இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 19 செப்டம்பர், 2013

"ஆரம்பம்" இசை விமர்சனம்

விஷ்ணு வரதன் இயக்கத்தில் அஜித்,ஆர்யா,நயன்தார,தாப்சி என பல நட்சத்திரக் கூட்டணிகள் இணைந்து நடித்து வெளிவரவிருக்கும் திரைப்படம் ஆரம்பம். ஏற்கனவே ஒரு டீசர் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. இன்று அதன் பாடல்கள் வெளியாகியுள்ளது. இதற்கு இசையமைத்துள்ளார் யுவன் ஷங்கர் ராஜா. வழக்கம் போல சிறந்த பாடல்களைத் தந்துள்ளார் இசையமைப்பாளர்.

ஒவ்வொரு பாடலாக விமர்சனம் பாப்போம்...

1. அடடடா ஆரம்பமே...!!

பாடியவர்: ஷங்கர் மகாதேவன்
பாடலாசிரியர்: பா.விஜய்

இந்தப் பாடல் அநேகமாக தலையின் introduction பாடலாக இருக்கும். அவளவு energetic ஆக பாடியுள்ளார் ஷங்கர் மகாதேவன். பாடல் வரிகள் எல்லாமே சூப்பர். tune உம் நல்லதாக உள்ளது. பாடலிலும் "ஆட்டம் ஆரம்பம்" என வருகிறது. பாடல் கேக்கும் போதே சும்மா ஆடனும் போல இருக்கு...
நீங்க கேட்டா தலைக்கு இது தான் செம பாட்டு...

பாடல் வரி வாழ்க்கை தத்துவம் பற்றி கூறுகிறது. "நேற்றிருந்த ராஜா எல்லாம் இன்னைக்கு காணோம்.. அதுதாண்டா வாழ்க்கை" 

இப்படி நிறைய வாழ்க்கைக்கு உதவும் வரி இருக்கிறது. சொல்லப் போனால் பாடல் வரி முழுவதையுமே எழுத வேண்டும்.

2.என் fuse போச்சே


பாடியவர்கள் : கார்த்திக், ரம்யா NSK
பாடலாசிரியர்: பா.விஜய்

காதலியை கண்டவுடன் "என் fuseம் போச்சே" எனப் பாடி loveஐ accept பண்ணனும் எனப் பாடுகிறார். பாடவ வரி சூப்பர்.

"M sizeல் இருந்த என் heartஐ double xl ஆக love பண்ணிட்ட"

எப்படியெல்லாம் பாட்டு எழுதியிருக்காரு பாடலாசிரியர்.

"எந்த ஒரு ஆர்ப்பாட்டமுமே இல்லாமல் தானே உன்னை காதலிக்கிறேன்... முடியாது என நீ சொல்ல முடியாது என ஆண் தன காதலைக் கூறுகிறார்."

இப்படியெல்லாம் அவர் இப்படிப் பாட பெண் உடனே
 "முடியாதென சொல்ல முடியலையே உன்னாலே" எனப் பாடுகிறார்..

பெண் தன் காதலை சொன்னவுடன் அப்படியே பாடல் முடிகிறது....

மியூசிக் சிறப்பாக அமைந்திருக்கிறது...

3. ஹரே ராமா

பாடியவர்கள்: Tanvi Shah , Shakthi sree Gopalan
பாடலாசிரியர்: பா.விஜய்


பாடலின் மியூசிக் நல்ல இருக்கு. இடைக்கிடையில் ஆங்கில வார்த்தைகளும்.. இருக்கிறது... காதல் வயப்பட்ட பெண் பாடும் விதமாக இந்தப் பாடல் இருக்கிறது.

4.மேலால வெடிக்குது 

பாடியவர்கள்: விஜய் ஜேசுதாஸ், ரஞ்சித்
பாடலாசிரியர்: பா.விஜய்

பாடல் வரிகள் அழகாக அமைந்துள்ளது. நட்பு பற்றி சில வரிகள் இதில் வருகிறது.
"நட்புக்கு ஒரு கோவில் இல்லை, நட்பே ஒரு கோவில்" என பாடல் வரி வருகிறது. 

"வாழ்க்கை ஒரு வானம் அதில் நட்பே வர்ணம் ஆச்சு, வார்த்தை இல்லை தோழா நீயே எந்தன் மூச்சு"

பா.விஜய் சிறப்பாக பாடல்களை எழுதியுள்ளார்.

மியூசிக்கும் சிறப்பாக இடையிடையே மெலடி போல வந்து வந்து சிறப்பாக compose செய்துள்ளார் யுவன்.

5.ஸ்டைலிஷ் தமிழச்சி

பாடியவர்கள்:  M.M.Manasi , Ruba bend , Psyc
பாடலாசிரியர்: பா.விஜய்

பாடல் ஸ்பீட் ஆகப் போகிறது. அரைவாசி பாடலும் கொஞ்சம் கொஞ்சம் தான் போகும். இடையிடையில் "அழகிய தமிழச்சியே" என வருகிறது. பாடல் மியூசிக் நல்லா இருக்கு...
இறுதியில் ஒரு வரி வருகிறது "முரட்டுத் தமிழச்சி நான் உனக்கும் எனக்கும் தெரியும் விளையாட்டுப் பொருளில்லை நாம்" என்று அந்த பாடல் வரி இருக்கிறது. தமிழ் பெண்களின் தன்மையையும் பாடலாசிரியர் கூறுகிறார்.

மேலே காணப்பட்ட 5 பாடல்களும் சிறந்த பாடல்களாக பாடல் வரிகள் சரி, மியூசிக் அமைப்பு போன்றன சிறப்பாக உள்ளன.

#"ஆரம்பம்" பாடல்களிற்கு எனது Rating : 8.85/10

4 கருத்துகள்:

  1. உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி சதீஷ் குமார் அவர்களே...!! தொடர்ந்தும் இங்கு சமூகமளித்து இன்னும் என்னை ஊக்கப்படுத்தி தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.,,,

    பதிலளிநீக்கு