இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 1 நவம்பர், 2013

ஆரம்பம் திரை விமர்சனம்

ஆரம்பம் அஜித்துக்கு இன்னொரு மிகப் பெரிய ஹிட் என்று தான் சொல்லணும். ஆரம்பம் ஆரம்பிப்பது மும்பையில் மூன்று இடங்களில் இடம்பெறும் குண்டுவெடிப்புடன் அதுவும் யார் வைத்தது நம்ம தல... படம் ஆரம்பிச்ச போது "மங்காத்தா" வில்லன் மாதிரித்தான் வாரார்னு நெனச்சேன்.. அப்புறம் முழுப் படம் பார்த்தபின் தான் அஜித் தான் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார் என...

அஜித்தும் சஞ்சய் என்ற பெயர் கொண்டவரும் போலீஸ் நண்பர்களாக இருக்கிறார்கள். தீவிரவாதிகளுடன் ஏற்பட்ட போரில் சஞ்சய் இறக்க.. அதற்கான காரணம் "bullet proof coat" சரியான முறையில் பரிசீலிக்கப்படாமையால் குண்டு துளைத்து சஞ்சய் இறந்தார் என அஜித் கூறி மந்திரிக்கும், போலீஸ் மேலதிகாரி , தொழிலதிபர் ஆகியோருக்கு எதிராக செயற்பட அதனைத் தடுக்க அவர்கள் சேர்ந்து அஜித் ஐ கொலை செய்கிறார்கள். 
இதேவேளையில் சஞ்சயின் குடும்பத்தையும் அந்த மூவரும் கொல்ல இறுதியில் சஞ்சயின் தங்கையான நயன்தார மட்டும் சாகாமல் உயிர் பிழைக்கிறார்.

பின்னர் இருவரும் சேர்ந்து ஆர்யாவின் hacking மூளையைப் பயன்படுத்தி தமது பழிவாங்கும் வேலையில் ஈடுபடும் போது ஆர்யாவுக்கு இவர்கள தன்னை misuse செய்கிறார்கள் என எண்ணி சில தடயங்களை விட்டுச் செல்ல பின்னர் அவ் தடயங்களைப் பயன்படுத்தி போலீஸ் அஜித்தை கைது செய்ய...

பின் ஆர்யா அனைத்துக் கதையையும் அறிந்து பின் அவரும் தலயுடன் இணைந்து என்ன செய்தார்கள் என்பது கதை.

இயக்குனர் விஷ்ணு ஏற்கனவே தலக்கு பில்லா படத்தை 2௦௦7 ல் நடிக்க வைத்து தலக்கு புதிய முகம் ஒன்றை உருவாக்கினார். அதேபோலவே இப் படத்திலும் தலயை வைத்து உலகிற்கு ஒரு நல்ல செய்தி தரும் கதையை உருவாக்கியிருக்கிறார்.

"நாட்டில் மக்களை லஞ்சம் செய்யத் தூண்டுவது அரசியல் வாதிகளே... இராணுவத்திற்கு தீங்கான சில ஊழல்களை மேற்கொள்ளக் கூடாது" 

என இயக்குனர் கூறுகிறார்.

மேலும் இசையில் யுவன் தனது முளுப்பங்கை ஆற்றியிருக்கிறார். 

மேலும், தாப்சி ஆர்யாவுடன் ஜோடியாக நடித்திருந்தார் பெரிதாக அவரது பங்கு இதில் இருக்கவில்லை.

துபாயில் அஜித் Ducatti bike ல் சூப்பராக தோன்றியிருந்தார். படகில் இடம்பெறும் சண்டைகள் என அனைத்தும் படத்தில் நன்றாக இருந்தது. அதைவிட அஜித் இப் படத்தில் மிகவும் அடக்கமான முறையில் வேறு நடிகர்களைப் போல் எந்தவித பஞ்ச் பேசாமல் செயலில் பல விடயங்களை முடித்திருக்கிறார்.


இனி இப்படத்திற்கான எனது rating 4/5

மேலும் எனது முகநூல் பக்கம் Like செய்ய...

2 கருத்துகள்: