இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 20 டிசம்பர், 2013

என்றென்றும் புன்னகை - திரை விமர்சனம்

அஹமத்தின் இயக்கத்தில் ஜீவா,த்ரிஷா, சந்தானம், அண்ட்ரியா, நாசார் போன்றோரின் நடிப்பில் சிறந்த திரைப்படமாக (எனது பார்வையில்) கருதும் அளவிற்க்கு இருந்தது..

கதை..

ஜீவாவிற்கு சிறு வயதிலிருந்தே பெண்கள் என்றால் வெறுப்பு காரணம் அவரது அம்மா தந்தையா நாசாரை ஏமாற்றி விட்டு ஓடிவிட்டார்.. மேலும் ஜீவாவை சந்தோஷப்படுத்த சென்னைக்கு கூட்டிச் செல்கிறார் அங்கு கல்வியைத் தொடரும் போது தான் வினய், சந்தனத்துடன் நட்புக் கொள்கிறார்.

இவர்கள் மூவரின் பலவித குறும்புகள் சேட்டைகள் என படம் செல்கிறது.

  மூவரும் ஒரு சத்தியம் எடுக்கிறார்கள் "நம் நட்பைப் பிரிக்கின்ற கல்யாணத்தை நாம் பண்ணக்கூடாது..."

ஜீவா, வினய்,சந்தானம் மூவரும் விளம்பரங்களை இயக்கம் தொழிலில் ஈடுபடுகிறார்கள். இவர்களுக்கு விளம்பரங்களை order பண்ணும் கம்பனி யிலிருந்து இவர்களைக் கண்காணித்து இவர்களுக்கு உதவுவதற்கு த்ரிஷா வருகிறார்.

பின்னர், வினய், சந்தானம் இருவரும் ஜீவாவை விட்டுவிட்டு கல்யாணம் செய்கிறார்கள். இதனால் மனமுடைகிறார் ஜீவா.

பின், ஜீவாவிற்கும், த்ரிஷாவுக்கும் முதலில் நட்பு ஆரம்பித்துப் படிப்படியாகக் காதல் மலர்கிறது பின்னர் அவர்கள் இருவரும் இணைந்தார்களா?? இல்லையா??

3 நண்பர்களும் மறுபடி ஒன்ரினைந்தார்களா? என்பது மீதிக் கதை..

பல நாட்களுக்குப் பின் மறுபடி த்ரிஷாவை திரையில் பார்ப்பதில் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

 த்ரிஷாவின் introduction ஆரம்பித்திலிருந்து த்ரிஷாவிடமே என் கண்கள் சென்றன....

ப்பா...அவளவு அழகாக இருந்தாங்க...

நண்பர்களின் portion முழுவதுமாக ஒரே காமெடி தான்... ரசிக்கும்படியாக அமைந்தது.

 சந்தானம் இங்கும் அவர் காமெடி திறமையைக் காட்டியிருக்கிறார்... ஆனால் கொஞ்சம் over ஆக comedy பண்ணிருக்காரு...

மாடல் அழகியாக வரும் அண்ட்ரியா தோன்றும் பகுதிகள் குறைவாக இருந்தாலும் தியேட்டரில் ஒரே கிளுகிளுப்பாக அமைந்தது. 
அட அழக ரசிக்கனும்ல..

Background Music உம் பாடல்களும் எனக்குப் பிடித்திருந்தது..

படத்தில் குறைகள் என பெரிதாக சொல்ல முடியவில்லை... 1 st half கொஞ்சம் அதிக நேரமாக இருந்தது , விறுவிறுப்பாக செல்லவில்லை என்பதும்... இரண்டாம் பாதியில் இயக்குனர் ஓரளவுக்கு விறுவிறுப்பாக கொண்டு சென்று இறுதியில் ஒரு twist வைத்துள்ளார்..

மேலும், இந்தப் படத்தின் முக்கிய கருத்தானது "ஒவ்வொரு பிரச்சினைகளுக்கும் மனிதனின் ஈகோ தான் காரணம்" - டைரேக்டோருக்கு ஒரு ஸ்மால் சலுட்

படம் அனைவரும் பார்த்து ரசிக்கலாம்...
 ( நான் த்ரிஷாவுக்காகப் பார்த்தேன்)

படத்திற்கு எனது Rating:       72/ 100

2 கருத்துகள்: