Skip to content

ஞாயிறு, 26 நவம்பர், 2017

HTML கற்போம் பகுதி - 6

வணக்கம் நண்பர்களே...!! இன்று உங்களை இப் பதிவினூடாக சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. முந்தய பதிவான HTML கற்போம் பகுதி -5 ன்\ தொடர்ச்சியாக இன்று நாம் HTML ஐ பயன்படுத்தி போடோக்கள் (Photos) உள்ளீடு செய்வது என்பது பற்றி.

<img src="david.jpg" alt="David" />

david.jpg இவ் எழுத்துகள் காட்டி நிற்பது நீங்கள் உள்ளிடவிருக்கும் போடோவின் இடம். பற்றி..

நீங்கள் கணனியில் ஒரு போட்டோவை எடுக்கப் போகிறீர்கள் என்றால்.

<img src="david.jpg" alt="David" />

இவ்வாறு type செய்து david.jpg இந்த சொல்லுக்குப் பதிலாக உங்கள் கணனியில் நீங்கள் உள்ளிடவிருக்கும் photo வின் அமைவிடத்தை இட வேண்டும்.

அமைவிடத்தை எப்படிக் காண வேண்டும் என்றால்...

Run ற்கு சென்று Browse என்பதை கொடுத்தல் உங்கள் கணனியிலிருக்கும் file கள் அனைத்தும் வரும். அப்போது நீங்கள் உள்ளிட விருக்கும் போட்டோவை click செய்தால் 

குறிப்பிட்ட அந்த இடத்தை copy செய்து  david.jpg என்ற இடத்திற்குப் பதிலாக போடுங்கள்.
இன்னொன்று 

<img src="david.jpg" alt="David" /> 

David என்பதகுப் பதிலாக நீங்கள் விரும்பிய சொல்லை இடலாம்... 

இப்போது coding 

<img src="C:\Users\Parathan\Desktop\download\mullaitivu\2013-05-19 11.38.05.jpg"alt="Parathan" />

இப்போது நீங்கள் உங்கள் கணனியிலிருக்கும் போட்டோவை 
HTML coding ஐ பயன்படுத்தி உள்ளிட தெரிந்திருப்பீர்கள்..


அடுத்து இணையத்திலிருக்கும் போட்டோவை HTML coding மூலம் உள்ளிட...

<img src="david.jpg" /> 

 அதேபோலத்தான் david.jpg என்ற சொல்லுக்குப் பதிலாக நீங்கள் உள்ளிடவிருக்கும் போடோவின் URL ஐ இட வேண்டும். 

நீங்கள் உள்ளிடவிருக்கும் போடோவில் Right click செய்து Copy Image URL ஐ click செய்து DAVID.jpg  என்பதற்குப் பதிலாக URL ஐ இட்டால் சரி.

Try பண்ணிப் பாருங்கள்.


அடுத்து போட்டோ ஒன்றுக்கு உங்கள் இணையத்தளத்தின் link ஐ கொடுப்பது எப்படி என்பதைப் பாப்போம்.

<a href="http://www.parathan20.blogspot.com">
<img src="logo.png" /></a>
என்னோட link க்குப் பதிலாக நீங்கள் கொடுக்க விரும்பும் link ஐ கொடுங்கள்
logo.png என்பதற்குப் பதிலாக போடோவின் URL ஐ கொடுங்கள்.

அவளவுதான்...


சில வேளைகளில் நீங்கள் codingஐ பயன்படுத்தி போட்டோ வை உள்ளீடு செய்த பின் அதன் உயரம் , அகலம் என்பன பெரிதாக இருக்கும். எனவே அதை குறைக்க வேண்டும் தானே....!!! 

குறைப்பதட்க்கு இது தான் coding..

<img src="logo.png" width="141px" height="32px" />

logo.png எனபத்ட்குப் பதில் போடோவின் URL ஐ உள்ளிடுங்கள்...

அடுத்து width என்பது அகலம் , height என்பது உயரம் உங்கள் விரும்பிய அளவுக்கு ஏற்றவாறு மாற்றினால் சரி..

இப்போது உங்களுக்கு ஏதாவது சந்தேகங்கள் இருந்தால் கீழுள்ள comment box ல் கருத்துகளை கூறவும்.


நன்றி..
பரதன்.

வெள்ளி, 17 நவம்பர், 2017

PDF file களை JPG, HTML ஆகவும் DOCX to DOC ஆக convert செய்வதற்கு..

வணக்கம் நண்பர்களே..! இன்று பலருக்குமாக உதவக்கூடிய file களை convert செய்யும் முறை பற்றி அறியத்தரப்போகிறேன்.

மென்பொருள்களை கணனியில் நிறுவி செய்வதற்குப் பதில் இவற்றை இணையத்திலே இவற்றை convert பண்ணி கொள்ளுங்கள்.

3 வகையான File conversion பற்றி சொல்ல இருக்கிறேன்

  1. PDF to JPG
  2. PDF to HTML
  3. DOCX to DOC 
1.PDF to JPG
பொதுவாக நாம் எழுத்து, படம் தொடர்பான file களை PDF வடிவில் வைத்திருப்போம். அந்த PDF file களை JPG என்ற image format க்கு மாற்றகூடிய வசதி உள்ளது.
இது முழுக்க முழுக்க free யானது.. 
உங்கள் convert செய்யவேண்டிய file ஐ upload செய்து convert என்ற பட்டனை click செய்யுங்கள்...
https://www.investintech.com/pdftojpg இது தான் அந்த தளம்..

2.PDF to HTML
நீங்கள் ஒரு PDF வடிவில் ஒரு file ஐ வைத்திருக்கிறீர்கள். அதனை இணையத்தில் அப்படியே காட்சிபடுத்த வேண்டுமென்றால் உங்களுக்கு HTML/CSS ல் சிறந்த விளக்கம் ஒன்று வேண்டும். அல்லது PDF file ஐ upload செய்து விட்டு அதை டவுன்லோட் செய்வதற்கான ஒரு லிங்க் கொடுக்க வேண்டும்..

இப்படி எந்தப் பிரச்சனையும் இல்லாமல் PDF file ஐ HTML file ஆக மாற்ற 

இங்கு சென்று file ஐ upload செய்து convert செய்து மீண்டும் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.

3.DOCX to DOC
நீங்கள் MS OFFICE ல் பழைய வேர்சன் பவனயாலராயின் அதனை புதிய OFFICE package க்கு ஏற்றால் போல DOCX file களை doc file format க்கு மாற்ற 
http://www.doc.investintech.com/ என்ற இணையத்திற்கு சென்று 
convert செய்ய வேண்டிய file ஐ click செய்து e-mail address ஐ கொடுக்கவும்.
பின் convert செய்து send என்ற பட்டனை click செய்தால் உங்கள் மின்னஞ்சலுக்கு டவுன்லோட் பண்ணுவதற்கான லிங்க் கிடைக்கும்..

அவளவு தான்..
பதிவு பயனுள்ளதாக இருந்ததா...??

ஞாயிறு, 17 செப்டம்பர், 2017

HTML கற்போம் பகுதி-11

வணக்கம் நண்பர்களே... இறுதியாக நான்கு வருடங்களுக்கு முதல் பகுதி-10 எழுதியிருந்தேன்,.. 2014 ஆம் ஆண்டு HTML 5  வெளிவந்தது. அதை பற்றி தொடர்ந்து எழுதுவதற்கான நேரம் கூடவில்லை.. இப்போது
இத் தொடரை எழுதி முடிக்கலாமென நினைக்கிறன்.. இனி ஒவ்வொரு வாரமும் இத் தொடரை எதிர்பார்க்கலாம்.

பழைய HTML க்கும் HTML 5 க்கும் பெரிதாக வித்தியாசம் ஒன்றும் இல்லை. கோடிங் எழுத ஆரம்பிக்கும் போது பழைய வெர்சனில் <html> என சாதரணமாக ஆரம்பித்திருப்போம் இங்கு <!DOCTYPE html> என தொடங்க போகிறோம்... அவளவே...

மற்றபடி ஒரு சில tag கள் புதிதாக அமைந்திருக்கின்றன. ஒவ்வொன்றாக இனி வரும் தொடரில் பாப்போம்.


HTML 5 ல் comment tag என ஒன்று உள்ளது. . ஒரு html coding எழுதுகிறீர்கள் என்றால் அதை ஒருவர் பார்க்கும் போது html திறமை உள்ளவராயின் tag களை வைத்து இனம் பிரிப்பார்.
html தெரியாதவர் என்றால் இந்த code எதற்கு அந்த code எதற்கு என குழம்பி போய் இருப்பார். ஆகவே அந்த பிரச்சனையை இல்லாமல் இருக்க html டிசைன் பண்ணும் ஒருவரால் கீழ்வரும் code ஆனது இந்த டிசைன் காக எழுதியுள்ளேன் என பார்ப்பவர் புரிந்து கொள்ள எழுதப்படுவது.

இது browse பண்ணும் போது வராது..

<!-- Write your comments here -->

Write your comments here என்ற இடத்தில் நீங்கள் எதனையும் எழுதலாம் அது உங்கள் இனைய பக்கத்தில் வராது..

<!-- Do not display this at the moment
<img border="0" src="pic_mountain.jpg" alt="Mountain">
-->

இங்கு நீங்க imag ஒன்றை உள் புகுத்த img tag ல எழுதி இருக்கீங்க ஆனால் comment tag குள் எழுதியதால் அது உங்கள் webpage ல் display ஆகாது...

Hello World


Hello World


<h1 style="border: 2px
solid Tomato;">Hello World</h1>
<h1 style="border: 2px
solid Violet;">Hello World</h1>


இது ஒரு வகை inline css code.
ஒரே வரியில் டிசைன் களை code ஆக்குவதாலேயே இது css வகைக்குள் அடங்குகிறது.  இங்கு நீங்கள் உங்களுக்கு பிடித்த வகையில் மாற்றங்களை செய்யலாம். உதாரணமாக border ன் தடிப்பு மட்டும் நிறங்களை மாற்ற முடியும்.

இங்கு Solid என்று இருப்பது அந்த தடிப்பு எப்படி அமைய வேண்டும் என்பதாகும்.
Solid ஐ dotted என மாற்றினால் கீழுள்ளவாறு தோன்றும்...

Hello World


இப்போது புரிகிறதா...???

இன்றைய பதிவுவை இத்துடன் முடித்து கொள்கிறேன்... தொடர்ந்து இணைந்திருங்கள் இன்னும் பல பதிவுகள் காத்திருகின்றன...

வெள்ளி, 3 பிப்ரவரி, 2017

“Unfortunately Android keyboard has stopped” or “Samsung keyboard stopped” ஐ தீர்க்க இலகு வழி

வணக்கம் நண்பர்களே... இன்றைய பதிவில் உங்கள் smart phone ல் “Unfortunately Android keyboard has stopped” or “Samsung keyboard stopped” என்ற பிரச்சனை வந்தால் என்ன செய்வது என்று பாப்போம்..

சில third party app உங்கள் போனில் install செய்யப்பட்டிருந்தால் இப்படி ஆக இடமுண்டு. இதனால் உங்கள் Keyboard வேலை செய்யாது.

இதை தீர்ப்பதற்கு...

phone Settings ->App -> select the Android keyboard and clear the cache.

பின் Uninstall Update ஐ கிளிக் செய்து கொள்ளவும்.
அப்படி சரி ஆகவில்லை எனின் கீழ்க்கண்டவாறு செய்யவும்

உங்கள் போனை Safe Mood ல் Boot செய்து கொள்வதன் மூலம் third party app களின் செயலை தடுக்க முடியும்.
அப்படி உங்கள் பிரச்சனை சரியான பின் Normal Mode ஆக்கிகொளவும்.

அப்படியும் சரியாகலையா...??
 “Google Play Service” app ஐ update செய்து கொள்ளவும். மேலும் அண்மையாக தரவிறக்கிய app கள் சிலவற்றை Uninstall செய்து கொள்ளவும்..

நன்றி

செவ்வாய், 31 ஜனவரி, 2017

Android ல் "INSUFFICIENT STORAGE AVAILABLE" ஐ எப்படி சரி செய்யலாம்..??

வணக்கம் நண்பர்களே.. ஆண்ட்ராய்டு போனில் நீங்கள் ஒரு app ஐ தரவிறக்கும் போது INSUFFICIENT STORAGE AVAILABLE என சில வேளைகளில் வரும்.  உங்கள் SD Card memory empty ஆக இருந்தாலும் கூட அப்படி வரும். அதனால் நீங்கள் என்ன செய்வதென தெரியாமல் இருப்பீர்கள்.

அதற்கான சிறு வழி முறைகளை நான் இன்று உங்களுடன் பகிர உள்ளேன்.
பல பேருக்கு இது தெரிந்தாலும் தெரியாத சிலர் அறிந்து கொள்வதே எனது நோக்கம்.

உண்மையாகவே, உங்கள் போனில் அதிக மெமரி இருந்தாலும் அப்படி வருவதட்க்குக் காரணம் phone internal memory ல் சில data களை பதிவு செய்த பின்னரே நீங்கள் தரவிறக்கும் app உங்கள் phone memory அல்லது SD Card memory ல் பதிவாகும்.

எனவே phone internal memory ஐ clean செய்வதற்க்கு Setting ற்கு சென்று அதில் application என்ற option ஐ தெரிவு செய்து பெரும்பாலும் நீங்கள் பாவித்த app ஐ ஓபன் செய்து Clear Data என்ற button ஐ அழுத்தி  clean செய்துகொள்ளுங்கள்.

மேலும், சில app களை உங்கள் SD Card memory க்கு move செய்வதன் மூலமும் உங்கள் phone internal memory ஐ அதிகப்படுத்திக்கொள்ளலாம்.

இந்தப் பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் Share செய்து கொள்ளுங்க....

நன்றி...
பரதன்

வெள்ளி, 5 ஆகஸ்ட், 2016

உங்கள் லேப்டாப்பின் battery ன் வாழ்நாளை கூட்ட..- அனைவருக்கும் பயனுள்ளது

2000 ஆம் ஆண்டளவில் டெஸ்க்டாப் PC தான் எல்லோர் வீட்டிலும் பெரிதாகக் காணப்பட்டது. ஆனால், இப்போதோ வீட்டில் நிச்சயம் ஒரு லேப்டாப் இருக்கும் என நான் நம்புகிறேன். அந்த வகையில் நாம் லேப்டாப் ஐ battery மூலம் 2 அல்லது 3 மணித்தியாலங்கள் பாவிப்போம்.

ஆனால் charge செய்வதற்குப் பெரிதாக நேரம் கொடுக்க மாட்டோம்... அந்த வகையில் இன்றைய பதிவில் நான் சில கருத்துகளை உங்களுடன் பகிரலாமென இருக்கிறேன்.. அதுதான் battery வாழ்கையை கொஞ்ச நேரம் அதிகரிக்க சிக்கனமாகப் பாவிக்கும் முறை பற்றி..


1.  ஸ்க்ரீனின் brightness ஐ குறைத்தல்...

உங்கள் லேப்டாப்பில் முக்கிய பங்கை வகிப்பது ஸ்க்ரீனின் brightness தான். அதிகமாக brightness ஐ கூட்டி வைத்திருந்தால் battery charge குறைவதில் முக்கிய பங்கு வகிக்கும்.

brightness ஐ குறைக்க...

Control Panel > Hardware and Sound > Power Option ல் சென்றால் கீழுள்ள படத்திலுள்ள வாறு செய்யுங்கள்..




2. Sound ஐ குறைக்க குறைந்தலவாவது Microphone ஐ use செய்யுங்கள்..

படங்கள், பாடல்கள் கேட்க்கும் போது குறைந்தளவு headphone களைப் பாவித்தால் பெரிய sound மூலம் வீணாகும் battery charge ஐ கொஞ்சம் குறைக்கலாம். பெரிதாக charge குறைக்க முடியாது என்றாலும் உங்கள் கேள் திறனைக் கூட்டும்...

3.Bluetooth , WIFI என்பவற்றை off செய்யுங்கள்...

Software கள் தான் அதிகமாக battery charge ஐ குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த வகையில் தற்போது வருகின்ற அனைத்து லேப்டாப் களுமே செய்த உடனேய Wifi சிக்னல்களை தேட ஆரம்பித்துவிடும்.

அப்படித் தேடும் போது battery charge வீணாகும் தானே....!! எனவே, அதனைக் குறைப்பதற்கு தேவையற்ற அல்லது தற்போது பயன்பாடாத apps களை நிறுத்துதல் நல்ல வழியாகும். 


4.USB அல்லது CD களை தேவையற்ற நேரம் அப்பால் வையுங்கள்..

நீங்கள் USB device களை தேவையற்ற நேரங்களில் கழட்டி வைத்தல் உங்கள் battery charge இழப்பதை குறைக்கலாம். ஏன் என்றால் அவையும் உங்கள் கணனியின் charge ஐ பெற்றுத் தான் இயங்குகின்றன. 

எனவே, நீங்கள் பாவிக்கும் போது பாவித்து விட்டு தேவையற்ற நேரம் கழட்டி வைத்தல் சிறந்தது. சில வேளைகளில் நீங்கள் பயணம் செய்யும் போது இவை கணனியில் இருந்தால் துள்ளல் ஏதாவது நடந்தால் உங்கள் கணனியில் இருக்கும் சிஸ்டத்தில் பிரச்சினை ஏற்படும்.

5. Charge செய்த பின் வயரை கழட்டி வையுங்கள் மறுபடியும் battery charge 80% ஆன பின் மறுபடியும் சார்ஜ் போட்டுப் பாவியுங்கள்...

6. Start-up ப்ரோக்ராம் களை குறைத்தல் மூலமும் உங்கள் கணனியின் battery life ஐ கூட்ட முடியும்.. அதற்கு 

RUN > msconfig என type செய்யுங்கள் உங்களுக்கு பிடித்தவாறு செட் செய்து கொள்ளுங்கள்.

7. நீங்கள் உங்கள் battery வாங்கி 2 வருடங்கள் ஆன பின் புது battery ஐ பாவிப்பது சிறந்தது என கணணி ஆர்வலர்களும் கூறுகிறார்கள்.

சரி, இவளவு தான் நீங்கள் இதனை உங்கள் லேப்டாப்பில் செய்து பாருங்கள்... உதவியானதாக இருக்கும் என நம்புகிறேன்..


உதவியானதாக இருந்தால் நண்பர்களுடனும் பகிருங்கள்...

>>> Facebook Page பக்கத்தில் Like பண்ணாதவர்கள் லைக் செய்திடுங்கள்.

வெள்ளி, 18 மார்ச், 2016

Hackers எப்படி பேஸ்புக்கை hack செய்கிறார்கள்..? எப்படி தடுப்பது..??

பேஸ்புக் கிட்டத்தட்ட 500 மில்லியன் பாவனையாளர்களால் பாவிக்கப்படும் சமூக வலைத்தளமாகும். ஹக்கிங் என்பது இன்றைய இணையவாழ்கையின் ஒரு மிகப் பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.

எனவே இந்த ஹக்கிங்ல் இருந்து உங்களைப் பாதுகாத்துக்கொள்ள சில முக்கிய விடயங்களை உங்களுடன் பகிர்கிறேன்...

1. இ-மெயில் ஹக்கிங்
இ-மெயில் மூலமாகவே பல ஹக்கிங் வேலைகள் இடம்பெறுகிறது. உங்கள் பேஸ்புக் Profile ல் காண்பிக்கப்படும் மெயில் address ஐ வைத்து weak ஆன password ஐ வைத்திருந்தாள் hackers அதை ஊகிக்கலாம்.
 உதாரணமாக உங்கள் பிறந்த திகதி, தொலைபேசி எண், காதலியின் பெயர் என சின்னப்பிள்ளை தனமா வைக்க வேண்டாம்.. உங்க கூட இருக்கவநே உங்களுக்கு விபூதி அடிக்கக்கூடும்...

எனவே உங்கள் பேஸ்புக் கீழ்வருமாறு சென்று செட் செய்து கொள்ளுங்கள்

Edit Profile>Contact Information>Clicking on the icon beside your email address> checking 'Only Me'.

Primary E-MAIL address ஒன்றை புதிதாக சேர்த்து வைத்துக் கொண்டால் உங்கள் பேஸ்புக் பாதுகாப்பான ஒரு நிலையை அடையும்

Account Settings>Email>  changing your primary email to the new one

மேலும் உங்கள் பேஸ்புக் ஐ பாதுகாக்க

 Account Settings>check 'Secure browsing' and 'Send me an email when a new computer or mobile device logs into this account' and click Save.

2.Phishing முறை

உங்கள் e-mail க்கு பேஸ்புக் போன்ற ஸ்டைலில் வடிவமைக்கப்பட்ட மின்னசல்கள் அனுப்பப்பட்டு அதன் மூலமாக பேஸ்புக் சம்மந்தமாக எதையும் confirm பண்ணுமாறு கோரப்படும்... நீங்கள் அப்படி sign in எதாவது பண்ணினீர்கள் என்றால் உங்கள் விடயங்கள் hackers ஆல் அறியப்படும்..

எனவே, எதாவது பேஸ்புக் சம்மந்தமாக உங்கள் மின்னஞ்சலுக்கு வந்தால் முதலில் அது பேஸ்புக்கில் இருந்து வந்ததா என சரி பார்க்கவும்..

வேறு எந்த apps மற்றும் தளங்களுக்கும் உங்கள் பேஸ்புக் மூலம் sign in செய்வதை தவிர்ப்பது நல்லது...

இவற்றை நீங்கள் உறுதிப்படுத்திக் கொண்டு செயற்படல் உங்கள் e-life மகிழ்ச்சியானதாக இருக்கும்..

நன்றி
பரதன்..

திங்கள், 7 செப்டம்பர், 2015

அஞ்சலில் காதல் வளர்த்த காதல் கோட்டை- அஜித்,தேவயானி

என்ன இவன் பழைய படத்த ஏதோ புதுப்படம் மாதிரி விமர்சிக்குறானே என என்ல காண்டாக வேணாம்...
அன்றைய படங்களின்கதை,மியூசிக்,திரைக்கதை என அனைத்தும் பக்கா...
லாஜிக் மீறல்களை கொஞ்சம் பொறுத்துக் கொண்டால் படம் இன்றும் பழைய படங்கள் மெகா ஹிட் ஆகும்...

நான் இப்போ படத்தோட கதைய எல்லாம் சொல்ல வரல.. மேலோட்டமா எனக்கு படத்தில புடிச்ச விஷயங்கள உங்களுடன் பகிரலாமென எழுதுகிறேன்.
நான் பொறந்தது 98 பட் காதல் கோட்டை வெளிவந்தது 96..

அகத்தியன் டைரக்சன் ல அஜித்,தேவயானி மெயின் ரோல் பண்ண ஹீரா,தலைவாசல் விஜய், கரன் போன்றவங்க நடிச்சாங்க..

சிம்பிளா கடிதம் வழியாக ஒருவர் மனதை ஒருவர் புரிந்து பார்க்காமாலே காதலித்து இருவரும் சந்திக்கப்படும் பாட்டை இறுதிவரை அருமையாக கதையை நகர்த்திச் சென்ற விதம் எனக்கு படத்தில் மிக பிடித்தன...

எனக்கும் அப்படி வாழ்வில் நடக்காத என நினைத்த போது கடிதத்தின் பாவனை குறைவது நினைவுக்கு வந்தது...
எல்லாம் காலத்தின் கோலம்...

இந்த படத்துக்காக அகத்தியனுக்கு சிறந்த தமிழ் திரைப்படத்துக்கான, சிறந்த இயக்கம், சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருதுகள் கிடைத்தன..

படம் கிட்டத்தட்ட 8 மாதங்களுக்கும் மேல் ஓடியதாக வாய்வழியாக அண்ணா ஒருவர் மூலம் அறிந்தேன்...

இந்தப் படம் தெலுங்கில் ப்ரேம லேகா, கன்னடத்தில் யாரு நீனு சேலுவே, ஹிந்தியில் Sirf Tum , பெங்காளியில்  Hothat Brishti எனவும் வெளிவந்தன. இந்தப் படத்தின் கதையை இதே தலைப்பில் 2010 கதைப் புத்தகமாக வெளிவந்துள்ளது.

படத்திற்கு இன்னொரு பலம் தேவா சும்மா சொல்லக்கூடாது தேனிசைத் தென்றல் தேவா..



குறிப்பாக காலமெல்லாம் காதல் வாழ்க பாடலின் வரிகள் சூப்பரா இருக்கும்..
ஊரென்ன பேரென்ன தாய் தந்தை யாரென்ன காதல் ஒன்று சேரும்
நீயின்றி நானில்லை நானின்றி நீயில்லை காதல் மனம் வழும்
ஜாதகங்கள் பார்ப்பதில்லையே காசு பணம் கேட்பதில்லையே

நலம் நலமறிய ஆவல் :- கடிதத்தில் முத்தங்கள் அனுப்பிடலாமே                             

என் இதழ் உனை அன்டிர் பிறர் தொடலாமா..

தேவாவின் கானா பாடல் வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா, கவலைப் படாதே சகோதரா எனும் பாடல்கள் நின்ற இடத்தில் ஆட்டம் போட வைக்கும்..

படத்த பத்தி நிறைய சொல்லிட்டே இருந்தா உங்களுக்கு கடுப்பாகிடும்.. சோ, படம் நீங்களும் பாருங்க புடிச்சிருந்த நான் எழுதினத பற்றி கமெண்ட் கீழ பண்ணிடுங்க...

அன்புடன்..
 பரதன்

செவ்வாய், 10 மார்ச், 2015

கொம்பன் இசை விமர்சனம்

வணக்கம் நண்பர்களே...!!! இன்றைய பதிவில் கார்த்தியின் கொம்பன் திரைப்படத்தின் பாடல்களைப் பற்றி உங்களுடன் பகிரலாமென நினைக்கிறன்.சில தோல்வி படங்கள் அண்மையில் கொடுத்ததால் மீண்டும் பருத்திவீரன் ஸ்டைலில் கொம்பன் திரைப்படத்தில் கிராமத்து வேடத்தில் நடித்துள்ளார் கார்த்தி.
குட்டி புலி படம் அவளவ ஒடலைனாலும் சன் டீவி ரொம்ப நல்ல ஒடவச்சாங்க...
அந்த படத்தோட டைரக்டர் முத்தையா தான் இந்தப் படத்தோட டைரக்டர்... படத்துக்கு இசை ஜீ.வீ.பிரகாஷ் குமார்.... ஹீரோயின் பத்தியெல்லாம் இங்க நான் கதைக்க மாட்டேங்க...

சரி வாங்க ஒவ்வொரு பாடலாகப் பார்க்கலாம்...

1.அப்பப்பா

பாடியவர்கள்: ஜீ.வீ மற்றும் ஸ்ரேயா கோசல்

பாடல் தாண்டவம் படத்தில வர்ற "அனிச்சம் பூவழகி" டோன் ல இருந்தாலும் இவங்க ரெண்டு பேரோட குரலும் வரிகளும் செம... புல்லாங்குழல், மேளம் என கிராமிய இசை கருவிகளின் சேர்க்கை கேட்க்க இதமாக உள்ளது....

2.கம்பிக்கர வேட்டி

பாடியவர்கள்: Ananthu, VM Mahalingam

ஆரம்பமே சும்மா அந்த மாதிரி.. டியூன் எங்கேயோ கேட்ட மாதிரியே இருக்கு ஆனா கேட்க்க நல்ல இருக்கு... கிராமத்து மக்களின் சந்தோஷமான வாழ்க்கை... ஒரு ரெண்டு மூணு தடவைகள் கேக்கலாம்....

3.கருப்பு நெறத்தழகி

பாடியவர்கள்: வேல்முருகன் , மாளவிகா சுந்தர்

அருமையான துள்ளிசயிலமைந்த பாடல்...கிராமத்து ஸ்டைலில் கடம், நாதஸ்வரம், அழகு அழகு என காதலியின் உருவம், கூந்தல், உயரம் என அனைத்தும் தன்னை ஈர்ப்பதாக எனக் கூறி பாடல் செல்கிறது... இந்தப் பாட்டு எத்தன தடவ வேணாலும் கேக்கலாம்க....

4.மெல்ல வளஞ்சது

பாடியவர்கள்: மது பாலகிருஷ்ணன்
மெதுவான ஒரு மெல்லிசை.... குரல் தெரிவு அருமை... கார்த்தி,ராஜ் கிரண் க்கு இடையிலான பாசம் மிகுந்த ஒரு பாடலாகத் தான் இருக்கும்... வயலின் இசை, கடம் என இசை கருவிகள் சூப்பர்... தந்தை-மகன் பாசத்தை கூறும் பாடலாக அமைகிறது... பாட்டு எப்பவுமே கேட்கலாம்....

பாடல்கள் அனைத்தும் கிராமத்துப் படத்துக்கு ஏற்ற வகையில் கேட்க அருமையாக இருக்கிறது... பாட்டுக்கு ரேட்டிங் போடுற அளவுக்கு நான் இன்னும் வளரல என்பதால் என்னை மன்னித்துக்கொள்ளுங்கள்.....

பாடல்கள் கேட்கலாம்... !!!!

தொடர்ந்து பதிவுகளைப் பெற மின்னஞ்சல் மூலமும் சமூக வலைத்தளங்கள் மூலமும் என் பதிவுகளை தொடர்ந்து பெற்று என்னை ஊக்குவிக்குமாரும் கேட்டுக்கொள்கிறேன்.

வெள்ளி, 19 டிசம்பர், 2014

iOS 8.1.2 ஐ install செய்வது எப்படி..?? (iPhone,iPad&iPod)

வணக்கம் நண்பர்களே...!! நீண்ட நாட்களுக்குப் பின் இத் தளத்தில் ஒரு பயனுள்ள பதிவுடன் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி...Phone களில் தரமான Quality யான phone என்றால் அது ஆப்பிள் கம்பனியின் போன்கள் தான்..

அந்த வகையில் அவ்வகை போன்களுக்கான புதிய இயங்குதளம் வழுக்கள் நீக்கப்பட்ட, பல புதிய வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது. அது iOS 8.1.2 

இதனை தற்போது எவ்வாறு பெறுவது என்பது பற்றிய ஒரு தகவலைத் தான் இன்று பதியவிருக்கிறேன்.

முதலில் கீழ் காணப்படும் ஆப்பிள் கம்பனிகளின் Device களுக்கு மட்டுமே இப் புதிய பதிப்பு வேலை செய்யும்... இவற்றில் உங்கள் device பெயர் இருந்தால் தொடர்ந்து கீழே வாசியுங்கள்...
  • iPhone6 plus
  • iPhone 6
  • iPhone5s
  • iPhone5
  • iPhone5c
  • iPhone4s
  • iPad Air
  • iPad4
  • iPad3
  • iPad2
  • Retina iPad Mini
  • 1st generation iPad Mini
  • 5th Generation iPod Touch
மேலே உள்ளவற்றுள் உங்கள் device பெயர் இருந்தால் கீழே தொடருங்கள்..

எந்த மாற்றங்களை மேற்கொள்ள முன்பும் Backup செய்து வைப்பது சிறந்தது.. காரணம் setup ன் போது பிரச்சினை ஏட்பட்டால் சரி செய்துகொள்ள....

இதற்கு நீங்கள் உங்கள் device ஐ charge ல் விட வேண்டும்.. இச் செய்கைக்கு நிறைய battery charge தேவைப்படும்...

Wifi connection ஐ On செய்து கொள்ளுங்கள் ( இதனைத் தொடர்வதற்கு இணைய வசதி அவசியமாகும்...)

இனி உங்கள் Device ல்

Setting>>>General>>>Software Update ஐ click செய்தால் அது Automatic ஆக Search செய்து  iOS 8.1.2 ஐ தரும்.... அதை கிளிக்செய்து Download button ஐ அழுத்தவும்...

சிறிது நேரத்தின் பின் download ஆகின பின்னர் Install button ஐ click செய்யுங்கள்... அவளவுதான் ... நீங்கள் Install செய்துவிட்டீர்கள்...

இப் பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடனும் இத் தகவலை பகிர்ந்து கொள்ளுங்கள்...

செவ்வாய், 2 டிசம்பர், 2014

Bluestack மென்பொருளின்றி கணனியில் Viber பயன்படுத்தலாம்...

எனக்கு Android App களை கணனியில் பயன்படுத்த ஆசை. அதனால் இவளவு காலமும் கணனியில் Bluestack என்ற மென்பொருள் மூலம் Smart phone களின் apps ஐ பயன்படுத்தினேன்.

தற்செயலாக இணையத்தில் உலாவும் போது viber மென்பொருளைப் பற்றி அறிந்தேன். அதைப் பற்றிய புராணம் உங்களுக்கு ஓதத்தேவையில்லை. காரணம் நீங்கள் ஏற்கனவே அறிந்திருப்பீர்கள்.

இவ்வளவு நாட்களும் viber ஐ நான் Bluestack மூலமாகவே பயன்படுத்தினேன். தற்போது இதனை அம் மென்பொருள் இன்றியே கணனியில் நிறுவி பயன்படுத்தலாம்.

http://www.viber.com/ இங்கு சென்று Get Viber என்றதில் click செய்தால் போதும்.. கணனியிலேயே இனி Viber...

குறிப்பு: இதற்கு முதலில் நீங்கள் ஒரு போனில் Viber install செய்யப்பட்டு அதிலிருந்து code எடுத்த பின்னரே கணணி மூலம் பாவனை செய்ய ஆரம்பிக்கலாம்.

 பதிவு பயனுள்ளதாக இருந்தால் நண்பர்களுடனும் Share செய்துகொள்ளுங்கள்...

அன்புடன்..,                                                                
பரதன்

செவ்வாய், 12 ஆகஸ்ட், 2014

பேஸ்புக்கை இதுவரை எத்தனை மணி நேரம் பாவித்துள்ளீர்கள்..??

பேஸ்புக்; சமூக வலைத்தளங்களின் ராஜா என அழைக்கப்படுகிறது. எத்தனையோ ஆயிரம் பயனர்களை தன்னகத்தே கொண்டுள்ளது. காலையில் எழுந்து Face கூட கழுவாமல் Facebook ல் இருக்கும் ஜாதி நிறைய உண்டு. அதில் நானும் ஒருத்தன்.

இப்படியாக, நீங்கள் பேஸ்புக் கணக்கு தொடங்கியதிலிருந்து இதுவரை காலமும் எவளவு நாள் பேஸ்புக்கை பாவித்துள்ளீர்கள் என அறிய வேண்டுமா..??

இதோ உங்களுக்காக கீழே உள்ள box ஐ பின்பற்றியவாறு பார்க்கவும்...

அண்ணளவாக ஒரு நாளைக்கு நீங்கள் எவளவு நேரம் பாவிப்பீர்கள் என்பதை முதலில் கொடுத்து பின் Next ஐ கொடுக்கவும்...




 பயனுள்ளதாக இருந்தால் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்...