இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 28 டிசம்பர், 2018

2018 வருட இறுதியில் பார்த்த "எழுமின்"

இந்த படம் வந்த போது விவேக் ஹீரோ என்று மட்டும் தெரியும்... ஒரு நாள் பார்க்க வேண்டும் என்று தள்ளி தள்ளி போய் இப்போது மாதங்கள் ஆகி ஒரிஜினல் காப்பி நெட்டில் வந்ததும் பார்த்தேன்.

படம் என்றால் அதில் பல வகை உண்டு.
சமூக கருத்தை கூறுவது - பொழுதுபோக்குக்காக மட்டும் பார்க்க கூடிய படம் என சொல்லிக்கொண்டே போகலாம்.
அந்த ரீதியில் இப்படம் ஒரு சமூக கருத்தை கூறும் படம் என்ற ரீதியில் சேர்த்துக் கொள்வேன்.
படத்தின் ஆரம்பத்திலேயே சிறுவர் துஷ்பிரயோகம் எனவும் முன்பெல்லாம் பிள்ளைகளுக்கு "Good Habits", "Bad Habits" சொல்லிக் கொடுத்தோம்; இப்போது "Good  Touch" "Bad Touch" சொல்லி கொடுக்க வேண்டும் என பட ஆரம்பம்.

கதையை பொறுத்தவரை ஓகே காரணம் படத்தின் நீளம் 1.45 மணி நேரம். சொல்ல வந்த கருத்து இதோ படத்தின் இறுதி நிமிடங்களில் வரும் இந்த படமே போதும்
கடினமான சூழ்நிலைகள் எப்பொழுதும் கற்றுக்கொடுக்கின்றன...
எந்த சூழ்நிலையிலும் உங்களுக்குள் இருக்கும் நம்பிக்கையை இழக்காதீர்கள்
மகன் இறந்த போது விவேக், தேவயானி நடிப்பு மிகவும் அபாரம். விவேக் பல குணச்சித்திர வேடங்களில் நடித்திருந்தாலும் இதில் "அவன் மயக்கத்திலே தான் இருக்கான் போய் எழுப்புங்க டாக்டர்" என்பார்.... மனுஷன் அளவச்சிடார்.....

இந்தப் படம் பார்த்த பின்பு தான் எனக்கு இன்னொரு சம்பவம் ஞாபகம் வருகிறது. இலங்கையில், கொழும்பு விஹாரமஹாதேவி பூங்காவுக்கு 2 மாதங்களுக்கு முன் போன போது "Dance Fight" என ஒன்று இடம்பெற்றது. அதில் இலங்கையில் அனைத்து பிரதேசங்களிலும் இருந்து டான்ஸ் மேல passion இருக்கிற பல பேரை காணக்கூடியதாக இருந்தது.

அவர்களில் சிலரை பற்றி அறிந்து கொள்ள முடிந்தது, அவர்களில் பலர் வசதியான வீட்டு பிள்ளைகள் கூட இல்லை. எல்லாம் அவர்களின் சொந்த ஆர்வம் தான் அவர்களை இவ்வளவு தூரம் கொண்டு வந்தது என அறிந்து கொண்டேன். வாழ்க்கையில் எதோ ஒன்றை சாதித்தே ஆக வேண்டும் என்ற வெறியும், தன்னம்பிக்கையும்.......

அது இருக்கும் வரை எந்த சூழ்நிலையையும் உங்களால் சமாளிக்க கூடிய சக்தியை மனது உங்களுக்கு வழங்கும்..

ஆண்களுக்கு சரி சமமாக ஆடும் பெண்கள் பலர் அங்கு காணக் கூடியதாக இருந்தமை தான் நாம் வாழும் சமூகம் கூர்ப்படைகிறது என்பதை அறிய முடிகிறது.
ஆண் குழந்தைகளுக்கு பெண்மையின் உயர்வை சொல்லி வளருங்க... பெண்களுக்கு எல்லாம் தற்காப்பு கலையை சொல்லிக் கொடுங்கள்
படத்தின் இறுதியில் விவேக் சொல்லும் செய்தி.

வரப்போகும் வருடத்தை தன்னம்பிக்கையுடனும், உட்சாகத்துடன் வரவேற்போம்....

நாளை நமதே....

2 கருத்துகள்: