இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 1 அக்டோபர், 2013

ராஜா ராணி - திரை விமர்சனம்

Fox Star Studios ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் புதுமுக இயக்குனர் அட்லீயின் திறமையான இயக்கத்தில் ஆர்யா,நயன்தார,ஜெய்,நஸ்ரியா,சந்தானம்,சத்யராஜ் போன்றோரின் நடிப்பில் G.V.பிரகாஷின் இசையில் உருவாகிய காதலும் பல உணர்வுகளையும் கொண்ட படம் தான் ராஜா ராணி.

இயக்குனர் தனது முதல்படத்திலேயே தனது திறமையை சிறப்பாக வெளிக்கொண்டு வந்திருக்கிறார்.

திருமனத்திட்க்கு முன் காதல் செய்து பின் காதலை இழந்து திருமணத்தில் இணைந்த இரு வேறு மனங்களின் கதை தான். ஆர்யா நயன்தாராவுக்கும் முதலில் திருமணம் நடக்கிறது. ஆனால் இருவரும் சந்தோஷமாக வாழவில்லை. நயன்தாராவிற்கு திடீரென ஒரு நாள் நோய்வாய்ப்பட இதன் மூலம் ஆர்யா நயன்தாராவுடன் கதைக்கிறார்.

அப்போது நயன் தனது ஜெய்யுடனான காதல் கதையை கூறுகிறார். ஜெய்ஜின் வீட்டில் சம்மதிக்காத காரணத்தால் ஜெய் வெளிநாடு சென்று தற்கொலை செய்தார் என்பதை அறிந்த நயன் மனமுடைந்து அப்பாவான சத்யராஜின் வேண்டுகோளுக்கு இணங்க ஆர்யாவை திருமணம் செய்கிறார்.

இக் கதையைக் கேட்டது ஆர்யாவுக்கு நயன்தாரா மேல் காதல் உருவாகுது. (பார்தீர்களா கல்யாணத்துக்கு பின்னர் காதல்) ஆனால் நயன்தாராவுக்கு ஆர்யா மேல் விருப்பம் இல்லை.

ஒரு நாள் ஆர்யாவின் நண்பரான சந்தானத்தின் மூலம் ஆர்யா நஸ்ரியா காதலை அறிகிறார் நயன்.நஸ்ரியாவை ஆர்யா வீட்டுக்குத் தெரியாமல் கல்யாணம் முடித்து outingசெல்லும் போது ஓர் விபத்தில் நஸ்ரியா இறக்கிறார்.
 பின் நயனுக்கும் ஆர்யா மேல் காதல் ஏற்படுகிறது.

இதற்கிடையே நயன் இந்தியாவில் ஆர்யாவுடன் வாழப் பிடிக்காத காரணத்தால் ஆஸ்திரேலியாவில் வேலை செய்வதற்கான appointment கிடைகிறது. ஆர்யாவுக்கு தெரியாது நயன் தன்னை இப்போது விரும்புகிறார் என்று appointment letter ஐ பார்த்தவுடன் நயனுடன் சண்டை பிடிக்கிறார்.

இறுதியில் நயன்தார விமான நிலையத்தில் ஜெய் வேலை செய்வதைப் பார்த்து ஆர்யாவை அழைக்கிறார். ஆர்யா ஜெய்யுடன் பேசுகிறார் அப்போது ஜெய் கூறுகிறார் "கல்யானத்திற்குப் பிறகும் காதலிக்கலாம் , காதல் தோல்விக்குப் பிறகும் ஒரு காதல் இருக்கிறது " என கூறிச் செல்கிறார்.

பின் ஆர்யா நயன்தாராவிடம் ஜெய் சொன்னதைக் கூற நயன் கோபப்பட்டு அவர் ஆர்யாவின் பிறந்தநாளிட்குக் கொடுத்த greeting cardஐ காட்டி சொல்கிறார் "இதை நீ முதல் பார்த்திருந்தால் இவளவு பிரச்சினை வந்திருக்காது" என்றார்

ஆர்யாவும் பார்த்தபோது "Let's begin our life" என்பதை வாசித்துவிட்டு நயனை மறித்து காதலிக்கும் போது ஜெய் சொன்னவார்த்தயான "எனக்கு அப்பாக்கு மட்டும் தான் பயம் மற்றபடி I love you" என்பதை மாற்றி "எனக்கு அப்பாவுக்கு எல்லாம் பயமில்ல I love you". என்கிறார். அப்போது நயன் நஸ்ரியா சொன்ன வார்த்தையான "Brother எனக்கு வேற ஆள் இருக்கு" என்பதைக் கூற படம் மகிழ்ச்சியுடன் முடிவடைகிறது.

படம் முழுவது சந்தானத்தின் காமெடிகள் பலமாக அமைந்திருக்கிறது. Background music எல்லாம் சிறப்பாக அமைத்திருக்கிறார் G.V.

இயக்குனருக்கு மிகப்பெரிய வாழ்த்துக்கள். அடுத்த கவுதம் வாசுதேவ மேனனாக வருவார் போல் தெரிகிறது.

படத்தின் மூலம் இயக்குனர் கூறவந்த விடயம்

 "காதல் தோல்விக்குப் பின்னரும் ஒரு காதல் இருக்கிறது அதேபோல் காதல் தோல்விக்குப் பின் ஒரு வாழ்க்கையும் இருக்கிறது"

எமக்குப் பிடித்த ஒருவர் எம்மை விட்டு விலகும் போது வாழ்க்கையே வெறுக்கும் ஆனால் எமக்கேற்ற மாதிரி ஒரு நாள் எம் வாழ்க்கை மாறும் அதுவரை காத்திருப்போம்"

சில பேருக்குப் படம் பிடிக்காது இருக்கலாம் ஆனால் காதலித்துக் கொண்டிருக்கும் யாராவது நிச்சயம் இந்தப் படம் பார்த்தால் எதாவது ஒரு இடத்தில் கூட அழத் தவறமாடீர்கள்////!!!!

படத்திற்கு எனது rating 9/1௦

0 comments:

கருத்துரையிடுக