இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 24 செப்டம்பர், 2013

நய்யாண்டி இசை விமர்சனம்

Nayyandi Song Revie - Parathan
தனுஷ்,நஸ்ரியா நடிப்பில் சற்குணம் அவர்களின் இயக்கத்தில் கதிரேசனின் தயாரிப்பில் ஜிப்ரானின் இசையில் வெளிவரவிருக்கிற படம்தான் நய்யாண்டி.
கடந்த ஞாயிறு சன்மியுசிக்ல தனுஷின் நேரலை இடம்பெற்றது அதில் இப் படத்தில் அவர் காமெடி கலந்த கதாப்பாத்திரமாக நடிப்பதாகக் கூறியிருந்தார்.

பாப்போம் படம் வரும்போது எப்படியென...

சரி. முதலாவது பாடலாக.


1.எல்லெல்லே எட்டிப் பார்த்தாளே

பாடியவர்கள் : Leon D’Souza, Sundar Narayana Rao

பாட்டுப் பாடியவர்களின் குரல் சிறப்பாக உள்ளது. மியூசிக்கும் சிறப்பாக அமைத்திருக்கிறார் இசையமைப்பாளர். 

காதலியின் பார்வை என்ன என்ன செய்கிறது என இப்பாடலின் வரிகள் அமைகிறது. நீங்களும் காதலில் இருக்கிறீர்களா இந்தப் பாடலை கேளுங்கள்.

2.இனிக்க இனிக்க

பாடியவர்கள்: Suzanne D’Mello, Padmalatha, Nivas, Sofia Symphony Orchestra


பாட்டின் மெட்டு நன்றாக இருக்கிறது. காதலர்கள் இருவரும் ஒவ்வொருவரும் தமது பார்வைகளை பற்றிக் கூறுவதாக ஒரு மெலோடியாக அமைந்திருக்கிறது.

3.Marriage marketல்

பாடியவர்கள்:  Sundar Narayana Rao

கல்யாணமாகாத பசங்களின் குமுறல். 

"marriage marketல் தாலிகட்ட பொண்ணு ஸ்டார்க் இல்ல"

முப்பது வயசான பசங்களுக்கு இன்னும் கல்யாணம் ஆகலைன்னு பீல்பண்ணிப் பாடுற பாட்டு தான் இந்தப் பாடல். 

matrimonyல் biodata கொடுத்தாலும் கல்யாணம் ஆகல expire ஆகுறதுக்கு முன்னாடி பொண்ணு குடுங்க...

அப்படியென இந்தப் பாடல் செல்கிறது...

4.முன்னாடி போற பொண்ணு

பாடியவர்கள்: Divya Kumar, Swetha Menon, Gold Devaraj

பாட்டின் மெட்டு சூப்பர். மியூசிக்கும் சூப்பராக அமையப்பட்டுள்ளது. பொண்ணுக்குப் பின்னாடி போற பையன் பாடுறாரு

 "முன்னாடி போற பொண்ணு" என

அதற்கு பெண் "பின்னாடி நீயும் வர்ற வெக்கம் வருமா" எனப் பாடுகிறார்.

பாடலை நீங்களும் கேட்டுப்பாருங்கள்.

5.ஏண்டி பாதகத்தி

பாடியவர் :  Gold Devaraj

காதல் தோல்வியில் பாடும் ஆணின் மனநிலையில் பாடும் ஒரு பாடல் தான் இது. 

"பட்டாம்பூச்சியை சவுக்கால அடிச்சவளே"

எனப் பாடல் ஒரு சொகாமாக செல்கிறது. love failureஎன்றால் இந்தப் பாடலை நீங்கள் கேளுங்களேன்..

6.Teddy Bear

பாடியவர்: தனுஷ்

உங்களுக்கே தெரியும் தனுஷ் என்றால் பாட்டு சும்மா பட்டயக் கெளப்பும். இந்தப் பாடல் teaserல் வந்தே பட்டையைக் கெளப்பிய பாடலாகும்.

"teddy bear காட்டி உறங்கிடும் குட்டி மலர் இவ பாத்தா மனசொரு கட்டிங் அடிக்குதப்பா"

பாட்டு மேட்டு சொல்லவே தேவையில்ல சூப்பர். இடையிடையே காக் ஆகும் பீ காக் ஆகும் என இடையிடையே வருகிறது.

பாட்டு மொத்தத்தில் சூப்பர்..

ஆல்பமும் நன்றாக அமைந்திருக்கிறது.

அல்பத்திட்கு எனது rating 4/5

1 கருத்து: