இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 7 செப்டம்பர், 2013

வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரை விமர்சனம்

'வருத்தப்படாத வல்பர் சங்கம்' ஒரு கலகலப்பான ஜாலியான அனைவரும் பார்த்து ரசிக்கக் கூடிய திரைப்படம்.


திண்டுக்கல்லில் இருக்கும் சிலுக்குவார் பெட்டியின் வருத்தப்படாத வாலிபர் சங்க தலைவராக வரும் சிவகார்த்திகேயனும் , ஊர் தலைவராக வரும் சத்தியராஜ் என்போர் தமது பங்கை சிறப்பாக ஆற்றியுள்ளார்கள்.

ஊரில் ஏற்படும் ஒரு வாய்த் தகராறில் சத்தியராஜ் தனது 3 பெண்களையும் காதல் திருமணம் செய்து வைக்கமாட்டேன் எனக் கூறி அவர் முதல் இரு பெண்களையும் அவசரமாகக் கல்யாணம் பண்ணி வைக்கிறார். 3வது பெண்ணாகிய ஸ்ரீ திவ்யாவுக்கு கல்யாணம் பண்ணி வைக்கும் போது சிவகார்த்திகேயன் இத் திருமணத்தைத் தடுக்கிறார்.

இதனால் சத்தியராஜுக்கும் , சிவகர்த்திகேயனுக்குமிடையில் முரண்பாடு ஏற்படுகிறது. இதே வேலை ஸ்ரீதிவ்யா சிவகார்த்திகேயனை ஒரு தலையாகக் காதலிக்கிறார்.

ஆனால் சிவகார்த்திகேயன் அந்த ஊரிலுள்ள டீச்சர் பிந்து மாதவியை ஒரு தலையாகாக் காதலிக்கிறார். ஆனால் பிந்து மாதவி சிவகர்த்திகேயனை தவிர்த்து விட்டு வேறு கல்யாணம் செய்கிறார்.

பின்னர் கோவில் திருவிழாவில் சிவகர்த்திகேயன் நடிகைப் பார்த்து காதலில் விழுகிறார். இதிலிருந்து இவர்களுக்கு காதல் ஏற்படுகிறது.

பின்னர் இந்த விஷயம் சத்தியராஜுக்கு தெரிய வருகிறது. அதன் பின் சத்தியராஜ் இருவரையும் சேர்த்து வைத்தாற இல்லையா என்பதுதான் கதை....

இப் படத்தில் முக்கியமாக சூரி காமெடியில் சிறப்பாகக் கலக்கியிருக்கிறார்.
படத்தின் இயக்குனர் பொன்ராமும் சிறப்பாக படத்தை இயக்கியுள்ளார்.
படத்தில் சத்தியராஜ் தனது பங்கினை சிறப்பாகச் செய்துள்ளார்.
ஒளிப்பதிவாளரின் ஒளிப்பதிவுத் திறமை மிகவும் சிறப்பாக உள்ளது.

படத்திற்கு மேலும் அழகூட்ட இமானின் இசை சிறப்பாக அமைந்தது. குறிப்பாக ஏற்கனவே பாடல் வெளியாகி ஹிட் ஆகிய ஊதா கலரு ரிப்பன் , சிவகார்த்திகேயன் பாடிய பாடல் போன்றன சிறப்பாக இருந்தது...

மொத்தத்தில் படம் சூப்பர்....

Rating : 3.7/5

0 comments:

கருத்துரையிடுக