இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 3 டிசம்பர், 2013

இதுவரை காலங்களிலும் வந்த மிகக் கொடிய 5 கணணி வைரஸ்கள்.. - கட்டுரை வடிவில்

வைரஸ்கள் என்பதே மிகப் பெரிய ஓர் பிரச்சினையாக உள்ளது. இன்றைய பதிவில் இதுவரை காலங்களிலும் வந்த மிகக் கொடிய வைரஸ்கள் 5 பற்றி..
The Morris Worm or Internet worm என்ற வைரஸ் தான் முதன் முதலாக Robert Tappan Morris என்ற மாணவனால் உருவாக்கப்பட்டது கிட்டத்தட்ட 6௦௦௦ க்கும் மேற்பட்ட கணணிகளைத் தாக்கியதாக குறிப்பிடப்படுள்ளது.

கணணி என்பது நம் வாழ்வில் முக்கிய ஒரு சாதனமாகும்.. ஆனால் வைரஸ் தான் நமக்கு பெரிதும் பிரச்சினை கொடுப்பது. Internet security firm Norton ஒரு graph ஐ தயாரித்துள்ளது. அதில் மிக முக்கியமான மிகக் கொடூரமான அழிவை ஏற்படுத்திய வைரஸ்சுகள் 5 ஐ பற்றி வெளியிட்டுள்ளது.

அது பற்றித் தான் நாம் இன்று பார்க்க இருக்கிறோம்.


1. My Doom (2004)

My Doom என்ற vவைரஸ் 2004 ஆம் ஆண்டு தோற்றம் பெற்றது. இவ் வைரஸ் ஆனது மின்னஞ்சல்கள் மூலம் பரப்பப்பட்டது. ஒரு நபர் மின்னஞ்சலை வாசிக்க திறக்கும் போது தீங்கான சில code கள் தானாகவே download செய்யப்பட்டன. அது அந்த நபரின் outlook address ஐ திருடியதாம் எனப் பலர் கூறுகின்றனர்.

இந்த வைரஸ் மூலம் $38,000,000,000 மதிப்புள்ள data களும் 2,000,000 கணனிகள் பாதிக்கப்பட்டனவாம்.

2.Sogbig.F (2003)

இவ் வைரஸ் ஆனது 2௦௦3 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.  ஒரு தடவை மின்னஞ்சல் ஓபன் செய்யப்பட்டது சில infected files ஐ கணனியில் செலுத்தப்பட்டு வேறு மின்னஞ்சல்களைக் கண்டறிந்து அவற்றிற்கும் அனுப்புவிக்கப்படும் சக்தி வாய்ந்தது இவ் வைரஸ்.

இந்த வைரஸ் மூலம் $38,000,000,000 மதிப்புள்ள  data களும் 2,000,000 கணனிகள் பாதிக்கப்பட்டனவாம்.


3.I Love You (2000)

இது மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும் ஒரு வகை attachment file. இதன் தலைப்பு "I LOVE YOU" என்று தான் வருமாம். அதை open செய்யும் போது சில வைரஸ்களை கணனிக்கு செலுத்தப்பட்டு , கணனியில் சேமிக்கப்படும் internet password களை திருட பயன்படுத்தப்பட்ட வைரஸ்..

இந்த வைரஸ் மூலம் $15,000,000,000 மதிப்புள்ள data களும்  500,000 கணனிகள் பாதிக்கப்பட்டனவாம்.

4.Code Red (2001)

இவ் virus ஓர் Operating System ன் அழகைக் கெடுக்கின்ற அதாவது OS உருக்குலையும் வண்ணம் வேலை செய்யக்கூடியது. இது சில வலைத்தளங்களையும் access செய்ய விடாது பண்ணியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த வைரஸ் மூலம் $2,600,000,000 மதிப்புள்ள  data களும் 1,000,000 கணனிகள் பாதிக்கப்பட்டனவாம்.

5. Slammer (2003)

இவ் வைரஸ் எந்த file ஐ open செய்தாலும் மறுப்புத் தெரிவிக்கக் கூடிய ஒன்றாக வடிவமைக்கப்பட்டது. மேலும் இது இணைய வேகத்தை slow ஆக access செய்ய வைத்தது. இவ் virus ஆல் பீடிக்கப்பட்ட கணணியை பாவிக்கும் பலருக்கும் கோபம் தான் அதிகமாக ஏற்பட்டதாம்.

இந்த வைரஸ் மூலம் $1,200,000,000 மதிப்புள்ள  data களும்  200,000 கணனிகள் பாதிக்கப்பட்டனவாம்.

இவ் 5 வைரஸ்களும் எவ்வாறு பரவின என்பதை கீழே உள்ள போட்டோ மூலம் பாருங்கள்...

நண்பர்களுடனும் பகிர்ந்து உதவுங்கள்..

இது போன்ற பல சுவாரஸ்சிய தொழிநுட்ப தகவல்களுக்கு என்னுடன் இணைந்திருங்க...

2 கருத்துகள்:

  1. இதில் மிகவும் புகழ் பெற்ற வைரஸ் I LOVE U வைரஸ் தான்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்.. அது தான் பல தில்லு முல்லு வேலைகளைச் செய்யக்கூடியது...

      நீக்கு