இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 4 நவம்பர், 2013

HTML கற்போம் பகுதி - 7

வணக்கம் நண்பர்களே...!! பகுதி-6 ன் தொடர்ச்சியை இங்கே பாப்போம்... இந்தப் பதிவில் "HTML ஐ பயன்படுத்தி Table அமைப்பது பற்றிப் பார்போம்"

<table>
 <tr>
<td>Cell 1</td>
<td>Cell 2</td>
 </tr>
 <tr>
<td>Cell 3</td>
<td>Cell 4</td>
 </tr>
</table>

பார்த்தவுடனே பயப்படாதீங்க....

இங்கே <tr> என்பது Table Row ஐ குறிக்கிறது...
<td> என்பது Table Data வைக் குறிக்கிறது.

மேலே தரப்பட்ட code ஐ பயன்படுத்தினால் கீழுள்ளவாறு தான் தோன்றும்..

Cell 1 Cell 2
Cell 3 Cell 4

இன்னும் ஒரு உதாரணம்...

<table>

 <tr>
<td>Cell 1</td>
<td>Cell 2</td>
<td>Cell 3</td>
<td>Cell 4</td>
 </tr>

 <tr>
<td>Cell 5</td>
<td>Cell 6</td>
<td>Cell 7</td>
<td>Cell 8</td>
 </tr>

 <tr>
<td>Cell 9</td>
<td>Cell 10</td>
<td>Cell 11</td>
<td>Cell 12</td>
 </tr>

</table>

நிறைய எழுதி இருக்கிறேன் எனப் பயப்படாதீங்க...

இங்கே Table Row அதாவது <tr> 3 முறை எழுதி </tr> எனக் கொடுத்திருக்கிறேன் 

அப்படியானால் இங்கே Table Row 3 ம் Table data 12 ம் வரும்.
அதன் வருவிளைவு இதோ...


Cell 1 Cell 2 Cell 3 Cell 4
Cell 5 Cell 6 Cell 7 Cell 8
Cell 9 Cell 10 Cell 11 Cell 12

எப்படி புரிந்ததா.... புரியாவிட்டால் திரும்பத் திரும்ப செய்து பாருங்க விளங்கும்... ம்ம்ம்ம்....

வாறன் வாறன் என்ன இது Table என்றால் அட்டவணை இருக்கணும் இது என்ன... என யோசிக்கலாம்..

இப்போ பாருங்கள்... இந்த code ஐ.

<table border="1">
 <tr>
<td>Cell 1</td>
<td>Cell 2</td>
 </tr>
 <tr>
<td>Cell 3</td>
<td>Cell 4</td>
 </tr>
</table>

இந்தக் code அட்டவனையைப் போடும் இதோ அதன் வருவிளைவு..

Cell 1 Cell 2
Cell 3 Cell 4

எப்டி நல்லா இருக்கா... "<table border="1">" உங்கள் வசதிக்கு ஏற்றவாறு 1 ஐ மாற்றலாம்...

அல்லது "<table border="1">" என்பதற்குப் பதிலாக  <table border="1" width="30%">
எனவும் இடலாம்.. இங்கே border என்பதற்குப் பதிலாக width அளவையும் பயன்படுத்தலாம்...

விரும்பிய மாதிரி உங்கள் table ஐ அமைக்கலாம்... அமைத்துப் பாருங்கள் சந்தேகம் இருப்பின் கீழே உங்கள் கேள்விகளை இடுங்கள்..

நன்றி..
பரதன்

Related Posts:

  • HTML கற்போம் பகுதி - 6 வணக்கம் நண்பர்களே...!! இன்று உங்களை இப் பதிவினூடாக சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. முந்தய பதிவான HTML கற்போம் பகுதி -5 ன்\ தொடர்ச்சியாக இன்று … Read More
  • HTML கற்போம் பகுதி-11 வணக்கம் நண்பர்களே... இறுதியாக நான்கு வருடங்களுக்கு முதல் பகுதி-10 எழுதியிருந்தேன்,.. 2014 ஆம் ஆண்டு HTML 5  வெளிவந்தது. அதை ப… Read More
  • HTML கற்போம் - பகுதி - 9 வணக்கம் நண்பர்களே...  இன்றைய பதிவில் HTML கற்போமின் பதிவில் CSS பற்றிப் பார்ப்போம். <p style="font-size:20px;">This is … Read More
  • HTML கற்போம் பகுதி- 10 வணக்கம் நண்பர்களே.. இப்பதிவில் HTML கற்போம் - பகுதி - 9 ன் மீதிப் பதிவு. இங்கு CSS தொடர்பான coding தான் முழுவதும்.. <p … Read More
  • HTML கற்போம் பகுதி- 8 வணக்கம் நண்பர்களே...!! கடந்த பதிவில் table அமைப்பது பற்றிய அடிப்படை பார்த்தோம். இன்றைய பதிவில் table அமைப்பது பற்றி சற்று விரிவாகப் பார்போம்.. அதாவ… Read More

3 கருத்துகள்:

  1. பகுதி 7- ஐ இவ்வளவு சீக்கிரமா பதிவு செய்விர்கள் என்று எதிர்பார்க்கவில்லை;
    அருமையான பதிவு...

    பதிலளிநீக்கு
  2. உங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றி நண்பர்களே..!!

    பதிலளிநீக்கு