இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 7 செப்டம்பர், 2015

அஞ்சலில் காதல் வளர்த்த காதல் கோட்டை- அஜித்,தேவயானி

என்ன இவன் பழைய படத்த ஏதோ புதுப்படம் மாதிரி விமர்சிக்குறானே என என்ல காண்டாக வேணாம்...
அன்றைய படங்களின்கதை,மியூசிக்,திரைக்கதை என அனைத்தும் பக்கா...
லாஜிக் மீறல்களை கொஞ்சம் பொறுத்துக் கொண்டால் படம் இன்றும் பழைய படங்கள் மெகா ஹிட் ஆகும்...

நான் இப்போ படத்தோட கதைய எல்லாம் சொல்ல வரல.. மேலோட்டமா எனக்கு படத்தில புடிச்ச விஷயங்கள உங்களுடன் பகிரலாமென எழுதுகிறேன்.
நான் பொறந்தது 98 பட் காதல் கோட்டை வெளிவந்தது 96..

அகத்தியன் டைரக்சன் ல அஜித்,தேவயானி மெயின் ரோல் பண்ண ஹீரா,தலைவாசல் விஜய், கரன் போன்றவங்க நடிச்சாங்க..

சிம்பிளா கடிதம் வழியாக ஒருவர் மனதை ஒருவர் புரிந்து பார்க்காமாலே காதலித்து இருவரும் சந்திக்கப்படும் பாட்டை இறுதிவரை அருமையாக கதையை நகர்த்திச் சென்ற விதம் எனக்கு படத்தில் மிக பிடித்தன...

எனக்கும் அப்படி வாழ்வில் நடக்காத என நினைத்த போது கடிதத்தின் பாவனை குறைவது நினைவுக்கு வந்தது...
எல்லாம் காலத்தின் கோலம்...

இந்த படத்துக்காக அகத்தியனுக்கு சிறந்த தமிழ் திரைப்படத்துக்கான, சிறந்த இயக்கம், சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருதுகள் கிடைத்தன..

படம் கிட்டத்தட்ட 8 மாதங்களுக்கும் மேல் ஓடியதாக வாய்வழியாக அண்ணா ஒருவர் மூலம் அறிந்தேன்...

இந்தப் படம் தெலுங்கில் ப்ரேம லேகா, கன்னடத்தில் யாரு நீனு சேலுவே, ஹிந்தியில் Sirf Tum , பெங்காளியில்  Hothat Brishti எனவும் வெளிவந்தன. இந்தப் படத்தின் கதையை இதே தலைப்பில் 2010 கதைப் புத்தகமாக வெளிவந்துள்ளது.

படத்திற்கு இன்னொரு பலம் தேவா சும்மா சொல்லக்கூடாது தேனிசைத் தென்றல் தேவா..



குறிப்பாக காலமெல்லாம் காதல் வாழ்க பாடலின் வரிகள் சூப்பரா இருக்கும்..
ஊரென்ன பேரென்ன தாய் தந்தை யாரென்ன காதல் ஒன்று சேரும்
நீயின்றி நானில்லை நானின்றி நீயில்லை காதல் மனம் வழும்
ஜாதகங்கள் பார்ப்பதில்லையே காசு பணம் கேட்பதில்லையே

நலம் நலமறிய ஆவல் :- கடிதத்தில் முத்தங்கள் அனுப்பிடலாமே                             

என் இதழ் உனை அன்டிர் பிறர் தொடலாமா..

தேவாவின் கானா பாடல் வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா, கவலைப் படாதே சகோதரா எனும் பாடல்கள் நின்ற இடத்தில் ஆட்டம் போட வைக்கும்..

படத்த பத்தி நிறைய சொல்லிட்டே இருந்தா உங்களுக்கு கடுப்பாகிடும்.. சோ, படம் நீங்களும் பாருங்க புடிச்சிருந்த நான் எழுதினத பற்றி கமெண்ட் கீழ பண்ணிடுங்க...

அன்புடன்..
 பரதன்

0 comments:

கருத்துரையிடுக