இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 28 டிசம்பர், 2018

உலகிலேயே மிகவும் தனிமைப்படுத்தப்பட்ட இடம்

வணக்கம் நண்பர்களே.. இன்றய தினம் நான் வாசித்து அறிந்து கொண்ட ஒரு தகவலை உங்களோடு பகிர உள்ளேன், தனிமை சிலருக்கு இனிமை, சிலருக்கு கொடுமை. அப்படியாக தனிமை படுத்தப்படட ஒரு தீவு ஒன்று தெற்கு அத்திலாந்திக் சமுத்திரத்தில் உள்ளது. அந்த தீவின் பெயர் "ட்ரிஸ்டன் த குன்ஹா". (Tristan da Cunha)
தென் ஆப்பிரிக்காவின், கேப் டவுன் இலிருந்து கிடடதட்ட 1400 மைல் தூரத்தில் அமைந்துள்ளது இந்த தீவு .

இந்த தீவில் கிடடத்தட்ட 300 மக்களே வசிக்கிறார்கள்.

இது மிகவும் மோசமான எரிமலை கொண்ட தீவாகும். 1961 கால கட்டத்தில் இங்கு எரிமலை குழம்பு வெடித்தது. அப்போது இங்கு மக்கள் வாழும் பிரதேசத்திட்க்கு அண்ணளவாக 10 மீட்டர் தொலைவில் தான் அந்த எரிமலை குழம்பு வெளியேறுவது நின்றதாம்.

மக்கள் அனைவரும் இதனால் இங்கிலாந்து போன்ற சில இடங்களுக்கு இடம்பெயர்ந்து சென்றாலும்; மீண்டும் தாம் வாழ்ந்த இடம் என்ற அன்பின் காரணமாக இங்கேயே வந்து விடடனராம். இன்றும் அந்த எரிமலை உயிர்ப்போடு தான் உள்ளது.
இங்கு வாள்பவர்களுக்கு பிரித்தானியாவின் குடியுரிமை வழங்கப்படுள்ளது முக்கியமான அம்சமாகும்.
இவர்களின் பொதுவான வாழ்க்கை முறையானது உருளைக்கிழங்கு பயிர்ச்செய்கை.

மேலும், மாடுகளை பால் உற்பத்திக்கு பயன்படுத்துகிறார்கள். இங்கு நீண்ட காலமாக வாழும் ஒருவர் தாங்கள் எல்லோரும் அண்ணன் , தம்பி போல் பழகுவதும், அதிகமான நேரங்களில் வீடுகளின் கதவுகளையோ, ஜன்னல்களையோ திறந்து விட்டு தான் இருப்பதும் என சிரித்து கொண்டு கூறுகிறார்.

இங்கு ஒரு நெட் கஃபே உள்ளது. ஒரு நாளைக்கு 4 மணி நேரம் தான் அதுவும் அதிக செலவாகுமாம். 1 தபால் பெட்டி, விவசாய துறை அலுவலகம், காவல் நிலையம் ஒன்றும் என ஒரு சொர்கத்தை பூமியில் பெரும் அனுபவத்தை பெறலாம் இந்த தீவில்....

என் வாழ்நாளில் ஒரு தடவையாவது இங்கு செல்ல வேண்டும் என்ற ஆவல் உள்ளது.

உங்கள் மனோ நிலையை கீழே கமெண்டில் பதிவிடுங்கள்...

1 கருத்து: