குட்டி புலி படம் அவளவ ஒடலைனாலும் சன் டீவி ரொம்ப நல்ல ஒடவச்சாங்க...
அந்த படத்தோட டைரக்டர் முத்தையா தான் இந்தப் படத்தோட டைரக்டர்... படத்துக்கு இசை ஜீ.வீ.பிரகாஷ் குமார்.... ஹீரோயின் பத்தியெல்லாம் இங்க நான் கதைக்க மாட்டேங்க...
சரி வாங்க ஒவ்வொரு பாடலாகப் பார்க்கலாம்...
1.அப்பப்பா
பாடியவர்கள்: ஜீ.வீ மற்றும் ஸ்ரேயா கோசல்
பாடல் தாண்டவம் படத்தில வர்ற "அனிச்சம் பூவழகி" டோன் ல இருந்தாலும் இவங்க ரெண்டு பேரோட குரலும் வரிகளும் செம... புல்லாங்குழல், மேளம் என கிராமிய இசை கருவிகளின் சேர்க்கை கேட்க்க இதமாக உள்ளது....
2.கம்பிக்கர வேட்டி
பாடியவர்கள்: Ananthu, VM Mahalingam
ஆரம்பமே சும்மா அந்த மாதிரி.. டியூன் எங்கேயோ கேட்ட மாதிரியே இருக்கு ஆனா கேட்க்க நல்ல இருக்கு... கிராமத்து மக்களின் சந்தோஷமான வாழ்க்கை... ஒரு ரெண்டு மூணு தடவைகள் கேக்கலாம்....
3.கருப்பு நெறத்தழகி
பாடியவர்கள்: வேல்முருகன் , மாளவிகா சுந்தர்
அருமையான துள்ளிசயிலமைந்த பாடல்...கிராமத்து ஸ்டைலில் கடம், நாதஸ்வரம், அழகு அழகு என காதலியின் உருவம், கூந்தல், உயரம் என அனைத்தும் தன்னை ஈர்ப்பதாக எனக் கூறி பாடல் செல்கிறது... இந்தப் பாட்டு எத்தன தடவ வேணாலும் கேக்கலாம்க....
4.மெல்ல வளஞ்சது
பாடியவர்கள்: மது பாலகிருஷ்ணன்
பாடல்கள் அனைத்தும் கிராமத்துப் படத்துக்கு ஏற்ற வகையில் கேட்க அருமையாக இருக்கிறது... பாட்டுக்கு ரேட்டிங் போடுற அளவுக்கு நான் இன்னும் வளரல என்பதால் என்னை மன்னித்துக்கொள்ளுங்கள்.....
பாடல்கள் கேட்கலாம்... !!!!
தொடர்ந்து பதிவுகளைப் பெற மின்னஞ்சல் மூலமும் சமூக வலைத்தளங்கள் மூலமும் என் பதிவுகளை தொடர்ந்து பெற்று என்னை ஊக்குவிக்குமாரும் கேட்டுக்கொள்கிறேன்.
phaaaaa ipadi aranchirukeengale parathan . Nichayama ungaluku nala future iruku ithila
பதிலளிநீக்கு