இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 5 டிசம்பர், 2013

Internet இல்லாத நேரம் செய்யக்கூடிய 10 activities- சொந்த அனுபவப் பதிவு

Internet இல்லாமல் நாம் இல்லை. ஆனால் சிலவேளைகளில் internet தொடர்ந்து browse செய்ய சற்று bore அடிக்கும். அந்த நேரத்தில் நான் செய்யும் 1௦ நடவடிக்கைகளை உங்களோடு பகிரப்போகிறேன்.


10. டீவி பார்த்தல்....

நண்பர்களே... நீங்கள் ஒன்று கட்டாயம் தெரிய வேண்டும். ஒரு காலத்தில் டிவி பார்த்தல் தான் முக்கிய பொழுதுபோக்காக அமைந்தது. நீங்கள் ஒரு விளையாட்டு பிரியர் என்றால் பல விளையாட்டு சேனல் கள் உள்ளன, மேலும் நகைச்சுவை சேனல்கள் உள்ளன அவற்றை பார்த்து பல மணிநேரங்கள் இருக்கலாம். இதற்கு இணைய வசதி தேவையே இல்லை..

9. செய்தித் தாள் வாசித்தல்
பெரிதாக கணணி பாவனை. இணையப் பாவனை தெரியாத பெற்றோர்கள் உண்டு.. அவர்கள் எப்படி வெளி விடயங்களை அறிகிறார்கள். எல்லாமே செய்தித் தாள் வாசிப்புத் தான் காரணம். நீங்கள் நினைக்கலாம் நமக்கு இந்த பேப்பர் வாசிக்க bore அடிக்கும் என்றால்,.. எதாவது வாரம் அல்லது மாதம் வரும் சில interesting ஆன magazines ஐ order செய்து வீட்டில் வாசிக்க கூடியவாறு செய்யலாம் தானே.. உதாரணமாக தொழிநுட்பம், சினிமா தொடர்பாக பல magazines வருகிறதல்லவா.. மேலும் பேப்பர் ல் வரும் சுடோக்கு , puzzle என்பவற்றை நிரப்பி கொண்டு இருக்கவே நேரம் போய்விடும்...

8. சுத்தம் செய்தல்..
அட ஆமாங்க... பல பேருக்கு இது ரொம்ப பிடிக்கும். அதாவது தங்களது அறையை தமக்கேற்ற மாதிரி பிடித்த விதத்தில் அலங்காரங்கள் மேற்கொள்வது. பல பேரைக் கவரும் விதமாக பொருட்களை வைத்து / உருவாக்கி தங்களுக்குள் மகிழ்ச்சியடைவது. இந்த விடயம் பொதுவாக எனக்குப் பிடிக்கும்.


7. பொழுதுபோக்கு...

நமக்கென ஒரு பொழுதுபோக்கு நிச்சயமாக இருக்கும். உதாரணமாக வீட்டுத் தோட்டம் செய்தல், நாயை கூட்டிக் கொண்டு ரோட்டில் வாக்கிங் செல்லல் , painting என பல தரப்பட்ட விடயங்கள் உள்ளன. அல்லது ஏதாவது வாத்தியங்கள் வாசிக்கப் பழகல்.. உதாரணமாக மிருதங்கம் , கிட்டார் , தபேலா...

 இதெல்லாம் வீட்ல வாசிச்சுப் பாத்தா நமக்கும் ஊர்ல ஒரு மதிப்புக் கிடைக்கும்.. பா என்னமா வாசிக்றான் இந்தப் பய...என..

6. சமைத்தல்

சாப்பாடு இல்லாமல் நான் இல்லை.. ஆமாங்க எனக்கு விதம் விதமான சாப்பாடு சாப்பிட விருப்பம். இது வெறும் பெண்களுக்கு மட்டுமான வேலை என நினைக்காதீங்க.. ஆம்பளைங்க தான் என் ஊர் ஹோட்டல் ல சமைக்றாங்க.. ( சும்மா உதாரணத்துக்கு சொன்னேங்க..) மேலும் வீட்டைப் பிரிந்து தூர இடங்களில் வேலை செய்யும் பலர் தாமாகத்தான் சமைத்து மகிழ்கிறார்கள். அந்த நேரத்தில் தான் அம்மாவின் கஷ்டம் புரியும். எவளவு கஷ்டப்பட்டு நமக்கு சாப்பாடு செய்திருப்பார்கள் என்று...

அட சமையல் ஒரு ஜாலியா செய்யணும் பாஸ்...

5. Game விளையாடல்
இதப் பத்தி நான் சொல்லவே தேவையில்ல.. பல வருஷமா படிக்கிற பயலுங்க சரி , இளைஞர்களும் சரி கேம்ஸ் தான் முக்கிய விடயமாக computer ஐ பாவித்தார்கள். எனவே அதை இணையம் இல்லாத காலங்களில் பெரிதாக விரும்பினார்கள். இப்போதும் விரும்பிக்கொண்டுதான் இருக்கிறார்கள்...

4. புத்தகம் வாசித்தல்..
பல பல அறிஞர்கள் எழுதும் புத்தகங்களை வாசித்தல் நமக்கு சற்று வித்தியாசமான உணர்வுகள் தோன்றும். மேலும் காதாப்பத்திரங்களின் குணத்துக்கு ஏட்பவாறு நாமும் சிந்திப்போம். சில தொடர்கதைகள் எவளவோ உண்டு. தமிழில் எத்தனையோ புத்தகங்கள், கவிதைகள் எனப் பல உண்டு. நாம் அவற்றை நிச்சயம் பார்த்துக் கற்றல் வேண்டும்.

3. பூங்காக்களுக்கு செல்லல்..
பூங்காக்கு நாம் செல்வது நாம் மனதிற்கு சுகத்தையும், ஆறுதலையும் தரும். பொதுவாக சூரியன் மறையும் வேளையில் செல்லும் போது எனக்கு மிகவும் பிடிக்கும். மேலும், இயற்கையுடன் ஓர் தொடர்பு கொள்வது நல்லது தானே... எந்த நேரமும் கணணி, வீடு ,வேலை என இருப்பவர்களுக்கு சற்று ஓய்வாக இருக்கும்.

2.படம் பார்த்தல்..

அது தானே நம்ம main வேலை.. படத்த பார்த்திட்டு பேஸ்புக், டுவிட்டர் ல படம் பற்றி கழுவி ஊத்துறது, மெச்சுரதுன்னு ஒரே ஜாலியா இருபீங்கள்ள.. அப்புறம் நான் என்னத்த சொல்ல..


1. நண்பர்களுடன் மொக்கை போடல்..

இது கடைசி அல்ல ஆரம்பமே.. ஹா ஹா ..!! நண்பர்களோடு இருந்தால் பொழுது செல்வதே தெரியாது.. என்ன சமூகத்துல "இவன் உறுப்புட மாட்டான்னு" சொல்லி சொல்லி கழுத்தருப்பானுங்க... 

என்னைப் பொறுத்தவரைக்கும் "நண்பன் அருகில் இருந்தால் காதல் தோல்வி கூட காமெடி ப்ரோக்ராம் தான்" சோ... உங்க நண்பர்கள என்னைக்குமே கைவிடாதீங்க...

எனக் கூறிக்கொண்டு இத்தோட என் கடைய சத்திக்கிறேன்...

நன்றி..
ஆயிரம் புன்னகைகளுடன்

10 கருத்துகள்:

  1. நண்பேண்டா !!!!!!! கொஞ்சம் சும்மா இருந்தா என் வலைதளத்தையும் வாசிக்கலாமே ...........உங்கள் கருத்துகள் எதிர்பார்கிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ம்ம்ம்... நிச்சயமாக வாசிக்கிறேன்.. உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி..

      நீக்கு
  2. அழகா தொகுத்திருக்கீங்க... வாழ்த்துகள் பரதன்.

    பதிலளிநீக்கு
  3. வாழ்த்துக்களும் நன்றியும்...!

    பதிலளிநீக்கு