இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 22 அக்டோபர், 2013

G-mail கணக்கை தொலைபேசியைப் பயபடுத்தி பாதுகாக்க...

வணக்கம் நண்பர்களே...!! பலர் Google நிறுவனத்தின் mail சேவையான g-mail சேவையைப் பயன்படுத்துவீர்கள். ஆனால், உங்களுக்கு சில வேளைகளில் பயமிருக்கலாம்... யாராவது நமது கணக்கை hack செய்து விடுவார்களோ..!! எனப் பயப்பிடுவீர்கள். அதற்காக Google தரும் ஒரு வசதி தான் "2 step activation" இந்த வசதியைப் பயன்படுத்தி நீங்கள் எப்போது உங்கள் g-mail கணக்கிற்குள் செல்கிறீர்களோ அப்போதெல்லாம் உங்கள் தொலைபேசிக்கு verification code அனுப்பப்படும் அதை நீங்கள் type செய்த பின்னர் தான் உள்ளே செல்ல அனுமதிக்கும்.

எனவே அதன் மூலம் உங்கள் g-mail account ஐ hackers இடமிருந்து பாதுகாக்க வழி உள்ளதல்லவா....!! என்ன... நீங்கள் தொலைபேசியை தொலைக்காமல் இருந்தால் சரி....!!

இப்போது எப்படி அந்த சேவையை ஆரம்பிப்பது எனப்பார்ப்போம்..

https://www.google.com/settings/account இங்கே செல்லவும்..

பின்னர் Security என்ற option ஐ click செய்யுங்கள்/..........


பின்னர் "2 step verification" என்ற optionclick செய்யுங்கள்..


பின்னர் தோன்றும் விண்டோவில் Start Setup ஐ கொடுங்கள்..

பின்னர் வருவதில் உங்கள் தொலைபேசி என்னைக் கொடுத்து பின் உங்கள் தொலைபேசிக்கு verification code வரும். பின் அதை கொடுத்தால் நீங்கள் 
2 step verification சேவையை ஆரம்பித்து விட்டீர்கள்.

இனிமேல் நீங்கள் அல்லது எவராவது உங்கள் கணக்கினுள் log in செய்தால் உடனே உங்கள் தொலைபேசி எண்ணுக்கு ஒரு verification code வந்துவிடும்.
பின் அவ் verification code ஐ கொடுத்தால் மட்டுமே....  உங்கள் mail களை வாசிக்கவோ கணக்கினுள் உள் நுழையவோ முடியும்..

இது நான் எனது மின்னஞ்சல் முகவரிக்குள் வாசிக்க செல்லும் போது வருவது. இவ்வாறு நீங்கள் எப்போது log in செய்கிறீர்களோ அப்போதெல்லாம் வரும்.

நீங்கள் விரும்பியவாறு இந்த சேவையை வேண்டுமானால் TURN OFF செய்யலாம்...

எப்டி.....!! தகவல் நல்லா இருந்திச்சா....?? நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்களேன்.....

2 கருத்துகள்: