வணக்கம் நண்பர்களே...!! பகுதி-6 ன் தொடர்ச்சியை இங்கே பாப்போம்... இந்தப் பதிவில் "HTML ஐ பயன்படுத்தி Table அமைப்பது பற்றிப் பார்போம்"
<table>
<tr>
<td>Cell 1</td>
<td>Cell 2</td>
</tr>
<tr>
<td>Cell 3</td>
<td>Cell 4</td>
</tr>
</table>
பார்த்தவுடனே பயப்படாதீங்க....
இங்கே <tr> என்பது Table Row ஐ குறிக்கிறது...
<td> என்பது Table Data வைக் குறிக்கிறது.
மேலே தரப்பட்ட code ஐ பயன்படுத்தினால் கீழுள்ளவாறு தான் தோன்றும்..
Cell 1 | Cell 2 |
Cell 3 | Cell 4 |
இன்னும் ஒரு உதாரணம்...
<table>
<tr>
<td>Cell 1</td>
<td>Cell 2</td>
<td>Cell 3</td>
<td>Cell 4</td>
</tr>
<tr>
<td>Cell 5</td>
<td>Cell 6</td>
<td>Cell 7</td>
<td>Cell 8</td>
</tr>
<tr>
<td>Cell 9</td>
<td>Cell 10</td>
<td>Cell 11</td>
<td>Cell 12</td>
</tr>
</table>
நிறைய எழுதி இருக்கிறேன் எனப் பயப்படாதீங்க...
இங்கே Table Row அதாவது <tr> 3 முறை எழுதி </tr> எனக் கொடுத்திருக்கிறேன்
அப்படியானால் இங்கே Table Row 3 ம் Table data 12 ம் வரும்.
அதன் வருவிளைவு இதோ...
அதன் வருவிளைவு இதோ...
Cell 1 | Cell 2 | Cell 3 | Cell 4 |
Cell 5 | Cell 6 | Cell 7 | Cell 8 |
Cell 9 | Cell 10 | Cell 11 | Cell 12 |
எப்படி புரிந்ததா.... புரியாவிட்டால் திரும்பத் திரும்ப செய்து பாருங்க விளங்கும்... ம்ம்ம்ம்....
வாறன் வாறன் என்ன இது Table என்றால் அட்டவணை இருக்கணும் இது என்ன... என யோசிக்கலாம்..
இப்போ பாருங்கள்... இந்த code ஐ.
<table border="1">
<tr>
<td>Cell 1</td>
<td>Cell 2</td>
</tr>
<tr>
<td>Cell 3</td>
<td>Cell 4</td>
</tr>
</table>
இந்தக் code அட்டவனையைப் போடும் இதோ அதன் வருவிளைவு..
Cell 1 | Cell 2 |
Cell 3 | Cell 4 |
எப்டி நல்லா இருக்கா... "<table border="1">" உங்கள் வசதிக்கு ஏற்றவாறு 1 ஐ மாற்றலாம்...
அல்லது "<table border="1">" என்பதற்குப் பதிலாக <table border="1" width="30%">
எனவும் இடலாம்.. இங்கே border என்பதற்குப் பதிலாக width அளவையும் பயன்படுத்தலாம்...
விரும்பிய மாதிரி உங்கள் table ஐ அமைக்கலாம்... அமைத்துப் பாருங்கள் சந்தேகம் இருப்பின் கீழே உங்கள் கேள்விகளை இடுங்கள்..
நன்றி..
பரதன்
mikka nantry,
பதிலளிநீக்குபகுதி 7- ஐ இவ்வளவு சீக்கிரமா பதிவு செய்விர்கள் என்று எதிர்பார்க்கவில்லை;
பதிலளிநீக்குஅருமையான பதிவு...
உங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றி நண்பர்களே..!!
பதிலளிநீக்கு