இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 14 அக்டோபர், 2013

HTML கற்போம் பகுதி-4

வணக்கம் நண்பர்களே..!! இன்றும் உங்களை HTML கற்போம் பகுதி 4ன் மூலம் சந்திப்பதில் மகிழ்ச்சி.

கடந்த பதிவான HTML கற்போம் - பகுதி 3 ல் பயிற்ச்சிகள் பெற்ற துணிவோடு இப்போது அடுத்த கட்டத்திற்கு வந்திருக்கிறோம்.

இன்றைய பதிவில் வர்ணங்கள் மற்றும் links கள் கொடுப்பது எப்படி எனப் பாப்போம்...


<h2 style="background-color:#ff0000;">My friendship with HTML</h2>

#ff0000 இதைப் பார்த்து பயப்படாதீர்கள்... இது என்னவென்று பார்போம்... இந்த coding ஐ கொடுத்தால் இதன் வருவிளைவு எப்படி இருக்கும் எனப் பார்போம??

இதோ......

My friendship with HTML

இப்போ என்னனு தெரிந்ஜீச்சா...?? 

<h2 style="background-color:#ff0000;">My friendship with HTML</h2>

இங்கு h2 என்பது உப தலைப்பு  அதற்கு அடுத்ததாக வரும் codingஐ பார்தீர்கள Background என.. 

அது நீங்கள் இப்போது எழுதுவது paper என்று வையுங்களேன் Background என்பது அந்த paper ன் நிறத்தை தீர்மானிக்கும்...

#ff0000 இது சிவப்பு நிறத்திற்கான coding ஆகும்...

பின்னர் h2 ஐ > இந்த tag மூலம் மூடி எழுதவேண்டிய எழுத்துகளை எழுதி </h2> என்பதை கொடுத்தால் சரி...

இப்போது புரிந்தது தானே....!! 

அடுத்து....


<html>
 
 <head>
 </head>

 <body style="background-color:#ff0000;">
 </body>

</html>

இது எப்படி வரும் என தெரிகிறதா...?? 

நல்லா பாருங்க <body என்ற tagற்கு உள்ளே background என்ற எழுத்திற்கு ஒரு நிறத்தின் coding போடப்பட்டிருக்கிறது...

அப்படியானால் உங்களுக்கு முழு இடமும் சிவப்பு நிறமாகத்தான் இருக்கும்..

ஏன் என்றால் #ff0000 இந்த code சிவப்பு நிறத்திற்கான code ஆகும்...

இதன் வருவிளைவு இதோ...


இதை உங்கள் கணனியில் Notepadஐ open செய்து செய்து பாருங்கள்... அப்போது தெரியும்...


நீங்கள் கேட்கலாம் இப்படித்தான் bacground போட வேண்டுமா என..

இப்படியும் போடலாம்...

<body style="background-color: red;"> 

இப்படி coding போட்டாலும் அதே சிவப்பு நிறம் தான் வரும்...

சற்று குழப்புவதுபோல் இருந்தால் உங்கள் கணணியிலும் செய்து பார்க்கவும்.
இதையும் உங்கள் கணனியில் செய்து பார்க்கவும்..



இன்னும் சில நிறங்களின் html coding கள் உங்கள் பார்வைக்கு...

White: #ffffff
Black: #000000 (zeros)
Red: #ff0000
Blue: #0000ff
Green: #00ff00
Yellow: #ffff00

மேலும் நிறங்களின் coding கள் பற்றி தெரிய... http://www.color-hex.com/

இன்று இது போதும் என நினைக்கிறன்...!! சற்று அதிகமாக எழுதிவிட்டேன் போல் தெரிகிறது.. இத்துடன் நிறுத்தி மீண்டும் ஒரு அழகிய நாளில் இதன் முகுதியைத் தொடர்கிறேன்..

நன்றி 

5 கருத்துகள்: