இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 26 டிசம்பர், 2013

நீங்கள் நித்திரையில் காணும் கனவுகளும், அவற்றின் உண்மைக் கருத்துகளும்

பலர் கனவு என்பது எமது அடிமனதில் இருந்து வருகின்ற ஒரு செய்தி எனக் கூறுகிறார்கள். நித்திரை செய்யும் போது எமது அடிமனது ஓர் புது உலகத்துக்குள் செல்வது போல இருக்கும்.. நாம் காணும் எந்தவொரு கனவாயினும் ஏதாவது ஒரு செய்தியை எமக்குக் கூறுவதாக "குறும் படம்" போல அமைந்திருக்கும்.

நாம் பல கனவுகளை எமது வாழ்நாளில் காண்கிறோம்.. உலகில் இருக்கும் பலருக்குப் பொதுவாக சில கனவுகள் தோன்றும். அவற்றைப் பற்றி ஒரு சிறு பார்வை தான் நமது இன்றைய பதிவு.

பதிவு சற்று நீண்டு விட்டது போல நினைக்கிறேன் பொறுமையாக என்னைத் திட்டாது வாசியுங்கள்...

1. துரத்தப்படுவது போன்ற கனவு

யாராவது ஒரு தெரிந்த நபராலோ, அல்லது தெரியாத ஒரு புதிய நபராலோ அல்லது மிருகங்களாலோ துரத்தப்படுவது போலக் கனவு காண்பது பொதுவாகப் பலராலும் கனவு காணப்படும் ஒன்றாகும்.

இப்படிக் கனவு வருவதற்கான காரணம் நீங்கள் ஏதாவது ஒரு விடயத்திட்காகவோ, அல்லது ஒரு நபரினாலோ அச்சுறுத்தப்படும் போது மற்றும் உங்கள் பயந்த உணர்வுகளின் போதும் இதிலிருந்து எப்படியாவது வெளியேற வேண்டும் என்ற வகையில் உங்கள் அடிமனம் கூறும் ஒரு செய்தியாக அமையும் என உளவியலாளர்கள் கூறுகிறார்கள்.


2.காயங்கள் ஏற்படல், நோய் வாய்ப்படுவது, அல்லது இறப்பது போல கனவு

இப்படியாக யாரவது காயங்கள் ஏற்படல், நோய் வாய்ப்படுவது, அல்லது இறப்பது போல கனவு கண்டால் அதற்கான உண்மைக் காரணம் நீங்கள் தனிமைப்பட்டவறல்ல...  அந்த நபர் மேல் உங்களுக்கு அதீத அக்கறை உள்ளது என்பதைக் குறிக்கிறது.

இறப்பது போலக் கனவு காண்பது நீங்கள் உங்கள் வாழ்வில் எதோ ஒரு புதிய வகையில் வாழ்வை ஆரம்பிக்கப்போகிறீர்கள் அல்லது உங்கள் வாழ்வில் ஏதோ ஒரு மாற்றம் நிகழும் என்பதை உணர்த்துவதாகும்.

இப்படிக் கனவு காண்பதற்கு இன்னொரு காரணமும் உண்டு... நீங்கள் ஏதாவது ஒன்றைப் பார்த்துப் பயந்திருக்கலாம், அல்லது யாரவது நபரைப் பார்த்து பயந்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

3. விமானத்தை, புகையிரதம், பஸ் miss பண்ணுதல் போன்ற கனவு..
இப்படியாக உங்கள் வாழ்வில் ஏதாவது கனவு கண்டிருந்தால் அதற்கான காரணம் நீங்கள் கிடைத்த சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்தவில்லை  இதனால் உங்கள் மனதில் ஏற்பட்ட ஒரு விரகத்தி அல்லது பயம் என்பதை இக் கனவு குறிப்பிடுகிறது.

எனவே "காற்றுள்ள போதே தூற்றிக்கொள்"

4. பரீட்சையில் சித்தி பெறாமை..
இது மாணவர்களுக்கு மட்டுமான ஒன்றல்ல... வளந்த பெரியவர்களுக்கும் பொருந்தும். அதாவது ஏதாவது ஒரு விடயத்தில் எமக்கு வெற்றி கிடைக்கவில்லை என்பதை ஒரு விதத்தில் குறிக்கிறது. மேலும், இப்படியான கனவானது நீங்கள் உங்கள் கடந்த வாழ்வில் என்ன செய்தீர்கள் அதற்கு நீங்கள் தகுதி உடையவர்களா..?? என்பதை சிந்தித்து மனதை குழப்பிக் கொள்ளாத வகையிலும் அமைகிறது.. 

(பரீட்சை என்பது சும்மா லோலாயி.. அதை நினைத்து வருத்தம் கொள்ளாமல் எதிர்வரும் பரீட்சைகளில் சித்தியடைய முயற்சிக்க வேண்டும்... இது என் கருத்து...)

5. விழுவது போல கனவு..
நீங்கள் கீழே நிலத்தில் விழுவது போலவோ அல்லது நிலத்தைத் தொடாமல் இருப்பது போலவோ கனவு கண்டால் நீங்கள் தற்போது மேற்கொள்ளும் ஒரு செயலில் உங்களுக்குப் பாதுகாப்பு இன்மையைக் குறிப்பதாக அமைகிறது.

6.பறப்பது போலக் கனவு..
இந்தக் கனவு தான் உண்மையில் மகிழ்ச்சியானதும், பயமானதுமான கனவு. இது உணர்த்துவது நீங்கள் வெற்றியைத் தேடித் பயணித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பதாகும்.
மேலும், நீங்கள் ஒரு உயரத்திற்குச் செல்ல முயற்சிப்பதும் சில வேளைகளில் கீழே விழலாம் என்பதையும் குறிக்கிறது. இதற்கு இன்னொரு அர்த்தமும் இருக்கிறது நீங்கள் மகிழ்ச்சியாகவும், சமாதானத்துடனும் வாழ்கிறீர்கள் என்பதையும் உணர்த்தும்.

7.ஏதாவது ஒரு இடத்தில் தவறுப் படல் என நீங்கள் கனவு கண்டிருப்பீர்கள்..
அப்படியான கனவு நமக்கு உணர்த்துவது "ஒரு பிரச்சினையை எப்படி சரி செய்து கொள்ளும் ஆற்றல் நமக்கு இல்லை என்பதை உணர்த்தும்.

அதாவது நீங்கள் காணாமல் போகின்ற நேரத்தில் நீங்கள் பாதுகாப்பின்மையை உணர்வீர்கள், அடுத்து என்ன செய்வது எனப் புரியாது எனப் பல பிரச்சினைகளை நமக்கு உணர்த்தும். அது போலத்தான் நம் வாழ்வில் ஏற்படும் பிரச்சினைகளைத் தீர்ப்பது பற்றியும் இப்டி கனவுகள் உணர்த்தும். 

8. சொத்துக்கள் அழிவடைதல்.
இப்படியான கனவுகள் எமது சொத்துக்கள் அழிவடையும் போது அல்லது தெரிந்த நபர் ஆபத்தில் இருக்கும் போது  நாம் எப்படியான ஒரு மனநிலையை கொண்டிருக்கிறோம் என்பதை உணர்த்தும். 

தொலைந்து போன விலை மதிக்க முடியாத பொருளோ அல்லது ஒரு நபரோ ஆபத்தில் இருப்பதைக் கூட இப்படியான கனவுகள் நமக்கு சில வேளைகளில் கூறும் என உளவியலாளர்கள் கூறுகிறார்கள்.

போதும்,.. போதும்... என நீங்கள் கூறுவது எனக்குப் புரிகிறது.. அதனால் இத்துடன் நான் பதிவை முடிக்கிறேன். மீண்டும் ஒரு நாள் உங்களை இன்னொரு சுவாரஸ்சிய பதிவில் சந்திக்கிறேன்

0 comments:

கருத்துரையிடுக