இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 25 நவம்பர், 2013

லேப்டாப் over-heat ஆகுதா..? சில டிப்ஸ்

வணக்கம் நண்பர்களே..!! இன்றைய காலத்தில் லேப்டாப் களின் பாவனையாளர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டு இருக்கிறது. அந்த வகையில் 9௦% மேற்பட்ட பயனர்கள் சந்திக்கும் மிகப் பெரிய பிரச்சினை லேப்டாப் over-heat ஆகுவது. இங்கே நான் சில டிப்ஸ் களை தர இருக்கிறேன். முடிந்தவரை லேப்டாப் over-heat ஆகுவதைத் தடுப்பது பற்றி..

Power Setting : பல லேப்டாப் பயனர்கள் தமது Power Setting ல் High Performance என செட் செய்திருப்பார்கள். உண்மையில் High Performance ல் விட்டால் லேப்டாப் ற்கு கிடைக்கும் மின் அதிகமாக வரும் இதனால் லேப்டாப் சூடாகும்.

இதனை சரி செய்ய உங்கள் power setting ல் Power Saver ModeOn செய்து பாவனை செய்யுங்கள்...

அழுத்தக் காற்று (compressed air) : நீங்கள் லேப்டாப் பாவனை செய்யும் போது DUST ஆன இடங்களில் பாவிக்கவேண்டிய நிலை ஏற்படலாம்.. இதனால் dust துணிக்கைகள் உங்கள் லேப்டாப் ல் படியலாம்... அதனை அகற்றுவதற்காக கணனியின் fan வேகமாக சுற்றும் போது அதிக வெப்பம் வெளிவிடப்படும் அதனால் சூடு அதிகரிக்கும்.. எனவே Compressed Air ஐ இடையிடையே லேப்டாப் ற்கு அடியுங்கள் அப்போது உங்கள் லேப்டாப் ல் படிந்த தூசிகள் அகற்றப்படும்...

மேல்தளம் (surface) : பலர் தமக்கு விரும்பியவாறு blanket , கட்டில் போன்ற இடங்களில் வைத்துப் பாவிப்பார்கள் , அப்படிப் பாவிக்கும் போது அப்படிப்பட்ட மேல்தளங்கள் heat ஐ போகவிடாது மீண்டும் லேப்டாப் உள்ளேயே தள்ளுகிறது.
எனவே, இப் பிரச்சினையை நிறைவேற்ற தட்டையான மேல்தளங்களில் பாவிக்கவும்.

உதாரணமாக மேசை...

Cool Pad : நண்பர்களே.. இது தான் பொதுவாகப் பலரால் பாவிக்கப்படும் உபகரணம். என்ன..?? வாங்க கொஞ்சம் சிலவாகும் ஆனால் பயனுள்ளது. இதைப் பாவிப்பது உங்களுக்கு over-heat ஆவதைக் குறைக்கலாம்.

தேவையற்ற நேரங்களில் லப்டொப்பை off செய்தல் வேண்டும். Hibernate பண்ணி வைப்பதை விட தேவையற்ற நேரங்களில் stand by ல் விடாமல் shut down செய்வது நல்லது..

எனவே, இது அடிப்படையான ஒரு விடயம் நீங்களும் இவற்றை வாசித்து பயன் பெற்றால் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்...

பேஸ்புக்கில் இணைய..

1 கருத்து: