இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 1 டிசம்பர், 2013

Android Tablet க்கும் Windows Tablet க்கும் இடையிலான வித்தியாசம் - பயன் மிக்க பதிவு

Android Tablet க்கும் Windows Tablet க்கும் இடையிலான வித்தியாசங்கள் பல உள்ளன. நிச்சயமாக அவற்றின் பயன்பாடு, மற்றும் அவை பற்றிய அறிவும் வேண்டும்.

நீங்கள் பாடல்கள் கேட்க , high quality videos பார்க்க மற்றும் பல விதமான entertaining வேலைகளில் ஈடுபட சிறந்த device தேவை... அதட்காக Android Tablet PC கள் பெரிதும் உதவும்.  மேலும் இவ் Android Tablet PC ஆனது பலதரப்பட்ட apps ஐ இலகுவான முறையில் கையாளக்கூடிய வகையிலும் அமைக்கப்பட்டவையாகும்.

மேலும், Windows Tablet PC யில் நீங்கள் உங்கள் office வேலைகளை மேற்கொள்ள சிறந்த முறையில் பாதுகாப்புக் கூடிய வகையில் அமைக்கப்பட்டது. இவ் PC பல business man களால் அதிகளவில் பாவிக்கப்படுகிறது. காரணம் business சார்ந்த apps க்கு இவ் PC support செய்யும்.

இரண்டு Tablet PC களுமே வெவேறு Operating System களைக் கொண்டது. நீண்ட காலத்துக்குப் பின் Android Operating System ஆனது Android Tablet PC யில் உருவெடுத்துள்ளது. Windows Tablet ல் Windows 8 காணப்படுகிறது. Windows 8 தான் தற்போதைய தொழிநுட்ப தொழிற்சாலையில் காணப்படும் சிறந்த Operating System. இரண்டு OS க்குமே சந்தையில் போதிய வரவேற்பு இருக்கிறது.

வாருங்கள் இனிப் பார்க்கலாம் Operating System தவிர்ந்த ஏனைய வேறுபாடுகளை....

Android & Windows Tablets க்கு இடையிலான இடைமுக (Interface) வேறுபாடுகள்.




Windows Tablet PC யின் இடைமுகத்தைப் பொறுத்தவரையில் சிறந்த அனிமேஷன் செய்யப்பட்ட திரையைக் கொண்டமைந்தது. காலநிலைக்கு ஏற்ப தொளிட்படக்கூடிய தொழிநுட்பத்தில் அமைந்தது.

Android ஐ பொறுத்தவரையில்  Ice Cream sandwich போன்ற version கள் சிறந்தமுறையில் வடிவமைக்கப்பட்டுள்ளதால் உலக மக்களின் வரவேற்பைப் பெரிதும் பெற்றுள்ளது. சிறந்த தொழிநுட்ப உக்திகள் கையாளப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

எதுவாக இருப்பினும், Windows Tablet ன் சிறந்த apps பல புதிய வாடிக்கையாளர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. காரணம் உலக சந்தையை Windows நிறுவனமானது அதன் உற்பத்திப் பொருட்கள் மூலம் கட்டுப்படுத்தி வைத்துள்ளது. Android வாடிக்கையாளர்கள் பெருமளவில் Ice cream , sandwich version களைப் பெரிதும் விரும்புகிறார்கள்.

Operating System களின் Support

Windows 8 apps ஆனது x86 processors and ARM microprocessor களுக்கு support செய்யக்கூடியது. எனவே, பல கம்ப்யூட்டர்களிலும் , Tablets இலும் install செய்யக்கூடியதாக இவ் OS அமைகிறது.

Android 4.0 version வெளிவந்த போது அனைவரும் இத் தொழிநுட்பம் பற்றி பெருமையாக பேசினர் அதாவது Tablets மற்றும் Smart Phone களுக்கு best என..
மேலும் அதற்கு முன் இருந்த iOS தொழிநுட்பம் சிறந்த முறையில் வடிவமைக்கப்பட்ட போதிலும் பெரிதாக எவராலும் கவரப்படவில்லை.

அதனால் Google தன் Android ஐ சந்தைப்படுத்தி பெரிய வரவேற்பு பெற்றுக்கொண்டிருந்தது. இடையில் Windows 8 அதன் தோற்றத்தைக் காட்ட PC ,Laptop , Tablet போன்ற அனைத்துத் சாதனங்களிலும் இது boot செய்யப்பட்டது.

Application களின் தரமும், அவற்றின் கிடைத்தற் தன்மை



Android ஐ பொறுத்தவரையில் பல காலமாக இருப்பதால் app store ஆக Google Play Store காணப்படுகிறது. இதன்மூலம் பல பயனர்கள் apps ஐ தரவிறக்கிப் பயனடைகிறார்கள்.

ஆனால் Windows ஆனது புதிய OS என்பதால் Microsoft நிறுவனமானது மேலும் சில apps களை உருவாக்கவேண்டிய தேவை உள்ளது. நீண்ட நாட்கள் எடுக்கக்கூடிய வாய்ப்புக்களும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விலை வேறுபாடுகள்...

Android ஐ பொறுத்தவரையில் நீண்ட காலமாக field ல் இருப்பதால் ஓரளவுக்கு விட்பனயாகக் கூடிய வகையில் அதன் லாப, நட்டத்திட்கேட்ப விலைகளைத் தீர்மானித்து வருகிறது.

Windows ஆனது புதிய OS காரணமாக மேலும் சில திருத்தல் வேலைகள் இருக்கின்ற காரணம் என்பவற்றால் உறுதியான ஓர் விலை இருக்காது. மேலும் உலக சந்தையில் பலரை கவர பல முயற்சிகளையும் மேட்கொண்டுவருகிறது.

சந்தை வாய்ப்பு..


Android நிறுவனம் உலக சந்தையில் நீண்ட காலம் இருப்பதன் காரணமாக பலர் அறிந்த ஒன்றாகக் காணப்படுகிறது. அந்த வகையில் Android தொழிநுட்பம் மொபைல் போன் களிலும் காணப்படல் என்பவற்றின் காரணமாக அதன் திறன் பலரால் அறியப்பட்டு Android என்றால் சிறந்தது என கூறி வாங்குகிறார்கள்.

ஆனால்,Windows புதியது மேலும் இது கணணி சம்மந்தப்பட்ட Windows என்பதால் சந்தை வாய்ப்பு ஓரளவுக்கு சிறப்பாக இடம்பெறுகிறது.

முடிவுரை :  Android பல வாடிக்கயாலர்களைக் கவர்ந்துள்ளமை மற்றும் மொபைல் தொழிநுட்பத்தில் கொடி கட்டிப் பறக்கும் ஓர் நிறுவனம் என்பதால் அதன் தன்மையும் , உறுதியும் பல மக்களால் போற்றப்படுகிறது.

அதேவேளையில், Windows உம் Android தொழினுட்பத்தை மிஞ்சும் அளவுக்கும் சில apps களை இன்றைய நாட்களில் உருவாக்கி வருகிறது. இரண்டுமே சிறந்த திறன்களைக் கொண்டவை தான் என்பதைக் கூறி விடைபெறுகிறேன்.

பதிவு பெரிதாகி விட்டது போல... மன்னித்துவிடுங்கள்....!!!

நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்....
நன்றி 

8 கருத்துகள்:

  1. விளக்கம் மிகவும் உதவும்... நன்றி...

    வாழ்த்துக்கள்....

    பதிலளிநீக்கு
  2. இரண்டுமே நல்லவை தான்... பாவிக்கும் ஒவ்வொரு பயனரைப் பொறுத்துத் தான் எது சிறந்தது எனக் கூறமுடியும்.. எனக்கு இரண்டும் நல்லதாகத் தோன்றியது அதனால் முடிவுரையில் அவ்வாறு கூறினேன்.. :)

    பதிலளிநீக்கு
  3. பதில்கள்
    1. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்று பிடிக்கும்... அது உங்கள் கையில் தான் இருக்கிறது... :)

      நீக்கு