எனவே இந்த ஹக்கிங்ல் இருந்து உங்களைப் பாதுகாத்துக்கொள்ள சில முக்கிய விடயங்களை உங்களுடன் பகிர்கிறேன்...
1. இ-மெயில் ஹக்கிங்
இ-மெயில் மூலமாகவே பல ஹக்கிங் வேலைகள் இடம்பெறுகிறது. உங்கள் பேஸ்புக் Profile ல் காண்பிக்கப்படும் மெயில் address ஐ வைத்து weak ஆன password ஐ வைத்திருந்தாள் hackers அதை ஊகிக்கலாம்.
உதாரணமாக உங்கள் பிறந்த திகதி, தொலைபேசி எண், காதலியின் பெயர் என சின்னப்பிள்ளை தனமா வைக்க வேண்டாம்.. உங்க கூட இருக்கவநே உங்களுக்கு விபூதி அடிக்கக்கூடும்...
எனவே உங்கள் பேஸ்புக் கீழ்வருமாறு சென்று செட் செய்து கொள்ளுங்கள்
Edit Profile>Contact Information>Clicking on the icon beside your email address> checking 'Only Me'.
Primary E-MAIL address ஒன்றை புதிதாக சேர்த்து வைத்துக் கொண்டால் உங்கள் பேஸ்புக் பாதுகாப்பான ஒரு நிலையை அடையும்
Account Settings>Email> changing your primary email to the new one
மேலும் உங்கள் பேஸ்புக் ஐ பாதுகாக்க
Account Settings>check 'Secure browsing' and 'Send me an email when a new computer or mobile device logs into this account' and click Save.
2.Phishing முறை
உங்கள் e-mail க்கு பேஸ்புக் போன்ற ஸ்டைலில் வடிவமைக்கப்பட்ட மின்னசல்கள் அனுப்பப்பட்டு அதன் மூலமாக பேஸ்புக் சம்மந்தமாக எதையும் confirm பண்ணுமாறு கோரப்படும்... நீங்கள் அப்படி sign in எதாவது பண்ணினீர்கள் என்றால் உங்கள் விடயங்கள் hackers ஆல் அறியப்படும்..
எனவே, எதாவது பேஸ்புக் சம்மந்தமாக உங்கள் மின்னஞ்சலுக்கு வந்தால் முதலில் அது பேஸ்புக்கில் இருந்து வந்ததா என சரி பார்க்கவும்..
வேறு எந்த apps மற்றும் தளங்களுக்கும் உங்கள் பேஸ்புக் மூலம் sign in செய்வதை தவிர்ப்பது நல்லது...
இவற்றை நீங்கள் உறுதிப்படுத்திக் கொண்டு செயற்படல் உங்கள் e-life மகிழ்ச்சியானதாக இருக்கும்..
நன்றி
பரதன்..
0 comments:
கருத்துரையிடுக