இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 28 செப்டம்பர், 2013

சுவாச இயக்கம் மற்றும் பிராணாயாமம் - ஒரு மருத்துவ விளக்கம்

வெட்ட வெளியில் நம்மைச்சுற்றிலும் சூழ்ந்துள்ள காற்றில் வாயுக்கள் உள்ளன.இவற்றுள் 78 சதவீதன் Nitrogenம் 21 சதவீதம் பிராணவாயுவும் ௦.௦4 சதவீதம் கரியமில வாயுவும் மற்றும் ஆர்கன், நியான், ஹீலியம், கிரிப்டான்,கிஸீனான், hydrogen மீதம் உள்ளன. சுற்றுச் சூழலின் நிலைக்கேற்ப காற்றில் தூசும் , நீர்பசையும் கலந்திருக்கும்.

சுவாசிக்கும் போது எல்லா வாயுக்களுமே உட் சென்ற போதிலும் உடல் பிராணவாயுவை மட்டுமே எதிர் கொள்கிறது. மூக்கு, மூச்சுக்குழல், நுரையீரல்கள், உதரவிதானம், மார்புக்கூடு, விலா இடைத்தசைகள் , ஆகியவை சுவாசிப்பதில் பங்கு பெறுகின்றன.

மூச்சை இழுக்கும் பொது உத்தரவிதானமும் , விழ , இடைத்தசைகளும் சுருங்கி மார்பை விரிவடையச் செய்கின்றன. இதனால் நுரையீரல்கள் விரிவடைந்து அதனுள் காற்று நிரம்ப உதவுகிறது.

சுவாசக்குழாய் மூலம் வரும் கற்று இரண்டு சுவாச குழல்கள் வழியாக பிரித்து இருபக்க நுரையீரல்களும் செல்கிறது. நுரையீரலில் குழாய்கள் மேலும் மேலும் சிறிதாகப் பிரிந்து செல்கின்றன. இந்த நுண் குழல்கள் ஒவ்வொன்றின் முடிவிலும் கொத்தாக உருண்ட காற்றுப்பைகள் இருக்கும். பைகளின் சுவர்கள் ஏராளமான இரத்த கன்னரைகளைக் கொண்டவை. இங்குதான் பிராண வாயுவும் மாற்றிக்கொள்ளப்படுகிறது.

நுரையீரல்கள் காற்றிலிருந்து பிராணவாயுவைத் தனியே பிரித்தெடுத்து இரத்தத்தில் கலக்கிறது. இரத்தம் அதை எடுத்துக் கொண்டு நுரஈரல்களுக்குத் திரும்புகிறது.,

மூச்சை வெளியே விடும் பொது விழ எலும்பு , விழ இடைத்தசைகள் மீண்டும் பழைய நிலையை அடைவதாலும் மற்றும் இருதயத்தை அமுக்கிக்கொண்டு உதரவிதானம் மேல்நோக்கி நகர்வதால் வாயிற்று அரை சுருங்கி நுரையீரல்களிலிருந்து கரியமில வாயு வெளியேற்றப்படுகிறது.

எனினும் இது முழுமையாக நடைபெறாததால் நுரையீரல் எப்பொழுதும் 2௦௦௦ மில்லியன் லீட்டர் அளவு உடலுக்கு பயன்படாத பழைய காற்று எஞ்சி இருக்கும்.  சாதாரண மூச்சில் 5௦௦ மில்லி லிட்டர்  அளவு காற்று நுரஈரல்களுக்குச் செல்கிறது.

யோக முறைப்பாடி செய்யும் பிராணாயாம பயிற்ச்சியில் உள் இழுக்கப்படும் காற்றின் அளவு சாதாரண மூச்சின் அளவை விட ஐந்து மடங்கு அதாவது 3 லிட்டர் அளவு காற்று நுரையீரல்களுக்கு  செலுத்தப்படுகிறது. அதே போல் யோக முறைப்படி வெளிவிடும் மூச்சுக் காற்றில் சாதாரண மூச்சில் வெளிப் படுவதைவிட ஐந்து மடங்கு காற்று வெளியே செல்வதுடன் அதிகளவு கரியமில வாயுவும் வெளியேற்றப்படுகிறது.

பிரணாயாமம் பயிற்ச்சியில் ஆழமாக சுவாசிக்கும் போது வெளிக்காற்று வேகமாக நுரையீரலின் அடிப்பகுதி வரை சென்று பரவுகிறது. பிரனாயாமத்தில் சில வினாடிகள் மூச்சை நிறுத்துவதனால் நுரையீரலில் ஏற்கனவே எஞ்சியிருக்கும் அசுத்தக்காற்று உள் இழுத்த காற்றுடன் கலந்து, மூச்சை வெளியே விடும் போது , அதிகளவு அசுத்தக்காற்றும் வெளியேற்றப்படுகிறது.

நுரையீரலின் உள்ளே தங்கிவிட்ட பயன்படுத்தப்பட்ட காற்றை வெளியேற்றுவதில் பிரணாயாமம் முக்கிய பங்கு வகிக்கிறது. உள்ளே புகுந்து உடலில் வியாபிக்க முடியும் . அதன் மூலம் ஆரோக்கியத்தைப் பெற முடியும்.

உயிர்வாழ்க்கைக்கு அவசியமான பிரான வாயுவை நாம் பெற்று சிறப்பாக வாழ்வதற்கு ஆரோக்கியமான சுவாச உறுப்புகள் அவசியமாகும். நுரையீரல் நன்றாக விரிந்தால்தான் நாம் நிறைய பிராணவாயுவைப் பெற முடியும். அதேபோல் நுரையீரல்கள் நன்றாக சுருங்கினால்தான் நாம் அதிகளவு கரியமில வாயுவைப்பெரமுடியும். முதுகு நேராகவும், மார்பு அகன்ற நிலையில் இருக்கும்போது இது எளிதாக இருக்கும்.

ஆனால் அனேகப்பேர் நடக்கும் பொது, நிற்கும் பொது , அமர்ந்த நிலையில் பணியாற்றும்போதும் முதுகை வளைத்த நிலையில் வைத்துக் கொள்வதால் சுவாச இயக்கம் சீராக இடம்பெறுவதில்லை.

அன்றாடம் பிராணாயாம பயிற்ச்சியில் குறிப்பிட்ட ஆசனத்தில் நிமிர்ந்து உட்கார்ந்து முதுகு ,கழுத்து, தலை ஒரே நேர்கோட்டில் இருக்கும்படி வைத்துக்கொள்ளப் பழகுவதால், மற்ற நேரங்களில் முதுகை நேராக வைத்திருக்க வேண்டும் என்ற மனநிலை உருவாகும். சுவாச இயக்கத்திற்கு உதவும் மூச்சு , சுவாசக் குழல் , உதரவிதானம், மார்புக் கூடு , விழ இடைத்தசைகள் மற்றும் நுரையீரல்களின் செயலை சீர்படுத்தி எல்லா சுவாசப் பணிகளையும் மேம்படுத்தப் பிராணாயாம பயிற்சி உதவுகிறது.

உங்கள் நண்பர்களோடும் பகிர்ந்து உதவுங்கள்...

0 comments:

கருத்துரையிடுக