இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 21 டிசம்பர், 2013

ஜில்லா - இசை விமர்சனம்

விஜய்,காஜல் அகர்வால் நடிப்பில் நேசனின் இயக்கத்தில் R.B.சௌத்ரி தயாரிப்பில் இமானின் இசையில் பொங்கலுக்கு வெளிவர இருக்கின்ற படம் "ஜில்லா"

படத்தின் பாடல்கள் இன்று (21/12) சூரியன் FM ல் ஒளிபரப்பப்பட்டது. பாடல்கள் விமர்சனம் பற்றி ஒவ்வொன்றாக இன்று பார்ப்போம்.

1. கண்டாங்கி

பாடியவர்கள்   : விஜய், ஸ்ரேயா கோசல்
பாடலாசிரியர் : வைரமுத்து
ஸ்ரேயா கோசலின் குரலுடன் பாடல் மெல்லிசையாக ஆரம்பிக்கிறது. விஜயின் குரலில் பாடல் டூயட் போல அமைந்துள்ளது. 

காதலன் பெண்ணின் அழகைப் பற்றிக் கூறும் பாடல்.. இதோ அதன் ஆரம்ப வரி..

"கண்டாங்கி கண்டாங்கி கட்டி வந்த பொண்ணு
 கண்ணால கிறுக்கேத்தும் கஞ்சா வச்ச மய்யி...."

எப்படியாகப் பாடி அதற்க்கு சொத்துகளை தருவதாகவும் கூறி முத்தம் கேட்கிறார்... 

அதற்கு பெண்அதெல்லாம் போதாது தள்ளிப் போய்யா..

இவ்வாறாக காதல் கலந்த கிராமிய மெல்லிசையுடன் பாடலை அமைத்திருக்கிறார். விஜய் மெலடி பாடலும் சிறப்பாகப் பாடி அசத்தியிருக்கிறார்.

2. ஜிங்கு மணி

பாடியவர்கள்   : K.G. Ranjith, Sunidhi Chauhan
பாடலாசிரியர் : விவேகா

இமானின் துடிப்பான இசையைப் இப்பாடலில் வெளிப்படுத்தியுள்ளார். பெண் ஆணின் அழகைப் பற்றியும் ஆண் பெண்ணின் அழகைப் பற்றியும் பாடி தம் உணர்வுகளை வெளிப்படுத்தும் பாடலாகப் பாடலடிகள் அமைந்துள்ளன. 

மேலும் இப் பாடலில் இடம்பெற்ற ஒரு சூப்பர் வரி இதுதாங்க...

ஆணும் பெண்ணும் சேர்ந்து பாடும் வரி இது...
"Get together வேணும் நாங்க கெட்டுப்போக...."


3.பாட்டு ஒன்னு

பாடியவர்கள்   : ஷங்கர் மகாதேவன் , பாலசுப்ரமணியம்
பாடலாசிரியர் : யுகபாரதி
இப் பாடல் நிச்சயமாக மோகன்லால், விஜய் இருவரும் இணைந்து பாடும் பாடலாகத் தான் இருக்கும். பாடல் வரிகளைக் கேட்கும் போது அப்படித்தான் தோன்றும். 

மேலும், இப் பாடல் opening பாடலாகக் கூட இருக்கலாம்.. ஷங்கர் மகாதேவன் எந்தப் படங்கள் என்றாலும் opening song தான் பாடுவார்...

பாலசுப்ரமணியம் குரலில் இந்தப் பாடல் வரிகள்...

" உயிரென்று உன்னை நானும் ஒருநாளும் சொல்ல மாட்டேன்
 உயிரென்றால் ஒருநாள் போகும்..."

இது நிச்சயமாக மோகன்லால் பாடும் வரியாகவே படத்தில் இருக்கும் என்பது என் எதிர்பார்ப்பு.. பார்ப்போம்..

4.வெரசா போகயில

பாடியவர்          : இமான்
பாடலாசிரியர் : பார்வதி

விசில் சத்தத்துடன் ஆரம்பித்து மெலடி ஸ்டைலில் பாடல் நகர்கிறது. 

காதலன் காதலியைப் பார்க்கின்ற போது காதலனின் நெஞ்சில் எழும் உணர்வுகளை இப் பாடல் வரிகள் பிரதிபலிக்கிறது.

உதாரணமாக...  "அவ சிரிச்சது தலை உறையுது தன்னால....."
                                  "என்னுள்ளே நீ பாதி நான் மீதியோ..?? "

5. மாமா ட்ரீட்டு

பாடியவர்கள்   : இமான், பூஜா, சந்திரா
பாடலாசிரியர் : விவேகா

பொங்கலுக்கு விஜய் ரசிகர்களுக்கு ட்ரீட்டாக இருக்கும்.. அது போலத்தான் 

இப் பாடலில் ஒரு பெண்ணின் குரலில் "எப்போ மாமா ட்ரீட்டு...??" என ஆரம்பிக்கிறது..

இதற்க்குப் பதிலளிக்கும் வகையில் ஆணின் குரல் மூலம் 

"ஜில்லாவோட ட்ரீட்டு எப்பவுமே ஹாட்டு..."

என கூறி இறுதியில் 

"நல்லா நோண்டிக் கேட்டலும் சொல்ல மாட்டேன்...வேணா பாரு மையப் போட்டு ஜில்லாவோட ட்ரீட்டு..."

எனப் பாடல் முடிகிறது. நிச்சயமாக ஜில்லா இந்தப் பொங்கலுக்கு ட்ரீட்டாக இருக்குமென நான் நம்புகிறேன்...

6. ஜில்லா Theme
பாடியவர்கள்   : சந்தோஷ் ஹரிஹரன், தீபக், ஆனந்த் , செண்பகராஜ்
பாடலாசிரியர் : விவேகா

பாடல் அதிரடியாக அமைந்துள்ளது. ..

"ஜில்லா ஜில்லா எதையும் வெல்வான் தில்லா..."

எனப் பாடல் முழுவதும் ஜில்லா பற்றி ஒரே புகழாரம் தான். இடையிடையில் கேரளா ஸ்டைலில் கதகளி நடன tune கள் அமைந்துள்ளன.

இந்த 6 பாடல்களும் நன்றாக அமைந்தன.. இசையமைப்பாளருக்கும், படக் குழுவினர் அனைவருக்கும் படம் வெற்றியடைய என் வாழ்த்துக்கள்.

#ஜில்லா பாடல்களுக்கு எனது Rating :       8/10

பேஸ்புக்கில் என்னுடன் இணைய...

2 கருத்துகள்:

  1. ப்ளாக் டெம்ப்ளேட் ரொம்ப அருமையா இருக்கு, மத்தப்படி ஜில்லா பாட்ட கேட்டுப்புட்டுதான் அதப்பத்தி கருத்து சொல்ல முடியுங்க......!

    பதிலளிநீக்கு