Studio Green K.E.ஞானவேல் ராஜா வழங்கும் M.ராஜேஷின் இயக்கத்தில் கார்த்தி , காஜல் அகர்வால் , சந்தானம் போன்றோர் நடிபில் தமனின் இசையில் வரும் மாதம் நவம்பர் 2ஆம் திகதி வெளிவரவிருக்கும் திரைப்படம் "ஆல் இன் ஆல் அழகுராஜா" . Trailer நேற்று வெளியிடப்பட்டு அனைத்து சமூக வலைத்தளங்களிலும் பிரபலமடைந்து வருகின்றது. டீசரரும் ஏற்கனவே வெளியாகி முகேஷை வைத்து காமடி செய்து அனைவரிடமும் பெரும் வரவேட்பைப்பெற்றது.
நேற்று பாடலும் Trailerம் பாடல்களும் வெளியானது. பாடல்கள் அனைத்துமே நன்றாக இருக்கின்றன. இன்று அவற்றின் விமர்சனத்தை பார்ப்போம்.
1. யாருக்கும் சொல்லாம
பாடியவர்: ராகுல் நம்பியார்
பாடலாசிரியர் : நா.முத்துக்குமார்
இப் பாடல் trailerல் வரும் ஒரு பாடல். இந்தப் பாடலில் chorus அதாவது பின்னணிக் குரல் நிறைய வைத்திருக்கிறார் இசையமைப்பாளர். பாடல் தொடங்கும்போதே chorus குரலுடன் தான் ஆரம்பிக்கிறது.
பாடலின் tune நல்லா இருக்கு..
காதலியின் intoduction வரும் போது இந்தப்பாடல் நல்லா இருக்கும். மெலடி பாடலும் இல்ல குத்துப் பாடல் அதாவது ஸ்பீட் பாடலாகவும் இது அமையவில்லை. ஓரளவுக்கு love feel பண்ணக் கூடிய அளவுக்குப் பாடல் அமைந்திருக்கிறது.
2. ஒரே ஒரு
பாடியவர்: ஜாவீட் அலி
பாடலாசிரியர்: நா.முத்துக்குமார்
பாடல் ஆரம்பிக்கும்போது church மணி அடிக்கும் soundஉடனும் திருமனத்தில தாலி கட்டுற மந்திரம் அதுதாங்க "மாங்கல்யம் தந்துனாதே..." என்ற குரல்களுடன் ஆரம்பிக்கிறது.
காதலை ஏற்றுக்கொள்ளுமாறு காதலன் கேட்பது போல பாடல் அமைந்திருக்கிறது.
ஒரே ஒரு வார்த்தை சொன்னால் என்ன பெண்ணே இன்பம் துன்பம் எல்லாம் இனி உந்தன் பின்னே..." என பாடுகிரவாறு பாடலாசிரியர் அமைத்திருக்கிறார்.
பாட்டு சீரான வேகத்தில் நல்லா speed ம் இல்லை slowம் இல்ல. பாடல் கேட்க்கக்கூடிய அளவுக்கு இருக்கிறது ஆனால் என்ன பாடலில் பெரிதும் இடம் பிடித்திருப்பது வாத்தியங்களின் சத்தம் மட்டும் தான் இன்னும் சில வரிகள் அதிகம் சேர்த்தல் பாடல் நன்றாக இருக்கும்.
3. உன்ன பார்த்த நேரம்
பாடியவர்கள்: விஜய் யேசுதாஸ், ஸ்ரீ வர்தனி
பாடலாசிரியர்: நா.முத்துக்குமார்
இந்தப் பாடல் trailer உடன் வந்த பாடல் இடைக்காலப் பாடல் போன்ற முறையில் அமைத்திருக்கிறார் இசையமைப்பாளர். விஜய் யேசுதாசின் குரலும் பாடிய பெண்ணின் குரலும் நன்றாகப் பொருந்தும் படியாக இருக்கிறது. இடையில் "ரப்பப்பா" என இக்கால rap song மாதிரி compose செய்திருக்கிறார் இசையமைப்பாளர்.
காதலியைப் பார்த்தவுடன் காதலனுக்கு என்ன என்ன செய்யும்னு இப் பாடல் கூறுகிறது..
"உன்ன பாத்த நேரம் மனசு ஆடும் மயிலாட்டம் உன்ன நெனச்ச நேரம் நெஞ்சில் மலரும் பூந்தோட்டம்..."
4. ஆல் இன் ஆல் அழகுராஜா....
பாடியவர்கள் : சுசித் , செந்தில் தாஸ் , கீர்த்தன் , பெல்லி ராஜ்
பாடலாசிரியர் : நா.முத்துக்குமார்
இந்தப் பாடல் நிச்சயமாக கார்த்தியின் introduction ஆகத் தான் இருக்கும். பாட்டு முழுவது ஆல் இன் ஆல் அழகுராஜாவைப் பற்றித்தான் பாடல்.
பாடல் நல்லா speedஆக compose செய்யப்பட்டிருக்கிறது.
இடையில் தென்காசியில் ஒரு தங்க அருவி சொக்கத் தங்கம் jewelry என ஒரு advertisement வருது... பாடலில் எல்லாம் விளம்பரம் போடுறாங்க... !! :p
பாடியவர்கள்: சுராஜ் சந்தோஷ் , ஸ்ரேயா கோசல்
பாடலாசிரியர்: நா.முத்துக்குமார்
பாடல் நல்லா speed ஆகவும் ஆடக்கூடிய பாடலாகவும் இருக்கிறது.
படத்தில் காஜலின் பெயர் சித்ரா தேவி பிரியா அதனால் பாடலில் சித்ரா தேவி பிரியா உன்ன கட்டப்போறேண்டி.. என கார்த்தி பாடுவது போல அமைந்திருக்கிறது.
பாடல் சூப்பர் பாடல்களில் இந்தப் பாடல் எனக்கு மிக நன்றாகப் பிடித்தது. வரிகளும் நல்லா இருக்கு... Tune சிறப்பாக இருக்கிறது,...
ஆல் இன் ஆல் அழகுராஜா திரைப்படப் பாடல்களுக்கு எனது rating
8.9/10
தொடர்ந்து விமர்சனங்களைப் பெற இத் தளத்தில் இணைந்திருங்கள்...
nice da keep going
பதிலளிநீக்குகுட் ...! இனிமேதான் கேட்கணும் ...Where to download...?
பதிலளிநீக்குஇந்தத் தளத்தில் நீங்கள் தரவிறக்கலாம் நண்பரே...!! http://tamiltunes.me/azhagu-raja-2013.html
பதிலளிநீக்கு