இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 28 செப்டம்பர், 2013

சுவாச இயக்கம் மற்றும் பிராணாயாமம் - ஒரு மருத்துவ விளக்கம்

வெட்ட வெளியில் நம்மைச்சுற்றிலும் சூழ்ந்துள்ள காற்றில் வாயுக்கள் உள்ளன.இவற்றுள் 78 சதவீதன் Nitrogenம் 21 சதவீதம் பிராணவாயுவும் ௦.௦4 சதவீதம் கரியமில வாயுவும் மற்றும் ஆர்கன், நியான், ஹீலியம், கிரிப்டான்,கிஸீனான், hydrogen மீதம் உள்ளன. சுற்றுச் சூழலின் நிலைக்கேற்ப காற்றில் தூசும் , நீர்பசையும் கலந்திருக்கும்.

சுவாசிக்கும் போது எல்லா வாயுக்களுமே உட் சென்ற போதிலும் உடல் பிராணவாயுவை மட்டுமே எதிர் கொள்கிறது. மூக்கு, மூச்சுக்குழல், நுரையீரல்கள், உதரவிதானம், மார்புக்கூடு, விலா இடைத்தசைகள் , ஆகியவை சுவாசிப்பதில் பங்கு பெறுகின்றன.

மூச்சை இழுக்கும் பொது உத்தரவிதானமும் , விழ , இடைத்தசைகளும் சுருங்கி மார்பை விரிவடையச் செய்கின்றன. இதனால் நுரையீரல்கள் விரிவடைந்து அதனுள் காற்று நிரம்ப உதவுகிறது.

சுவாசக்குழாய் மூலம் வரும் கற்று இரண்டு சுவாச குழல்கள் வழியாக பிரித்து இருபக்க நுரையீரல்களும் செல்கிறது. நுரையீரலில் குழாய்கள் மேலும் மேலும் சிறிதாகப் பிரிந்து செல்கின்றன. இந்த நுண் குழல்கள் ஒவ்வொன்றின் முடிவிலும் கொத்தாக உருண்ட காற்றுப்பைகள் இருக்கும். பைகளின் சுவர்கள் ஏராளமான இரத்த கன்னரைகளைக் கொண்டவை. இங்குதான் பிராண வாயுவும் மாற்றிக்கொள்ளப்படுகிறது.

நுரையீரல்கள் காற்றிலிருந்து பிராணவாயுவைத் தனியே பிரித்தெடுத்து இரத்தத்தில் கலக்கிறது. இரத்தம் அதை எடுத்துக் கொண்டு நுரஈரல்களுக்குத் திரும்புகிறது.,

மூச்சை வெளியே விடும் பொது விழ எலும்பு , விழ இடைத்தசைகள் மீண்டும் பழைய நிலையை அடைவதாலும் மற்றும் இருதயத்தை அமுக்கிக்கொண்டு உதரவிதானம் மேல்நோக்கி நகர்வதால் வாயிற்று அரை சுருங்கி நுரையீரல்களிலிருந்து கரியமில வாயு வெளியேற்றப்படுகிறது.

எனினும் இது முழுமையாக நடைபெறாததால் நுரையீரல் எப்பொழுதும் 2௦௦௦ மில்லியன் லீட்டர் அளவு உடலுக்கு பயன்படாத பழைய காற்று எஞ்சி இருக்கும்.  சாதாரண மூச்சில் 5௦௦ மில்லி லிட்டர்  அளவு காற்று நுரஈரல்களுக்குச் செல்கிறது.

யோக முறைப்பாடி செய்யும் பிராணாயாம பயிற்ச்சியில் உள் இழுக்கப்படும் காற்றின் அளவு சாதாரண மூச்சின் அளவை விட ஐந்து மடங்கு அதாவது 3 லிட்டர் அளவு காற்று நுரையீரல்களுக்கு  செலுத்தப்படுகிறது. அதே போல் யோக முறைப்படி வெளிவிடும் மூச்சுக் காற்றில் சாதாரண மூச்சில் வெளிப் படுவதைவிட ஐந்து மடங்கு காற்று வெளியே செல்வதுடன் அதிகளவு கரியமில வாயுவும் வெளியேற்றப்படுகிறது.

பிரணாயாமம் பயிற்ச்சியில் ஆழமாக சுவாசிக்கும் போது வெளிக்காற்று வேகமாக நுரையீரலின் அடிப்பகுதி வரை சென்று பரவுகிறது. பிரனாயாமத்தில் சில வினாடிகள் மூச்சை நிறுத்துவதனால் நுரையீரலில் ஏற்கனவே எஞ்சியிருக்கும் அசுத்தக்காற்று உள் இழுத்த காற்றுடன் கலந்து, மூச்சை வெளியே விடும் போது , அதிகளவு அசுத்தக்காற்றும் வெளியேற்றப்படுகிறது.

நுரையீரலின் உள்ளே தங்கிவிட்ட பயன்படுத்தப்பட்ட காற்றை வெளியேற்றுவதில் பிரணாயாமம் முக்கிய பங்கு வகிக்கிறது. உள்ளே புகுந்து உடலில் வியாபிக்க முடியும் . அதன் மூலம் ஆரோக்கியத்தைப் பெற முடியும்.

உயிர்வாழ்க்கைக்கு அவசியமான பிரான வாயுவை நாம் பெற்று சிறப்பாக வாழ்வதற்கு ஆரோக்கியமான சுவாச உறுப்புகள் அவசியமாகும். நுரையீரல் நன்றாக விரிந்தால்தான் நாம் நிறைய பிராணவாயுவைப் பெற முடியும். அதேபோல் நுரையீரல்கள் நன்றாக சுருங்கினால்தான் நாம் அதிகளவு கரியமில வாயுவைப்பெரமுடியும். முதுகு நேராகவும், மார்பு அகன்ற நிலையில் இருக்கும்போது இது எளிதாக இருக்கும்.

ஆனால் அனேகப்பேர் நடக்கும் பொது, நிற்கும் பொது , அமர்ந்த நிலையில் பணியாற்றும்போதும் முதுகை வளைத்த நிலையில் வைத்துக் கொள்வதால் சுவாச இயக்கம் சீராக இடம்பெறுவதில்லை.

அன்றாடம் பிராணாயாம பயிற்ச்சியில் குறிப்பிட்ட ஆசனத்தில் நிமிர்ந்து உட்கார்ந்து முதுகு ,கழுத்து, தலை ஒரே நேர்கோட்டில் இருக்கும்படி வைத்துக்கொள்ளப் பழகுவதால், மற்ற நேரங்களில் முதுகை நேராக வைத்திருக்க வேண்டும் என்ற மனநிலை உருவாகும். சுவாச இயக்கத்திற்கு உதவும் மூச்சு , சுவாசக் குழல் , உதரவிதானம், மார்புக் கூடு , விழ இடைத்தசைகள் மற்றும் நுரையீரல்களின் செயலை சீர்படுத்தி எல்லா சுவாசப் பணிகளையும் மேம்படுத்தப் பிராணாயாம பயிற்சி உதவுகிறது.

உங்கள் நண்பர்களோடும் பகிர்ந்து உதவுங்கள்...

செவ்வாய், 24 செப்டம்பர், 2013

நய்யாண்டி இசை விமர்சனம்

Nayyandi Song Revie - Parathan
தனுஷ்,நஸ்ரியா நடிப்பில் சற்குணம் அவர்களின் இயக்கத்தில் கதிரேசனின் தயாரிப்பில் ஜிப்ரானின் இசையில் வெளிவரவிருக்கிற படம்தான் நய்யாண்டி.
கடந்த ஞாயிறு சன்மியுசிக்ல தனுஷின் நேரலை இடம்பெற்றது அதில் இப் படத்தில் அவர் காமெடி கலந்த கதாப்பாத்திரமாக நடிப்பதாகக் கூறியிருந்தார்.

பாப்போம் படம் வரும்போது எப்படியென...

சரி. முதலாவது பாடலாக.


1.எல்லெல்லே எட்டிப் பார்த்தாளே

பாடியவர்கள் : Leon D’Souza, Sundar Narayana Rao

பாட்டுப் பாடியவர்களின் குரல் சிறப்பாக உள்ளது. மியூசிக்கும் சிறப்பாக அமைத்திருக்கிறார் இசையமைப்பாளர். 

காதலியின் பார்வை என்ன என்ன செய்கிறது என இப்பாடலின் வரிகள் அமைகிறது. நீங்களும் காதலில் இருக்கிறீர்களா இந்தப் பாடலை கேளுங்கள்.

2.இனிக்க இனிக்க

பாடியவர்கள்: Suzanne D’Mello, Padmalatha, Nivas, Sofia Symphony Orchestra


பாட்டின் மெட்டு நன்றாக இருக்கிறது. காதலர்கள் இருவரும் ஒவ்வொருவரும் தமது பார்வைகளை பற்றிக் கூறுவதாக ஒரு மெலோடியாக அமைந்திருக்கிறது.

3.Marriage marketல்

பாடியவர்கள்:  Sundar Narayana Rao

கல்யாணமாகாத பசங்களின் குமுறல். 

"marriage marketல் தாலிகட்ட பொண்ணு ஸ்டார்க் இல்ல"

முப்பது வயசான பசங்களுக்கு இன்னும் கல்யாணம் ஆகலைன்னு பீல்பண்ணிப் பாடுற பாட்டு தான் இந்தப் பாடல். 

matrimonyல் biodata கொடுத்தாலும் கல்யாணம் ஆகல expire ஆகுறதுக்கு முன்னாடி பொண்ணு குடுங்க...

அப்படியென இந்தப் பாடல் செல்கிறது...

4.முன்னாடி போற பொண்ணு

பாடியவர்கள்: Divya Kumar, Swetha Menon, Gold Devaraj

பாட்டின் மெட்டு சூப்பர். மியூசிக்கும் சூப்பராக அமையப்பட்டுள்ளது. பொண்ணுக்குப் பின்னாடி போற பையன் பாடுறாரு

 "முன்னாடி போற பொண்ணு" என

அதற்கு பெண் "பின்னாடி நீயும் வர்ற வெக்கம் வருமா" எனப் பாடுகிறார்.

பாடலை நீங்களும் கேட்டுப்பாருங்கள்.

5.ஏண்டி பாதகத்தி

பாடியவர் :  Gold Devaraj

காதல் தோல்வியில் பாடும் ஆணின் மனநிலையில் பாடும் ஒரு பாடல் தான் இது. 

"பட்டாம்பூச்சியை சவுக்கால அடிச்சவளே"

எனப் பாடல் ஒரு சொகாமாக செல்கிறது. love failureஎன்றால் இந்தப் பாடலை நீங்கள் கேளுங்களேன்..

6.Teddy Bear

பாடியவர்: தனுஷ்

உங்களுக்கே தெரியும் தனுஷ் என்றால் பாட்டு சும்மா பட்டயக் கெளப்பும். இந்தப் பாடல் teaserல் வந்தே பட்டையைக் கெளப்பிய பாடலாகும்.

"teddy bear காட்டி உறங்கிடும் குட்டி மலர் இவ பாத்தா மனசொரு கட்டிங் அடிக்குதப்பா"

பாட்டு மேட்டு சொல்லவே தேவையில்ல சூப்பர். இடையிடையே காக் ஆகும் பீ காக் ஆகும் என இடையிடையே வருகிறது.

பாட்டு மொத்தத்தில் சூப்பர்..

ஆல்பமும் நன்றாக அமைந்திருக்கிறது.

அல்பத்திட்கு எனது rating 4/5

திங்கள், 23 செப்டம்பர், 2013

Antivirus ஐ ஏன் update செய்யவேண்டும்..?

ஏற்கனவே எமக்குத் தெரியும் antivirus என்றால் என்ன என.. இந்த உலகம் கணனியால் இயங்குள் உலகமாக மாறிவருகிறது.

நாம் கணணியைப் பயன்படுத்தும் போது அதில் எமக்கு தேவையான file கள் இருக்கும் தேவையற்ற fileகள் இருக்கும். அப்படிப்பட்ட fileகளே வைரஸ் ஆகும்.

நாளுக்கு நாள் புதுப் புது வைரஸ்கள் hackerகளால் உருவாக்கப்படுகின்றன. அப்படிப்பட்ட virus களை அழிக்கும் doctor தான் antivirus. எனவே வைரஸ் கள் தினமும் உருவாக்கி இணையத்தில் hackerகள் விடுவார்கள்.

அப்படி உருவாக்கப்பட்ட வைரஸ்களை ஒழிக்கும் பொருட்டு antivirus நிறுவனத்தால் உருவாக்கப்படும் மருந்து தான் anti-dos எனப்படுவது.

அதை பெற நீங்கள் antivirus ஐ கட்டாயம் update செய்யவேண்டும். இல்லாவிட்டால் உங்கள் கணனிக்கு வந்த வைரஸ் ஐ அழிக்கும் தன்மை உங்கள் antivirusக்கு இருக்காது. அதைவிட நீங்கள் scan செய்யும்போது வைரஸ்ஐயும்இனம்காட்டாது.

எனவே உங்கள் கணணியை வைரஸ் தொல்லையிலிருந்து நீக்க update செய்வது நல்லது.

வருமுன் காப்போம்.

ஞாயிறு, 22 செப்டம்பர், 2013

அளவு கூடிய File களை வேகமாக copy செய்ய

நாம் பொதுவாக copy & paste தான் அதிகமாகப் பாவிக்கிறோம். நாம் ஒன்றை copy செய்து paste செய்யும் போது fileன் அளவு அதிகமாக இருப்பின் நேரமினக்கேடு ஏற்படும் , இல்லையென்றால் copy செய்யப்படும் போது ஒரு file copy செய்யப்பட மாட்டது என்றால் உடனே copy செய்யும் முறையை கணணி நிறுத்தும் அப்படி நிறுத்தும் போது என்னமாதிரி கோபம் வருமென எனக்கும் தெரியும்க..

அதுக்காக விண்டோஸ் கணனிகளுக்கு இந்தப் பிரச்சினைகளிலிருந்து தப்பிக்க ஒரு மென்பொருள் உள்ளது அதன் பெயர்

Teracopy - டவுன்லோட் செய்ய

இதை உங்கள் கணனியில் install செய்யுங்கள்.

இதன் சிறப்பம்சமாக ஒரு fileஐ நீங்கள் copy செய்து இன்னொரு இடத்தில் paste எனக் கொடுத்தவுடன் இது தன் வேலையே ஆரம்பிக்கும்.



இன்னொன்று இது copy & paste செய்யும் போது ஒரு file copy செய்யப்படா விட்டால் அதைத் தவிர்த்து மீதி fileகளை paste செய்து விட்டு paste செய்யப்படாத file களை காட்டும்.



பின்னர் அதை நீங்கள் paste செய்து கொள்ளலாம்.

மென்பொருள் பிடிக்கவிள்ளஎன்றால் Start --> Programs --> Teracopy --> Uninstall Teracopy செய்து விட்டு பழைய காப்பி முறையை பெற்று கொள்ளுங்கள்.

என்னங்க தகவல் நல்லா இருக்கா.. தினமும் இப்பிடி தகவல் தகவலா சொல்றேன் .... உங்க நண்பர்களோடையும் share செய்து அவர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள்.

நன்றி
பரதன்

Powerpoint fileகளை வீடியோக்களாக மாற்ற

பொதுவாக நாம் Microsoft Office என்றால் MS Word ஐ அதிகமாக பாவிப்போம். அதற்குப் பிறகு அனிமேசன் மற்றும் எழுத்துகளை அழகுபடுத்தி slide ஷோவவாக தயாரிக்க Power pointஐ தான் பாவிப்போம்.

அப்படிப்பட்ட Power pointல் நீங்கள் தயாரித்த slideshow project ஐ வீடியோவாக மாற்றிப் பார்க்க ஆசையா அதுதாங்க படம் தொடங்கும் போது எழுத்துகள் போகும்தானே அப்படி உருவாக்கி (எழுத்தோட்டம் மாதிரி ஒரு அளவுக்குத்தான் வரும்) youtube என்பவற்றில் இணைக்க விருப்பமாக இருந்தால் இந்த மென்பொருளை தரவிறக்குங்கள்.  

Leawo PowerPoint to Video Free



இந்த மென்பொருள் PPT, POT, PPTX, PPS போன்ற format களுக்கு இந்த மென்பொருள் வீடியோவாக மாற்ற உதவும். இதில் இன்னொரு சிறப்பு உள்ளது நீங்கள் Audio இன்றி slide show தயாரித்தாலும் பின்னர் இந்த மென்பொருள் மூலம் ஆடியோவை upload செய்து வீடியோ தயாரித்து மகிழுங்கள்.

பதிவு சிறப்பாக இருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.

நன்றி
பரதன்...

சனி, 21 செப்டம்பர், 2013

உங்கள் போனில் உள்ள Opera Mini இணைய உலாவியில் தமிழ் font activate செய்ய...

Opera Mini இணைய உலவி பல விலை குறைந்த தொலைபேசிகளுக்கு இணைய சேவையை குறைந்த கட்டணத்திலும், மிக வேகமாகவும் dataகளை கடத்தி சீக்கிரமாக இணையத்தை தொலைபேசி மூலம் பார்க்க உதவுகிறது.

அப்படிப்பட்ட Opera mini உலாவியில் Regional மொழிகளாக சில மொழிகள் இருக்கும், அதாவது பொதுவாக தொலைபேசியில் இணையம் பார்க்கும் போது ஆங்கில எழுத்துகளை மட்டுமே எம்மால் பார்க்க முடியும் , தமிழ் மொழியில் எழுதப்பட்ட பதிவுகள் சதுரமாக மட்டுமே தெரியும்... இதனால் நாம் கணணி இணைய இணைப்பாய் நாடுகிறோம்.

இன்று நான் கூற வருவது தொலைபேசியிலேயே தமிழில் எழுதப்பட்ட பதிவுகளை சதுர வடிவாகக் காணாமல் தெளிவாக வாசிப்பது எப்படி எனச் செய்வதேயாகும்.

முதலாவதாக உங்கள் தொலைபேசியில் Opera Mini உலவியை open செய்யுங்கள்..

address பாரில் அனைத்து அதாவது (http://) என்பதை அழித்து config: என type செய்து Go வை கொடுத்தால்

Power user setting , open ஆகும் அதில் use bitmap fonts for complex script என்பதை Yes என மாற்றி save செய்யுங்கள்.



அவளவுதான் இனி நீங்கள் உங்கள் விலை குறைந்த போனிலும் கூட Opera Mini உலவியைப் பயன்படுத்தி விலை கூடிய போனில் பார்க்கக் கூடிய தமிழ் பதிவுகளை வாசித்து மகிழலாம்.

இந்தப் பதிவு நான் எழுதக் காரணம்... எனது பதிவுகளை போனில் வாசிக்க முடியாது தமிழில் உள்ளது எனவே இந்த trick ஐ உங்களுக்குக் கூறுவதன் மூலம் நீங்கள் எனது தளத்தை போனிலேயே பார்ப்பீர்கள் அல்லவா..??

சரி பதிவு பிடித்தால் உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.....

வியாழன், 19 செப்டம்பர், 2013

"ஆரம்பம்" இசை விமர்சனம்

விஷ்ணு வரதன் இயக்கத்தில் அஜித்,ஆர்யா,நயன்தார,தாப்சி என பல நட்சத்திரக் கூட்டணிகள் இணைந்து நடித்து வெளிவரவிருக்கும் திரைப்படம் ஆரம்பம். ஏற்கனவே ஒரு டீசர் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. இன்று அதன் பாடல்கள் வெளியாகியுள்ளது. இதற்கு இசையமைத்துள்ளார் யுவன் ஷங்கர் ராஜா. வழக்கம் போல சிறந்த பாடல்களைத் தந்துள்ளார் இசையமைப்பாளர்.

ஒவ்வொரு பாடலாக விமர்சனம் பாப்போம்...

1. அடடடா ஆரம்பமே...!!

பாடியவர்: ஷங்கர் மகாதேவன்
பாடலாசிரியர்: பா.விஜய்

இந்தப் பாடல் அநேகமாக தலையின் introduction பாடலாக இருக்கும். அவளவு energetic ஆக பாடியுள்ளார் ஷங்கர் மகாதேவன். பாடல் வரிகள் எல்லாமே சூப்பர். tune உம் நல்லதாக உள்ளது. பாடலிலும் "ஆட்டம் ஆரம்பம்" என வருகிறது. பாடல் கேக்கும் போதே சும்மா ஆடனும் போல இருக்கு...
நீங்க கேட்டா தலைக்கு இது தான் செம பாட்டு...

பாடல் வரி வாழ்க்கை தத்துவம் பற்றி கூறுகிறது. "நேற்றிருந்த ராஜா எல்லாம் இன்னைக்கு காணோம்.. அதுதாண்டா வாழ்க்கை" 

இப்படி நிறைய வாழ்க்கைக்கு உதவும் வரி இருக்கிறது. சொல்லப் போனால் பாடல் வரி முழுவதையுமே எழுத வேண்டும்.

2.என் fuse போச்சே


பாடியவர்கள் : கார்த்திக், ரம்யா NSK
பாடலாசிரியர்: பா.விஜய்

காதலியை கண்டவுடன் "என் fuseம் போச்சே" எனப் பாடி loveஐ accept பண்ணனும் எனப் பாடுகிறார். பாடவ வரி சூப்பர்.

"M sizeல் இருந்த என் heartஐ double xl ஆக love பண்ணிட்ட"

எப்படியெல்லாம் பாட்டு எழுதியிருக்காரு பாடலாசிரியர்.

"எந்த ஒரு ஆர்ப்பாட்டமுமே இல்லாமல் தானே உன்னை காதலிக்கிறேன்... முடியாது என நீ சொல்ல முடியாது என ஆண் தன காதலைக் கூறுகிறார்."

இப்படியெல்லாம் அவர் இப்படிப் பாட பெண் உடனே
 "முடியாதென சொல்ல முடியலையே உன்னாலே" எனப் பாடுகிறார்..

பெண் தன் காதலை சொன்னவுடன் அப்படியே பாடல் முடிகிறது....

மியூசிக் சிறப்பாக அமைந்திருக்கிறது...

3. ஹரே ராமா

பாடியவர்கள்: Tanvi Shah , Shakthi sree Gopalan
பாடலாசிரியர்: பா.விஜய்


பாடலின் மியூசிக் நல்ல இருக்கு. இடைக்கிடையில் ஆங்கில வார்த்தைகளும்.. இருக்கிறது... காதல் வயப்பட்ட பெண் பாடும் விதமாக இந்தப் பாடல் இருக்கிறது.

4.மேலால வெடிக்குது 

பாடியவர்கள்: விஜய் ஜேசுதாஸ், ரஞ்சித்
பாடலாசிரியர்: பா.விஜய்

பாடல் வரிகள் அழகாக அமைந்துள்ளது. நட்பு பற்றி சில வரிகள் இதில் வருகிறது.
"நட்புக்கு ஒரு கோவில் இல்லை, நட்பே ஒரு கோவில்" என பாடல் வரி வருகிறது. 

"வாழ்க்கை ஒரு வானம் அதில் நட்பே வர்ணம் ஆச்சு, வார்த்தை இல்லை தோழா நீயே எந்தன் மூச்சு"

பா.விஜய் சிறப்பாக பாடல்களை எழுதியுள்ளார்.

மியூசிக்கும் சிறப்பாக இடையிடையே மெலடி போல வந்து வந்து சிறப்பாக compose செய்துள்ளார் யுவன்.

5.ஸ்டைலிஷ் தமிழச்சி

பாடியவர்கள்:  M.M.Manasi , Ruba bend , Psyc
பாடலாசிரியர்: பா.விஜய்

பாடல் ஸ்பீட் ஆகப் போகிறது. அரைவாசி பாடலும் கொஞ்சம் கொஞ்சம் தான் போகும். இடையிடையில் "அழகிய தமிழச்சியே" என வருகிறது. பாடல் மியூசிக் நல்லா இருக்கு...
இறுதியில் ஒரு வரி வருகிறது "முரட்டுத் தமிழச்சி நான் உனக்கும் எனக்கும் தெரியும் விளையாட்டுப் பொருளில்லை நாம்" என்று அந்த பாடல் வரி இருக்கிறது. தமிழ் பெண்களின் தன்மையையும் பாடலாசிரியர் கூறுகிறார்.

மேலே காணப்பட்ட 5 பாடல்களும் சிறந்த பாடல்களாக பாடல் வரிகள் சரி, மியூசிக் அமைப்பு போன்றன சிறப்பாக உள்ளன.

#"ஆரம்பம்" பாடல்களிற்கு எனது Rating : 8.85/10

செவ்வாய், 17 செப்டம்பர், 2013

Hard diskல் delete செய்யப்பட்ட Fileகளை மீட்டெடுக்க..

நாம் எமக்குத் தேவையில்லையென அளித்து விடுவோம். அப்படி அளித்துவிட்டு recycle bin க்குள் இருக்குமெனப் பார்த்தால் அங்கும் சில வேளைகளில் இருக்காது. சிலவேளைகளில் restore செய்யும்போது வரலாமென நினைத்து செய்யும் போதும் சில வேளை கோப்பைப் பெற முடியாது. அப்படியானால் என்ன செய்வது?? அதற்காக ஒரு மென்பொருள் உள்ளது.. அது பற்றி நாம் பாப்போம்...

download செய்வதற்கான சுட்டி

அப்படித் தரவிறக்கிய பின் கீழ் கண்ட படம் வாறு காணப்படும்..

 இனி நீங்கள் எந்த drive இலிருந்து fileஐ delete செய்தீர்களோ அந்த drive ஐ ஸ்கேன் செய்து கொள்ளுங்கள் அப்போது நீங்கள் அளித்த file கள் தோன்றும் அதில் Undelete எனும் பட்டனை அழுத்துங்கள்.

அப்படி அழுத்திய பின்னர் அந்த file முதல் இருந்த இடத்திலே restore செய்யப்பட்டு இருக்கும்.


அவளவு தான் இழந்த file ஐ பெற்றுவிட்டீர்கள்...

பதிவு பிடித்திருந்தால் நண்பர்களோடும் share செய்து உதவுங்கள்..

நன்றி
பரதன்

திங்கள், 16 செப்டம்பர், 2013

உங்கள் G-mail account ஐ வேறு யாராவது use செய்கிறார்களா என அறிய..

பல பேர் தமது மின்னஞ்சல் முகவரியை G-mail ல் create செய்து வைத்திருப்பீர்கள். அப்படி நீங்கள் உங்கள் mail களை check செய்த பின் sign out செய்யாது விட்டிருப்பீர்கள்.

அந்த check செய்த இடம் உங்கள் வீடு என்றால் பரவாயில்லை நெட் கபே களில் browse செய்து விட்டு sign out செய்யாது போய் விட்டால் அதை வைத்து சில வேளைகளில் தவறான முறைகளில் பயன்படுத்தக் கூடும் எனவே அப்படிப்பட்ட பிரச்சினைகளைக் கண்டறிவது பற்றிப் பார்ப்போம்.

முதலில் உங்கள் G-mail account இனுள் login செய்து கொள்ளுங்கள்..
கீழ் scroll down செய்து details என்பதில் அழுத்துங்கள்..


பின்னர் அவ்வாறு கிளிக் செய்த பின் இவ்வாறு தோன்றும் விண்டோவில் 
Sign out all other sessions



என்பதை கிளிக் செய்து புதிதாக password ஐ மாற்றிக் கொள்ளவும்...


அவளவு தான் இனி உங்கள் G-mail account பாதுகாப்பாக உள்ளது...

நன்றி 
பரதன்

Send பண்ணிய e-mail பார்க்கப்பட்டதா இல்லையா என அறிய...!!

நாம் ஒருத்தருக்கு நேரம் மினக்கெட்டு mail compose செய்து அனுப்புவோம். ஆனால் சிலவேளை நீங்கள் நினைகலாம் நாம் அனுப்பிய mail படித்துவிட்டரா இல்லையா என நீங்கள் அதை அறிந்துகொள்ள ஒரு இலகு வழிதான் இது getnotify.com என்ற தளத்திற்கு சென்று பதிவு செய்து அதன் பின்னர் Track New Email என்பதை கிளிக் செய்யுங்கள்.

விபரங்களை கொடுத்த பின்னர் நீங்கள் அனுப்பும் மின்னஞ்சலுடன் சேர்த்து அனுப்புவதற்கு ஒரு .gif இமேஜ் உருவாக்கித் தரப்படும். அந்த இமேஜ் ஐ drag drop முறையில் கம்போஸ் செய்யும் மெயிலுக்குள் ஒட்டி விட வேண்டும்.

இவ்வாறு அனுப்பப்படும் மின்னஞ்சல் கிடைக்கப்பட்டதும் குறித்த நபர் மின்னஞ்சலை படித்தவுடன் உங்களுக்கு உறுதிப்படுத்தப்பட்ட ஒரு மெயில் வந்து சேரும்.

Click Here: http://www.getnotify.com/

இது போன்றே இன்னும் இலகுவான மின்னஞ்சலை ட்ரேஸ் செய்யும் 
முறை உங்களுக்கு தெரிந்தால் இங்கே COMMENT BOX ல் பகிருங்கள்...

பதிவு உதவியாக இருந்தால் நண்பர்களோடு பகிருங்கள்!!!

வெள்ளி, 13 செப்டம்பர், 2013

"Server security certificate is not valid" என வந்தால் என்ன செய்வது?

வணக்கம் நண்பர்களே!! நான் இன்று windows 7 ஐ வைரஸ் பிரச்சினை காரணமாக மறுபடி install செய்துவிட்டு Google chrome ஐ டவுன்லோட் செய்து yahoo , gmail, facebook போன்ற தளங்களிட்கு சென்ற open செய்த போது Server security certificate is not valid என வந்தது. இப்படி எனக்கு வந்த பிரச்சினை பல பேருக்கும் வந்திருக்கும். எனவே இதை எப்படி சரி செய்வது என இன்று உங்களுக்குக் கூறுகிறேன்.

பொதுவாக இப்படி வரக் காரணம் உங்கள் கணனியில் திகதி,நேரம் பிழையாக இருப்பதே காரணம். இது போன்ற பிரச்சினையை மேலும் தொடராமல் இருக்க கீழுள்ள முறைகளின் மூலம் சரி செய்து கொள்ளுங்கள்.


  1. control panel ஐ open செய்து அதில் Date and Time என்ற option ஐ கிளிக் செய்யுங்கள்.
  2. பின்னர் கீழுள்ளவாறு படம் தோன்றும் அதில் Internet time என்ற option ஐ கிளிக் செய்யுங்கள்.

இனி Update Now என்ற option ஐ கிளிக் செய்யுங்கள் 

ஒரு ஏழு, எட்டு நிமிடங்களுக்குப் பிறகு 
"The time has been successfully synchronized with time.windows.com on 07-07-2013 at 5:09PM. 

என வரும் இனி உங்கள் கணனியின் நேரம் பிழையாக ஓடினாலும் இணையத்தை இணைக்கும் போது சரியான நேரம் காட்டும்...

பதிவை வாசித்த உங்களுக்கு நன்றி...!!

நன்றி
பரதன்

வியாழன், 12 செப்டம்பர், 2013

விண்வெளி தொடர்பான பொது அறிவுகள்


வணக்கம்நண்பர்களே..உங்களுக்காக http://parathan20.blogspot.com/ இலிருந்து இன்று (12 செப்டம்பர்) முதல் தமிழில் பொது அறிவுக் கேள்விகளும் அவற்றிற்கான விடைகளினையும் உங்களுக்குத் தர தயாராக உள்ளேன். உங்கள் கருத்துக்களையும் கீழுள்ள கருத்துப் பெட்டியில் பதிவிடலாம்..
சரி தொடங்குவோம்...

விண்வெளியில் முதன் முதலில் நடந்த விண்வெளி வீரர் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
ரஷ்சியா


விண்வெளியில் முதன் முதலில் நடந்த வீரர் யார்?
அலெக்சி ஏ.லோனோய்

முதன் முதலில் விண்வெளிக்குச் சென்று திரும்பிய விண்வெளி வீரரின் பெயரும் , அவர் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
ரஷ்சியா , யூரி ககாரின்

உலகின் முதலாவது விண்வெளி வின் வெளி வீராங்கனையின் பெயர் என்ன?
வலண்டினா.வி.தெரங்கோலா

சந்திரனில் இரண்டாவதாகக் காலடி வைத்தவர் யார்?
பியரி தோட்

மெக்சிகோ நாட்டின் முதல் விண்வெளி வீரரின் பெயர் என்ன?
றேரி வேலர்

விண்வெளிப் பயணத்தின் பொது இறந்த முதல் விண்வெளி வீரர் யார்?
கோங் கோமரால்

போலந்து நாட்டின் விண்வெளி வீரர் என்ற பெருமைக்கு உரியவர் யார்?
எட்வர்ட் வைட்

இஸ்ரேல் நாட்டின் முதல் விண்வெளி வீரரின் பெயர் என்ன?
இவான் சமோம்

ரஸ்சியாவின் வீரர்களை எப்படி அழைப்பார்கள்?
"காஸ்மோனாட்" என அழைப்பர்

முதன் முதலில் விண்வெளிக்கு அனுப்பப்பட்ட ஊனமுற்றவரின் பெயர் என்ன?
மைக் ரோஜர்ஸ்

சந்திரனில் உள்ள மிக உயரமான மலை பெயர் என்ன?
லீப்டனிட்ஸ்

சூரியக் குடும்பத்தில் மிகப் பெரிய கோளின் பெயர் என்ன?
வியாழன்

1968  ஆம் ஆண்டு ரஷ்சியா அனுப்பிய Zond-5 என்ற வின் களத்தின் மூலம் சந்திரனைச் சுற்றி வந்த முதல் உயிரினம் எது?
ஆமை

உலகின் முதல் விண்வெளி வீரரான யூரி ககாரின் பூமியை எத்தனை முறை சுற்றி வந்தார்?
ஒரு முறை

விண்வெளிக்குச் சென்ற முதல் பத்திரிகயாளரின் பெயர் என்ன?
விட்டாலி செவங்தியாநெங்

இத்தாலி நாட்டின் முதல் வின் வெளி வீரரின் பெயர் என்ன?
பிரான்கோ மெலாக்மர்

சந்திரனில் நீல் ஆர்ம்ஸ்ட்ராங் காலடி வைத்த இடத்தை எப்படி அழைக்கிறார்கள்?
அமைதிக் கடல்

விண்வெளிக்குச் சென்ற முதல் மருத்துவரின் பெயர் என்ன? (டாக்டர்)
ஜோசப் கெர்வின்

நீங்கள் அறிந்த இந்த விடயங்களை உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்து உதவுங்கள்......

புதன், 11 செப்டம்பர், 2013

வீடியோக்களை Wallpaper ஆக விண்டோஸ் 7ல் எப்படி விடுவது??

நாம் பொதுவாக எமது desktop ல் படங்களைத் தான் wallpaper ஆக விட்டிருப்போம். வீடியோவை எப்படி விடுவது என நீங்கள் ஜோசிக்கலாம்... அதெல்லாம் விடலாம் அப்டின்னு prove பண்றதுக்காகத்தான் நான் இந்த post ஐ எழுதுறேன்.

முக்கிய குறிப்பு உங்கள் கணணி slowவாக இருந்தால் தயவு செய்து இதை பரீட்சித்துவிட்டு நீக்கிவிடுங்கள் , இல்லேன்னா உங்க computer ஐ struck ஆக்கிடும். மத்தவங்க அத அப்படியே விடலாம்.. சரி அது எப்படின்னு பாப்போம்...

முதல்ல 
  •  Download the Dream scene installer here எனப்படும் software ஐ download செய்யவும்
  • பின்னர் Extract and run Install_Dreamscene_for_Windows_7.exe அது உங்கள் மொழியைத் தெரிவு செய்யச் சொல்லும்
  • பின்னர் software automatic ஆக install ஆகிய பின்  .wmv(Windows Audio/Video file) video
என்ற வீடியோ file ல் right click செய்து Set as Wallpaper என்பதை click செய்யுங்கள்.

 அவளவு தான்..
குறிப்பு wallpaper ஆக நீங்க விடக்கூடிய வீடியோ file கள் அனைத்துமே   .wmv(Windows Audio/Video file) video format களிலேயே இருக்கவேண்டும். அப்படி இல்லையென்றால் வீடியோவை convert செய்யுங்கள்

பதிவு உதவியாக இருந்தால் நண்பர்களோடு பகிருங்கள்.

செவ்வாய், 10 செப்டம்பர், 2013

மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மேற்கொள்ள வேண்டியவை

மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பெற்றோருடன் பேசுவதற்கு விரும்பமாட்டார்கள். இருந்தபோதிலும், அவர்களுடன் நேரடியாடவோ அல்லது அவர்கள் மிகவும் விரும்புகின்ற நண்பர்கள் அல்லது உறவினர்கள் மூலமாகவோ பேசுவது நன்மைகளை ஏற்படுத்தும்.


இவ்வாறு பேசுவதன் மூலம் , அவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்திய விடயம் எது என்பதை அறிவதற்கு வாய்ப்பு ஏற்படும். அவர்களுடன் உரையாடலில் ஈடுபடும் நேரத்தில் சில முக்கியமான சில விடயங்கள் மிகவும் முக்கியமானவை...

அவையாவன.

1. குழந்தைகள் சொல்வதை மிகவும் கவனமாகக் கேட்க வேண்டும். இது சொல்வதற்கு எளிது, ஆனால் செயற்படுத்துவது கடினம்

2. அவர்கள் மனதில் இருப்பதைப் பேசிக்கொண்டு இருக்கும் போது நடுவே குறுக்கிடுவது, ' எனக்கு அப்போதே தெரியும்' என்பது, 'அதுதான் நீ எப்போதும் செய்யும் தப்பு' என்பது, 'சரியான முட்டாள் நீ' என்று அதட்டுவது போன்ற வார்த்தைகளைக் கொட்டக் கூடாது.

3. அவர்கள் நினைப்பதைஅவர்கள் சொந்த வார்த்தைகள் மூலமாக வெளிப்படுத்த அனுமதிக்க வேண்டும்.அவர்கள் கூறி முடிக்கும் வரையில் பொறுமையாக காத்திருக்க வேண்டும். அவர்கள் பேசுவதைக்கொண்டு எப்படியெல்லாம் கற்பனை செய்திருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

குழந்தைகள் சொல்லும் விடயத்தை தெளிவாகப் புரிந்துகொள்ள அவ்வப்போது சிறு கேள்விகளை கேட்கலாம் ஆனால், அது அவர்கள் பேசுவதை தடுப்பதாகவோ, என்னத்தை திசை திருப்புவதாகவோ இருக்கக் கூடாது.

ஆதரவு வார்த்தைகள், நம்பிக்கையூட்டும் வார்த்தைகளை கூறி அவர்களுக்கு ஊக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.

"நான் உன்னை ஒரு வாரமாக கவனித்து வருகிறேன். நீ மிகவும் கவலையோடு இருக்கிறாய்" என்று சொல்ல வேண்டாம். இவ்வாறு சொல்வதன்மூலமாக பெற்றோர் தன்னை கவனித்து வருகிறார்கள் தனது நலனில் அக்கறை காட்டுகிறார்கள் என்பதைக் குழந்தைகள் புரிந்து கொள்வார்கள்.

இது அனைத்தும் ஓர் மாதப் பத்திரிகயிளிருந்து பெறப்பட்டது.. உங்கள் பார்வைக்காக இதைப் பிரசுரித்தேன். நீங்களும் இதை உங்கள் நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.

சனி, 7 செப்டம்பர், 2013

இன்றைய அரசியலில் கிட்டத்தட்ட காமெடியனாக சித்தரிக்கப்படும் விஜயகாந்தின் பரிணாம வளர்ச்சி...

நண்பர்கள் அனைவர்களுக்கும் ஒரு குறிப்பு. இந்தப் பதிவு Enaku chain Ahh. unaku Mothiram. என்ற முகநூல் மூலம் பெறப்பட்டது. இதை வாசித்த பின் எனக்கு நடிகர் விஜயகாந்தின் மீது சற்று மதிப்பு ஏற்பட்டது. அதை உங்களுடன் பகிரவே இதை இங்கு பிரசுரிக்கிறேன். வாசித்து உங்கள் கருத்தைக் கீழே பதிவிடுங்கள்


சினிமாவில் நடிக்கும் ஆசையில் எழுபதுகளின் இறுதியில் மதுரை மாவட்டத்தில் இருந்து சென்னைக்கு வந்த விஜயராஜ் தான் பின்னாளின் ஒரு வெற்றிகரமான நடிகரான விஜயகாந்த் ஆவார்.

சினிமாவிற்குண்டான சில இலட்சணங்களை மீறிய தருணம் அது. சிகப்பு நிறமில்லை. சிலிர்க்க வைக்கும் உடற்கட்டு இல்லை. சினிமா பின்னணி இல்லை. இத்தனைக்கும் அந்த நேரத்தில் ரஜினியும் கமலும் மசாலா படங்களின் மூலம் கோலோச்சிய காலம்.

நெடிய போராட்டத்திற்கு பின்பு “இனிக்கும் இளமை” என்றொரு படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். இவரின் அடுத்த படமான “தூரத்து இடி முழக்கம்” மாநில மொழி திரைப்படத்திற்கான தேசிய விருதினை பெற்ற படமாகும். எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் இவரின் வெற்றி நடை ஆரம்பம் ஆனது. 

அந்த காலகட்டத்தில் ஓடும் குதிரையில் (இயக்குனர்) தான் ரஜினியும் கமலும் பயணித்த நேரத்தில் புதிய இயக்குனர்களின் தேர்வாக இவர் அமைந்தார். திறமையான புதிய இயக்குனர்களின் கதைகளுக்கு முக்கியத்துவம் அளித்து வெளி வந்த அனைத்து படங்களும் சக்கை போடு போட்டன. 

திரைப்பட கல்லூரி மாணவர்களுக்கு வாய்ப்புகளை அளித்து ஊக்கம் அளித்தவர் இவர் மட்டுமே. ஆபாவாணன், ஆர்.சுந்தர்ராஜன், ஆர்.வி.உதயகுமார் என பட்டியல் நீளும். அம்மன் கோவில் கிழக்காலே, வைதேகி காத்திருந்தாள், சின்னக்கவுண்டர், கேப்டன் பிரபாகரன், ஊமை விழிகள் என சிறு தயாரிப்பளர்களின் வசூல் சக்ரவர்த்தியாக இவர் திகழ்ந்தார்.

இயக்குனர்கள் மட்டும் அல்ல. இவர் மூலம் அறிமுகம் செய்யப்பட்ட / ஒத்துழைப்பு அளிக்கப்பட்ட நிறைய சினிமா பிரபலங்கள் உண்டு. பீலி சிவம், அ.செ.இப்ராகிம் ராவுத்தர், நடிகர் சரத்குமார், கசான்கான், அருண் பாண்டியன், ஆனந்தராஜ், மன்சூர் அலிகான், விஜய் என இந்த பட்டியலும் நீளமே. 

இவ்வளவு ஏன்? கடந்த தேர்தலில் இவரை கடைந்தெடுத்த வடிவேலு கூட இவரால் வளர்ந்தவரே. அறிமுகம் வேண்டுமானால் ராஜ்கிரணாக இருக்கலாம். ஆனால் தொடர்ச்சியாக வாய்ப்பளித்தது விஜயகாந்த்தான். சின்ன கவுண்டர் படத்தில் கவுண்டமணியால் ரிஜெக்ட் செய்யப்பட்ட வடிவேலுவை மீண்டும் பேசி சிபாரிசு செய்து நடிக்க வைத்தார். 

மீண்டும் கங்கை அமரன் இயக்கத்தில் வந்த கோயில் காளை திரைப்படத்தில் கவுண்டமணி முட்ட அமரனிடமும் கவுண்டமணியிடமும் பேசி வடிவேலுவை நடிக்க வைத்தார். இதை நடிகர் செந்திலே ஒரு பேட்டியில் தெரிவித்தார். இப்படி இவரால் வாழ்க்கை பெற்றவர்களே அதிகம். அதனால்தான் திரைப்பட உலகத்தில் எவரும் இவரை குறைத்து பேச மாட்டர். இயக்குனர் பாக்யராஜ் மீண்டும் திரை இயக்கம் தொடங்கிய போது இவரின் முதல் தேர்வாக அமைந்தவர் விஜயகாந்த்தான்.

இவரின் நிர்வாகத்திறமையை சிலர் குறைத்து மதிப்பிடுகின்றனர். பல ஆண்டுகளாக கடனில் தவித்த, சிவாஜி, மேஜர், ராதாரவி போன்ற ஜாம்பவான்களாலும் கைவிடப்பட்ட திரைப்பட இயக்குனர் சங்கத்தின் தலைவராக இவர் தேர்ந்தெடுக்கப்பட்டதும் அதன் கடனை முற்றிலும் அடைத்ததோடு மட்டுமின்றி கையிருப்பையும் அதிகப்படுத்தினார். 

அனைத்து நடிகர்களையும் மலேசியாவிற்கு அழைத்து சென்று நிகழ்ச்சிகள் நடத்தியது இவர்தான். அந்த சமயத்தில் இவரது திறமையான நிர்வாகம் அனைவராலும் பாராட்டப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். இவரின் தொலைக்காட்சி நிர்வாகமும் சிறப்பாக இருந்து வருகிறது.

அரசியலுக்கு வருவேன் என பூச்சாண்டி காட்டிக்கொண்டிருக்காமல் அதிலும் காலூண்றி சாதித்தவர் விஜயகாந்த். ஜெயலலிதா, கருணாநிதி போன்ற பழம் தின்று கொட்ட போட்டவர்கள் மத்தியில் யாதொரு அனுபவமும் இன்றி தனி ஆளாக இவரின் ஆவர்த்தனம் ஆரம்பம் ஆனது.

 எந்த ஒரு நடிகையையும் இவர் கொள்கை பரப்பு செயலாளர் ஆக்கியதில்லை. இவரின் கூட்டங்களுக்கு வந்த மக்களை கவர யாதொரு கவர்ச்சி நடிகையும் கிடையாது. கருணாநிதிக்கு ஒரு எம்ஜியார் போல எம்ஜியாருக்கு ஒரு ஜெயலலிதா, நிர்மலா போல நடிகர் பட்டாளம் எதுவும் கிடையாது. 

எவருடனும் கூட்டணி இல்லாமல் இவர் வாங்கிய ஓட்டுக்கள் அரசியலில் ஜாம்பவானாக அறியப்பட்ட வைகோவையும் கலங்க வைத்தது. இவரின் தேர்தல் வாக்குறுதியான கறவை மாடுகள் வழங்கப்படும் என்கிற திட்டம் அதிமுக வால் இப்பொழுது செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

திருவாடானை தொகுதியில் ஒரு சுயேச்சை கூடை சின்னத்தில் போட்டியிட்டு முரசுவின் 24000 ஓட்டுக்களை பிரித்ததால் அங்கு 3000 ஓட்டுக்கள் வித்யாசத்தில் தேமுதிக தோற்றது. இது போல வஞ்சகத்தால் பிரிந்த ஓட்டுக்களுக்கு கணக்கே இல்லை. சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் இவ்வளவு போட்டிகளின் மத்தியிலும் இவர் 10000 வாக்குகளுக்கு கூடுதலாக பெற்றார் என்பது சிந்திக்க வேண்டிய விசயம்.

இயற்கையிலேயே சிவந்த கண்களுக்கு சொந்தக்காரர் ஆன இவருக்கு முன் கோபமும் அதிகம். இதன் மூலம் மற்ற கட்சிக்காரர்களுக்கு கேலிச்சித்திரமானார். இவர் நடத்திய கணிணி இலவச வகுப்புகளினால் பயனடைந்த கிராமப்புற மாணவர்கள் அதிகம். இலங்கை தமிழர்களின் துயரை மனதில் கொண்டு இவர் பிறந்த நாள் விழாவே கொண்டாட மாட்டேன் எனவும் மகனுக்கு பிரபாகரன் எனவும் பெயரிட்டு தன் பங்கினை அளித்தவர் இவர்.

விஜயகாந்த்தின் பல திறமையான செயல்பாடுகளும், மக்கள் மனதில் இவர் பெற்ற இடமும் இருட்டடிப்பு செய்யப்பட்டது என்பதே உண்மை.

வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரை விமர்சனம்

'வருத்தப்படாத வல்பர் சங்கம்' ஒரு கலகலப்பான ஜாலியான அனைவரும் பார்த்து ரசிக்கக் கூடிய திரைப்படம்.


திண்டுக்கல்லில் இருக்கும் சிலுக்குவார் பெட்டியின் வருத்தப்படாத வாலிபர் சங்க தலைவராக வரும் சிவகார்த்திகேயனும் , ஊர் தலைவராக வரும் சத்தியராஜ் என்போர் தமது பங்கை சிறப்பாக ஆற்றியுள்ளார்கள்.

ஊரில் ஏற்படும் ஒரு வாய்த் தகராறில் சத்தியராஜ் தனது 3 பெண்களையும் காதல் திருமணம் செய்து வைக்கமாட்டேன் எனக் கூறி அவர் முதல் இரு பெண்களையும் அவசரமாகக் கல்யாணம் பண்ணி வைக்கிறார். 3வது பெண்ணாகிய ஸ்ரீ திவ்யாவுக்கு கல்யாணம் பண்ணி வைக்கும் போது சிவகார்த்திகேயன் இத் திருமணத்தைத் தடுக்கிறார்.

இதனால் சத்தியராஜுக்கும் , சிவகர்த்திகேயனுக்குமிடையில் முரண்பாடு ஏற்படுகிறது. இதே வேலை ஸ்ரீதிவ்யா சிவகார்த்திகேயனை ஒரு தலையாகக் காதலிக்கிறார்.

ஆனால் சிவகார்த்திகேயன் அந்த ஊரிலுள்ள டீச்சர் பிந்து மாதவியை ஒரு தலையாகாக் காதலிக்கிறார். ஆனால் பிந்து மாதவி சிவகர்த்திகேயனை தவிர்த்து விட்டு வேறு கல்யாணம் செய்கிறார்.

பின்னர் கோவில் திருவிழாவில் சிவகர்த்திகேயன் நடிகைப் பார்த்து காதலில் விழுகிறார். இதிலிருந்து இவர்களுக்கு காதல் ஏற்படுகிறது.

பின்னர் இந்த விஷயம் சத்தியராஜுக்கு தெரிய வருகிறது. அதன் பின் சத்தியராஜ் இருவரையும் சேர்த்து வைத்தாற இல்லையா என்பதுதான் கதை....

இப் படத்தில் முக்கியமாக சூரி காமெடியில் சிறப்பாகக் கலக்கியிருக்கிறார்.
படத்தின் இயக்குனர் பொன்ராமும் சிறப்பாக படத்தை இயக்கியுள்ளார்.
படத்தில் சத்தியராஜ் தனது பங்கினை சிறப்பாகச் செய்துள்ளார்.
ஒளிப்பதிவாளரின் ஒளிப்பதிவுத் திறமை மிகவும் சிறப்பாக உள்ளது.

படத்திற்கு மேலும் அழகூட்ட இமானின் இசை சிறப்பாக அமைந்தது. குறிப்பாக ஏற்கனவே பாடல் வெளியாகி ஹிட் ஆகிய ஊதா கலரு ரிப்பன் , சிவகார்த்திகேயன் பாடிய பாடல் போன்றன சிறப்பாக இருந்தது...

மொத்தத்தில் படம் சூப்பர்....

Rating : 3.7/5

வெள்ளி, 6 செப்டம்பர், 2013

எம் மனதிற்கு உற்சாகமூட்டும் அப்துல் கலாமின் வார்த்தைகள்

எமக்கு டாக்டர் அப்துல் கலாம் அவர்களைப் பற்றி எவளவோ தெரிந்திருக்கிறோம். அவரையே எத்தனையோ பேர் ரோல்மாடல் ஆக வைத்து தமது வாழ்கையை நகர்த்துகிறார்கள். அவர் எத்தனையோ விதமான பல சிந்தனைகளைக் கூறியுள்ளார்

குறிப்பாக இளைஞர்களுக்கு சிந்தனை வரிகள் பல கூறியுள்ளார். அப்படிப் பட்ட அவரது சில சிந்தனை வார்த்தைகளை நாம் இன்று பார்த்து எமது வாழ்கையை செம்மைப்படுத்துவோம்...

வாழ்கையில் வெற்றியடைவதற்கான வழி எவ்வாறு??

கனவுகள் பற்றிய அவர் கருத்து...




ஒரு வெற்றி மட்டும் எடுத்தால் போதாது... ஓய்வில்லாமல் இரு...


உலகின் இரு ஆசிரியர்கள் நேரமும், வாழ்க்கையும்


கறுப்பு நிறத்தின் தன்மை



ஒருவரை தோற்கடிப்பது சுலபம் ஆனால் வெற்றியடைய வைப்பது கடினம்

பிறந்தநாள் என்றால் ...



இவை மட்டுமல்ல இன்னும் ஏராளமான பொன் வார்த்தைகள் இவரால் கூறப்பட்டிருக்கின்றன...

இவை எனக்கு மிகவும் பிடித்த சிந்தனைகள் என்பதால் உங்களுடன் பகிர்ந்தேன்

நீங்களும் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து உதவுங்கள்...

செவ்வாய், 3 செப்டம்பர், 2013

வீதியில் விபத்துக்கள் ஏற்படக் காரணங்கள் - சமூகம் குறித்த முக்கிய பதிவு

நாம் வீதியில் பயணிக்கிறோம் அப்போது பல கோர விபத்துக்களையும் எம் கண் முன்னால் பார்க்கிறோம். இந்தப் பதிவை எழுத முக்கிய காரணம் சமீபகாலமாக பல இடங்களில் விபத்துக்கள் ஏற்படுகின்றன. இவற்றைக் கருத்திற்க் கொண்டேயாகும்.


நாம் இப்போது பதிவின் விளக்கத்தைப் பாப்போம்..

வீதி விபத்துக்கள் ஏற்படும் முக்கிய காரணங்கள்

1. மது அருந்துதல்

எத்தனையோ அப்பாவி உயிர்கள் பல கொடிய மது அருந்திகளால் தங்கள் இரத்தத்தைத் தானம் செய்கிறார்கள். குடி போதையில் கண்ணு முன்னு தெரியாமல் வண்டியை ஓட்டுகிறார்கள். இதனால் பல விபத்துகள் ஏற்படுகின்றன எனவும் உங்களுக்கும் தெரியும்.

சரி இப்படியும் சொன்னால் உங்களுக்கு விளங்கவில்லை என்றால் "தல" சொன்ன மாதிரி

"Light ஐ போட்டு வண்டி ஒட்டு'
Light ஆக போட்டு வண்டி ஓட்டாதே..."

சரி இந்தப் பதிவை வாசிக்கும் நீங்கள் மது அருந்தியாகவிருந்தால் மது அருந்திவிட்டு வண்டி ஓட்டுவதை தவிர்த்துக் கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

அடுத்ததாக பெண்கள் roadகளில் குட்டைப் பாவாடை அணிந்து செல்வதை வாயைப் பிளந்து பார்க்கும் ஆண்கள் (ஒரு சில ஆண்கள்) . நான் ஆண்களையும் குறை சொல்ல மாட்டேன் , பெண்களையும் குறை சொல்ல மாட்டேன்...

வாசித்துக்கொண்டிருக்கும் நீங்கள் கவனமாக பார்த்து வண்டி ஓட்டுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இப்பொது நான் கூறுவது எனது சொந்த அனுபவம் ...

நீங்கள் motor cycle ஓடும் போது எதிரில் வருபவர் முன் உங்கள் headlight ஐ சற்று டிம் பண்ணுங்க... அப்பிடி டிம் பண்ணாம வந்த ஒருத்தரோட நான் மோதியிருக்கேன் நல்ல வேளை இப்போ உயிரோட இருக்கேன்... so நான் சொன்னது விளங்கியிருக்கும்......

அடுத்து வீதி ஒழுங்குகளை பேணி பாதையில் இருக்கும் சமிஞ்ஞை விளக்குகளைக் கருத்திட் கொண்டு உங்கள் வாகன சாகசங்களை தொடர்ந்து மேட்கொள்ளுமாறு கூறி பதிவை நிறைவு செய்கிறேன்.

குறிப்பு: இதில் இருக்கும் காரணங்கள் மட்டுமல்ல இவை எனக்கு தெரிந்த ஒரு சில காரங்கலாகும். உங்களுக்குத் தெரிந்த காரணிகளை கீழே comment பெட்டியில் இடவும்..

நன்றி
பரதன்

Android apps களை உங்கள் கணனியில் பாவிக்க..!! இதோ ஒரு வழி..!!

Android Application கள் தான் இப்போது மிகச்சிறந்த apps ஆக உலகில் திகழ்கிறது. அப்படிப்பட்ட apps ஐ உங்கள் Android போன் களில் மட்டுமே பாவனை செய்ய முடியுமெனப் பலர் கூறுகிறார்கள்.

ஆனால் அதை உங்கள் கணணியிலும் பாவனை செய்ய ஒரு மென்பொருள் உள்ளது. BlueStack என்ற மென்பொருளை உங்கள் கணனியில் நிறுவுங்கள்.


தரவிறக்கிய பின் அதை run செய்யுங்கள்....

அதன் பின் உங்கள் கணனியிலுள்ள .apk என உள்ள அனைத்து file களையும் open செய்யலாம்... 



Enjoy!!! உங்கள் நண்பர்களுடனும் இதை பகிர்ந்து உதவுங்கள்....!!!

பதிவு உதவியாக இருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்....!!

திங்கள், 2 செப்டம்பர், 2013

"உங்கள்பெயர்@india.com" என மின்னஞ்சல் உருவாக்க ஆசையா?? இதைப் படியுங்கள்

பொதுவாக gmail , yahoo , hotmail எனப் பல e-mail server கள் இருக்கின்றன. அதேபோல இந்திய நாட்டின் @india.com என மின்னஞ்சல் உங்களுக்கு உருவாக்கலாம். நீங்கள் இந்தியன் எனக் காட்ட இந்த server ல் create செய்து பாருங்கள்.. சும்மா try பண்ணி பாருங்க..


http://mail.india.com/register என்ற தளத்திற்கு செல்லவும்



உங்கள் கணக்கை நிரப்பிய பின் பாருங்கள் எல்லா mail server கள் மாதிரியே இந்த mail சேவையும் இருக்கிறது..

Try it..

ஞாயிறு, 1 செப்டம்பர், 2013

VLC Playerஐ பயன்படுத்தி வீடியோக்களை convert செய்வதற்கு...

VLC Player என்பது பிரசித்திபெற்ற வீடியோ பிளேயர் ஆகும். இது வெறும் வீடியோ player மட்டுமல்ல. இதன் மூலம் நாம் வீடியோக்களைக் கூட convert செய்ய முடியும்.

உங்களிடம் இப்போது வீடியோக்களை convert செய்ய converter எதுவும் இல்லாவிடின் VLC Player ஐ பயன்படுத்தி convert செய்து கொள்ளலாம்.

சரி எப்படி எனப் பாப்போம்......

முதலாவதாக VLC Player ஐ open செய்து கொள்ளுங்கள்

பின்னர் CTRL+R என என அழுத்தும் போது கீழ் கானப்பட்டவாறு window ஓபன் ஆகும்...

இனி நீங்கள் convert செய்ய வேண்டிய வீடியோவை select செய்யுங்கள்..

இனி convert/save என்பதை அழுத்துங்கள்.. 

அடுத்து வரும் windowல் நீங்கள் எந்த format ல் convert செயப் போகிறீர்கள் என்பதை select செய்து கொடுக்கவும்

இனி Start என்பதை அழுத்தி விட்டு சிறிது நேரம் பொறுத்திருங்கள்..


பதிவு உதவியாக இருந்தால் உங்கள் நண்பர்களோடு பகிர்ந்து உதவுங்கள்.