்றைய நாட்களில் உருவாக்கி வருகிறது. இரண்டுமே சிறந்த திறன்களைக் கொண்டவை தான் என்பதைக் கூறி விடைபெறுகிறேன்.

பதிவு பெரிதாகி விட்டது போல... மன்னித்துவிடுங்கள்....!!!

நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்....
நன்றி 

சனி, 30 நவம்பர், 2013

Facebook ல் automatic ஆக குறித்த நேரத்தில் logout செய்ய...

வணக்கம் நண்பர்களே...!! எந்த account ஆக இருந்தாலும் நான் log out பண்ணிடுவேன். ஆனா பேஸ்புக் பாவித்த பின் log out செய்வது தான் எனக்குப் பெரிதும் பிரச்சினை. அட.. என்னங்க பேஸ்புக் லையே மூழ்கிவிடுவோம்ல.... அதுக்குத் தாங்க ஒரு extension வெளியிடப்பட்டுள்ளது... Google Chrome இலும், Firefox இலும்.

அந்த extension ஐ நீங்கள் நிறுவிய பின் நீங்கள் எவளவு நேரத்தில் பேஸ்புக்கை log out செய்யப்போகிறீர்கள் என நீங்கள் விரும்புகிறீர்களோ அதைக் கொடுத்தால் சரி... குறிப்பிட்ட நேரத்தில் தானாகவே log out ஆகிவிடும்...

extension கள்..

Google Chrome - Facebook Auto Log Out

இதை நிறுவிய பின் இவ் வீடியோவைப் பாருங்கள்//

Post by பரதன் வலைத்தளம்.

எப்படி நண்பர்களே...!! நன்றாக இருந்ததா...?? நண்பர்களுடன் share செய்து உதவுங்கள்...

பேஸ்புக்கில் என்னுடன் இணைய..

வியாழன், 28 நவம்பர், 2013

போட்டோகளை வரைந்த படமாகவும், கார்ட்டூன் படங்களாகவும் மாற்ற ஓர் மென்பொருள்...!!

வணக்கம் நண்பர்களே..!! இன்று பல ஓவியர்கள் படம் வரைகிறார்கள். ஆனால் பலருக்கு நம்மை வரைந்து ஒருநாளாவது பார்க்க வேண்டும் என்ற விருப்பம் இருக்கும்... அப்படி வரைய முடியாதவர்களுக்கு ஒரு நல்லா மென்பொருள் அதாவது நீங்கள் கணனியில் வைத்திருக்கும் போட்டோவை வரைந்த படமாகவோ, கார்ட்டூன் படங்களாகவோ மாற்ற இவ் மென்பொருள் சிறந்தது.

இவ் மென்பொருளின் சிறப்பம்சம் என்றால்...

Cartoon , black & white, Neon, Different Sketches, Oil Painting, Hatching, Pencil drawing,Stamp and Photocopy.


போன்ற நிறங்களில் கலரை மாற்ற முடியும்... 

அதுமட்டுமில்லாமல் இவ் மென்பொருள் iphone, mac , windows , linux போன்ற OS களுக்கும் சப்போர்ட் பண்ணும்.


மேலும் சுவாரஸ்சிய பல தகவல்கள் உங்களுக்காக...

திங்கள், 25 நவம்பர், 2013

லேப்டாப் over-heat ஆகுதா..? சில டிப்ஸ்

வணக்கம் நண்பர்களே..!! இன்றைய காலத்தில் லேப்டாப் களின் பாவனையாளர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டு இருக்கிறது. அந்த வகையில் 9௦% மேற்பட்ட பயனர்கள் சந்திக்கும் மிகப் பெரிய பிரச்சினை லேப்டாப் over-heat ஆகுவது. இங்கே நான் சில டிப்ஸ் களை தர இருக்கிறேன். முடிந்தவரை லேப்டாப் over-heat ஆகுவதைத் தடுப்பது பற்றி..

Power Setting : பல லேப்டாப் பயனர்கள் தமது Power Setting ல் High Performance என செட் செய்திருப்பார்கள். உண்மையில் High Performance ல் விட்டால் லேப்டாப் ற்கு கிடைக்கும் மின் அதிகமாக வரும் இதனால் லேப்டாப் சூடாகும்.

இதனை சரி செய்ய உங்கள் power setting ல் Power Saver ModeOn செய்து பாவனை செய்யுங்கள்...

அழுத்தக் காற்று (compressed air) : நீங்கள் லேப்டாப் பாவனை செய்யும் போது DUST ஆன இடங்களில் பாவிக்கவேண்டிய நிலை ஏற்படலாம்.. இதனால் dust துணிக்கைகள் உங்கள் லேப்டாப் ல் படியலாம்... அதனை அகற்றுவதற்காக கணனியின் fan வேகமாக சுற்றும் போது அதிக வெப்பம் வெளிவிடப்படும் அதனால் சூடு அதிகரிக்கும்.. எனவே Compressed Air ஐ இடையிடையே லேப்டாப் ற்கு அடியுங்கள் அப்போது உங்கள் லேப்டாப் ல் படிந்த தூசிகள் அகற்றப்படும்...

மேல்தளம் (surface) : பலர் தமக்கு விரும்பியவாறு blanket , கட்டில் போன்ற இடங்களில் வைத்துப் பாவிப்பார்கள் , அப்படிப் பாவிக்கும் போது அப்படிப்பட்ட மேல்தளங்கள் heat ஐ போகவிடாது மீண்டும் லேப்டாப் உள்ளேயே தள்ளுகிறது.
எனவே, இப் பிரச்சினையை நிறைவேற்ற தட்டையான மேல்தளங்களில் பாவிக்கவும்.

உதாரணமாக மேசை...

Cool Pad : நண்பர்களே.. இது தான் பொதுவாகப் பலரால் பாவிக்கப்படும் உபகரணம். என்ன..?? வாங்க கொஞ்சம் சிலவாகும் ஆனால் பயனுள்ளது. இதைப் பாவிப்பது உங்களுக்கு over-heat ஆவதைக் குறைக்கலாம்.

தேவையற்ற நேரங்களில் லப்டொப்பை off செய்தல் வேண்டும். Hibernate பண்ணி வைப்பதை விட தேவையற்ற நேரங்களில் stand by ல் விடாமல் shut down செய்வது நல்லது..

எனவே, இது அடிப்படையான ஒரு விடயம் நீங்களும் இவற்றை வாசித்து பயன் பெற்றால் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்...

பேஸ்புக்கில் இணைய..

ஞாயிறு, 24 நவம்பர், 2013

HTML கற்போம் பகுதி- 8

வணக்கம் நண்பர்களே...!! கடந்த பதிவில் table அமைப்பது பற்றிய அடிப்படை பார்த்தோம். இன்றைய பதிவில் table அமைப்பது பற்றி சற்று விரிவாகப் பார்போம்..
அதாவது

Cell 1
Cell 2 Cell 3 Cell 4

இதில் நீங்கள் பார்ப்பதாவது Cell 1 என்பது 3 row ஐ பிடித்திருக்கிறது... இப்படியாக ஒரு table ஐ அமைப்பதற்கான HTML code இதுதான்...

<table border="1">
 <tr>
<td colspan="3">Cell 1</td>
 </tr>
 <tr>
<td>Cell 2</td>
<td>Cell 3</td>
<td>Cell 4</td>
 </tr>
</table>

<table border="1"> இங்கே நீங்கள் விரும்பிய அளவுக்கு border அகலத்தைக் 
கூட்டலாம்..
'colspan=' என்பது குறிப்பது ; 

நீங்கள் எத்தனை row ஐ column க்கு ஒதுக்கப்போகீறீர்கள் என்பதாகும்.. உதாரணமாக..
Cell 1
Cell 2Cell 3Cell 4Cell 5Cell 6Cell 7Cell 9


இப்போது அவதானித்திருப்பீர்கள் மேலே உருவாக்கப்பட்ட table க்கான code இதோ..


 <table border="1">
   <tr>
     <td colspan="5">Cell 1</td>
   </tr>
   <tr>

     <td>Cell 2</td>
     <td>Cell 3</td>
     <td>Cell 4</td>
            <td>Cell 5</td>
     <td>Cell 6</td>
             <td>Cell 7</td>
            <td>Cell 9</td>
</tr> </table>
'colspan='இப்போது பார்தீர்களா? 
try செய்து பாருங்கள்..

அடுத்து, இந்த code ஐ பார்க்கவும்..

<table border="1">
   <tr>
     <td rowspan="3">Cell 1</td>
     <td>Cell 2</td>
   </tr>
   <tr>
     <td>Cell 3</td>
   </tr>
   <tr>
     <td>Cell 4</td>
   </tr>
 </table>

<table border="1"> 

இங்கே நீங்கள் விரும்பிய அளவுக்கு border அகலத்தைக் கூட்டலாம் 


rowspan= 

இதில் நீங்கள் ஒரு column ல் எவ்வளவு row அடங்கவேண்டும் என்பதைக் 
குறிக்கும்...
உங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு மாற்றலாம்...
மேலே உள்ள code ற்கான வருவிளைவு இதோ...
Cell 1 Cell 2
Cell 3
Cell 4

<table border="1">
   <tr> 
          <td rowspan="5">Cell 1</td>
     <td>Cell 2</td>
   </tr>
   <tr>
     <td>Cell 3</td>
   </tr>
   <tr>
     <td>Cell 4</td>
   </tr>
 </table>

இந்தக் code ற்கான வருவிளைவு....


<rowspan="5" என்பதிலிருந்து உங்களுக்குப் புரிந்திருக்கும் இங்கே ஒரு cell 5 column க்கு 
சமானாக வர இருக்கிறது என.... எங்கே பார்போம்..




Cell 1 Cell 2
Cell 3
Cell 4

பார்த்தீர்களா.....??? எப்படி இருக்கிறது... try செய்து உங்கள் கருத்துகளைக் கீழே இடுங்கள்..


பேஸ்புக்கில் என்னுடன் இணைய...

வியாழன், 21 நவம்பர், 2013

பேஸ்புக் ஏன் "நீல" நிறமாக இருக்கிறது...??

பேஸ்புக் நீங்கள் கணக்கு ஆரம்பித்த ஆண்டு முதலே நீல நிறமாக இருக்குமென நீங்கள் நினைப்பீர்கள் ஆனால் உண்மையில் பேஸ்புக் 2௦௦4 ஆம் ஆண்டு ஆரம்பிக்க்கப்பட்ட போது நீல நிறமாகத் தான் இருந்தது.

இதோ ஆரம்பிக்கப்பட்ட போது இருந்த பேஸ்புக்கின் தோற்றம்...

உங்களுக்குத் தெரியுமா...?? 

பேஸ்புக்கின் முந்திய  பழைய அதாவது ஆரம்பிக்கப்பட்ட போது இருந்த URL thefacebook.com

ஆரம்பித்த காலத்தில் நாம் கணக்கு ஆரம்பிக்க நீங்கள் மின்னஞ்சல் .edu என இருந்தால் தான் ஆரம்பிக்க முடியுமாம்...

நோட் பண்ணி வையுங்க உதவியா இருக்கும்....  :p


சரி பேஸ்புக் நீலமாக இருப்பதற்குக் காரணம் Mark Zuckerberg பேஸ்புக் owner
நீலம் என்பது பிடித்த நிறமாம்... என ஒரு செவ்வியில் குறிப்பிட்டிருந்தார்...

இன்னுமொரு வர்த்தக நோக்கமாக நீலம் என்பது transparent background ஆக வேலை செய்யக்கூடியது... அதை விட பல மக்களையும் கவரக் கூடிய நிறமாம் எனப் பலர் கூறுகிறார்கள்...

நீல நிறமானது webmaster களின் விருப்பமான ஒரு நிறமாக இருந்ததென கூறப்படுகிறது.. (பேஸ்புக் ஆரம்பிக்கும் போது...)

எனக்கு நீலம் பிடிக்கும்.... உங்களுக்கு எந்த கலர் பிடிக்கும்னு சொல்லுங்க கீழே comment ல.......

பேஸ்புக்கில் என்னுடன் இணைய...

ஞாயிறு, 17 நவம்பர், 2013

சிறந்த 5 இலவச anti-virus மென்பொருள்கள்.. (அனைவருக்கும் உதவும் )

வணக்கம் நண்பர்களே! இன்று சிறந்த 5 இலவச மென்பொருள்கள் பற்றி பார்க்கப்போகிறோம். இன்றைய கணணி உலகில் வைரஸ்களின் ராச்சியம் அதிகரித்துவிட்டது. எனவே, அப்படியான வைரஸ்களை அழிப்பதற்கு உருவாக்கப்பட்ட மென்பொருள்கள் Anti-virus மென்பொருள்களாகும்.

ஏற்கனவே, பதிவு ஒன்று எழுதியிருக்கிறேன்.. ஏன் Antivirus ஐ update செய்யவேண்டும் என.. இதனை வாசிக்கவும்..

சரி இப்போது அப்படிப்பட்ட மென்பொருள்களுள் சிறந்த 5 மென்பொருள்களை உங்களுக்காக அறியத்தருகிறேன்..

1. Microsoft security essentials

இவ் மென்பொருளானது மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஒரு Antivirus ஆகும். இதன் மூலம் உங்கள் கணனிக்கு ஓர் சிறந்த காவலாளியாக இருக்கும். virusகளிடமிருந்து உங்கள் கணனிக்குப் பாதுகாப்பு அழிக்கும்.

  • இலவச மென்பொருள்
  • Automatic Update ஆகஇருக்கும்.. ( இவ் வசதி உங்கள் கணணி Genuine ஆகாது இருந்தால் மட்டுமே வேலை செய்யும்..)
  • மைக்ரோசாப்ட் நிறுவன தளத்திலிருந்து உத்தியோக பூர்வமாகத் தரவிறக்கலாம்...
  • இன்ஸ்டால் செய்வது சுலபம்..
  • கையாள்வது சுலபம்
  • கணணியை slow ஆனதாக மாற்றாது...

2.Avast

பல மக்களால் பொதுவாகப் பாவனை செய்யும் மென்பொருள். இதன் மூலம் virus களை கண்டறிய உதவும் ஆனால் சில virus களை அழிப்பது என்பது இவ் மென்பொருளால் முடியாது. 


இம் மென்பொருளில் பல விதமாக ஸ்கேன் செய்யும் வசதி உள்ளது..

உதாரணமாக : Quick Scan”, “Full System Scan”, “Removable Media Scan” and “Select folder to scan”.

உங்கள் இருக்கும் பல  apps களை ஓட வைப்பதட்க்குப் பல program களை run செய்கிறது..

File System Shield, Mail Shield, Web Shield, P2P Shield , IM Shield, Network Shield, Script Shield and Behavior Shield

3. Avira

இது ஓர் சிறந்த antivirus மென்பொருளாகத் திகழ்கிறது.
  • இலவச anti-virus
  • உங்கள் கணணியை slow செய்யாமல் சிறப்பாக வேலை செய்யும்
  • உங்கள் கணனிக்கு சிறந்த பாதுகாப்பை வழங்கும்.

4. AVG Free Edition

AVG Antivirus கணனிகளுக்கு சிறந்த பாதுகாப்பை வழங்கும் மென்பொருளாகத் திகழ்கிறது.

இவ் மென்பொருள் காசு காட்டி பாவிக்கும் மென்பொருளாகவும், free மென்பொருளாகவும் இருக்கிறது.

Free மென்பொருள் என்பதால் சில நன்மைகள் கிடைக்காது. 


எங்க போனாலும் துட்டு தான்.... என்னா வாழ்க்கடா....!!!!

சிறந்த பயனர் இடைமுக டிசைன் ஐ கொண்டது. அனைத்துவிதமான ஸ்கேன் களையும் மேட்கொள்ளலாம். உடனுக்குடன் ஸ்கேன் ரிப்போர்ட் களை தரக்கூடிய திறமை வாய்ந்தது. 



இவற்றை விட மேலும் சில anti-virus மென்பொருள்கள்.

PC tools antivirus
Comodo
Panda cloud antivirus
Immunet protect free

இந்த மென்பொருள்கள் பெரிய அளவில் பாவனை செய்யப்படுத்தப்படுவதில்லை. எனவே , அவற்றின் பெயர்களையும் , டவுன்லோட் லிங்க் ஐயும் தந்திருக்கிறேன்.. முடியுமானால் பயன்படுத்திப் பார்த்து கீழே உங்கள் கருத்துகளைக் கூறுங்கள்....

>>> Facebook Page பக்கத்தில் Like பண்ணாதவர்கள் லைக் செய்திடுங்கள்.
நன்றி...
பரதன்