இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 26 நவம்பர், 2017

HTML கற்போம் பகுதி - 6

வணக்கம் நண்பர்களே...!! இன்று உங்களை இப் பதிவினூடாக சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. முந்தய பதிவான HTML கற்போம் பகுதி -5 ன்\ தொடர்ச்சியாக இன்று நாம் HTML ஐ பயன்படுத்தி போடோக்கள் (Photos) உள்ளீடு செய்வது என்பது பற்றி.

<img src="david.jpg" alt="David" />

david.jpg இவ் எழுத்துகள் காட்டி நிற்பது நீங்கள் உள்ளிடவிருக்கும் போடோவின் இடம். பற்றி..

நீங்கள் கணனியில் ஒரு போட்டோவை எடுக்கப் போகிறீர்கள் என்றால்.

<img src="david.jpg" alt="David" />

இவ்வாறு type செய்து david.jpg இந்த சொல்லுக்குப் பதிலாக உங்கள் கணனியில் நீங்கள் உள்ளிடவிருக்கும் photo வின் அமைவிடத்தை இட வேண்டும்.

அமைவிடத்தை எப்படிக் காண வேண்டும் என்றால்...

Run ற்கு சென்று Browse என்பதை கொடுத்தல் உங்கள் கணனியிலிருக்கும் file கள் அனைத்தும் வரும். அப்போது நீங்கள் உள்ளிட விருக்கும் போட்டோவை click செய்தால் 

குறிப்பிட்ட அந்த இடத்தை copy செய்து  david.jpg என்ற இடத்திற்குப் பதிலாக போடுங்கள்.
இன்னொன்று 

<img src="david.jpg" alt="David" /> 

David என்பதகுப் பதிலாக நீங்கள் விரும்பிய சொல்லை இடலாம்... 

இப்போது coding 

<img src="C:\Users\Parathan\Desktop\download\mullaitivu\2013-05-19 11.38.05.jpg"alt="Parathan" />

இப்போது நீங்கள் உங்கள் கணனியிலிருக்கும் போட்டோவை 
HTML coding ஐ பயன்படுத்தி உள்ளிட தெரிந்திருப்பீர்கள்..


அடுத்து இணையத்திலிருக்கும் போட்டோவை HTML coding மூலம் உள்ளிட...

<img src="david.jpg" /> 

 அதேபோலத்தான் david.jpg என்ற சொல்லுக்குப் பதிலாக நீங்கள் உள்ளிடவிருக்கும் போடோவின் URL ஐ இட வேண்டும். 

நீங்கள் உள்ளிடவிருக்கும் போடோவில் Right click செய்து Copy Image URL ஐ click செய்து DAVID.jpg  என்பதற்குப் பதிலாக URL ஐ இட்டால் சரி.

Try பண்ணிப் பாருங்கள்.


அடுத்து போட்டோ ஒன்றுக்கு உங்கள் இணையத்தளத்தின் link ஐ கொடுப்பது எப்படி என்பதைப் பாப்போம்.

<a href="http://www.parathan20.blogspot.com">
<img src="logo.png" /></a>
என்னோட link க்குப் பதிலாக நீங்கள் கொடுக்க விரும்பும் link ஐ கொடுங்கள்
logo.png என்பதற்குப் பதிலாக போடோவின் URL ஐ கொடுங்கள்.

அவளவுதான்...


சில வேளைகளில் நீங்கள் codingஐ பயன்படுத்தி போட்டோ வை உள்ளீடு செய்த பின் அதன் உயரம் , அகலம் என்பன பெரிதாக இருக்கும். எனவே அதை குறைக்க வேண்டும் தானே....!!! 

குறைப்பதட்க்கு இது தான் coding..

<img src="logo.png" width="141px" height="32px" />

logo.png எனபத்ட்குப் பதில் போடோவின் URL ஐ உள்ளிடுங்கள்...

அடுத்து width என்பது அகலம் , height என்பது உயரம் உங்கள் விரும்பிய அளவுக்கு ஏற்றவாறு மாற்றினால் சரி..

இப்போது உங்களுக்கு ஏதாவது சந்தேகங்கள் இருந்தால் கீழுள்ள comment box ல் கருத்துகளை கூறவும்.


நன்றி..
பரதன்.

Related Posts:

  • HTML கற்போம் பகுதி - 6 வணக்கம் நண்பர்களே...!! இன்று உங்களை இப் பதிவினூடாக சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. முந்தய பதிவான HTML கற்போம் பகுதி -5 ன்\ தொடர்ச்சியாக இன்று … Read More
  • HTML தமிழில் கற்போம் வாங்க... வணக்கம் நண்பர்களே..! நான் ஒரு புது முயற்சி எடுத்து இந்தத் தளத்தில் நீங்கள் HTML சுலபமாகக் கற்க சில வழிகளை மேட்கொண்டுள்ளேன். அதற்கான முதல் பதிவு த… Read More
  • HTML கற்போம் - பகுதி 2 வணக்கம் நண்பர்களே..!! கடந்த பதிவான HTML தமிழில் கற்போம் என்ற தொடரின் தொடர்ச்சிப் பதிவில் மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி. இன்று Tag… Read More
  • HTML கற்போம் பகுதி-4 வணக்கம் நண்பர்களே..!! இன்றும் உங்களை HTML கற்போம் பகுதி 4ன் மூலம் சந்திப்பதில் மகிழ்ச்சி. கடந்த பதிவான HTML கற்போம் - பகுதி 3 ல்… Read More
  • HTML கற்போம் - பகுதி 3 வணக்கம் நண்பர்களே..!! மறுபடியும் HTML கற்போம் - பகுதி 2 பதிவின் தொடர்ச்சியை தொடர்வதில் மகிழ்ச்சி. இன்று நாம் இதுவரை பார்த்த ta… Read More

2 கருத்துகள்: