Skip to content

வெள்ளி, 18 மார்ச், 2016

Hackers எப்படி பேஸ்புக்கை hack செய்கிறார்கள்..? எப்படி தடுப்பது..??

பேஸ்புக் கிட்டத்தட்ட 500 மில்லியன் பாவனையாளர்களால் பாவிக்கப்படும் சமூக வலைத்தளமாகும். ஹக்கிங் என்பது இன்றைய இணையவாழ்கையின் ஒரு மிகப் பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.

எனவே இந்த ஹக்கிங்ல் இருந்து உங்களைப் பாதுகாத்துக்கொள்ள சில முக்கிய விடயங்களை உங்களுடன் பகிர்கிறேன்...

1. இ-மெயில் ஹக்கிங்
இ-மெயில் மூலமாகவே பல ஹக்கிங் வேலைகள் இடம்பெறுகிறது. உங்கள் பேஸ்புக் Profile ல் காண்பிக்கப்படும் மெயில் address ஐ வைத்து weak ஆன password ஐ வைத்திருந்தாள் hackers அதை ஊகிக்கலாம்.
 உதாரணமாக உங்கள் பிறந்த திகதி, தொலைபேசி எண், காதலியின் பெயர் என சின்னப்பிள்ளை தனமா வைக்க வேண்டாம்.. உங்க கூட இருக்கவநே உங்களுக்கு விபூதி அடிக்கக்கூடும்...

எனவே உங்கள் பேஸ்புக் கீழ்வருமாறு சென்று செட் செய்து கொள்ளுங்கள்

Edit Profile>Contact Information>Clicking on the icon beside your email address> checking 'Only Me'.

Primary E-MAIL address ஒன்றை புதிதாக சேர்த்து வைத்துக் கொண்டால் உங்கள் பேஸ்புக் பாதுகாப்பான ஒரு நிலையை அடையும்

Account Settings>Email>  changing your primary email to the new one

மேலும் உங்கள் பேஸ்புக் ஐ பாதுகாக்க

 Account Settings>check 'Secure browsing' and 'Send me an email when a new computer or mobile device logs into this account' and click Save.

2.Phishing முறை

உங்கள் e-mail க்கு பேஸ்புக் போன்ற ஸ்டைலில் வடிவமைக்கப்பட்ட மின்னசல்கள் அனுப்பப்பட்டு அதன் மூலமாக பேஸ்புக் சம்மந்தமாக எதையும் confirm பண்ணுமாறு கோரப்படும்... நீங்கள் அப்படி sign in எதாவது பண்ணினீர்கள் என்றால் உங்கள் விடயங்கள் hackers ஆல் அறியப்படும்..

எனவே, எதாவது பேஸ்புக் சம்மந்தமாக உங்கள் மின்னஞ்சலுக்கு வந்தால் முதலில் அது பேஸ்புக்கில் இருந்து வந்ததா என சரி பார்க்கவும்..

வேறு எந்த apps மற்றும் தளங்களுக்கும் உங்கள் பேஸ்புக் மூலம் sign in செய்வதை தவிர்ப்பது நல்லது...

இவற்றை நீங்கள் உறுதிப்படுத்திக் கொண்டு செயற்படல் உங்கள் e-life மகிழ்ச்சியானதாக இருக்கும்..

நன்றி
பரதன்..

திங்கள், 7 செப்டம்பர், 2015

அஞ்சலில் காதல் வளர்த்த காதல் கோட்டை- அஜித்,தேவயானி

என்ன இவன் பழைய படத்த ஏதோ புதுப்படம் மாதிரி விமர்சிக்குறானே என என்ல காண்டாக வேணாம்...
அன்றைய படங்களின்கதை,மியூசிக்,திரைக்கதை என அனைத்தும் பக்கா...
லாஜிக் மீறல்களை கொஞ்சம் பொறுத்துக் கொண்டால் படம் இன்றும் பழைய படங்கள் மெகா ஹிட் ஆகும்...

நான் இப்போ படத்தோட கதைய எல்லாம் சொல்ல வரல.. மேலோட்டமா எனக்கு படத்தில புடிச்ச விஷயங்கள உங்களுடன் பகிரலாமென எழுதுகிறேன்.
நான் பொறந்தது 98 பட் காதல் கோட்டை வெளிவந்தது 96..

அகத்தியன் டைரக்சன் ல அஜித்,தேவயானி மெயின் ரோல் பண்ண ஹீரா,தலைவாசல் விஜய், கரன் போன்றவங்க நடிச்சாங்க..

சிம்பிளா கடிதம் வழியாக ஒருவர் மனதை ஒருவர் புரிந்து பார்க்காமாலே காதலித்து இருவரும் சந்திக்கப்படும் பாட்டை இறுதிவரை அருமையாக கதையை நகர்த்திச் சென்ற விதம் எனக்கு படத்தில் மிக பிடித்தன...

எனக்கும் அப்படி வாழ்வில் நடக்காத என நினைத்த போது கடிதத்தின் பாவனை குறைவது நினைவுக்கு வந்தது...
எல்லாம் காலத்தின் கோலம்...

இந்த படத்துக்காக அகத்தியனுக்கு சிறந்த தமிழ் திரைப்படத்துக்கான, சிறந்த இயக்கம், சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருதுகள் கிடைத்தன..

படம் கிட்டத்தட்ட 8 மாதங்களுக்கும் மேல் ஓடியதாக வாய்வழியாக அண்ணா ஒருவர் மூலம் அறிந்தேன்...

இந்தப் படம் தெலுங்கில் ப்ரேம லேகா, கன்னடத்தில் யாரு நீனு சேலுவே, ஹிந்தியில் Sirf Tum , பெங்காளியில்  Hothat Brishti எனவும் வெளிவந்தன. இந்தப் படத்தின் கதையை இதே தலைப்பில் 2010 கதைப் புத்தகமாக வெளிவந்துள்ளது.

படத்திற்கு இன்னொரு பலம் தேவா சும்மா சொல்லக்கூடாது தேனிசைத் தென்றல் தேவா..



குறிப்பாக காலமெல்லாம் காதல் வாழ்க பாடலின் வரிகள் சூப்பரா இருக்கும்..
ஊரென்ன பேரென்ன தாய் தந்தை யாரென்ன காதல் ஒன்று சேரும்
நீயின்றி நானில்லை நானின்றி நீயில்லை காதல் மனம் வழும்
ஜாதகங்கள் பார்ப்பதில்லையே காசு பணம் கேட்பதில்லையே

நலம் நலமறிய ஆவல் :- கடிதத்தில் முத்தங்கள் அனுப்பிடலாமே                             

என் இதழ் உனை அன்டிர் பிறர் தொடலாமா..

தேவாவின் கானா பாடல் வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா, கவலைப் படாதே சகோதரா எனும் பாடல்கள் நின்ற இடத்தில் ஆட்டம் போட வைக்கும்..

படத்த பத்தி நிறைய சொல்லிட்டே இருந்தா உங்களுக்கு கடுப்பாகிடும்.. சோ, படம் நீங்களும் பாருங்க புடிச்சிருந்த நான் எழுதினத பற்றி கமெண்ட் கீழ பண்ணிடுங்க...

அன்புடன்..
 பரதன்

செவ்வாய், 10 மார்ச், 2015

கொம்பன் இசை விமர்சனம்

வணக்கம் நண்பர்களே...!!! இன்றைய பதிவில் கார்த்தியின் கொம்பன் திரைப்படத்தின் பாடல்களைப் பற்றி உங்களுடன் பகிரலாமென நினைக்கிறன்.சில தோல்வி படங்கள் அண்மையில் கொடுத்ததால் மீண்டும் பருத்திவீரன் ஸ்டைலில் கொம்பன் திரைப்படத்தில் கிராமத்து வேடத்தில் நடித்துள்ளார் கார்த்தி.
குட்டி புலி படம் அவளவ ஒடலைனாலும் சன் டீவி ரொம்ப நல்ல ஒடவச்சாங்க...
அந்த படத்தோட டைரக்டர் முத்தையா தான் இந்தப் படத்தோட டைரக்டர்... படத்துக்கு இசை ஜீ.வீ.பிரகாஷ் குமார்.... ஹீரோயின் பத்தியெல்லாம் இங்க நான் கதைக்க மாட்டேங்க...

சரி வாங்க ஒவ்வொரு பாடலாகப் பார்க்கலாம்...

1.அப்பப்பா

பாடியவர்கள்: ஜீ.வீ மற்றும் ஸ்ரேயா கோசல்

பாடல் தாண்டவம் படத்தில வர்ற "அனிச்சம் பூவழகி" டோன் ல இருந்தாலும் இவங்க ரெண்டு பேரோட குரலும் வரிகளும் செம... புல்லாங்குழல், மேளம் என கிராமிய இசை கருவிகளின் சேர்க்கை கேட்க்க இதமாக உள்ளது....

2.கம்பிக்கர வேட்டி

பாடியவர்கள்: Ananthu, VM Mahalingam

ஆரம்பமே சும்மா அந்த மாதிரி.. டியூன் எங்கேயோ கேட்ட மாதிரியே இருக்கு ஆனா கேட்க்க நல்ல இருக்கு... கிராமத்து மக்களின் சந்தோஷமான வாழ்க்கை... ஒரு ரெண்டு மூணு தடவைகள் கேக்கலாம்....

3.கருப்பு நெறத்தழகி

பாடியவர்கள்: வேல்முருகன் , மாளவிகா சுந்தர்

அருமையான துள்ளிசயிலமைந்த பாடல்...கிராமத்து ஸ்டைலில் கடம், நாதஸ்வரம், அழகு அழகு என காதலியின் உருவம், கூந்தல், உயரம் என அனைத்தும் தன்னை ஈர்ப்பதாக எனக் கூறி பாடல் செல்கிறது... இந்தப் பாட்டு எத்தன தடவ வேணாலும் கேக்கலாம்க....

4.மெல்ல வளஞ்சது

பாடியவர்கள்: மது பாலகிருஷ்ணன்
மெதுவான ஒரு மெல்லிசை.... குரல் தெரிவு அருமை... கார்த்தி,ராஜ் கிரண் க்கு இடையிலான பாசம் மிகுந்த ஒரு பாடலாகத் தான் இருக்கும்... வயலின் இசை, கடம் என இசை கருவிகள் சூப்பர்... தந்தை-மகன் பாசத்தை கூறும் பாடலாக அமைகிறது... பாட்டு எப்பவுமே கேட்கலாம்....

பாடல்கள் அனைத்தும் கிராமத்துப் படத்துக்கு ஏற்ற வகையில் கேட்க அருமையாக இருக்கிறது... பாட்டுக்கு ரேட்டிங் போடுற அளவுக்கு நான் இன்னும் வளரல என்பதால் என்னை மன்னித்துக்கொள்ளுங்கள்.....

பாடல்கள் கேட்கலாம்... !!!!

தொடர்ந்து பதிவுகளைப் பெற மின்னஞ்சல் மூலமும் சமூக வலைத்தளங்கள் மூலமும் என் பதிவுகளை தொடர்ந்து பெற்று என்னை ஊக்குவிக்குமாரும் கேட்டுக்கொள்கிறேன்.

வெள்ளி, 19 டிசம்பர், 2014

iOS 8.1.2 ஐ install செய்வது எப்படி..?? (iPhone,iPad&iPod)

வணக்கம் நண்பர்களே...!! நீண்ட நாட்களுக்குப் பின் இத் தளத்தில் ஒரு பயனுள்ள பதிவுடன் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி...Phone களில் தரமான Quality யான phone என்றால் அது ஆப்பிள் கம்பனியின் போன்கள் தான்..

அந்த வகையில் அவ்வகை போன்களுக்கான புதிய இயங்குதளம் வழுக்கள் நீக்கப்பட்ட, பல புதிய வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது. அது iOS 8.1.2 

இதனை தற்போது எவ்வாறு பெறுவது என்பது பற்றிய ஒரு தகவலைத் தான் இன்று பதியவிருக்கிறேன்.

முதலில் கீழ் காணப்படும் ஆப்பிள் கம்பனிகளின் Device களுக்கு மட்டுமே இப் புதிய பதிப்பு வேலை செய்யும்... இவற்றில் உங்கள் device பெயர் இருந்தால் தொடர்ந்து கீழே வாசியுங்கள்...
  • iPhone6 plus
  • iPhone 6
  • iPhone5s
  • iPhone5
  • iPhone5c
  • iPhone4s
  • iPad Air
  • iPad4
  • iPad3
  • iPad2
  • Retina iPad Mini
  • 1st generation iPad Mini
  • 5th Generation iPod Touch
மேலே உள்ளவற்றுள் உங்கள் device பெயர் இருந்தால் கீழே தொடருங்கள்..

எந்த மாற்றங்களை மேற்கொள்ள முன்பும் Backup செய்து வைப்பது சிறந்தது.. காரணம் setup ன் போது பிரச்சினை ஏட்பட்டால் சரி செய்துகொள்ள....

இதற்கு நீங்கள் உங்கள் device ஐ charge ல் விட வேண்டும்.. இச் செய்கைக்கு நிறைய battery charge தேவைப்படும்...

Wifi connection ஐ On செய்து கொள்ளுங்கள் ( இதனைத் தொடர்வதற்கு இணைய வசதி அவசியமாகும்...)

இனி உங்கள் Device ல்

Setting>>>General>>>Software Update ஐ click செய்தால் அது Automatic ஆக Search செய்து  iOS 8.1.2 ஐ தரும்.... அதை கிளிக்செய்து Download button ஐ அழுத்தவும்...

சிறிது நேரத்தின் பின் download ஆகின பின்னர் Install button ஐ click செய்யுங்கள்... அவளவுதான் ... நீங்கள் Install செய்துவிட்டீர்கள்...

இப் பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடனும் இத் தகவலை பகிர்ந்து கொள்ளுங்கள்...

செவ்வாய், 2 டிசம்பர், 2014

Bluestack மென்பொருளின்றி கணனியில் Viber பயன்படுத்தலாம்...

எனக்கு Android App களை கணனியில் பயன்படுத்த ஆசை. அதனால் இவளவு காலமும் கணனியில் Bluestack என்ற மென்பொருள் மூலம் Smart phone களின் apps ஐ பயன்படுத்தினேன்.

தற்செயலாக இணையத்தில் உலாவும் போது viber மென்பொருளைப் பற்றி அறிந்தேன். அதைப் பற்றிய புராணம் உங்களுக்கு ஓதத்தேவையில்லை. காரணம் நீங்கள் ஏற்கனவே அறிந்திருப்பீர்கள்.

இவ்வளவு நாட்களும் viber ஐ நான் Bluestack மூலமாகவே பயன்படுத்தினேன். தற்போது இதனை அம் மென்பொருள் இன்றியே கணனியில் நிறுவி பயன்படுத்தலாம்.

http://www.viber.com/ இங்கு சென்று Get Viber என்றதில் click செய்தால் போதும்.. கணனியிலேயே இனி Viber...

குறிப்பு: இதற்கு முதலில் நீங்கள் ஒரு போனில் Viber install செய்யப்பட்டு அதிலிருந்து code எடுத்த பின்னரே கணணி மூலம் பாவனை செய்ய ஆரம்பிக்கலாம்.

 பதிவு பயனுள்ளதாக இருந்தால் நண்பர்களுடனும் Share செய்துகொள்ளுங்கள்...

அன்புடன்..,                                                                
பரதன்

செவ்வாய், 12 ஆகஸ்ட், 2014

பேஸ்புக்கை இதுவரை எத்தனை மணி நேரம் பாவித்துள்ளீர்கள்..??

பேஸ்புக்; சமூக வலைத்தளங்களின் ராஜா என அழைக்கப்படுகிறது. எத்தனையோ ஆயிரம் பயனர்களை தன்னகத்தே கொண்டுள்ளது. காலையில் எழுந்து Face கூட கழுவாமல் Facebook ல் இருக்கும் ஜாதி நிறைய உண்டு. அதில் நானும் ஒருத்தன்.

இப்படியாக, நீங்கள் பேஸ்புக் கணக்கு தொடங்கியதிலிருந்து இதுவரை காலமும் எவளவு நாள் பேஸ்புக்கை பாவித்துள்ளீர்கள் என அறிய வேண்டுமா..??

இதோ உங்களுக்காக கீழே உள்ள box ஐ பின்பற்றியவாறு பார்க்கவும்...

அண்ணளவாக ஒரு நாளைக்கு நீங்கள் எவளவு நேரம் பாவிப்பீர்கள் என்பதை முதலில் கொடுத்து பின் Next ஐ கொடுக்கவும்...




 பயனுள்ளதாக இருந்தால் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்...

திங்கள், 11 ஆகஸ்ட், 2014

டுவிட்டரில் ஒருவரின் முதலாவது ட்வீட் எது என அறிய வேண்டுமா..?

2௦14 ஆம் ஆண்டுடன் டுவிட்டரானது தன் எட்டாவது அகவையில் அடியெடுத்து வைக்கிறது. சமூகவளைத்தளம் என்றால் நம் நினைவிற்கு வருபவை பேஸ்புக்கும், டுவிட்டரும் தான்.
பல சினிமா பிரபலங்கள், விளையாட்டு பிரபலங்கள் என எல்லோரும் பாவிக்கும் முக்கிய சமூகவளைத்தளம் இதுவாகும்.,

பல நபர்கள் எத்தனையோ கீச்சுக்களை பகிர்ந்திருப்பார்கள்.... கீச்சு என்பது ட்வீட் ஆகும்... அப்படி கீச்சுகளைப் பகிர்ந்து மகிழ்வார்கள்.

அந்த வகையில் அவர்கள் வெளியிட்ட முதலாவது கீச்சு எது என அறிவது கொஞ்சம் கஷ்டம்.. அதற்கு நீங்கள் அவர்கள் Profile ல் சென்று  scroll down பண்ணிக்கொண்டு இருந்தால் தான் முதல் கீச்சு பார்க்கலாம். அது மினக்கெட்ட வேலை...

அதற்குத் தான் டுவிட்டர் ஒரு தளத்தை உருவாக்கியுள்ளது...

அங்கு நீங்கள் யாருடைய முதலாவது கீச்சினைப் பார்க்க விரும்புகிறீர்களோ அவர்களின் User Name ஐ type செய்து Enter ஐ கொடுத்தல் அவர்கள் முதல் கீச்சு வந்து நிற்கும்...

இணைய முகவரி : http://first-tweets.com/

நீங்களும் Try செய்து பார்த்து நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்...

ஞாயிறு, 10 ஆகஸ்ட், 2014

அழித்த பேஸ்புக் Messages, போடோக்கள், வீடியோக்களை திரும்பப் பெற...

வணக்கம் நண்பர்களே..!! இன்றைய தினம் உங்களுக்கு ஓர் இனிய தகவலை வழங்குவதில் மகிழ்ச்சியடைகிறேன். பேஸ்புக் பாவிக்காத ஆட்கள் யாருமே இருக்க முடியாது..

நீங்கள் பேஸ்புக்கில் நண்பர்களுடன் போடோக்கள், வீடியோக்கள், மற்றும் chat என்பவற்றை மேற்கொண்டிருப்பீர்கள்... அவற்றை நீங்கள் delete செய்திருப்பீர்கள்... இருந்தபோதிலும் அவை பேஸ்புக்கின் Data Base ல் பதிந்து தான் இருக்கும்... வெளித்தோற்றத்திட்கு அழிந்தது போல் இருந்தாலும் அவற்றை அழித்த உங்களால் மட்டுமே மீண்டும் திரும்பப் பெற முடியும்...

ஆம், நீங்கள் அழித்த போட்டோ,வீடியோ, chat என்பவற்றைப் பெற உங்கள் பேஸ்புக் password கேட்கும் அதனால் நீங்கள் தப்பீத்தீர்கள்...

சரி....,, இப்போது அதை எப்படி பெறுவது எனப்பார்ப்போம்...

முதலில் General Account Settings ற்குச் செல்லுங்கள்..

அங்கு
Download a copy of your Facebook data.
என்பதை click செய்து கொள்ளுங்கள்...

இனி, உங்கள் பேஸ்புக் Password ஐ type செய்து Submit ஐ கொடுங்கள்..
இனி, உங்கள் பேஸ்புக் கணக்கு இருக்கும் மின்னஞ்சலிற்கு பேஸ்புக்கிலிருந்து message வந்திருக்கும்.. அதில் உங்கள் Facebook Data வை Download செய்வதற்கான link வந்திருக்கும்...

தொடர்ந்து அதனை அழுத்தி Download செய்து கொள்ளுங்கள்

Download செய்யப்பட்ட Folder ஐ open செய்தால் அதில் ஒவ்வொரு folder களாக open செய்து பாருங்கள்/...
மேலும், உங்கள் இனைய உலாவி மூலமும் அவற்றை Open செய்யலாம்... அதில் நீங்கள் இதுவரை செய்த அனைத்து செயற்பாடுகளும் இருக்கும்...

Try பண்ணி பாருங்க..........................
பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்...

செவ்வாய், 5 ஆகஸ்ட், 2014

Google Chrome ல் Youtube விளம்பரங்களை தடை செய்வது எப்படி..?

இன்று இணையத்தில் வீடியோக்களை பார்வையிட சிறந்த இணையத்தளமாக விளங்குவது Youtube ஆகும். வீடியோக்களை Upload செய்பவர்கள் அதன் மூலம் பணம் சம்பாதிக்க வீடியோ ஆரம்பிக்க முதலும் இடையிலும் விளம்பரங்களை பிரசுரிக்கப்படுகிறது, இது பார்போரை காண்டாக்கும்..

எனவே இதை எப்படி நிறுத்துவது...??

இதோ Google Chrome ல் Youtube Ad Blocker என்பதை Install செய்து கொள்ளுங்கள்

அவளவு தான் இனி நீங்கள் பார்க்கும் போது விளம்பரங்கள் எல்லாம் வராது...

பயனுள்ளதாக இருந்தால் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்...

சிறுமி கூகிளிடம் தந்தைக்கு ஒரு நாள் விடுமுறை கேட்டார். அதன் பின் என்ன நடந்திருக்கும்..?

கோடை கால விடுமுறையின் போது தனது தந்தையுடன் அவ் விடுமுறையை கழிப்பதற்காக அங்கு Designer ஆக வேலை செய்யும் ஒருவரின் மகள் கூகிளிற்கு கடிதம் ஒன்றினை அனுப்பினார். அதில் அவர் மேலும் குறிப்பிட்டதாவது என் தந்தைக்கு சனிக்கிழமை மட்டும் விடுமுறை வழங்கப்படுகிறது. இந்த முறை புதன் கிழமை எனக்காக விடுமுறை கொடுப்பீர்களா, அன்று அவரது பிறந்தநாளும்  கூட எனக் கேட்டு அனுப்பினார்.

Dear Google Workers,
Can you please make sure when daddy gets to work, he gets one day off. Like he can get a day off on Wednesday. Because daddy ONLY gets a day off on Saturday.
From Katie.
PS. It is daddy's BIRTHDAY!
PPS. It is summer, you know

இப்படி உருக்கமான ஒரு கடிதத்திற்கு பதில் என்ன...

அதற்கு கூகிள்
உங்கள் தந்தை கூகிளிற்கு செய்த நன்மைகளைக் கருதி அவருக்காகவும் உங்களுக்காகவும் ஜூலை மாதத்தின் முதல் ஒரு வாரத்தையும் அவருக்கு விடுமுறையாக வழங்குகிறோம்.. என பதில் கடிதம் அனுப்பியது..

கூகிளிற்கு எவ்வளவு பரந்த மனசு பார்தீர்களா....??

புதன், 16 ஜூலை, 2014

ஆப்பிளை வெட்டியபின் Brown நிறமாவதற்குக் காரணம்.?? அறியலாம் வாங்க.

வணக்கம் நண்பர்களே... இன்று நான் அறிந்த ஒரு விடயத்தை உங்களோடு பகிரலாமென நினைக்கிறேன். பொதுவாக நாம் ஆப்பிள் சாப்பிட்டு விட்டு மீதியை வைத்தால் சிறு மணி நேரத்திற்குப் பின் Brown கலராக மாறியிருக்கும். அதற்க்குக் காரணம் தான் நான் இப் பதிவில் கூறவுள்ளேன்.

எந்த ஒரு கலத்தை (cell) ஐ எடுத்தாலும் அதில் பலதரப்பட்ட enzymes (சுரப்பிகள்) காணப்படும் அது போலவே அப்பிளிலும் பக்டீரியாவால் Tyrosinase என்ற சுரப்பி ஒட்சிசன் வாயுவுடன் தாக்கமடைந்து Brown நிறத்தினை வெளிப்படுத்துகிறது.

இதனைத் தடுக்க ஆப்பிள் ஐ நீரில் போட்டு வைத்திருந்தாள் பாதுகாப்பாக இருக்கும். மேலும், அமிலத்தன்மையான தேசிக்காய் சாற்றை பிழிந்து நீருடன் கலந்து வைத்தால் சுரப்பி சுரப்பதை கட்டுப்படுத்தும்.

What Is the Reason for the Brown Colour of Apple after cutting it...??

 There is a type of Enzyme secreted by Bacteria present in Apple named Tyrosinase. It reacts with Oxygen to form Brown colour.
If you want to avoid it keep those cut slices of apples in Water or Add some weak acid like Lime Juice to prevent the Secretion of the enzyme.

Thank You..
Parathan

வெள்ளி, 11 ஜூலை, 2014

Delta Search ஐ Google Chrome, Firefox என்பவற்றிலிருந்து நீக்க..

Delta Search ஆனது சிறந்த தேடுதளங்களில் ஒன்றாகக் காணப்படுகிறது. இது எப்படி எமது கணனியில் ஏறியது என்பது தெரியாது... ஆனால் அது எம் Web Browser ஐ open செய்யும் போது Homepage ஆகக் காணப்படும்.

எமக்கு பொதுவாக கூகுளை பாவித்துப் பழகிவிட்டதால் இதையெல்லாம் கணக்கில் எடுக்க மாட்டோம். இது சிறந்த Backgrounds , colourful ஆகக் காட்சியளிக்கும். இதில் காணப்படும் சில எரிச்சலூட்டும் பண்புகளாலேயே பலர் பாவிக்காது விடுகின்றார்கள்.

சிலருக்கு இதை எப்படி Remove செய்வது எனத் தெரிந்திருக்காது.. எனவே அவர்களுக்காக Delta Search ஐ எப்படி அழிப்பது எனக் கூறப்போகிறேன்.


Delta Search எப்படி எமது Computer ல் Install ஆகிறது...??

நாம் எமது Computerல் Games,Softwares என்பவற்றை Install செய்யும்போது Setup ல் பல Options காணப்படும் நாம் அவற்றைக் காணாது Next..Next ஐ கொடுத்துக் கொண்டு போவோம்.. அதிலே இந்த Delta Search ஐ Install செய்யப்போகிறீர்களா என்ற Option ல் Tick (சரி) அடையாளம் இடப்பட்டிருக்கும் நாம் Next கொடுத்தால் அது தானாகக் Computerல் Save செய்யப்படும். 


"இது ஒரு வியாபாரத் தந்திரம் தான்....."


Delta Search ஐ எவ்வாறு கணனியில் Remove செய்வது...??
  • Click on Start Menu >> Then open your control panel 
  • Now Select Program >> Program and Features 
  • Delta Search சம்மந்தப்பட்ட ஏதாவது கானபட்டல் அவற்றை Uninstall செய்யுங்கள் 
  • அப்படி ஏதாவது காணப்படவில்லை எனில் கீழே விளக்கப்பட்டுள்ளவாறு Web Browser ல் சென்று remove செய்யுங்கள்..

.Mozilla Firefox ல் Delta Search ஐ Remove செய்ய...
  • Mozilla Firefox Browser ஐ open செய்யுங்கள். >> Menu Bar ல் Select Tools Option என்பதை Select செய்யுங்கள் 
  • Click on Add-ons Button >> Switch To Extension tab from left side 
  • Now Uninstall Delta Toolbar from your browser

புதிய Homepage ஐ Firefox ல் செயற்படுத்த...
  • Tool >> Option >> General Tab
  • Now Setup your New homepage by adding URL in given box
  • Save செய்து கொள்ளுங்கள்...


  • Google Chrome ல் Remove செய்ய..
  1. Google Chrome Browser ஐ open செய்யுங்கள்.. பின் Menu bar ஐ click செய்யுங்கள் ( இது வலது பக்க மூலையில் காணப்படுகிறது...) 
  2. Settings button >> Extension menu ஐ இடது பக்கத்தில் காணப்படுவதை click செய்யவும் 
  3. Now Find Delta Search and uninstall it.

Homepage ஐ Google Chrome ல் மாற்ற
  • Delta Search ஐ Uninstall செய்த பின்னர் 
  • Settings option க்கு செல்லவும்... 
  • Startup Option >>Open a specific page or setup page 
  • Click on Set Pages and Add the URL of your Homepage which you want on browser startup. 
  • Then Save it.
இந்தத் தகவலைப் பயன்படுத்தி நீங்கள் Delta Search ஐ Uninstall செய்திருப்பீர்கள் என நம்புகிறேன்.

இந்தப் பதிவு பயனுள்ளதாக அமைந்தால் உங்கள் நண்பர்களுடனும் சமூக வலைத்தளங்களில் Share செய்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்

நன்றி... என்றும் அன்புடன் பரதன்.